பயம்
கதையாசிரியர்: அசோகன் குப்புசாமி
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 14,326
“இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு
”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?”
”அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும், அதான், சந்திரபுரிக்கு போறேன், அங்க போனா ஏதாச்சும் தேறும்” எனக் கிளம்பினான்.
”ஏன்தான் இந்த திருட்டு தொழிலோ, வேற ஏதாச்சிலும் தொழில் செஞ்சு புழைச்சா, கவரைதயா இருக்கும், அதவிட்டுட்டு, திருடி புழைக்கிற ஒன்னையக் கட்டிக்கிட்டு” புலம்ப புலம்ப கிளம்பி விட்டான் நல்லக்கண்ணு.
சந்திரபுரியில், நல்ல கும்மிருட்டு, டார்ச் லைட்டித்து, ஒவ்வொரு வீடாய் நோட்டமிட்டான்.
ஒரு வீட்டின் பின் கதவு திறந்திருந்த்து, ஆகா ”நமக்கு தோதா போச்சு”என்றபடியே பக்கத்தில் போனவன் அந்த வீட்டுத் தலைவன் வெளியே வ, சட்டென்று புதரில் ஒளிந்து கொண்டான்..
”ராசாத்தி, முன்கதவு, பின்கதவு எல்லாத்தையும் நல்லா முடிக்கோ,, இந்த அமாவாசை இருட்டுதான் நம்ம தொழிலுக்கு தோது . அதனால, சூரியபுரிக்கு போறேன், அங்க, ஏதாச்சும் தேறும், என்றான் அந்த வீட்டுத் தலைவன்..
… ”ஆஉறா! நம்ம வீட்டுப் பின்கதவு திறந்திருந்தா…? பயம் மேலிட தன் சொந்த ஊரான சூரியபுரிக்கு நடையை எட்டிப்போட்டான் நல்லக்கண்ணு.
– குங்குமம் 2-9-2016 இதழில் வெளியானது
![]() |
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
