கோபுர வாசல்
கதையாசிரியர்: கி.ராஜநாராயணன்
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: August 31, 2026
பார்வையிட்டோர்: 101
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் கோபுரவாசலை அடைந்ததும் ஒருகணம் நின் றான். அந்தக் கோபுரவாசலுக்கும் அவனுடைய கடந்த கால வாழ்க்கைக்கும் ஏதோ ஏ ஒரு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அவனுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்கள் எல்லாம் அந்த இடத்திலேயே தான் நடந்தேறியிருக்கின்றன.
இருபது வருஷங்கள் இருக்கும். அப்போது அவன் கலாசாலையில் படித்துக்கொண் டிருந்தான். உப்புச் சத் தியாக்கிரகம் நடந்த சமயம். அதிகார வர்க்கத்தின் அக் கிரமங்களைக் கண்டு, நாடு கொதித்துக் கொண்டிருந்தது. தன்னுடைய பி.ஏ. படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டுக் கோபு, சட்ட மறுப்புப் போரில் குதித்தான்.
கோபுரவாசலில் பொதுக்கூட்டம் போட்டுப் பேசி னான். போலீசார் வந்து, பிடித்துச் சென்றனர். ஆறு மாதம் தண்டனை கிடைத்தது, அது முடிந்து, வெளியில் வந்தான். மீண்டும் ஒரு கூட்டம் நடந்தது. அதில் மூன்று மாதம். பிறகுதான் இரண்டு வருஷம் தண்டனை கிடைத்தது.
அந்தக் கடைசிப் போராட்டத்தின்போதுதான் அவன் சுசீலாவைச் சந்தித்தான். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று அவன் மேடைமீது ஏறி, உணர்ச்சி பொங் கப் பேசினான். “தேசத்திற்காக ஒரு சிறு துரும்பையும் எடுத்துப் போடாத பிறவி மனிதப் பிறவியே அல்ல” என்று அங்கே கூடியிருந்த ஜனத்திரளை நோக்கி அவன் ‘அறை கூவி அழைத்தான்.
அவன் பேசிவிட்டுக் கீழே இறங்கியதும் பதினெட்டு வயசு உள்ள ஓர் இளம் பெண், அவன் எதிரில் வந்து நின் றாள். “ஐயா,உங்கள் தேசீயப் படையில் சேர விரும்புகி றேன்” என்றாள் அவனை நோக்கி.
அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவளுடைய உள்ளத்தில் வேரூன்றிய தீர்மானத்தை அவளுடைய முகம் பிரதிபலித்தது. அவளுடைய கண்களில் தோன் றிய ஒரு வெறி, அவளுடைய ஆவேசத்தை அறிவுறுத்தியது.
அன்று சுசீலாவுடன்கூட இன்னும் முப்பது பெண் மணிகள் சட்டமறுப்பு உறுதிமொழிப் பத்திரத்தில் கை யெழுத்திட்டனர்,
அன்று முதல்-நான்கு வருஷங்களுக்கு முன்பு அவன் சிறை செல்லும் வரையில்-சுசீலா. அவனுடன் கூடவே உழைத்திருக்கிறாள்.
அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது; அப்போதுதான் போராட்டம் ஓய்ந்து, நாட்டில் அமைதி-சோர்வினால் ஏற் பட்ட அமைதி- நிலவியது. எங்கும் ஹரிஜன ஆலயப் பிர வேசப் பிரசாரம் தீவிரமாக நடந்தது. கோபு, தன் பங் கைச் செய்ய முன் வந்தான். அதே கோபுரவாசல்தான். நாலைந்து ஹரிஜனப் பையன்களை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு, பஜனை செய்துகொண்டே கோவிலுக்குள் நுழைந்துவிட்டான்.
அவன் உள்ளே நுழைந்ததுதான் தாமதம்; அவன் தலையில் ‘மடமட வென்று நாலைந்து தடி அடிகள் விழுந் தன. பத்துத் தடியர்கள் அவன்மேல் விழுந்து, அவனைப் புரட்டி எடுத்துவிட்டனர்.
அவனுக்குப் பிரக்ஞை வந்தபோது, கோவிலுக்கு வெளியில் சாக்கடை ஓரமாகக் கிடப்பதை உணர்ந்தான். ஆள் நடமாட்டமே இல்லை. இருண்ட இரவின் மத்தி யிலே அந்தக் கோபுரத்தின் உச்சி விளக்கு மட்டும் ‘முணுக் முணுக்’ என்று எரிவது தெரிந்தது, வழி தவறிய இன்றைய மனித சமூகத்தின் உள்ளத்தில் ஒளிவிடும் நம் பிக்கையைப்போல்.
அப்போது அவனைக் காப்பாற்றியவள் சுசீலாதான். எங்கிருந்தோ வந்தாள். அவனை வண்டியில் ஏற்றி, வீட் டுக்கு அழைத்துச் சென்றாள். அவனுடைய உடம்புப் புண் ஆற ஒரு மாதம் ஆயிற்று. அந்த ஒரு மாதகாலமும் இடைவிடாமல் அவனுக்குப் பணிவிடை செய்தாள்.
அதன் – பிறகும் அவன் பொ துவுடைமைக் கட்சியில் சேர்ந்து, உழைத்தபோதும் – அவள் அவனை விடாமல் தொடர்ந்தாள். கடைசியாக அவளைப் பார்த்தபோது அதே கோபுர வாசலில்தான் சந்தித்தான்.
அப்போது நாடு சுதந்தரம் அடைந்துவிட்டது. ஆனால் மக்கள் மனத்தில் மகிழ்ச்சி இல்லை. எல்லோரும் எதிர்பார்த்தபடி நாட்டில் பாலும் தேனும் பெருகி ஓட வில்லை. பட்டினியும் பஞ்சமும் தலைவிரித் தாடின. அதைக் கண்டு அவன் உள்ளம் கொதித்தான். நீதியும் நியாயமும் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டன.
அந்த நிலையை எப்படியும் மாற்றி அமைத்துவிடுவது என்று அவன் சங்கல்பம் செய்துகொண்டான். உளுத்துப் போன இந்தச் சமுதாயத்தைத் தலைகீழாகப் புரட்டிவிட வேண்டும் என்ற உறுதி கொண்டான். அதற்குச் சாத னம், பொதுவுடைமை வழிதான் என்று தீர்மானித்தான். அவனுடன் இன்னும் இருபது இளைஞர்கள் பின்தொடர்ந் தார்கள். அவர்களுடைய முன்னணியில் சுசீலா நின்றாள்.
பல தொழிலாளர் ஸ்தாபனங்களிலே புகுந்து, வேலை செய்தான். கிளர்ச்சியை விதைத்து வளரச் செய்தான். எங்கே பார்த்தாலும் திடீர் திடீரென்று வேலை நிறுத்தங் கள் நடந்தன.
அவனுடைய நடவடிக்கைகள் அதிகாரிகளின் கோபத் தைக் கிள றியதில் ஆச்சரியம் என்ன? அவனுடைய கட்சிக் காரர்களைப் போலீசார் வலைபோட்டுத் தேடினார்கள். அவனுடைய தலைக்கு, விலை கூறினார்கள்.
அவன் ஆறு மாதங்கள் இருளில் வாழ்ந்தான். ஒரு நிமிஷம் ஓய்வு இல்லை. ஒரு பொது வேலை நிறுத்தத்துக் காகப் பாடுபட்டான். அதில் வெற்றி காணும் நாளும் நெருங்கிற்று. அவனுடைய ஆட்களை மாகாணம் முழுவ தும் அனுப்பியிருந்தான். அவன் மட்டும் உள்ளூரிலேயே தலை மறைவாக இருந்தான். அவனுக்குக் கையாள் சுசீலா தான்.
அன்றிரவு அவன் சென்னைக்குப் புறப்பட வேண்டும். அங்கிருந்து பத்து மைல் தூரம் நடந்துபோய், ஒரு சின்ன ஸ்டேஷனில் ரெயில் ஏறுவது என்று திட்டம். அப்படியே அவன் தன் அறையிலிருந்து கிளம்பிப் பதுங் கிப் பதுங்கி வந்துகொண் டிருந்தான். தூரத்தில் கோபு ரத்தின் விளக்குத் தெரிந்தது. அதை நோக்கி விரைவாக நடந்தான்.
அப்போது பின்புறம் ஆள் வரும் சத்தம் கேட்டது. போலீஸ்காரன்தான். நடையைத் துரிதப்படுத்தினான். காலடியும் துரிதமாகக் கேட்டது.
கோபுர வாசலுக்கு எதிரில் ஓர் ஆள் வட்டமிட்டுக் கொண்டிருந்தான். எதிரில் போனால் பிடிபடுவது நிச்ச யம். பின்னால் திரும்புவது என்பதும் முடியாத காரியம். அப்படியே சட்டென்று கோபுர வாசலுக்குள் நுழைந் தான். வெளிப் பிராகாரத்தை அடைந்ததும் மதில் சுவர் மேல் ஏறினான். அப்படியே கோயிலுக்குப் பின்புறம் பார்த்தான். ஆள் நடமாட்டம் இல்லை. பதினைந்து அடி உயரந்தான் இருக்கும். பொத்தென்று கீழே குதித்தான்.
சனியன்! கால் சுளுக்கிக்கொண்டது. ஓட முடிய வில்லை, அவ்வளவுதான். ‘வீல்!’ என்று போலீஸ் ஊது குழல் கேட்டது. நாலு பேர் ஓடி வந்தனர். எல்லோருக் கும் முன்னால் சுசீலா ஓடி வந்தாள். அவளைக் கண்டதும் கோபுவுக்குத் ‘திக்’கென்றது. ‘திரும்பிப் போ!’ என்று அவளுக்குச் சமிக்ஞை செய்தான். இல்லாவிட்டால் அவளும் அல்லவா பிடிபடவேண்டும்?
அதன் பிறகு நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன. அதே கோபுர வாசலில் அவன் நின்றான்.
‘டம் டம்’ என்று நகரா அடிக்கும் சத்தம் கேட்டது. ‘பம்’ பம்!’ திருச்சின்னத்தின் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் இரண்டு பேர் ஒரு சிறு பல்லக்கைச் சுமந்து வந்தார்கள். ஒருவன் பந்தத்தைத் தூக்கிக்கொண்டு வந்தான்.
கோபுர வாசலில் வந்ததும் அந்தச் சிறு ஊர்வலம் நின்றது. ஒரு மத்தளமும் ஜாலரும் சப்தித்தன. வற்றி வதங்கிய உடலுடன் ஒரு வயோதிக ஸ்திரீ வந்து, எதிரில் நின்றாள். அவள் அரையை அலங்கரித்த மட்கிப்போன பட்டு வஸ்திரமும் அவள் முகத்தில் பூசிய பௌடரும், மஞ்சளும் குங்குமப் பொட்டும் கடந்த காலப் பெரு மையை நினைவூட்டின.
சற்று நேரத்தில் கோவிலை வலம் வரப் புறப்பட்டது ஊர்வலம். அதில் கலந்துகொண்ட நாலைந்து பேரும் ஏதோ கடனைத் தொலைக்கவேண்டிய பாவத்தில், விழுந்து அடித்துக்கொண்டு ஓடினர்.
அதைப் பார்த்துக்கொண்டே நின்றான் கோபு. ஒரு காலத்தில் எவ்வளவு பக்தகோடிகள் அந்த ஈசுவரனைத் தொடர்ந்து, துதி பாடிக்கொண்டு போயிருப்பார்கள்? இப் போது ஒரு குழந்தைகூட லட்சியம் செய்யவில்லையே!
பிறரைச் சுரண்டி வாழும் முதலாளி வர்க்கத்தின் சிருஷ்டிதானே தெய்வம் என்ற கருத்து. ஒரு காலத்தில் அந்தப் பொய்யை அவனும் நம்பினான். அந்தக் கோவிலுக் குள் ஹரிஜனங்களை அழைத்துப்போக வேண்டும் என்று நினைத்தான்! இப்போது அதை நினைக்க அவனுக்கே அவ மானமாக இருந்தது.
2
சுசீலா ஒரு மாஜி ஹைக்கோர்ட் நீதிபதியின் மகள். பௌதிக சாஸ்திரத்தில் எம். ஏ. பட்டம் பெற்றவள். ஆனால் அவளுக்கும் அவளுடைய தந்தைக்கும் பேச்சு வார்த்தைக்கூடக் கிடையாது. தன் வாழ்க்கைப் பாதை யைத் தானே வகுத்துக்கொள்ளப் போவதாக அவள் தந் தையின் அரவணைப்பிலிருந்து வெளியேறி விட்டாள். அவ ளுடைய சுயேச்சையைக் கண்டு அவன் பலநாள் வியந்த துண்டு.
ஆகையினால் அவளைத் தேடிப் போன அவன், அவளு டைய வீட்டுக்குப் போகவில்லை. நேராக அவர்கள் ரகசிய மாகச் சந்திக்கும் இடமான ஒரு ஹோட்டலை அடுத்த குடி சைக்குப் போய்ப் பார்த்தான் அங்கே அவனுடைய பழைய தோழர்கள் யாருமே காணப்படவில்லை.
அந்தக் குடிசையில் பூமிக்கடியில் ஓர் இரும்புப்பெட்டி வைத்திருந்தது. அதில்தான் அவர்களுடைய கட்சி ரிக் கார்டுகள், பணம் எல்லாம் வைப்பது வழக்கம். அதற்குப் பக்கத்தில் அவர்களுடைய ரகசிய ஒலிபரப்பியும் இருக்கும். இப்போது ஒன்றுமே காணப்படவில்லை. பூமியெல்லாம் தோண்டப்பட்டிருந்தது. எருக்கும் கள்ளியும் மண்டிக் கிடந்தன. எல்லோரும் எங்கே போய்விட்டனர்?
அதன் பிறகு, மற்ற இடங்களிலெல்லாம் போய்ச் சுற் றிப் பார்த்தான். யாரையுமே காணவில்லை. அதன் பிறகு தான் சுசீலாவின் தகப்பனார் வசிக்கும் பங்களாவை நோக்கி நடந்தான்.
அந்தத் தெருவின் மூலை திரும்பும்போதே அவர்கள் வீட்டு வாசலில் ஒரு கார் நிற்பதைக் கண்டான். அதன் பக்கத்தில் யார்? சுசீலா தான்! நடையை வேகமாக்கினான். காரின் கதவைத் திறந்துகொண்டு அவள் நின்றாள். அப் போது, ஐரோப்பிய உடை அணிந்த ஒரு மனிதர் உள்ளே யிருந்து வந்தார். இருவரும் ஏறிக்கொள்ளக் கார் புறப் பட்டது. கோபு ஓடினான். அதற்குள் கார் புறப்பட்டுப் போய் மறைந்தது.
சுசீலா, தகப்பனார் வீட்டுக்கு ஏன் வந்தாள்? கொள் கையை மாற்றிக்கொண்டுவிட்டாளா? அவளுடைய லட் சியம் என்ன ஆயிற்று?
அவளுடைய வீட்டுவாசலை விட்டுத் திரும்பியதுமே அவனுடைய கேள்களுக்குப் பதில் கிடைத்துவிட்டது.
எதிரில் சோனியைக் கண்டான். சோனிதான் அவர் களுக்குக் கையாள். கட்சியில் நேரடியாகச் சம்பந்தப் படாமல் அவர்களுக்கு வேண்டிய வேலையெல்லாம் செய்வான்.
அவன்தான் எல்லாம் சொன்னான். அவன் பிடிபட் டதுமே கட்சி குலைந்துவிட்டது. இவனுடன் கூடி உழைத் தவர்களில் ஒருவன் கட்டிடக் கண்டிராக்டரா யிருக்கிறான். இன்னொருவன் எங்கேயோ காபி ஓட்டல் வைத்திருக் கிறான். மற்ற இருவரும் போலீசாரிடம் பிடிபட்டு, மன் னிப்புக் கேட்டுக்கொண்டு எங்கோ ஓடிவிட்டனர்.
சுசீலா – அவளுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே! ஆம்; அவள்கூட வண்டியில் போனவன்தான் அவளுடைய புருஷன்; இலங்கையில் தேயிலைத் தோட்டம் வைத்திருக் கிறான். அசல் ஐரோப்பியன்; லட்சாதிபதி.
அவன் மனம் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அவன் ஆச்சரியப்படவில்லை. என்ன இருந்தாலும் சுசீலா அவ ளுடைய வர்க்கத்தின் பிரதிநிதிதானே? உடம்பில் ஊறிய ரத்தம் போய்விடுமா? ஏதோ சிறிது காலம் விளையாடி யிருக்கிறாள். பொதுவுடைமை அவளுக்குப் பொழுது போக்கு. அவன் ஒரு விளையாட்டுக் கருவியாக இருந் திருக்கிறான். அவன் மனத்தில் வெறுப்பு உணர்ச்சி நிறைந்தது. அவளை நம்பியதற்குத் தன்னையே நொந்து கொண்டான்.
3
அவன் எவ்வளவு நேரம் ஊரைச் சுற்றினானோ அவ னுக்கே தெரியாது. மறுபடிபும் அவன் கோபுர வாசலை நெருங்கியபோது கோவில் மணி மூன்று அடித்தது. கோபுரத்தின் உச்சியில் எரிந்த விளக்கு அந்த இருண்ட இரவில் தன்னந்தனியாக ஒளிவிட்டுப் பிரகாசித்தது.
திடீரென்று, ‘ஐயோ!’ என்று ஒரு கூச்சல் கேட்டது. திடுக்கிட்ட கோபு, சத்தம் வந்த திக்கை நோக்கி, விரைந் தான். ஒரு நொடியில் கோபுர வாசலை அடைந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி குழம்பிப் போயிருந்த அவன் மனத்தைக் கலக்கியது.
ஒரு ஸ்திரி; ஒட்டி உலர்ந்த உடல். கீழே ஒரு குழந்தை கிடந்தது, எலும்புக் கூடாகக் கிடந்த அது பிரக்ஞை யற்றதைப்போல் கிடந்தது. பக்கத்தில் கர்ப் பூரம் ஏற்றி இருந்தது. அந்த ஸ்திரீ புலம்பிக்கொண் டிருந்தாள்
‘ஏ தெய்வமே! உனக்கு வாரம் நேர்ந்தேனே! அதற் குப் பலன் இதுதானோ? இதற்கு உயிர்ப்பிச்சை கொடுக்க வேண்டியது உன் பொறுப்புத்தான்! இல்லாவிட்டால் நான் உன் சந்நிதியை விட்டுப் போகமாட்டேன்!’
இன்னும் அவள் என்ன என்னவோ புலம்பிக்கொண் டிருந்தாள். ஆனால் அவளுடைய குரலில் ஒலித்த நம்பிக்கை, கோபுவின் மனத்தை உலுக்கிவிட்டது. அவனையும் அறி யாமலே அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு புது உணர்ச்சி தோன்றியது. அப்படியே அவன் ஸ்தம்பித்து நின்றான். அவன் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் உதிர்ந்தது.
– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
| கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சித்தன்
யுவராஜ் சம்பத்
August 31, 2026
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
இரஜகை நிலவன்
August 31, 2026
மொரீஷியஸ் கண்ணகி
நாகரத்தினம் கிருஷ்ணா
August 31, 2026