தேவன் பிறந்தார்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 90
(கிறிஸ்துமஸ் கவிதை)

அகமிது மகிழுது இறைவன்
பிறந்ததை நினைத்து…
அவனியில் வந்துதித்த தேவன்
வரவை நினைத்து…
மனித உறவைப் புதுப்பித்து
மனிதனை மாமனிதனாய் மாற்றிட
மண்ணுலகிற்கு வந்தார்
முனுக்குல தேவன் மண்ணிலே…
வானமும் அகமகிழ
வையகமும் புகழ்ந்திட
வாழ்வாங்கு வாழும் தேவன்
வந்தார் நம்மிடையே……
அன்பும் கருணையும்
அவனியிலுள்ள மக்கள் மீது
அவர் கொண்ட ஆர்வத்தால்
அமலன் வந்துதித்தார் பாலனாக…
நடு நிசி வேளையில்
ஒரு உதயம் பிறந்தார்
நல் மனம் கொண்டாரெல்லாம்
ஒருவனே தேவனாய்
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
