ஒளவையாரும் குணநலன்களும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒளவையார் ஒருநாள் ஓர் ஊரில் உள்ள குளத்தில் தண்ணீர் குடித்தார். தண்ணீர் மிக இனிமையாக இருந்தது. மற்றொருநாள் வேறோர் ஊர்க் குளத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றார். தண்ணீரில் உப்புச்சத்து இருந்தது. அதனால் குடிக்க முடியவில்லை. 

ஓர் ஊருக்குச் சென்றால் அவ்வூரில் உள்ள நல்லவர் களை அவர்களது கொடையினால் ஒளவையார் எளி தாக உணர்ந்துகொள்வார். ஒருவருடைய கண்களைப் பார்த்தவுடனே அவர்கள் அருள் உள்ளவர்கள் இல்லாத வர்கள் என்பதையும் இவர் கண்டுபிடித்து விடுவார். மற்றவர்களைப் பற்றியும் அவர்களுடைய சில தன்மை களைக் கொண்டே முழு இயற்கையையும் விளக்கமாகத் தெரிந்துகொள்வார். இச் செய்திகளையெல்லாம் தொகுத்துத்தான் பிறகு அடியில் வரும் செய்யுளை இயற்றினார். 

“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் 
கண்ணீர்மை மாறாக் கருணையால்- பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள் 
அற்புதமாம் என்றே அறி.” 

(உரை.) தண்ணீர் நிலநலத்தால் – தண்ணீரானது நிலத் தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் – நல்லோருடைய குணமானது ஈகையினாலும், கண் நீர்மை மாறாக் கருணையால் – கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் – பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் – கடல் சூழ்ந்த நிலவுலகினிடத்து, அற்புதம் ஆம் வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், என்று அறி – என்று நீ அறிவாயாக. 

(கருத்து.) தண்ணீர் நிலத்தால் சிறப்படைகிறது; நல்லவர்கள் கொடையினால் சிறப்படைகிறார்கள்; கண்கள் அருளுடைமையால் சிறப்படைகின்றன ; பெண்கள் கற்பினால் சிறப்புறுகிறார்கள். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *