சங்கர்லால் வந்துவிட்டார்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 20 
வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15

6 

ஓர் அறையில் அடைபட்டிருந்த அமீதும் மணியரசும் மனத் துன்பத்தில் ஆழ்ந்திருந்தார்கள். 

நேற்று மாலையிலிருந்து, அவர்கள் இருபத்து நாலு மணி நேரமாக அந்த அறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்! அவர்கள் இருப்பது ஒரு தனிமையான ஓர் இடம். சன்னல், உயரத்தில் இருந்ததால், எட்டவில்லை! 

காரில் அவர்களை அழைத்து வந்தவர், எந்த முகவரியில் பார்சலைக் கொடுக்கும்படி சொன்னாரோ, அதே முகவரியில், ஓர் அறையில் அவர்களை அடைத்துப் போட்டார். அவர் வந்ததும் பணியாளைக் கூப்பிட்டு, “இங்கே எவராவது வந்திருந்தார்களா? இந்தப் பையன்களிடம் ஒரு பார்சலை அனுப்பியிருந்தேன். அதை, இங்கே இருந்த ஒரு மனிதர், என்னிடம் காரோட்டியாக வேலை செய்வதாகச் சொல்லி ஏமாற்றி, ஒரு ரூபாய்ப் பணத்தைக் கொடுத்துவிட்டு. பார்சலை அடித்துக் கொண்டு போய்விட்டாராம்! அந்த மனிதரை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்!” என்றார். 

பணியாள், “நான் ஒருவரையும் பார்க்கவில்லை ஐயா!. ஆனால், ஏதோ ஒரு கார் வந்து, எதிரே மரத்தின் ஓரமாக வெகு நேரமாக நின்றிருந்தது. அதை அப்புறமாகக் காணோம்! நான் பின் பக்கம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.’ 

‘அந்த மனிதர் யார் என்று கண்டுபிடிப்பதற்கு இந்த இரண்டு பையன்களின் உதவியும் தேவை. நான் வரும் வரையில் இந்தப் பையன்களைவிட வேண்டாம். வேளைக்கு உணவு மட்டும் கொடுத்துவிடு. அடிக்கடி இவர்களைக் கவனித்துக் கொண்டே இரு” என்றார் ஒல்லியான மனிதர், பிறகு – 

அவர் எங்கேயோ போய்விட்டார், 

பொழுது ஓடிவிட்டது. இப்போது – 

இருட்டியதும், கதவு திறக்கப்பட்டது. மீண்டும் அதே ஒல்லியான மனிதர் தோன்றினார். அவருடைய வலது கைக் கோட்டுப் பையில் புதைந்திருந்தது. அவர் சொன்னார் : “இருவரும் என்னுடன் வாருங்கள். வாலாட்டம் ஒன்றும் வழியில் செய்யக்கூடாது. அப்படி ஏதாவது வாலாட்டம் செய்தால், நாயைச் கட்டுத்தள்ளுவது போலச் சுட்டுத் தள்ளிவிடுவேன்!” 

அமீதும் மணியரசும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு, அந்த மனிதனுக்கு முன் நடந்து சென்று காரில் ஏறினார்கள். கார் புறப்பட்டது. காரை வேறு ஒருவன் ஓட்டிச் சென்றான். பின் சாய்மானத்தில் அமீதும் மணியரசும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் ஒல்லியான மனிதர். இன்னும் கோட்டுப் பையிலிருந்து தன்னுடைய கையை எடுக்காமல் உட்கார்ந்திருந்தார். 

கார், என்னூர் எல்லையைக் கடந்து, ஏதோ ஓர் இடத்தில், மரங்களின் மறைவில் நின்றது. 

“கீழே இறங்குங்கள்” என்றார் ஒல்லியான மனிதர், மணியரசையும் அமீதையும் பார்த்து. 

எதிரே, ஏரியைப் போல் நீர்ப் பரப்புத் தெரிந்தது. ஏரி நடுவில் ஒரு சிறிய தீவைப் போல் காணப்பட்ட எடுப்பான ஓர் இடத்தில், பழைய வீடு மாளிகையைப் போல் இருந்தது. 

அமீதும் மணியரசும் இறங்கியதும், ஒல்லியான மனிதர் ஓடி வந்து, ஒரு படகில் அவர்களை ஏற்றினார். அவரும் ஏறிக் கொண்டார். 

படகு, தீவை நோக்கிச் சென்றது. 

இருட்டில் படகு மெல்ல ஆடி அசைந்து கொண்டு சென்ற போது, மணியரசுக்கு அச்சமாகத்தான் இருந்தது. ஆனால் – 

அமீது கொஞ்சம்கூட அஞ்சாமல் உட்கார்ந்திருந்தான். ஒல்லியான மனிதர் கோட்டைக் கழட்டிப் படகில் போட்டு விட்டு, கைச்சட்டையை இரண்டு கைகளிலும் மடக்கிட்டுக் கொண்டு படகைத் தள்ளினார். 

அவர் படகைத் தள்ளிய விதத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான் அமீது. படகு ஓட்டுவதையே தொழிலாகக் கொண்டவன் கூட, இந்த மனிதரைப் போல், இவ்வளவு எளிதாகப் படகை ஓட்டுவது ஐயம்தான் என்று எண்ணினான் அவன். 

அதே நேரத்தில், படகைச் சுற்றிலும் தெரிந்த நீர்ப் பரப்பைப் பார்த்துவிட்டு, ‘இந்த இடத்தில் படகு சுளிழ்ந்துவிட்டால் என்ன ஆவது! நமக்கு நீந்தக்கூடத் தெரியாதே!’ என்று எண்ணி அச்சம் கொண்டிருந்தான். மணியரசின் முகம் மாறிப் போயிருப்பதையும், அவன் அச்சத்துடன் மருண்டு போயிருப்பதையும் கண்ட அமீது, தன்னால் தானே மணியரசுக்கு இவ்வளவு தொல்லை என்று எண்ணியபடியே அவனுடைய முதுகைத் தட்டினான்; அஞ்சாதே மணியரசு!’ என்று அமீது சொல்லுவதைப் போலிருந்தது அவன் தட்டியது! 

ஒல்லியான மனிதர் நிமிர்ந்து அமீதைப் பார்த்தார். அமீது ஒன்றும் பேசவில்லை, அவனுக்கு ஒரு துணிவு. தானும் மணியரசும் மறைந்துபோன செய்தி எப்படியும் சங்கர்லாலுக்குத் தெரிந்துவிட்டிருக்கும். சங்கர்லால் சும்மாவிட்டு விடுவாரா இந்த ஒல்லியான மனிதரை! 

படகு மறு கரையை அடைந்து, அந்தக் கரையைச் சுற்றிலும், அடர்த்தியான மரங்களும் செடிகளும், தண்ணீரைத் தொட்டுக் கொண்டு நின்றன. படகை ஓரமாக நிறுத்தியதும், ஒல்லியான மனிதர் அமீதையும் மணியரசையும் இறங்கும்படி சொல்லிவிட்டுப் பிறகு தானும் இறங்கினார். படகை, மரத்தின் வேர் ஒன்றல், இறுகப் பிடித்துக் கட்டிவிட்டு, மின்பொறி விளக்கை எடுத்து அடித்துக் கொண்டே ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்று, சிறிது தொலைவில் இருந்த ஒரு பெரிய மாடி வீட்டை அடைந்தார். 

மாளிகையைப் போன்ற அந்த மாடி வீடு மிகவும் பழைய வீடு. மிகப் பெரிய அளவில் அந்தக் காலத்தில் எவரோ, எப்படியோ கட்டிவிட்டார்கள். அந்த மாளிகையை ஒழுங்காக வைத்துக் கொண்டால், கோடை காலத்தில் வந்து தங்குவதற்கு இதமாக இருக்கும். ஆனால், இப்போது அந்த வீட்டை அரசினர் பார்க்கவில்லையோ என்னவோ! அரசினர் அதைப் பார்த்திருந்தால், பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக அதை எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினான் அமீது. 

அந்த வீட்டின் தாழ்வாரம் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக இருந்தது. வீட்டின் வெளிக் கதவு பெரிய பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. 

ஒல்லியான மனிதர் தாழ்வாரத்தில் நின்றபடி, மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தார். வீட்டின் இடது கைப்பக்கம் ஓர் ஓரமாகச் சிறிய குடிசை ஒன்று செடிகளின் மறைவில் கட்டப்பட்டிருந்தது. உரத்த குரலில் கூப்பிட்டார் : “முனியப்பன்!” 

ஒரே தடவைதான் அவர் அழைத்தார். ஆனால்- 

பதில் இல்லை. 

மீண்டும் முனியப்பனை இன்னும் கொஞ்சம் உரத்த குரலில் அழைப்பார் என்று எதிர்பார்த்தான் அமீது. ஒல்லியான மனிதர் காத்திருந்தார். 

ஒரு நிமிடத்திற்குப் பின், குடிசையின் சிறிய கதவைத் திறந்து கொண்டு, குடிசையிலிருந்து குனிந்து வெளியே வந்தான் முனியப்பன். ஆள் வாட்டசாட்டமாக இருந்த போதிலும், அவனுக்குக் குறைந்தது ஐம்பது வயதாவது இருக்கும், அவன் தலையில் கட்டியிருந்த முண்டாசுத் துணியை அவிழ்த்துத் தோளில் போட்டுக் கொண்டு, “வாருங்கள். எசமான்!” என்று சொல்லியபடி வந்தான். 

மணியரசுக்கும் அமீதிற்கும் பின்னால் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த ஒல்லியான மனிதர், “கதவைத் திற” என்றார். 

முனியப்பன் ஓடிவந்து தாழ்வாரத்தில் நின்றான். அமீதையும் மணியரசையும் வியப்புடன் பார்த்துவிட்டு மடியிலிருந்த கொத்துச் சாவியை எடுத்துதான். கதவைத் திறந்தான். 

ஒல்லியான மனிதர் முனியப்பனிடம், “இந்த இரண்டு பையன்களையும் இங்கே விட்டுச் செல்லுகிறேன். இவர்களுக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க வேண்டும். இந்த லீட்டை விட்டு இவர்கள் வெளியே போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்களைக் கட்டிப் போடுவதோ, அடிப்பதோ கூடாது!” என்றார். 

இதைக் கேட்டதும் மணியரசுக்கு அச்சமாக இருந்தது. இனி, தன் வீட்டுக்குத் திரும்பிப் போகவே முடியாதோ என்ற ஐயம் வந்துவிட்டது! அமீது ஓரளவு துணிவுடன் இருந்தான், அமீது, எப்படியாவது சங்கர்லால் தன்னையும் மணியரசையும் கண்டுபிடித்துவிடுவார். இனி அச்சமில்லை என்று மன உறுதி கொண்டிருந்தான். ஆகையால் அவன் கொஞ்சம் துணிவுடன் பேசத் தொடங்கினான் : “ஐயா, எங்கள் இருவரையும் அழைத்து வந்து இங்கே விட்டு விட்டுப் போகிறீர்களே! எங்கள் சைக்கிள்கள் எங்கே? எங்களை இங்கே விட்டு விட்டுச் சைக்கிள்களை எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” 

ஒல்லியான மனிதர் சினம் கொள்ளவில்லை. அவர் மென்சிரிப்புடன் அமீதைப் பார்த்தார். அமீது, உங்கள் இருவருக்கும் என்மீது ஐயம் ஏற்பட்டிருக்கிறது. இல்லையா? உங்கள் சைக்கிள்கள் இருக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்புடன் இருக்கின்றன. உங்களை மீண்டும் வீட்டிற்கே அனுப்பும் போது, சைக்கிள்கரிலேயே அனுப்பி வைக்கிறேன்” என்றார் அமைதியுடன். 

“மீண்டும் எங்களை எப்போது அனுப்பி வைக்கப் போகிறீர்கள்?” என்றான் அமீது. 

“விரைவில் உங்களை அனுப்பி வைக்கிறேன். ஆனால், அந்த மனிதர் யாரென்று தெரியவேண்டும்” என்றார். 

“எந்த மனிதர்?” என்றான் அமீது கொஞ்சம் உளக்கொதிப்புடன். 

“உங்களிடமிருந்து பார்சலை வாங்கிச் சென்றவர் எவரென்று இன்னும் தெரியவில்லை. அந்த மனிதரைக் கண்டுபிடிக்கவே நான் இப்போது புறப்படுகிறேன். அந்த மனிதரை நீங்கள் தாம் அடையாளம் சொல்ல வேண்டும்” என்றார் ஒல்லியான மனிதர், 

“பார்சலைக் கொடுக்கும் படி சொன்ன முகவரியில் தாங்கள் கொடுத்துவிட்டோம். அந்த முகவரியில் இருந்து கொண்டு, உங்களை எவரோ ஏமாற்றிவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது?” என்றான் அமீது. 

இதுவரையில் பேசாமல் இருந்த மணியரசு இப்போது தான் வாயைத் திறந்து பேசினான் : “நீங்கள் ஏன் உடனே வரவில்லை?” 

ஒல்லியான மனிதர் சொன்னார் : “நான் வரும்வரையில் நீங்கள் காத்திருப்பதற்கு என்ன? பார்சலைக் கொடுத்தவர் என்ன ‘சொன்னார்? பார்சலை என்னிடம்தானே கொடுக்கச் சொன்னார்? வேறு எவரிடமும் கொடுக்கச் சொல்லவில்லையே!” 

“வேறு எவரிடமும் தரவேண்டாம் என்று குறிப்பாகச் சொல்லவில்லையே அவர்! குறித்த நேரத்தில் நீங்கள் வராமல் போனது உங்கள் தவறு!” என்றான் அமீது. 

“என்னுடைய தவறு அல்ல, போலீஸ் இலாகாவின் தவறு! இரகசிய போலீஸ் இலாகாவைச் சேர்ந்த ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். என்னிடம் ஒன்றும் இல்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் தப்பித் தவறி ஏதாவது கிடைக்காதா என்று எண்ணினார். இது வழக்கமாகிவிட்டது! இன்று நேற்றுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக இப்படியே நடந்து வருகிறது. போலீஸ் இலாகாவுக்குப் போய்விட்டு வருவதற்குள் கொஞ்சம் நேரமாகிவிட்டது!” என்றார் அந்த மனிதர். 

“அந்தப் பார்சலில் அப்படி என்ன இருந்தது?” என்றான் அமீது. 

“ஒரு புத்தகமும், ஒரு கடிதமும், அவ்வளவுதான்!” என்றார் அந்த மனிதர். 

பிறகு, அவர் போகும்போது, “உன்னுடைய அப்பாவின் பெயர் என்ன?” என்றார். 

“உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப்பின் மகன் நான்” என்றான் அமீது. 

ஒல்லியான மனிதர் கொஞ்சம் வியப்படைந்தாலும், “உதவி போலீஸ் கமிஷனர் வகாப், என்னைப் பார்க்கும் போதெல்லாம் மிக்க மரியாதையுடனே நடத்துவார். ஆகையால், உங்களையும் மிக்க மரியாதையுடனே நடத்த நான் முடிவு எடுத்துவிட்டேன். ஆனால், ஒன்று, இந்த இடத்தைவிட்டு முனியப்பனுக்குத் தெரியாமல் ஓட நினைத்தால், முனியப்பன் பொல்லாதவனாக இருப்பான்! கவனம் இருக்கட்டும்!” என்றார். 

அமீது அச்சம் கொள்ளாமல் சொன்னான் : ‘என்னுடைய அப்பா, இனிமேல் உங்களைப் பார்க்க நேர்ந்தால் நீங்கள் விரும்பும். அளவு கெளரவமாக நடத்துவார் என்று நம்ப நம்பவில்லை!” என்றாள். 

அவர் சிரித்துக் ரெகண்டே வெளியே சென்றார். அவர் வெளியே சென்றதும் கதவு மூடிக் கொண்டது. 

 அமீதும் மணியரசும் எதிரே நின்ற முனியப்பனைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். மணியரசு அழத் தொடங்கிவிட்டான்! அமீது அவனை அணைத்துக் கொண்டு தேற்றினான். மணியரசு லீணாக ஏன் அழுகிறாய்? நான் இருக்கும் வரையில் நீ அச்சம் கொள்ள வேண்டாம். எத்தனையோ வழக்குகளில் சங்கர்லால் எதிர்பாராத விதமாகத் துப்பறிந்து குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கிறார் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். சங்கர்லால் எப்படியும் நம்மைக் கண்டுபிடித்து விடுவார் என்பதில் ஐயமில்லை. அவருக்கு உதவியாக நாமே கொஞ்சம் துப்பறிந்து சில உண்மைகளைக் கண்டுபிடிக்கலாமே!” 

மணியரசு அழுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டுச் சிந்தித்தான். 

முனியப்பன், அவர்கள் பேச்சின் பொருளைப் புரிந்து கொள்ளாதவன் போல், “இருவரும் இங்கேயே இருங்கள். ஐயா சொல்லிவிட்டுப் போனது உங்களுக்கு கவனம் இருக்கிறதா இல்லையா? உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால், சன்னல் வழியாகக் கூப்பிடுங்கள். நான் குடிசையில் இருப்பேன். இல்லாவிட்டால் தாழ்வாரத்தில் படுத்திருப்பேன். அதுவுமில்லாவிட்டால் தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பேன்” என்றான். 

“இந்த மாளிகை எவருடையது!” என்று கேட்டான் அமீது.

“எனக்கே தெரியாது. இது எத்தனையோ கை மாறி விட்டது. எவருடையதாக இருந்தால் நமக்கென்ன? என்னை ஏன் என்று கேட்க இந்த இடத்தில் எவரும் கிடையாது!” என்றான் முனியப்பன், 

“இப்போது வந்து போனாரே உன் எசமான், அவர் பெயர் என்ன?” என்று கேட்டான் அமீது. 

“சின்னத்துரை என்பது அவர் பெயர். அவர் பெயரைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு என்ன ஆகப் போகிறது!” என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்று, கதவைப் பூட்டிவிட்டான் முனியப்பன். 

அமீதும் மணியரசும் சன்னல் வழியாகப் பார்த்தார்கள். தொலைவில், நீர்ப்பரப்பில் சின்னத்துரை படகில் போவது தெரிந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் படகு மறைந்து போயிற்று! 

அமீதும் மணியரசும், கூடத்தில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில், அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினார்கள். கூடத்திற்கு அப்பால் இருந்த அறைகளும், பின்புற வழிக் கதவும் சாத்திப் பூட்டப்பட்டிருந்தன. கூடத்தின் இடது புறத்தில், மாடிக்குச் செல்லும் படியிருந்தது. மாடிப் படியின் மேல் இருந்த கதவும் பூட்டப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் அந்தக் கூடத்தைவிட்டு எங்கேயும் வெளியே போக முடியாமல் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. 

மணியரசு அச்சம் தோய்ந்த பார்வையுடன் அமீதைப் பார்த்தான். அமீது சொன்னபடி சங்கர்லால் எப்படியும் அவர்களைக் கண்டுபிடித்துவிடுவார் என்ற உறுதி மனத்தில் வந்த போதிலும்கூட, அவன் மனத்தில் ஏற்கனவே புகுந்திருந்த அச்சத்தை அடியோடு விரட்ட முடியவில்லை. அமீது மென்சிரிப்புடன் மணியரசின் முதுகில் தட்டினான். 

“அமீது, இந்த இடத்தில் நாம் இருவர் மட்டும் இருந்தால் அச்சமாக இருக்காதா! இரவு முழுவதையும் எப்படிக்கழிப்பது!” என்று கேட்டான் மணியரசு. 

“அஞ்சாதே மணியரசு! இந்த இரவுப் பொழுதை எளிதில் கழித்துவிடலாம். தூக்கத்தில் எப்படியோ நேரம் ஓடிவிடும். பொழுது விடிந்ததும் தான் இந்த இடம் சிறைக் கூடமாக இருக்கும். நாளைக்கு மீண்டும் சின்னத்துரை வராமல் போக மாட்டார். அவர் சில ஆட்களைப் பிடித்துக் கொண்டு வருவார் என்று எண்ணுகிறேன். அவர்களில், நம்மிடம் ஒரு ரூபாய்க் காசைக் கொடுத்துவிட்டுச் சின்னத்துரையின் காரோட்டி என்று சொல்லிப் பார்சலை வாங்கிச் சென்றவர் இருந்தால், அத்துடன் நம் வேலை முடிந்து விடும்! அதற்கப்புறம் சின்னத்துரை நம்மை அடைத்து வைக்க நியாயம் இல்லை. பொழுது விடிந்ததும் என்ன நடக்கிறது பார்ப்போம்!” என்றான் அமீது. 

அமீது சொன்னதிலும் பொருள் இருந்தது. சின்னத்துரை, கூடிய வரையில் அவர்கள் இருவரையும் நல்ல முறையில் தான் நடத்தியிருக்கிறார். ஆகையால், பார்சலை வாங்கிச் சென்றவனைக் கண்டுபிடித்து முடித்ததும், இருவரையும் விட்டு விடுவார் என்று மணியரசும் நம்பினான், 

பேச்சிலேயே இருவரும் வெகுதூரம் பொழுதைப் போக்கினார்கள், 

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து முனியப்பன் கதவைத் திறந்து கொண்டு வந்தான். அவன், தன் கையாலேயே செய்த உணவை இருவருக்கும் பரிமாறி விட்டு, ஒரு மூலையில் குடிக்கக் கொஞ்சம் நீரையும் வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு, வெளித் தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டான். 

சிறிது நேரம் கழித்து, அமீதும் இளவரசும் சன்னல் வழியாக வெளியே எட்டிப் பர்த்த போது, முனியப்பன் உடல் முழுவதையும் இழுத்துப் போர்த்துக் கொண்டு, மெல்லக் குறட்டை விட்டபடி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். 

அமீதும் மணியரசும் விளக்கை அணைத்து விட்டுக் கீழே படுத்தார்கள். இருவருக்குமே தலையணை இல்லை. கையையே தலையணையாக வைத்துக் கொண்டு, காலை நீட்டிப் படுத்தவர்கள், அயர்ந்து தூங்கிப் போனார்கள். 

மணி- 

இரண்டு. 

நேரம், பின்னிரவாகி விட்டதை எடுத்துச் சொல்லுவதைப் போல், கூடத்திலிருந்த மிகப் பெரிய கடிகாரம் இருமுறை ஒலித்தது. ஒரு மனிதன் உள்ளே புகுந்து கொள்ளும் அளவுக்குச் செய்து வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிகாரம் இந்த நூற்றாண்டில் செய்ததாக இருக்க முடியாது. அமீது – 

விழித்துக் கொண்டான். மணியடித்த ஓசைதான் அவனை விழிக்கச் செய்தது என்று சொல்லுவதற்கில்லை. அவன் படுத்தது முதற்கொண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தவறாமல் அந்த கடிகாரம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது! பன்னிரண்டு முறைகள் அது ஒலிக்கும்போது விழித்துக் கொள்ளாதவன், இரண்டே தடவைகள் ஒலித்தபோதுதானா விழித்துக் கொள்ள வேண்டும்! இனம் தெரியாத, வேறு ஏதோ ஓசை கேட்டதாக அவனுடைய உள்ளுணர்வு சொல்லியது. 

அவன் – 

தலையைத் தூக்கிப் பார்த்தான். செவிகளால் உற்றுக் கேட்டான். 

கடிகாரத்தின் டிக்டிக் என்ற ஓசையைத் தவிர, வேறு ஏதோ ஓசையும் மேலேயிருந்து கேட்டது. அந்த ஓசை, நின்று நின்று கேட்டது. 

எவரோ மாடிமேல், நின்று நின்று நடக்கும் ஓசைதான் அது! கெட்டியான தோல் நடையன்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட ஓசை அது என்பதை அமீது உணர்ந்து கொண்டான், அவன், மணியரசை மெல்ல உலுப்பி எழுப்பினான். 

மணியரசு எழுந்ததும் அச்சத்துடன் “என்ன அமீது?” என்றான். 

“மெல்லப் பேசு மணியரசு! மாடிமேல் எவரோ நடக்கும் சத்தம் கேட்டது. அது நின்று நின்று கேட்கிறது. உனக்குக் கேட்கிறதா பார்!” என்றான் அமீது. 

மணியரசு செவிகளைத் தீட்டிக் கொண்டு கேட்டான். சில வினாடிகளுக்குப் பின், மீண்டும் – 

அதே ஓசை! 

எவரோ மெல்ல நடக்கும் ஓசை! 

“யாரது? முனியப்பனா!” என்று கேட்டான் மணியரசு. 

“முனியப்பன் கால் நடையன்களுடன், இரவு இரண்டு மணிக்கு மாடி மேல் ஏன் உலாவப் போகிறான்? அவன் படுத்து உறங்கிய இடத்திலிருந்து இப்படி அப்படி அசையவில்லை என்று எண்ணுகிறேன். வா, பார்ப்போம்” என்றான் அமீது, 

இருவரும் எழுந்து சென்று சன்னல் வழியாகப் பார்த்தார்கள். 

முனியப்பன் – 

போர்வையைக் கொஞ்சமும் விலக்காமல் பிணம்போல் படுத்துக் கிடந்தான். அவனுடைய குறட்டை ஓசை வராவிட்டால், அவன் உயிரோடு இருக்கிறானா என்ற ஐயம் அமீதுக்கும் மணியரசுக்கும் ஏற்பட்டிருக்கும். 

“என்னுடன் வா” என்று மணியரசைக் கூடத்தின் மையத்திற்கு அழைத்து வந்தான் அமீது. 

“என்னடா சிந்திக்கிறாய். மேலே உலாவுவது பேயோ பிசாசோ? எனக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் அமீது. 

“பேயாக இருந்தாலும், பிசாசாக இருந்தாலும் நாம் அதைப் பார்த்து விடுவோமே! எந்தக் காலத்தில் நாம் பேயையும் பிசாசையும் பார்க்கப் போகிறோம்? சென்னையில்தன் பேயைப் பார்க்க முடியவில்லை! இங்கேயாவது பார்ப்போமே!” என்றான் அமீது. உண்மையிலேயே அவன் உள்ளம் இரும்பு உள்ளமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான் மணியரசு. 

“மாடிக்கு எப்படிப் போவது! மாடிக் கதவுதான் பூட்டியிருக்கிறதே!” என்றான் மணியரக. 

“நான் சொல்லுகிறேன் வழி” என்று சொல்லி, பக்கவாட்டிலிருந்த சன்னல் பக்கமாகச் சென்றான் அமீது. சன்னல் கம்பிகள் அவ்வளவு நெருக்கமாக அமைக்கப்படாமல் இருந்தன. கொஞ்சம் உடலை வளைத்தால், இருவருமே சன்னல் கம்பிகளின் இடுக்கில் புகுந்து போய்விட முடியும். சன்னலுக்குப் பக்கத்தில், சன்னலை ஒட்டிய படியின் மேல் படர்ந்து சென்றது அழுத்தமான பூங்கொடி ஒன்று. 

“நான் முதலில் கொடியைப் பிடித்துக் கொண்டு, மெல்ல மேலே சென்று விடுகிறேன். நீ என் பின்னாலேயே வா. கொஞ்சமும் ஓசை செய்யாதே! தெரிகிறதா?” ஒன்று சொல்லி விட்டு, சன்னல் கம்பிகளின் இடுக்கில் புகுந்து மேலே ஏறிச் சென்றான் அமீது. அவன் பின்னாலேயே மணியரசும் பூங்கொடியைப் பிடித்துக் கொண்டு ஏறினான். 

வெளியே, இருட்டில் பார்ப்பதற்கு அச்சமாகத்தான் இருந்தது. மணியரசு அமீதின் அருகில் சென்றான். மாடியின் அருகில் சென்றதும், சன்னல் விளிம்பில் இருவரும் மெல்ல எட்டிப் பார்த்தார்கள். 

மாடியின் மேல் கூடத்தில், யாரோ ஒரு மனிதர் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். அவர் மேசை அறைகளையும் அலமாரிகளையும் திறந்து மின்பொறி விளக்கின் வெளிச்சத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். 

அப்போது – 

மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அவருடைய முகத்தைக் கவனித்தனர் இருவரும். அந்த மனிதர் – 

சின்னத்துரை தேடிக் கொண்டிருந்த அதே மனிதர்தான்! சின்னத்துரையின் காரோட்டி என்று சொல்லி, அமீதையும் மணியரசையும் ஏமாற்றிப் பார்சலை அடித்துச் சென்ற அதே மனிதர்தான்! 

அமீது வியப்புடன் மணியரசைப் பார்த்தான். மணியரசு கூச்சல் போட்டு முனியாண்டியை எழுப்பலாமா என்று சிந்தித்த படி, வாயைத் திறந்தான். அதற்குள், அமீது அவனுடைய வாயைப் பொத்தி, மெல்லக் கீழே இறங்கும் படி சொன்னான். இருவரும் வந்த வழியே இறங்கி, சன்னலில் புகுந்து கீழ்க் கூடத்தை வந்து அடைந்தார்கள். 

என்னடா அமீது அந்த மனிதனைப் பிடித்துக் கொடுத்தால் நம்மை விட்டு விடுவார்களா இல்லையா!” என்றான் மணியரசு. 

“நானும் அப்படித்தான் நினைத்தேன். இப்போது நிலைமை மாறிவிட்டது!” என்றான் அமீது மிகவும் தாழ்ந்த குரலில், 

“எப்படி மாறிவிட்டது என்கிறாய்?” என்று கேட்டான் மணியரசு. 

“பார்சலை அவன் கொண்டு சென்றும் கூட, அவனுக்கு அது பயனில்லாமல் போய் விட்டதோ என்னவோ இல்லாவிட்டால், இங்கு வந்து அவன் எதைத் தேட வேண்டும்! சின்னத்துரை, இந்த நிகழ்ச்சி முடியும் வரையும் நம்மை விடுவதற்கு நியாயமில்லை. முதலில், பார்சலில் என்ன இருந்தது என்பதே நமக்குத் தெரியவில்லையே?” என்றான் அமீது. 

மணியரசு சிறிது நேரம் சிந்தனை செய்து பார்த்தான். “சின்னத்துரை பார்சலை வாங்கிச் சென்ற மனிதனைக் காட்டிக் கொடுத்து விட்டால் தம்மை விட்டு விடுவதாக உறுதி கூறியிருக்கிறாரா?” என்றான். 

“உண்மைதான். அவர் தனது உறுதி மொழியை காப்பாற்றுவார் என்று எப்படி முழுமையாக நம்புவது! ஆகையால், நாமே சில உண்மைகளைக் கண்டுபிடிப்பது நல்லது!” என்றான் அமீது. 

“என்ன உண்மைகளைக் கண்டுபிடிக்கப் போகிறாய்?” என்றான் மணியரசு. 

“நான் சன்னல் வழியாக மாடி விளிம்புக்குச் சென்றதையும், அங்கே பார்த்த மனிதனையும் மறந்துவிடு” 

“அப்புறம்!” 

“வேடிக்கையைப் பார்!” என்று சொல்லிக் கொண்டே, வெளிக்கதவைப் பட படவென்று இரு கைகளாலும் தட்டினான் அமீது. அதே நேரத்தில் அவன், “முனியப்பன்! முனியப்பன்!” என்று கூச்சல் போட்டான். 

தூங்கிக் கொண்டிருந்த முனியப்பன் அலறிக் கொண்டு எழுந்தான்! 

“என்ன? என்ன?” என்றான் அவன் தூக்கக் கலக்கத்துடன். “கதறைத் திற” என்றான் மணியரசு. 

“கதவைத் திறக்க முடியாது! என்ன வேண்டும் சொல்லுங்கள்?” என்றான் முனியப்பன், 

“மாடிமேல் ஏதோ ஓசை கேட்கிறது. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது!” என்றான் அமீது. 

ஆமாம், ஆமாம், கதவைத் திற” என்றான் மணியரசு, 

“இங்கே எவரும் வரமாட்டார்கள். எதற்கு இப்படி அச்சம் கொள்கிறீர்கள்? அமைதியோடு தூங்குங்கள்” என்றான் முனியப்பன் எழுந்து கொண்டே. 

“பேயோ, பிசாசோ தெரியவில்லை!” என்றான் அமீது. “பேயாவது! பிசாசாவது! பின்புற மாடிப் படிக்கட்டுக் கதவைச் சும்மா சாத்தியிருந்தேன். அதை அப்படியே பூட்டி விட்டு வந்து விடுகிறேன். பொழுது விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி ஓடினான். 

ஐந்து நிமிடங்களில் அவன் பின்புறப் படிக்கட்டில் இருந்த மாடிக் கதவைப் பூட்டிவிட்டு வந்தான், 

“உள்ளே பார்த்தாயா?” என்று கேட்டான் அமீது. “இல்லை, காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லிப் படுத்துக் கொண்டான் முனியப்பன். 

மீண்டும் அவன் துன்பமின்றிக் குறட்டை விட்டபடி தூங்கத் தொடங்கிவிட்டான்! 

அமீதும் மணியரசும் வெகு நேரம் விழித்துக் கொண்டிருந்தார்கள். 

தொலைவில் எங்கேயோ, தவளை ஒன்று வெகு நேரம் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தது. பிறகு, அது ஓசையிடுவது நின்றுவிட்டது. 

“தவளை ஓசை செய்வதை நிறுத்திவிட்டதே?” என்றான் மணியரசு. 

அது ஓசை இடுவதை நிறுத்தவில்லை. அது ஓசை இடுவதைக் கேட்ட பாம்பு, அது இருக்குமிடத்தை எளிதில் அறிந்துக் கொண்டு, பின்னாலேயே வந்து அதை அப்படியே விழுங்கிவிட்டது!” என்றான் அமீது. 

இனம் தெரியாத அச்சம் மணியரசின் மனத்தில் புகுந்து கொண்டது! அவன் அச்சத்துடன் குப்புறப்படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கத்திலேயே அமீதும் படுத்துக் கொண்டான். 

தூக்கம் எவரையும் கேட்டுக் கொண்டு வருவதில்லை. அது தன்னாலேயே வந்து விடுகிறது! 

8 

பொழுது புலர்ந்தது. 

முனியாண்டி கதவைத் திறந்து, “என்னுடன் வாருங்கள்” என்றான். 

இருவரையும் அழைத்துக் கொண்டு, பின்புறப் படிக்கட்டின் மேல் ஏறி, மாடிக் கதவைத் திறந்தான். உள்ளே 

எவரையும் காணோம்! 

எவரும் வந்து போன அடிச்சுவட்டைக்கூடக் காணோம்! மேசை அறைகளையும், அலமாரிகளையும் திறந்து பார்த்தான் மணியரசு. அவைகளில் எல்லாம் ஒழுங்காசுவே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

முனியப்பன் இருவருடைய முகத்தையும் பார்த்தான். ‘நான் சொன்னால் கேட்டீர்களா? இங்கே ஒருவருமே வந்திருக்க முடியாது!” என்றான் அவன் வெற்றிச் சிரிப்புடன். 

“பேயாக இருந்தால், சன்னல் வழியாகப் போய் விட்டிருக்கும். இல்லையா!” என்றான் மணியரசு. 

“மனிதனும் தாம் சன்னல் வழியாக வந்து சன்னல் வழியாகப் போய்விட்டிருக்க முடியும். நான் சொல்லுவது என்னவென்றால், இந்தத் தீவுக்கே ஒருவரும் வந்திருக்க முடியாது என்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் இங்கே இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் பார்க்காத பேயை நீங்கள் மட்டும் எப்படிப் பார்க்க முடியும்!” என்றான் முனியாண்டி. 

“தாங்கள் ஓசையைக் கேட்டது என்னவோ உண்மைதான்!” என்றான் அமீது. 

“நீ கேட்கவில்லையா அந்த ஓசையை?” என்றான் மணியரசு முனியாண்டியைப் பார்த்து. 

“எந்த ஓசையும் என் காதில் விழவில்லை. கீழே போகலாம் வாருங்கள்” என்றான் முனியாண்டி. 

மூவரும் கீழே இறங்கினார்கள். 

முனியப்பன், அமீதையும் மணியரசையும் அழைத்துப் போய், கீழ்க்கூடத்திலேயே மீண்டும் அடைத்து விட்டு, “இருவரும் இங்கேயே இருங்கள். பட்டப் பகலில் பேய் பிசாசு ஏதும் வராது. நான் போய்க் காலைச் சிற்றுண்டி செய்து உங்களுக்குக் கொண்டு வருகிறேன்” என்றான். 

முனியப்பன் கதவைப்பூட்டிய போது, சன்னல் வழியாக அமீதும் மணியரசும் எட்டிப் பார்த்தார்கள். 

அமீது மெல்லச் சொன்னான்: “எங்களைப் பூட்டி வைக்காமல் போனால் தான் என்ன? நாங்கள் என்ன ஓடியா போகப் போகிறோம்? சுற்றிலும் தான் கடல் நீர் கவிழ்ந்து நிற்கிறதே! நாங்கள் தப்பிப் போகப் படகுக்கூட இங்கே இல்லை” 

முனியப்பன் மென்சிரிப்புடன் அமீதைப் பார்த்தான். அமீதும், மணியரசும், இரவு சன்னல் வழியாக வெளியே வந்து, ஒன்றும் தெரியாதவர்களைப் போல் மீண்டும் உடனே போய் ஒளிந்து கொண்டது தெரிந்திருந்தால், அவன் அப்படிப் பார்த்திருக்க மாட்டான். இருவரையும் பார்க்க அவனுக்கு இரக்கமாக இருந்தது. ஆனாலும், “அதுதானே முடியாது! ஐயா வந்தால் என்மீது சினம் கொள்வார்” என்றான் அவன். 

“நாங்கள் எங்கேயாவது ஓடிப்போனால் தானே உன்மீது ஐயா சினம் கொள்வார்?” என்றான் அமீது விடாமல், 

“நீங்கள் எங்கேயாவது ஓடிப்போனால், ஐயா என்னை அத்துடன் தொலைத்துவிடுவார்! சினம் கொள்வது என்பது வேறு, தொலைத்துவிடுவது என்பது வேறு” என்றான் முனியப்பன், 

“சரிதான். உன் ஐயா வந்ததும் அவரிடமே நான் கேட்கிறேன். இப்படி எங்கள் இருவரையும் பூட்டி வைத்திருப்பது எங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. நீ போய் விரைவில் சிற்றுண்டி காபி கொண்டு வா” என்றான் அமீது. 

முனியப்பன் சிரித்துக் கொண்டே, “காபி ஏது? வெறும் சிற்றுண்டி கிடைத்தால் போதாதா!” என்று சொல்லியபடி நகர்ந்தான். 

அமீதும் மணியரசும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிறிது தேரம் வரையில் அப்படியே நின்றிருந்தார்கள். 

“முனியப்பனுக்குக் கொஞ்சம் வேடிக்கை காட்டலாமே!” என்றான் மணியரசு, 

“என்ன வேடிக்கை! அவன் நம்மை வெளியே விடமுடியாது என்று சொல்லிவிட்டுப் போய்லிட்டான். அவனுக்குத் தெரியாமல், சன்னல் வழியாகக் குதித்து அவன் குடிசைக்குப் போய், அவனை வியப்படையும் படி செய்யலாம் என்றுதானே சொல்லுகிறாய்? நாம் தப்பி ஓட முயலுவதாக எண்ணி நம்மை நையப்புடைத்து, இருட்டு அறை ஒன்றில் கட்டிப் போட்டு விடுவான்! இங்கேயே இருப்பது தான் மேலானது. இன்று சின்னத்துரை வந்தாலும் வருவார்” என்றான் அமீது, அவன் சொல்லுவது உண்மை என்பதை உணர்ந்தான் மணியரசு, நேரம் – 

ஓடிக் கொண்டேயிருந்தது. 

கூடத்திலிருந்த பெரிய கடிகாரத்தில் மணி ஒன்பது அடித்தது. முனியப்பன் சிற்றுண்டித் தட்டுகளுடன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அமீதும் மணியரசும் நான்கு நாட்கள் பட்டினி கிடந்தவர்களைப் போல் ஓடிப் போய் முனியப்பனின் கையிலிருந்த பலகாரத் தட்டுகளை வாங்கி, சிற்றுண்டியைத் தின்னத் தொடங்கினார்கள். 

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, சன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முனியப்பன், “ஐயா வந்துவிட்டார்” என்றான், 

இவ்வளவு விரைவில் சின்னத்துரை வந்துவிடுவார் என்று அமீது எதிர்பார்க்கவில்லை. அவன் மிக விரைவாக உண்டு விட்டு சன்னல் பக்கம் போனான். அவன் பின்னால் மணியரசும் சென்றான். 

நீர்ப்பரப்புக்கு அப்பால், மறுகரையில், ஓர் ஓரமாக, அமீதையும் மணியரசையும் ஏற்றி வந்த அதே கார் நின்றிருந்தது. அதில் காரோட்டி மட்டும் உட்கார்ந்திருந்தான், நீரில் – 

படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் படகு. தீவை நோக்கித் தான் வந்து கொண்டிருந்தது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. அதில், மொத்தம் ஆறு பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில், சின்னத்துரையும் ஒருவர். சின்னத்துரை மற்ற ஐந்து பேர்களையும் எதற்காக அந்தத் தீவுக்குக் கொண்டு வருகிறார் என்ற அமீதுக்குப் புரிந்துவிட்டது. மணியரசுக்குப் புரியவில்லை. மனிதர்களைப் பிடித்து வந்து அந்தத் தீவில் அடைத்து வைப்பது தான் சின்னத்துரையின் தொழிலோ என்னவோ என்று எண்ணினான் அவன். 

அமீது. மற்ற ஐந்து பேர்களையும் உற்றுப் பார்த்தான். பிறகு, அவன் மெல்லச் சிரித்தான். அவன் சிரித்ததை முனியப்பன் பார்க்கவில்லை. மணியரசு பார்த்துவிட்டு, “ஏன் சிரிக்கிறாய் அமீது!” என்று கேட்டான், 

“அந்த ஐந்து மனிதர்களையும் உற்றுப் பார்” என்றான் அமீது. 

மணியரசு அவர்களை உற்றுப் பார்த்தான், பிறகு ஒன்றும் புரியாமல், “என்ன அவர்களுக்கு?” என்றான். 

“அவர்களை இதற்கு முன் எங்கேயாவது நீ பார்த்திருக்கிறாயா?” 

“இல்லையே அமீது! ஏன்?” 

“நான் கேட்ட கேள்வியை இன்னும் சிறிது நேரத்தில் சின்னத்துரை நம்மிடம் கேட்கப் போகிறார். கேட்டதும் தயங்காமல் பதில் சொல்ல வேண்டும்” என்றான் அமீது. 

அப்போது மணியரசுக்கும் நிலைமை புரிந்தது. 

ஆறு பேர்களும் தீவை அடைந்ததும், நடந்து வந்தார்கள். 

முனியப்பன் ஓடிப் போய்க் கதவைத் திறந்தான். திறந்த கதவின் வழியே புதிய மனிதர்கள் ஐந்து பேர்களும், அவர்களைத் தொடர்ந்து சின்னத்துரையும் நுழைந்து நின்றார்கள். 

சின்னத் துரையின் கண்கள், இரண்டும் சிவந்திருந்தன. இரவெல்லாம் அவர் கொஞ்சம் கூடத் தூங்கவில்லை என்பதை அமீது புரிந்து கொண்டான். 

சின்னத்துரை ஐந்து பேர்களையும் பார்த்துக் கண்களால் சாடை காட்டினார். போலீஸ் இலாகாவில், ஒரே குற்றத்தைப் பலர் சேர்ந்து இழைத்து விட்டு அகப்பட்டுக் கொண்டதும், வரிசையாக நிறுத்தப்படுவதைப் போல் அவர்கள் நின்றார்கள். சின்னத்துரை. அமீதையும் மணியரசையும் உற்றுப் பார்த்தார். 

அமீது, மீண்டும் ஐவரையும் உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான் : “இந்த ஐந்து பேர்களில், ஒருவரைக் கூட நாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை!” 

“எங்களிடமிருந்து பார்சலை வாங்கிச் சென்றவர், இவர்களில் எவரும் இல்லை!” என்றான் மணியரசு. 

சின்னத்துரைக்குப் பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. இரவெல்லாம் விழித்து, கார் சக்கரங்கள் தேய எங்கெல்லாமோ தேடியும், குறிப்பிட்ட மனிதர் சிக்கவில்லையே என்று அவர் ஏங்கினார்! 

அமீது சொன்னான் : “நீங்கள் இரவெல்லாம் தூங்கவில்லை! போலிருக்கிறது! நீங்கள் பிடித்து வந்த இந்த ஐந்து பேர்களையும் பார்த்தால், இந்த உலகத்தில் இவர்கள் இதுவரையில் செய்யாத குற்றமே இருக்காது என்று எண்ணுகிறேன்! இவர்களுடைய முகங்கள் போலீஸ் இலாகாவிற்குப் பழக்கப்பட்டவையாக இருக்கும். நாங்கள் பார்த்த மனிதர், பார்வைக்கு இவ்வளவு மோசமாக இருக்க மாட்டார். முதன் முதலில் பார்ப்பவர்கள், அந்த மனிதரை நல்லவர் என்றே எடை போடுவார்கள். இனிமேல் நீங்கள் பிடித்து வரும் மனிதர்கள், நல்லவர்களைப் போல் இருக்கிறார்களா என்று பாருங்கள. அப்படி அவர்கள் இல்லாவிட்டால், நல்லவர்களைப் போல் வேடம் போட்டாவது அழைத்து வாருங்கள்!!”

அமீது சொன்னது மணியரசுக்கு வேடிக்கையாக இருந்தது! முனியப்பனுக்கு அமீது வேடிக்கையாகப் பேசுகிறானா அல்வது உண்மையாகவே அலன் சொல்லும் மனிதன் அப்படி இருந்தானா என்று ஐயமாக இருந்தது. 

சின்னத்துரைக்கு வேதனையாகவும் கொதிப்பாகவும் இருந்தது. ஆனாலும் அதை அவர் வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. 

“மீண்டும் நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சின்னத்துரை புறப்பட்டார். 

நேற்றிரவு மாடியின் மேல் பார்சலை வாங்கிச் சென்ற மனிதன் வந்து போனதைப் பற்றிச் சின்னத்துரையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்தபடியே அமீதைப் பார்த்தால் மணியரசு. ஆனால் – 

அமீது அதைப் பற்றிக் கவனமே இல்லாதவனைப் போல் “நாங்களும் உங்களுடன் வருகிறோமே” என்றான். 

“எதற்கு?” என்று கேட்டார் சின்னத்துரை. 

“எங்களால், நீங்கள் தேடும் மனிதரை எளிதில் கண்டு பிடிக்க முடியும் என்று எண்ணுகிறேன். ஆகையால், சென்னைக்கே எங்களை அழைத்துச் செல்லுங்கள்” என்றார் அமீது. 

“உங்களையும் விட்டு விட்டு, அப்புறம் மூன்று பேர்களையும் தேடிக் கொண்டிருக்க என்னால் முடியாது! நீங்கள் இங்கேதான் இருந்தாக வேண்டும்” என்றார் சின்னத்துரை அழுத்தமான குரலில், 

“இங்கே இரவில் பேய் வருகிறது! எங்களுக்கு அச்சமாக இருக்கிறது” என்றான் மணியரசு. 

“இத்தனை நாட்கள் இல்லாத பேய் இப்போது நீங்கள் வந்த உடனே தான் வரவேண்டுமா? உங்கள் ஏமாற்று வேலைக்கு முனியப்பன் ஏமாற மாட்டான்!” என்றார் சின்னத்துரை. 

“நன்றாகச் சொன்னீர்கள்” என்று தன் முதலாளியைப் பாராட்டினான் முனியப்பன். 

சின்னத்துரை முனியப்பனிடம், “இருவரையும் முன்னை விடக் கவனமாகப் பார்த்துக் கொள். இவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள் என்றே எண்ணுகிறேன். இவர்கள் என்னை ஏமாற்றுகிறவரையில், நான் இவர்களை விடப் போவதில்லை!” என்று சொல்லி விட்டுப் படகை நோக்கி நடந்தார். அவருடன் வந்த ஐந்து பேர்களும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். 

எல்லாரும் படகில் ஏறினார்கள். சின்னத்துரை துடுப்பைப் போட்டுப் படகைத் தள்ளிக் கொண்டே, “உங்களிடம் ஒன்று சொல்லுகிறேன். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். நான் சொன்ன சொல் தவறுவதில்லை. இது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது, தெரிந்திருக்கும். வந்து போனதைப் பற்றி, அக்கரையை அடைந்ததும் அடியோடு மறந்துவிட வேண்டும்! எந்தக் காரணத்தைக் கொண்டும், தீவுக்கு நீங்கள் வந்து போனதைப் பற்றியோ அமீதும் மணியரசும் அடைபட்டுக் கிடப்பதைப் பற்றியோ, எவரிடமும் மூச்சுவிடக் கூடாது! நீங்களும்கூட ஒருவருக்கொருவர் இதைப் பற்றிப் பேசக்கூடாது! அப்படி ஏதாவது நடந்தால், உங்கள் உயிர் உங்களுடையதல்ல! இது உறுதி! உறுதி!” என்றார் மிகுதியான குரலில்! 

ஐந்து பேர்களும் அவர் சொன்னதை நன்கு புரிந்து கொண்டவர்களைப் போல் தலையை மேலும் கீழும் ஆட்டினார்கள். படகு – 

ஆடிக் கொண்டே சென்றது. 

பிற்பகல்,

மணி இரண்டு. பெரிய சிறைக்கூடத்தின் முன்னால், வாராவதிக்குப் பக்கத்தில் சிறிது தொலைவிலேயே சின்னத்துரையின் கார் நின்றது. காரிலிருந்து இறங்குவதற்கு முன் சின்னத்துரை, எல்லாப் பக்கங்களிலும் கவனமாகப் பார்த்து விட்டு, கதவைத் திறந்து கொண்டு இறங்கினார். காரை அவரே ஓட்டி வந்திருந்தார். அவர் கீழே இறங்கியதும், காரில் கண்ணாடிகளை ஏற்றிவிட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு, சிறைக் கூடத்தை நோக்கி நடந்தார். 

சிறைக் கூடத்தில் வெளியே தோளில், தாங்கிய துப்பாக்கியுடன் ஒரு போலிஸ்காரன், இப்படியும் அப்படியும் மெல்ல உலவிக் கொண்டிருந்தான். சிறைக் கூடத்தின் கதவுகள் இரண்டும் சாத்தப் பட்டிருந்தன. கோவில் கதவுகளைப் போன்ற அந்தக் கதவுகளில், ஒரு சுதவில், சிறிய கதவு ஒன்று இருந்தது. 

சின்னத்துரை போலீஸ்காரனிடம் ஏதோ ஒரு சிறிய துண்டுக் காகிதத்தைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த போலீஸ்காரன், சிறிய கதவை மட்டும் திறந்து, உள்ளே தலையை நீட்டி ஏதோ கேட்டான். பிறகு – 

திரும்பினான், சின்னத்துரையை உள்ளே போகும்படி சாடை காட்டினான். சின்னத்துரை, அந்தச் சிறிய வழியில் குனிந்து உள்ளே நுழைந்தார். 

சிறைக்கூட வார்டன், சின்னத்துரையை உள்ளே அழைத்துச் சென்றார். வரிசையாக இருந்த பல இரும்பு அறைகளைக் கடந்து, கடைசியில் இருந்த ஓர் அறைக்குள் நுழைந்தார். அவர் பின்னால் சின்னத்துரையும் சென்றார். 

அந்தப் பெரிய அறையில் நடுவில் இரும்புக் கம்பிகள் மட்டும் போதாது என்று, வலைக் கம்பியும் போடப்பட்டிருந்தது. கம்பிக்கு அப்பால் ஒரு நாற்காலியும், இந்தப் பக்கம் ஒரு நாற்காலியும் போடப்பட்டிருந்தன. கம்பிக்கு அப்பால் இருந்த நாற்காலியில், ஏழு ஆண்டுகள் சிறைவாழ்வு பெற்ற சவரிமுத்து உட்கார்ந்திருந்தான். சின்னத்துரை, இந்தப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் மௌனமாக உட்கார்ந்தார், 

வார்டன் சொன்னார்: “உங்களால் பேசத்தான் முடியும். நீங்கள் சவரிமுத்தைப் பார்க்க வேண்டும் என்றதும், தொலைபேசியில் சொல்லி, உடனே சவரிமுத்தை இங்கே அனுப்பும்படி சொன்னேன். ஐந்து நிமிட நேரம் தருகிறேன். பேசிவிட்டு வெளியே வாருங்கள். நீங்கள் ஏதாவது சவரிமுத்துவுக்குத் தரவேண்டும் என்று எண்ணினால், எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் தரமுடியாது. அதற்குத்தான் இந்த வலைக்கம்பி!” 

இப்படி அவர் சொல்லிவிட்டு வெளியே வந்தர். அறையின் கதவு மூடப்பட்டது. உள்ளே – 

விளக்கு வெளிச்சத்தில், சவரிமுத்தும் சின்னத்துரையும் மட்டும் அமைதியுடன் உட்கார்ந்திருந்தார்கள். 

சின்னத்துரை, கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னார்: “சவரிமுத்து, நேரத்தை வீணாக்குவதில் பயனில்லை. நான் இப்போது உன்னை ஏன் பார்க்க வந்தேன் தெரியுமா? நீ சொன்ன வேலையை இன்னும் நீ முடிக்கவில்லை!”, 

சவரிமுத்து வியப்புடன் சின்னத்துரையைப் பார்த்தான். 

“வியப்படைய வேண்டாம் சவரிமுத்து! நான் இதுவரையில் தவறி நடந்ததில்லை. இது உனக்குத் தெரியும். இருபது நாலுமணி நேரமும் இரகசியப் போலீஸ் என்னைத் தொடர்ந்து கவனித்து வருகிறது. என்னுடைய நிலைமை இப்போது எப்படி இருக்கிறது. தெரியுமா? வெளியே சுயேச்சையாக என்னால் திரிய முடியவில்லை. உன்னுடைய நிலைமை எவ்வளவோ மேல் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை!” என்றார் சின்னத்துரை, 

”சின்னத்துரை, இந்த உலகத்தில் நான் நம்பக்கூடிய ஆள் நீ ஒருவன்தான். அதனால் தான் உன்னிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து, கடிதத்தைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்படி சொன்னேன். இப்போதும் நான் அந்த நம்பிக்கையை இழக்கவில்லை!” என்றான் சவரிமுத்து, பிறகு, “என்ன நடந்தது?” என்று கேட்டான். ஆவலுடன். 

“பாதிக் கடிதம் மறைந்துவிட்டது! அவ்வளவுதான்! அதைக் கண்டு பிடிப்பதில் முழு முயற்சி மேற்கொண்டு வருகிறேன். எப்படியும் சுடிதத்தைக் கிளப்பியவனைக் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன். நாட்கள் பல ஆனாலும் ஆகும் என்பதைத் தவிர, வேறு எந்தவிதமான கேடும் நேர்ந்துவிடாது!” என்றார் சின்னத்துரை. 

“அது உன்னுடைய பொறுப்பு. நான் மற்றொரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது. நீ இங்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. நான் சொல்லுவதை மிகக் கவனமாகக் கேள். வியப்படைய வேண்டாம். எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், என்னுடைய பிணத்தை என் மகளிடம் – என் இரு கண்களைப் போன்ற ஒரே மகளிடம் சேர்த்துவிட வேண்டும். என்னுடைய பிணம் என் மகளிடம் போவதற்கு முன், நான் கொடுத்த முழுக் கடிதமும் அவளிடம் சேர்ப்பிக்கப்பட வேண்டும். இதுதான் நீ எனக்குச் செய்யும் கடைசி உதவி!” என்றான் சவரிமுத்து, 

சின்னத்துரை உண்மையிலேயே வியப்படைந்து விட்டார்! எதற்கும் வியப்படையாத அந்த மனிதர், சவரிமுத்து சொன்னதைக் கேட்டதும், “உன் உயிருக்கு ஆபத்து நேரும் என்று ஏன் எண்ணுகிறாய்?” என்று கேட்டார். 

சவரிமுத்து பதில் சொல்லவில்லை. கொஞ்சம் சிரித்தான், அப்போது – 

கதவு திறந்தது. 

வார்டன் உரக்கக் கத்திக் கொண்டே, “ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன. இனிமேலும் பேச அனுமதியில்லை. வெளியில் வாருங்கள்” என்றார், 

சின்னத்துரை, சவரிமுத்துவை உற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பினார். அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும் இப்படி அப்படித் திரும்பிப் பார்க்காமல் விரைந்து வெளியேறினார். 

கார் இருந்த இடத்தை அடைந்ததும், மீண்டும் நான்கு திக்குகளிலும் பார்த்துவிட்டுக் காரில் ஏறி உட்கார்ந்தார். 

10 

சங்கர்லால் மேசையின் மேல், கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு, நாற்காலியில் உட்கார்ந்தபடி, வழக்கம் போல் கனத்த புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். படிக்கும் அறையில் அவர் இருந்ததால், அவரைப் பார்க்க வந்த வகாப், கூடத்தில் உட்கார்ந்தபடி மாதுவிடம் சொல்லியனுப்பினார். மாது வந்து, “தம்பி உதவி போலீஸ் கமிஷனர் வகாப் வந்திருக்கிறார். அவருடைய முகத்தைப் பார்த்தால், இன்னும் அவருடைய மகன் அமீது வீட்டிற்கு வந்து சேரவில்லை என்று தெரிகிறது! அதற்காகத்தான் வந்திருக்கிறாரோ, அல்லது புதிய வழக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறாரோ தெரியவில்லை!” என்றான். 

சங்கர்லால் மெல்லிய சிரிப்புடன் புத்தகத்தை மேசை மேல் போட்டுவிட்டு எழுந்தார். கூடத்தை நோக்கி நடந்தார். 

சங்கர்லாலைப் பாரித்ததும் எழுந்து நின்று “வணக்கம்” என்றார் வகாப். 

சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் ‘வணக்கம் வகாப்” என்று சொல்லிவிட்டு அவருக்கு எதிரில் உட்கார்ந்தார் சங்கர்லால். 

“அமீதைப் பற்றி ஒன்றும் செய்தி தெரியவில்லை அல்லவா?” என்றார் சங்கர்லால், 

“இன்னும் இல்லை. அவர்களுடைய சைக்கிள்களையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை!” என்றார் வகாப். 

தேநீர்க் கோப்பைகளுடன் தோன்றினான் மாது. அவன் சங்கர்லாலிடம் வகாபிடமும் தேநீர்க் கோப்பைகளைக் கொடுத்துவிட்டு, “நான் ஒன்று சொல்லட்டுமா தம்பி?” என்றான். 

அவன் ஏதோ வேடிக்கையாகச் சொல்லப் போகிறான் என்பதைப் புரிந்து கொண்ட சங்கர்லால், “சொல்லு. வகாப் நம்மவர்தானே? உன் மனத்தில் தோன்றுவதை அப்படியே சொல்லு” என்றார். 

“அமீதும், மணியரசும் சைக்கிளிலேயே உலகச் சுற்றுப் பயணத்திற்குக் கிளம்பி விட்டார்களோ, என்னவோ!” என்றான். 

சங்கர்லாலுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “அப்படிப் புறப்படுகிறவர்கள் சொல்லாமல் போவார்களா? ஒரு பத்திரிகையில் புகைப்படத்துடன் விளம்பரம் கொடுத்து விட்டுத் தான் புறப்படுவார்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட விளம்பரம் செய்ய உதவி செய்பவர்கள் சைக்கிள் கம்பெனிக்காரர்கள், ஆனால், அமீதுக்கும் மணியரசுக்கும் எந்த சைக்கிள் கம்பெனிக்காரரும் இனாமாகச் சைக்கின் தரவில்லையே!” என்றார். 

வகாப் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “அமீதும் மணியரசும் மறைந்து மூன்று நாட்களாகிவிட்டன. என் மனம் என்ன பாடுபடுகிறது தெரியுமா சங்கர்லால்! பக்கத்து வீட்டு மனிதர் வேறு தினமும் என் வீட்டிற்கு வந்து தொல்லை தருகிறார். சங்கர்லால் எப்படியும் உதவி செய்வார் என்று அவரிடம் உறுதி கூறியிருக்கிறேன்!” என்றார். 

சங்கர்லால் சிறிது நேரம் சிந்தனையுடன் ஆழ்ந்தார். பிறகு- மாணிக்கத்தை அழைத்தார். 

மாணிக்கம் இப்போதெல்லாம் மடிப்புக் கலையாத உடையில் காணப்பட்டான். படிப்படியாகத் தலையை வாரி விட்டிருந்தான். கயல்விழி வந்ததிலிருந்தே தனது தோற்றத்திலும் நடத்தையிலும் அவன் பெரும் அக்கறை கொண்டிருந்தான். 

சங்கர்லால் அவனிடம் ஒரு சிறிய காகிதத்தைக் கொடுத்தார். அது –

வகாப் முன்பு எழுதிக் கொடுத்த சவரிமுத்துவின் முகவரி! 

“மாணிக்கம். இந்த முகவரிக்குப் போய், சவரிமுத்தைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்து வா. சவரிமுத்துவுக்கு மனைவி இருக்கிறாளா என்பது தெரிய வேண்டும். சவரிமுத்துக்குப் பன்னிரண்டு வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயரென்ன, எங்கே படிக்கிறாள், இப்போது சவரிமுத்துவின் குடும்பம் எப்படி நடக்கிறது, என்பதையெல்லாம் தெரித்து வரவேண்டும்” என்றார் சங்கர்லால், 

“எளிது எனக்கு இது! அரை மணி நேர வேலை!” என்று சொல்லிவிட்டுப் பங்களாலின் உள் பக்கம் சென்றான் மாணிக்கம், 

“மாணிக்கம் எங்கே உள்ளே போகிறான். சவரிமுத்தின் வீடு திருவல்லிக்கேணியில் அல்லவா இருக்கிறது?” என்றார் வசாப், சங்கர்லால் சிரித்தார். “சுயல்விழியிடம் வெளியே போய் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரப்போகிறான்! இதுகூடவா: புரியவில்லை உங்களுக்கு” என்றார் சங்கர்லால். 

வகாபுக்கு சிரிப்பு வந்துவிட்டது. 

சில நிமிடங்கள் கழித்து, மாணிக்கத்தின் கார் புறப்பட்டுச் சென்றது, அவன் கார் தன்னாலேயே புறப்பட்ட போதிலும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த கத்தரிக்காயும் மைனாவும், அது புறப்படும் நேரத்தில், அதைத் தள்ளிவிடுவதைப் போல் தள்ளிவிட்டார்கள். 

தொலைவில் நின்றிருந்த இந்திராவும் கயல்விழியும் இந்த வேடிக்கையைப் பார்த்துச் சிரித்தார்கள். 

வகாப் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, “சங்கர்லால், சவரிமுத்தின் மகளைப் பற்றி ஏன் நீங்கள் இவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறீர்கள்? நான் ஓர் ஊகம் செய்திருக்கிறேன்” என்றார். 

“சொல்லுங்கள் உங்கள் ஊகத்தை” என்றார் சங்கர்லால்,

“சவரிமுத்துக்கு தான் தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டேன். எப்படியும் தனக்குத் தண்டனை கிடைக்கும் என்று எண்ணிய சவரிமுத்து, என்னை வஞ்சம் தீர்த்துக் கொள்ள, என் மகன் அமீதைக் கடத்திச் செல்ல ஏற்பாடு செய்திருப்பான் என்று எண்ணுகிறேன்!” என்றார் வகாப், 

சங்கர்லால் சிரித்தார். அவருடைய கள்ளமற்ற உள்ளத்துச் சிரிப்பொலி அந்தக் கூடத்தில் எதிரொலித்தது. 

“என்ன சங்கரிலால்?” என்றார் வகாப், 

“சவரிமுத்து எப்போதுமே இழப்புக் கணக்குப் போடுபவன் அல்ல! நீங்கள் சொல்லுவது அவனுக்கு இழப்புக் கணக்கு!” என்றான் சங்கர்லால், 

“எப்படி?” என்றார் வகாப், 

“உங்கள் மகனைத் தூக்கிச் செல்வதால், அவனுக்குச் செலவுதானே? உங்கள் மகனுடன் மணியரசையும் கடத்திச் செல்வதென்றால், இரு மடங்குச் செலவுதானே? ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் சரி, ஒரு தடவை திருடிய பொருளைத் திருப்பித் தரக்கூடாது என்று எண்ணுபவன். இப்படியெல்லாம் வீண் செலவு செய்யமாட்டான்!” என்றார் சங்கர்லால். 

அவர் சொல்லுவது உண்மைதான் என்று புலப்பட்டது வகாபிற்கு, அப்படியானால், அமீதும் மணியரசும் எப்படி மறைந்திருப்பார்கள்? 

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. தொலைபேசி அலறியது. 

சங்கர்லால் தொலைபேசியை எடுத்தார். “ஹலோ” என்றார். 

“அண்ணா, மாணிக்கம் பேசுகிறேன்” என்று குரல் கொடுத்தான் மாணிக்கம். 

“என்ன மாணிக்கம்?” 

“சவரிமுத்துக்கு மனைவி இருக்கிறாள். அவளுக்கு ஒரு மகள் தான். அவள் பெயர் பேரழகி, அவர்கள் வீட்டிற்குச் சிறிது தொலைவிலேயே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாளாம், ஆனால்..” 

“ஆனால் என்ன?” 

“இன்று பள்ளிக்குப் போனவள் வீடு திரும்பவேயில்லையாம்! பேரழகியின் அன்னை அழுது கொண்டேயிருக்கிறாள்; பள்ளியில் லிசாரித்தேன். எவரோ ஒருவர் காரில் வந்து இறங்கி மூன்று மணிக்கெல்லாம் பேரழகியை அவள் அப்பா பார்க்க விரும்புவதாகவும், அவர் பேரழகியின் சுற்று உறவினர் என்றும் சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போய்விட்டாராம். அந்த மனிதர் யார் என்று தெரியவில்லை. சற்றுமுன் பெரிய சிறைக்கூடத்தைத் தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். பேரழகி வரவில்லை என்றும், சவரிமுத்தைப் பார்க்க மூன்று மணிக்குமேல் எவரும் வரவில்லை என்றும் தெரியவந்தது. இப்போது மணி ஆறு. மூன்று மணி நேரமாகிவிட்டது பேரழகி மறைந்துபோய்!” என்றான் மாணிக்கம். 

“நீ புறப்பட்டு வா” என்றார் சங்கர்லால், பிறகு –

தொலைபேசியை வைத்துவிட்டு வகாபைப் பார்த்தார்.

“என்ன சங்கர்லால்?” என்று கேட்டார் வகாப் ஒன்றும் புரியாமல், 

சங்கர்லால் சொன்னார்: “வகாப், மிகவும் வேடிக்கையான செய்தி! உங்கள் மகன் அமீது காணாமல் போனதற்குச் சவரிமுத்து காரணமாக இருப்பானோ என்ற ஐயம் உங்கள் மனத்திலே தோன்றியிருக்கும் இந்த நேரத்தில்! சவரிமுத்துவின் மகளைக் காணோம்! அவளைப் பள்ளிக்கூடத்திலிருந்து எவரோ அழைத்துச் சென்றுவிட்டதாக மாணிக்கம் கண்டுபிடித்திருக்கிறான். சவரிமுத்து தனது மகளைப் பார்க்க வேண்டும் என்று சிறைச்சாலைக்கு அழைத்து வரச் சொன்னதாகப் பொய் சொல்லி எவனோ அந்தப் பெண்ணை ஏமாற்றிக் கடத்திச் சென்றுவிட்டான்! இப்போது என்ன நினைக்கிறீர்கள்?” 

வகாப் செயலற்றுச் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவர் சங்கர்லாலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, “சங்கர்லால், சவரிமுத்துவின் மகள் சிறைச்சாலைக்குப் போகவில்லையா?” என்று கேட்டார். 

“இல்லை” என்றார் சங்கர்லால். 

“அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றவர் எவராக இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார் வகாப் 

“இப்போது ஒன்றும் சொல்லுவதற்கில்லை வகாப், பொறுத்திருந்து பார்ப்போம். வேறு வழியில்லை!” என்றார் சங்கர்லால், 

வகாப் குழப்பத்துடன் எழுந்து கொண்டார். “நான் மீண்டும் வருகிறேன் சங்கர்லால், சவரிமுத்துவின் மகளைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொறுப்பு போலீஸ் இலாகாவினுடையது. இதற்குள் சவரிமுத்துவின் மனைவி கதறிக் கொண்டு பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிப்போயிருப்பாள் என்பதில் ஐயமில்லை. போலீஸ் இலாகா இந்த வழக்கில் உங்களுடைய உதவியில்லாமல் எதையும் செய்ய இயலாது என்றே எனக்குத் தோன்றுகிறது. அமீதும் மணியரசும் மறைந்ததுமில்லாமல், சவரிமுத்தின் மகள் வேறு மறைந்து போனாள் என்றால், போலீஸ் இலாகாவைப் பற்றி மக்கள் என்ன எண்ணுவார்கள்? என்னால் இப்போது சிந்தனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை!” என்றார். 

வகாப் வெளியே போகப் புறப்பட்ட போது, “மனத்தில் எந்தவிதமான அச்சமோ துன்பமோ கொள்ள வேண்டாம் வகாப்! பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார் சங்கர்லால், 

அப்போதுதான் வகாபின் மனம் அமைதி கொண்டது. அவர் தனது காரை நோக்கி நடந்தார். 

– தொடரும்…

– சங்கர்லால் வந்துவிட்டார்! (மர்ம நாவல்), சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *