கேட்பவர் மூன்று விதம்
கதையாசிரியர்: ஷாராஜ்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 25, 2025
பார்வையிட்டோர்: 19,407
பிரசித்தி பெற்ற சூஃபி ஞானி பயாஸித், ஒருமுறை கல்லறைத் தோட்டம் வழியே நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மண்டையோட்டுக் குவியலை கவனித்தார். மண்டை ஓடுகள் பார்ப்பதற்கு ஒரே போல இருந்தாலும், அவை யாவும் ஒரே மாதிரியானவை அல்ல என்பதை அவர் அறிய நேர்ந்தது.

சில மண்டை ஓடுகளில் காதுகள் இரண்டும் இணைக்கப்பட்டிருந்தன. அதாவது, அவற்றுக்கு இடையே ஒரு பாதை இருந்தது. சில மண்டை ஓடுகளில், இரு காதுகளுக்கு இடையே ஒரு தடுப்பு வைத்துத் தடுக்கப்பட்டிருந்தது. சில மண்டை ஓடுகளில், இரு காதுகளும் இதயத்தோடு இணைக்கப்பட்டிருந்தன.
அவருக்கு இது குழப்பமாக இருந்தது. அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். “இறைவா, இந்த மண்டையோடுகள் வெவ்வேறு விதமாக இருக்கின்றனவே! இவற்றின் மூலம் நீ எனக்கு எதை வெளிப்படுத்துகிறாய்?”
கடவுளின் அசரீரி பதிலளித்தது:
“கேட்பதைப் பொறுத்தவரை, மனிதர்கள் மூன்று விதம். முதல் ரகத்தினர், ஒரு காதால் மட்டும் கேட்பவர்கள். அவர்கள் ஒரு காதில் கேட்பதும், அவர்களது. தலைக்குள் போகவே செய்யாது. இன்னமும் சொல்லப்போனால், அவர்கள் கேட்பது கூட இல்லை. காதுக்கு வெளியே ஏதோ சப்தங்கள் ஒலிக்கும். அப்போது அது அவர்களது காதில் விழும். ஒலித்த சத்தம், உடனே மங்கி காற்றில் மறைந்து விடும். அவ்வளவுதான்!
“இன்னொரு ரகம், ஒரு காதில் கேட்டு, மறு காதில் விட்டு விடுபவர்கள். கேட்கிற கணத்தில் மட்டும் அவர்களுக்குள் அந்த வார்த்தைகள் இருக்கும். மறுகணம் அதை மறந்துவிடுவார்கள்.
“இன்னொரு ரகத்தினர், இதயத்தால் கேட்பவர்கள். தமது காதுகளால் கேட்பது, அவர்களது இதயத்தில் ஆழப் பதிந்து, எப்போதும் நினைவில் தங்கி இருக்கும்!”
அதைச் சொல்லி முடித்த கடவுள், “பயாஸித், எப்போதும் இந்த மூன்று ரகத்தினரைக் குறித்து நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இறைச் செய்திகளை மக்களிடம் சொல்வதுதான் உன்னுடைய பணி. எனவே, மற்ற இரு ரகத்தினரிடமும் பேசி உனது சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். தங்கள் இதயத்தால் கேட்பவர்களிடம் மட்டுமே நீ அவற்றைச் சொல்” என்றார்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஸ்ரீ வேங்கடேச மகாத்மியம்
நெ.சி.தெய்வசிகாமணி
August 4, 2026
ஆமைக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
நரிக் கதை
ஆத்மஜோதி நா.முத்தையா
July 21, 2026
