கடைசி கடிதம்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 5,356
அன்புள்ள கீர்த்திக்கு
நீ போன முறை எழுதிய கடிதத்தில் எப்பொழுது என்னை காண வருவாய் பார்க்க வேண்டும் என தோன்றுகிறது என்று எழுதியிருந்தாய். எனக்கு மட்டும் உன்னை காண வேண்டும் ஆசை இல்லையா என்ன? ஜோடி ஜோடிகளாய் திரிபவர்களை காணும்போதெல்லாம் உன் ஞாபகம் என்னை திண்டி செல்கிறது. உன்னுடன் பேசிய நிமிடங்கள் உன்னுடன் அமர்ந்த இருக்கைகள் உன்னுடன் நான் நடந்து சென்ற சாலைகள் உன்னுடன் சுற்றி திரிந்த இடங்கள் அனைத்தும் நீ கேட்ட கேள்வியையே கேட்பதாக தோன்றுகிறது. வேலையின் சுமை அதிகமாக உள்ளது எனினும் விரைவாக முடித்துவிட்டு உன்னை காண வருகிறேன். உனக்கு ஒரு மஞ்சள் நிற சுடிதார் ஒன்றை வாங்கி இருக்கிறேன் அதை அணிந்தால் நீ சூரியனிடமே போட்டி போடலாம் அந்த அளவுக்கு இருக்கும் என தோன்றியது பார்த்ததும் பிடித்தும் விட்டது. அதனால் உனக்காக வாங்கி வட்டேன். வேலைக்கு செல்லும்போது கவனமாக செல் பாதுகாப்பாக இரு உன்னை கவனித்துக்கொள் பார்த்தால் தான் காதலா நாம் சற்று வித்தியாசமாக கடிதத்தின் மூலம் காதல் செய்வோம் இதுவும் அழகான சுகம் தான் விரைவில் சந்திப்போம். லவ் யூ கீர்த்தி.
இப்படிக்கு வாசு.
கடிதத்தை முடித்து தபால் பெட்டியில் போடுவதற்காக தனது அறையின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்றான். இவன் கடிதத்தை தபால் பெட்டியில் போட்டுவிட்டு சாலையை கடந்து செல்ல ஓரமாக நின்றான். என்ன வாசு இந்த பக்கம் என்ன உன் காதலிக்கு கடிதம் போட வந்தியா? என பரசுராமன் கேட்க ஆமா சார் என்றான் வாசு. நடக்கட்டும் நடக்கட்டும் என்று கூறி விட்டு அவர் செல்ல அப்பொழுது வேகமாக வந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வாசுவை நோக்கி செல்ல அந்த இடத்திலேயே இறந்தான். கடிதத்தின் மூலம் காதல் செய்வோம் என்று கூறியவனுக்கு தெரியவில்லை அதுதான் அவனின் கடைசி கடிதம் என்று…