நலம் தரும் நட்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2026
பார்வையிட்டோர்: 183 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

அருணும் அப்துல்லாவும்  சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அருணின் அப்பா உள்ளுரிலே ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.  அப்துல்லாவின் அப்பா வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்.   ஒரே தெரு, ஒரே பள்ளி. ஒரே கனவு. அவர்களுக்குள் ஜாதி மத பேதமில்லை. ரம்ஜான் பிரியாணி அருணின் வீட்டில் சாப்பிடப்படும். கிறிஸ்மஸ்  மற்றும் புத்தாண்டு கேக் அப்துல்லாவின் வீட்டில் ருசிக்கப்படும். ஒருவர் அழுதால் மற்றொருவரின் கண்ணில் கண்ணீராய் பெருக்கெடுத்து ஓடும்.

காலம் நகர்ந்தது. அருணின்  தாயார் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைக்குப் பெரிய தொகை தேவைப்பட்டது.   உறவினர்கள் பல காரணங்களைக் காட்டி கை விரித்தனர்.  அருணின் கைகள் நடுங்கின. என்ன செய்வெதென்றுத் தெரியாமல் குழம்பிப் போனான். அதைப் பார்த்த அவனது மனைவி அவனை அழைத்துக் கொண்டு அப்துல்லாவின் வீட்டிற்குச் சென்றாள். அவர்களைப் பார்த்த அப்துல்லா அவர்களை வரவேற்று இருக்கையில் அமரச் செய்து சூடாக தேனீர் வழங்கினான்.

அருண் என்ன இவ்வளவு தூரம் என்று கேட்டான். அருண் கொஞ்சம் தயங்கினான். உடனே அவனின் மனைவி பணத் தேவையைக் கூறி உதவி கேட்டாள். அதைக் கேட்ட அப்துல்லா என்ன அருண் உயிர் நண்பன் நானிருக்கின்றேன். முதலில் நீ என்னிடம் தானே வந்திருக்க வேண்டும். யாரும் கொடுக்கவில்லை என்பதால் என்னிடம் வந்தால் என்ன அர்த்தம் என்று கடிந்து கொண்டான். உடனே அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தான்.

அருண் உன் அம்மா வேறு என் அம்மா வேறு அல்ல. முதலில் மருத்துவமனையில் பணத்தைக் கட்டி முதல் தர சிகிச்சையைச் செய்யச் சொல். எவ்வளவு பணமாக இருந்தாலும் கவலைப்படாதே நான் தருகின்றேன் என்றான்.  அந்த ஒரு வார்த்தையே அருணுக்கு ஆயிரம் ஆறுதல்களைத் தந்தது. அம்மாவிற்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அம்மா நலமுடன்  வீட்டிற்கு வந்தார்கள்.   

அப்துல்லா அருண் வீட்டிற்குச் சென்று அம்மாவைப் பார்த்து நலம் விசாரித்தான். அவனைப் பார்த்ததும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றார் அம்மா. பரவாயில்லை அம்மா எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்டான் அப்துல்லா. அருணின் தாயார் அப்துல்லாவின் கைகளைப் பற்றிக் கொண்டு மகனே  நான் பெற்ற பிள்ளை அருண்போல என்னை காப்பாற்றிய பிள்ளை நீ. உன்னை என்னால் மறக்க இயலாது என்று நா தழுதழுக்கக் கூறினார். அந்தக் காட்சி அங்கிருந்தவர்களின் மனதைத் தொட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு அப்துல்லாவின் மகள் உயர்கல்விக்காகத் தேர்வு எழுதி அதில் தேர்வு செய்யப்பட்டாள். ஆனால் கட்டணம் செலுத்த முடியாமல்  குடும்பம் கவலையில் மூழ்கியது. ஒருநாள் கடையில் அப்துல்லாவின் மகளைப் பார்த்தான் அருண். குடும்ப நலன் விசாரித்து விட்டு என்னம்மா நீ கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு அவள் இல்லை அங்கிள். அப்பா வேலை செய்த இடத்தில் இப்போது வேலை எதுவும் இல்லையென்று கூறி விட்டார்கள். அப்பா இரண்டு மாதமாக வீட்டில்தான் இருக்கின்றார். மேற்கொண்டு என்னைப் படிக்க வைக்க பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார். சரி நான் வரேன் அங்கிள் என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

வீட்டிற்குச் சென்ற அருண் தன்; மனைவியிடம் நடந்த விஷயங்களைக் கூறி வருத்தப்பட்டான். உடனே கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல்; அவனது மனைவி தன் தாலிச் சரடைக் கழற்றி அவன் கையில் கொடுத்து முதலிலே இது எடுத்துச் சென்று அப்துல்லாவிடம் கொடுங்கள் மற்றவற்றைப் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினாள். அதைப் பார்த்து அருண் ஆச்சரியப்பட்டான்.

அருண் வீட்டிற்கு வந்ததை அப்துல்லா எதிர்பார்க்கவேயில்லை. என்ன அருண் என்ன இப்படி திடீர் விஜயம் என்று ஆச்சரியப்பட்டான். போ அப்துல்லா உன்னிடம் நான் பேச மாட்டேன் என்று முகத்தைத் திருப்பிப் கொண்டான். சரி சரி என்ன விஷயம் சொல்லு அருண் என்று கேட்டான் அப்துல்லா.  ஓன்றுமே பேசாமல் பையிலிருந்து மனைவியின் தாலிச் சரடை அவன் கையில் வைத்து இதை வைத்து மகளின்  மேல்படிப்புக்கு ஆகும் பணத்தைக் கட்டி அவளைப் படிக்க வை. மேற்கொண்டு தேவைப்பட்டால்; நான் எப்படியாவது ஏற்பாடு செய்து தருகின்றேன் என்றான். அப்துல்லாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

அப்துல்லா, நண்பன் என்றால் நிழல்போல இருப்பவன் அல்ல. நண்பணின் வாழ்வில்  இருள் சூழ்ந்த போது ஒளியாக இருப்பவன்தான் நண்பன். கடைத் தெருவில் உன் மகளைப் பார்த்தேன். பணத்திற்காக அவள் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக என் மனைவியின் ஏற்பாடுதான் இது. அவள் நன்றாகக் படிக்கட்டும். மற்றவைகளைப் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம் என்றான். அப்துல்லாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்; பெருக்கெடுத்தது. அன்று என் தாயின் மருத்துவச் செலவிற்று நீ உதவி செய்தாய். இன்று உன் மகளின் எதிர்கால படிப்பிற்கு நீ கேட்காமலேயே நான் உதவுவது என் கடமையன்றோ என்றான்.  

மனிதனை உயர்த்துவது அவன் பிறந்த இடமோ மதமோ அல்ல. பிறர் துன்பத்தில் தோள் கொடுக்கும் மனம்தான் என்பதை எல்லோரும் உணர வேண்டும். உண்மையான நட்பு என்பது கை குலுத்துவதில் அல்ல மனம் இணைவதில்தான் இருக்கின்றது.  அது ஜாதி மதம் மொழி பொருளாதாரம் ஆகிய எல்லைகளைத் தாண்டி மனித நேயத்தின் பாலம் கட்டுகின்றது. அன்பை விதைக்கும் இதயங்களே உலகை அழகாக்குகின்றன.

02.08.2026 நண்பர்கள் தினம். இது ஆண்டுக்கு ஒருமுறை வருகின்றது. ஆனால் உண்மையான நண்பன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் நம்முடன் இருப்பான். அந்த நட்பே இறைவன் மனிதனுக்குக் கொடுத்த மிகப் பெரியக் கொடையாகும். நல்ல நண்பர்களோடு நட்பை வைத்திரு. நல்ல மனிதர்களின் சாயலை நீ அடைவாய் என்று வில்லியம் ஜேம்ஸ் கூறுகின்றார். உன் நண்பனைப் பற்றிச் சொல் நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்று கூறுவதைப் போல நாமும் நல்ல நண்பர்களோடு பழகி நல்ல நண்பர்களாகவே  வாழ்வோம்.         

நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *