குறுங்கதை : நூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2026
பார்வையிட்டோர்: 112 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1986ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 – 10 | 11 – 20

1. சர்வ தேசியம்

அவன் ஒரு நீக்ரோ. 

தன் சொந்த நாட்டிலே, மண், பெண், பொன் அனைத்தையும் சுரண்டிப் போக வந்த வெள்ளையருக் கான திரைப்படம் ஒன்றினைப் பார்க்கப் போயிருந் தான். 

என்ன ஆச்சரியம். படத்தின் கதாநாயகி அவன் காதலியைப் போலவே யிருந்தாள். 

குறைந்த ஆடையுடன் நீச்சலடித்தாள். அதுவுமின்றி படுக்கையில் கதாநாயகனுடன் கட்டிப்புரண்டாள். அவன் தன்னை மறந்தான். அவன் கதாநாயகனாகக் கற்பித்துக் கொண்டான். 

உடலெங்கும் புல்லரித்தது. அவளைத் தொட்டான். உரையாடினான். அவள் அங்கங்களெல்லாம் அவன் கைகள் ஊறலெடுத்துப் படர்ந்தன. அந்தச் சில மணித்துளி நேரங்கள். இன்பக் கொள்ளை. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட திருப்தி. 

படம் முடிந்து வாசலுக்கு வந்தான். 

‘வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்த குற்றத்திற்காக, கறுப்பர் சுட்டுக் கொலை!’ 

மாலைத் தினசரி விற்கும் பையன் கூவிக்கொண்டு போனான், 

அவன் மறைந்து, மறைந்து அஞ்சி, வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். 

2. வல்லரசுகள் 

பாரதப் போருக்கு நாள் குறித்தாகி விட்டது. 

கண்ணனின் பொய்யுறக்க நாடகம் 

கண்ணனின் படை துரியோதனாதிகட்கும்; கண்ணன் பாண்டவருக்கும்’ என ஒப்பந்தம் எழுதிற்று. 

ருக்மணி ஓடி வந்தாள். 

‘என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்கள் தர்மம் தோற்கப்போகிறதே?’ 

மாயவன் சிரித்தான். 

‘நான் எங்கே நிற்கிறேன் என்று பார்த்தாயா? நானில்லா என் படை பாண்டவருக்குத் தூசிக்குச் சமானம். அதுமட்டுமல்ல; என் பார்வையில் வெற்றிமட்டும் கருத்தல்ல; அதன் பின் உள்ள நீண்ட காலப் பயனும் கூட’ 

‘என்ன சொல்கிறீர்கள்?’ – வியப்பில் வினா புதைந்தது. 

‘பாண்டவர் பக்கம் நிற்பதுதான் நல்லது. போரில் நிச்சயம் கௌரவர் தோற்பர். அப்படி வென்றாலும் என்னை மதியார்கள். பார்த்தாயல்லவா? என் உதவி தேடிவந்த போதே இறுமாப்புடன் தலைமாட்டில் அமர்ந்தவன் துரியோ தனன். வென்றுவிட்டால் இ டையன் என ஒதுக்கிவிடுவான். பாண்டவர்களோ வென்றாலும், தோற்றாலும் என் சொல் கேட்பவர்கள்… வெற்றியின் பின் ஆட்சி அவர்கள் கையில்… ஆனால் ஆளப்போவது உண்மையில் நான்தான்… நான் மன்னர்களை, உருவாக்குவேன்… ஆனால் உரிமைமை என் கையி னின்றும் விடமாட்டேன்’ 

ருக்மணியின் விழிகள் வியப்பால் விரிந்தன. அவன், ஆற்றல், ராஜதந்திரம் அனைத்தும் தன் முன்னால் பேதைமை யுடன் கூடிய குழந்தையாக உருவெடுத்து நிற்கும் காட்சி, பெண்மைக்கே உரித்தான பெருமிதத்துடன் மனதில் எழுந்த போது, தன்னுள் அவன் புதைந்துவிடும் வேட்கையுடன், புல்லி இறுக அணைத்தாள். அந்தக் கணத்தில் கண்ணன் மனித நிலைக்கு விரும்பிக் கீழிறங்கினான். 

3. பிரிவினை

புவியியல் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார். ‘உலகை 360 பாகை நெடுங்கோடுகளாலும், 90 பாகை அகலக்கோடுகளாலும் பிரித்திருக்கிறார்கள். இவை யாவும் கற்பனைக் கோடுகளே. இந்தக் கற்பனைக் கோடுகளால் உல கைப் பிரித்து………’ 

மாணவன் இடை மறித்துக் கேட்டான். 

‘மனிதர்களைத்தான் பிரித்தார்களென்றால்…. பூமியை யுமா பிரிக்க வேண்டும்? மனிதனின் பிரிவினைக் குணம் ஒன் றைக்கூட விட்டு வைக்கவில்லை…’ 

4. ரேஷன்

ஹம்ச தூளிகா மஞ்சத்தின் பஞ்சணையில் சாய்ந்தவாறு ருக்மணியின் துகிலினைக் கையால் பற்றி இழுத்து, பெண்மை வெட்கத்தால் கனிந்து குழைந்து திரளும் விந்தையை வியந்தவாறு சிரித்துக்கொண்டிருந்தான் மாயக் கண்ணன். 

புல்லாங்குழலாக, ருக்மணியா?

பிரமதேவனே நீ அற்புத ரசிகனா? கலைஞனா? 

இந்தக் கலையழகெல்லாம் உன் கை பட்டுப்பட்டு எழுந்தது – 

வேதனையா? ஆராதனையா? 

‘போதும் விடுங்கள்!’ – செல்லச் சிணுங்கல். 

போதை தலைக்கேறும் மதுச் சொற்கள்.

‘கண்ணா அபயம்!’  – கண்ணனின் உணர்ச்சிச் சுழிப்புகள் ஸ்தம்பித்தன. 

எங்கிருந்து கேட்கின்றது? யார் அபயம்?

அஸ்தினாபுரம். திரெளபதி. 

துவாரகையின் துணிமணிகள் அஸ்தினாபுரிக்குப் போகட்டும்.  

கண்ணனின் கருணை – துவாரகையின் செல்வம் – அகில உலகப் புகழ்பெற்றன. 

ஆனால் – 

துவாரகை மக்கள் துணிப் பஞ்சத்தால் ‘ரேஷன்’ காட்டுக்கும் ‘கறுப்புச் சந்தைக்’குமாக அலைந்து கொண்டிருந்தார்கள் சில நாளில். 

5. வெள்ளைப் பறவை

இரு நாடுகளும் பகைமையை வளர்த்துக்கொண்டன.

நடுநிலை நாடுகள் இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் தத்தம் நாடுகளுக்கு அழைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோலின. விளைவு? 

பிரச்சனைகள் தீவிரமடைந்தன; பகைமை முற்றியது.

திடீரென ஒரு நாடு தனது பகைமை நாட்டு அதிபரை தம் நாட்டிற்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. 

உலகே வியப்பிலாழ்ந்தது. இரு துருவங்களின் சந்திப்பின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கலாற்று.

அதிபர் பகை நாட்டின் விமானத்தளத்தில் வந்திறங்கினார். நாடே திரண்டிருந்தது. அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது. 

மகத்தான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. 

டாங்கிகள் நகர்ந்தன… ஏவுகணைகள் ஊர்வலம் வந்தன… அணுகுண்டு… ஜலவாயுக் குண்டு… கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகள்…. பவனிவந்தன. குதிரைப்படை… காலாட்படை எண்ணிக்கை ஏராளம். 

மகிழ்வால் மலர்ந்திருந்த அதிபரின் முகம் சிவந்து சுருங் கலாயின. நெஞ்சு படபடக்கலாயிற்று. 

வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும் பிய அதிபர் சில நாட்களில் எல்லாம் சமாதானப் பறவை யைப் பறக்க விட்டார். 

அரசியல் அவதானிகள் காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தனர். 

6. மகத்தான தொழில்

‘ஒரு ஜனநாயக நாட்டின் பிரதான தொழில் என்ன ?’ – என ஆசிரியர் வினாவினார். 

“முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல்’ எனப் படீரெனப் பதில் வந்தது. 

7. கையுறை

குசேலர் தன் மனைவியைக் கூப்பிட்டார். 

‘சுசி…. நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண்டுமே… எதனைத் தந்துவிடப் போகிறாய்?.’ 

‘சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?…… அடுத்த வீட்டில் கடனாகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது…’
 
‘அவலா… அவனுக்கு நிறையப் பிடிக்குமே…. அதுவே போதும்…’

‘சுவாமி…… பிள்ளைகள் பசியால் கத்துகின்றனவே…… கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே… அவருக்கு நீங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?’ 

‘அடி பேதாய்… கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல… ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்…’ 

8. நீதி

உலகின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகவே, மக் கள் காடுகளை அழித்து, குடிபெயரத் தொடங்க, மிருகங்கள், நக இருக்க இடமில்லாமல் தவிக்கலாயின, அலையலாயின. ரத்தில் மிருகங்கள் அலைவது ஆபத்தானது, அவற்றை நட அழிக்கத் மாட்விடக் கூடாது என்று மனிதன் அவைகளை தொடங்கினான். 

9. மன்னர்கள்

நாட்டு மக்களைத் தியாகம் செய்து, நாட்டின் பொருளா தார அபிவிருத்திக்கு உதவுமாறு கேட்டுக்கொண்ட ஆட்சியின ரின் மந்திரி சபை அங்கத்தவரின் – மந்திரிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துச் சென்றது. 

‘மந்திரிசபையை இப்படி விருத்தி செய்து என்ன பயன்? செலவைக் குறைக்க மந்திரிமாரின் எண்ணிக்கையைக் குறைத் தல் நல்லதல்லவா?” என்று பொதுமக்கள் கேட்டார்கள். 

‘முன்பு ஒரு மன்னன் இருந்தான். சில மந்திரிகள் போதும். இப்போது நீங்கள் எல்லோருமே மன்னர்களாச்சே! உங்கள் அனைவருக்கும் இந்தச் சில மந்திரிகள் எப்படிப் போதும். எண்ணிக்கை குறைந்தால், உங் க ள் கௌரவம் என்னாவது’ என்று பதில் வந்தது. 

பொதுமக்களும் திருப்தியுடன் அவர்களை வாழ்த்தியபடி திரும்பினர். 

10. அரசியல்

காட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம்போல், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. இதனை மறைவிலிருந்து, அச்சவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசத்தைப் புசிக்கலா யிற்று. 

வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.

மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் வினாவியது. 

‘சிறுத்தையை நீயா கொன்றாய்?’

குள்ளநரிக்கு மின்னலென மூளையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, ‘இதென்ன கேள்வி?. பார்த்தாலே தெரியவில்லையா?… கொன்றேன்… தின்றேன்…. உனக்கும் பங்கு வேண்டுமா?’ எனக்கேட்டது. 

மந்தி, அச்சப் பயத்துடன் கிளைகளில் தாவியது. 

குள்ளநரியின் தீரச்செயல் காடெங்கும் பரவியது. 

அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது. 

– குறுங்கதை : நூறு, முதற் பதிப்பு: டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்.

Sembiyan_Selvan இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *