கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,637 

ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் பள்ளிக்கூட தாளாளர் கேஷியரை
அழைத்தார்.

”வாய்யா..மொத்தம் 2500 மெழுகுவர்த்தியாவது தேவைப் படும்னு நினைக்கிறேன்”

”ஆமாங்கய்யா, நீங்க மீட்டிங் போடும்போதே சப்ளையர்கள் கிட்டே ஃபோன்ல பேசி ரேட் வாங்கிட்டேன், தபாருங்க, கம்பாரேடிவ் ஸ்டேட்மெட்ன்ட் கூட ரெடி பண்ணிட்டேன்”

வாங்கிப் பார்த்த தாளாளர், ”யாருக்கு ஆர்டர் தர்றது?” என்றார்

“இதுல என்னங்க கேள்வி வழக்கம்போல உங்களுக்கு 10 பர்சண்ட் கமிஷன் எந்த கடைக்காரன் தர்றானோ அவனுக்குத்தான் ஆர்டர். அதுதானே முறை”

”அதானே பார்த்தேன்” என்று புன்னகைத்தவாற்றே வடை பொட்டலத்தைப் பிரித்தார் தாளாளர்.

கிழிந்த செய்தித்தாள் பொட்டலத்தில் அன்னஹசாரே சிரித்துக் கொண்டிருந்தார்..!

– சூரியகுமாரன் (ஏப்ரல் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *