உதாரண புருஷர்கள்
கதையாசிரியர்: ஜூனியர் தேஜ்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 85
(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ராமலிங்கதைப் பார்க்க அவன் நண்பன் வேலு வந்திருந்தான். ராமலிங்கத்துக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் 10ம் வகுப்பும் மகள் +2வும் படிக்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்த வேலு கூடத்தில் சட்டமிட்டு வரிசையாய் மாட்டப்பட்டிருந்த படங்களைக் கண்டு அதிர்ந்தான். நடிகர் நடிகைகளின் படங்கள். குறிப்பாக, ‘விவாகரத்து செய்து கொண்ட, தனிமனித ஒழுக்கம் கேட்ட நடிகர் நடிகைகளின் படங்கள் அவை.
இவைகளை ஏன் சட்டமிட்டு மாட்டி வைத்திருக்கிறான் நண்பன் ராமலிங்கம்..’ குழம்பினான் வேலு. வேலு வந்த செய்தியைக் கேள்விப்பட்டு வீட்டுக் கொல்லையில் ஏதோ வேலையாக இருந்த ராமலிங்கம் கூடத்துக்கு வந்தார். வருத்தம் தோய்ந்த முகத்துடன் ஹாலில் மாட்டப்பட்டிருக்கும் படங்களை வேலு உற்றுப் பார்ப்பதைக் கண்டார் ராமலிங்கம்.
“என்ன வேலு பார்க்கறே..?”
“தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்ந்த தலைவர்களைத்தானே எல்லாரும் வீட்டுல சட்டம் போட்டு மாட்டி வைத்து குழந்தைகளை நல்வழிப்படுத்துவாங்க. நீ ஏன் இப்படி?” என்று பேசிக் கொண்டே சென்ற வேலுவை. மேலே பேச விடவிடாமல் கை அமர்த்தினான் ராமலிங்கம்.
“நம் குழந்தைகள், இப்படித்தான் வாழணும்னு கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர்களைப் பற்றித் தெரிஞ்சிக்கற அதே நேரத்தில் எப்படியெல்லாம் வாழக்கூடாதுனு தெரிஞ்சிக்கறதும் அவசியம்தானே. அதான் அதற்குப் பொருத்தமான உதாரண புருஷர்களை மாட்டி வெச்சிருக்கேன்…” என்றான் ராமலிங்கம்.
– தமிழ்நாடு இ பேப்பர் 1.12.24.
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |
