அஸ்திரன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 11, 2024
பார்வையிட்டோர்: 1,534
பாகம் ஒன்று
அத்தியாயம்-8 | அத்தியாயம்-9
அத்தியாயம் ஒன்பது – வாழ்க்கை சுழல்
நிசப்தம். நரகத்திற்கு அழைத்தது போல் இருந்தது. தலைக்கு மேலே சிவப்பு நிறத்தை கக்கும் ஒளிகளால் டியூப் மின் கலன்கள் சூழ்ந்திருந்தது. ஆபத்து! வெளியேறு என்று சொல்லியது. இன்னுமொரு கதவு வழிகள் எங்கே இருக்கும் என்று பார்வை ஒடியது. இதுவும் ஒரு வகை சிறைதான். வந்த வழி கதவை தவிர வேறு வழிகள் இல்லை. தரவு தள பெட்டிகளின் அணி வகுப்புகள் முடிவில்லாத நீண்ட பாதையில் நீண்டிருந்தன. தரவுத்தள பெட்டியின் கண்ணாடிக்குள் சிக்கலில் பினைந்து பின்னிய மின் கம்பிகளுக்கு இடையில் பொட்டு வைத்த மின் ஒளிகள் வண்ண வண்ணமாக மின்னியது. சிக்கலில் குழம்பிய மின் கம்பிகள். தரவு தளம் என்ற வியப்பு. அந்த தரவு சேமிப்பு பெட்டிகளை பற்றிய அறிவுகள் அவனுக்கு அவ்வளவு இல்லை. ஆனால் சேஃப் க்கு, வருடமாக, ஏன் யுகமாக கூட தேடும் ஒரு விடயத்தை அவர்கள் கண்டால் போதும். வோர் ரகசியம் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டும் போதும். மின் கம்பி சிக்கலைப் பார்க்கும் போது ஒரு யோசனை உதித்தது. யோனடிக் ச்சிப் ஒன்றை எடுத்தான். அதை பொறுத்துவதற்கு ஏற்ற துளை இருக்க கூடாதா என்ற ஒரு ஏக்கம் ஏறியது. மின்சார சக்திகளை பற்றி இருக்கும் மின் கம்பிகளும் மின் கலன்களும் கண்ணாடியின் பாதுகாப்பில் இருந்தது. தனது கத்தி நுனியை அதில் வைத்து பிடித்து. கத்தி புடியின் பின்பக்கம் கையால் ஒரு அடி. தடக் என்று நொறுங்கியது. அதன் உள்ளே யோனடிக் ச்சிப்பை வைத்து தினித்தான்.
இனி சரி
என்று மின்னியது. இறுக்கமான மனம் லேசானது. புருவங்கள் நெரிந்த முகம் நிதானமாக மாறியது. அவன் அது வேலை செய்யும் என்று நம்பவே இல்லை. ஒரு முயற்சி தான். யோனடிக் ச்சிப் என்பது வோர் தொழில் நுட்பங்களை கட்டுப்படுத்தும் கருவி என்று கூறியது இங்கு நிரூபனமானது. இனி ஒரு காலமாவது இந்த கயவர்களை நெருங்க முடியுமா! இந்த ஒரு தரவு மட்டும் போதுமா என்று மற்ற வரிசை பெட்டிகளையும் நோக்கினான். பாதத்துக்கு அமைதிக் கொடுத்து நகர்ந்தான். நகர்ந்தான் நகரும் போது இடைவெளியில் ஒரு கதவு வழி தூரத்தில் நின்று கண்ணில் பட்டது. சிவப்புப் பலிப்புகளைப் பூசிய பிரம்மாண்ட நீளும் அறையில் அந்த வழி நரகத்தின் வாசல் போல கதவுகளை இழந்த கதவு வழி மட்டும். மற்ற சிப்பாய்கள் அந்த வழியில் கால் வைத்தால் போதும். பிரம்மாண்ட அறை. இனி இதற்குள் இருந்தால் நிரந்தர இருளில் சிக்கி விடுவோம் என்ற பயம் இதயத்தில் துடித்தது. அந்த அறையில் இனி நிட்க வேண்டாம் என்று கால்கள் ஓடியது. மத்திய மூடிய கதவின் பக்கம் பார்வை திரும்பியது. அந்த இருள் வாசலில் இருந்து காலடிச் சப்தங்கள் போன்று ஒரு சத்தம் எதிரொலி போல் ஒலித்தது. கதவின் கண்ணாடியை பிளந்தான். இரண்டு அடிகளின் பின்னே நொறுங்கியது. கண்ணாடி நொறுங்கிய வழியாக அந்தச் சாவியை பற்றிய கை வெளியேறி வெளியிலிருக்கும் சாவித்துளைக்குச் செல்ல ஒரு பாடுப் பட்டு நுழைந்தது. கதவு திறந்தவுடன். காற்றின் வேகம் போல் ஓடி வந்தான். விடுதலை அடை என்று உடல் நரம்புகள் சீறிப் பாய்ந்தது. இத்தனை நேரமும் சிறையிலிருந்து வெளிவந்து அரங்கமே அவனுக்கு சிறையானது. இருள் ஏமாற்றத்தையும், எதிரிகளின் சத்தங்கள் பீதியையும் மட்டுமே இவ்வளவு நேரம் தந்தது. கண்ணாடிச் சுவர் காட்டிய வெளி உலக சூழல் வெளிச்சம் மட்டுமே பார்வையில் நம்பிக்கையாக மாறியது. கால்கள் வேகத்திற்கு பலம் கொடுத்து சீறியது. காற்று கிழிக்கும் வேகத்தில் ஓடினான். அரங்கம் அதிர்ந்தது. ஓடிய வேகம் கண்ணாடிச் சுவரில் மோதியது. சுவர் முழுவதும் வெடிப்புகள் பரவியது. இரண்டு கைகளையும் முறுக்கி கொண்டு ஓங்கி ஓங்கி அறைந்தான். ஒவ்வொரு அறைக்கும் கண்ணாடிச் சுவர் சிதறல் போல் நொறுங்கிய சுவர் ஆனது. ஆனால் உடையவில்லை. இறுதியில் இரண்டு கைகளையும் கட்டி உடலை சுழற்றி கொண்டு “ஹர்…” என்று ஒரு வேகமான மோதல். கண்ணாடிகள் நொறுங்கி கொண்டு சுழலும் சக்கரம் போல் கீழே வீழ்ந்தான்.
கண்ணாடி துகள்கள் அவனோடு சேர்ந்து மழையாக பொழிந்தது. கீழ் வீழ்ந்தது கீழ் வெளி மாடத்தில். எதிரில் வோர் சிப்பாய் வீரன் துப்பாக்கி ஏந்திய கையில் ஒரு கணத்தில் உறைந்து நின்றான்.
ஹா!
மூச்சி இரைந்தது.
எதிரில் நின்றவன் சாரவ்வை நோக்கி வைத்த அடிகள் வேகமானது. சாரவ் எழுந்த உடல் தயாரானது. எதிரில் வருபவனுக்கு கைகளை முறுக்கி அடிகள். அவன் கைகளின் வேகத்தினுள் எதிரியின் உடல் சிக்கிச் சுழன்றது. துப்பாக்கியை பிடுங்கி முகத்தில் ஒரு குத்து விட்டான். அவன் உடல் மட்டும் செயலிழந்து கீழ்
வீழ்ந்தது. கீழே பார்த்தான். கீழே வெண்மை போர்த்திய பனி நிலம். தூரம் தூரம் என தொலைவில் தள்ளி இருந்தது. தலை ஒரு கணம் சுற்ற முன் கீழே பாய்ந்தான்.
காற்றில் மிதந்த ஒரு கணத்தில் உடல் சிதறி விடுமோ என்ற பயம், கைகள் கீழ் இருக்கும் இன்னொரு மாடத்தின் கம்பிகளைப் பற்றியது. பூமி இழுத்த உடலை ஒரு கை ஒரு கணம் பற்றிப் பிடித்த போது உடலில் ஒரு அதிர்வு. அதன் கீழே இருபது அடிதான் இருக்கும். கீழே குதித்தால் என்ன! என்று ஒரு பயம் இல்லை. காற்றை ஊராய்ந்து கொண்டு வேக ஈர்ப்பில் ஒரு சூப்பர் லேன்டிங் கொடுத்தான்.
கீழே ஆள் நடமாட்டம் அற்ற அமைதி தேசம். மேலே இருந்து தரை இறங்கிய இரண்டு மாடங்களும் ஐம்பது அடி போல் ஏறிட்டான். இதயத்தில் எறிந்த தீ அணைந்தது. முகத்தை சிறைப்பிடித்த முகமூடியை கழற்றி எறிந்தான். குளிர் காற்று முகத்தை வருடியது, சுற்றிய நான்கு சுவர் சிறையும். நரக அரங்கமும் இல்லை. பேருவின் இயற்கை காற்றை சுவாசிக்கும் போது ஒரு விடுதலை உணர்வு. சாரவ்வின் கால்கள் பேரு தாங்கிய போதுதான் கதிரவனும் விடுதலை அடைந்தான் போல, மந்த நிறத்தில் சூழ்ந்திருந்த ஆகாயம் நீலத்தில் உருவாக, வெண்மை மேகங்களை பூச ஆரம்பித்தது. வானம் பளிச்சென்று ஆனது. பேருவின் தீய தேசத்தில் திக்கு திசை தெரியாமல் எங்கு செல்வது என்று பார்வைகள் உடலோடு சேர்ந்து வட்டமிட்டது. வெண்மை போர்வைகள் கொஞ்சம் போர்த்தி பனிகள் படிந்திருந்த மலைகள். பனி தேசத்தில் ஆகாயத்தை நோக்கி நீண்டு தனது விசால பிரம்மாண்டத்தில் முற்றுகை போல வீற்றிருந்தது.
மலையை பார்த்தால், ஒரு வழி பிறக்குமா! மலையின் மணலில் புதைகின்ற கயிறு கயில் படுமா! அது என்ன ஒரு திட்டம். சிறையில் பதிவேற்றிய ஞாபகங்கள் அவன் கண்களில் காட்சிகள் போல் குமரிக்கொண்டு வந்தது. கையில் குருதிகள் படிந்த கோடாரிகள் இல்லை. பின்னே திரும்பினான். இரு ஜீவன்கள் இல்லை. வோரின் கட்டிட அரங்கம் பயமுறுத்தியது. அவனது ஞாபகத்தில் தெரிந்த மனித தேக சாரவ் என்றும் நீங்காத வலியாக மாறி, அந்த கணத்தில் எண்ணங்களை சிதர அடித்தது. தனக்குள் இரண்டு மனிதனா! அல்லது வேறுபட்ட உலகத்தில் தெரியும் ஒரு கதாபாத்திரமா! அல்லது கற்பனையா! அவனது நிலை இழந்து அங்கேயே சிறிது கணங்கள் கை கால்கள் ஓட்டம் காணாமல் செலவானது. காற்று பனி புழுதிகளை வாரி அணைத்து தழுவிய போது நினைவில் வந்த ஞாபகங்கள் கலைந்து தெளிவானான். அந்த நிலத்தில் கால் நான்கு அடி வைக்கும் தொலைவில், நிலத்தை தன் வலிமை இருக்கும் வரை பிடித்துக் கொண்டு இருக்கும் தண்ட வாள பாதை பனியால் படர்ந்து இருந்தது. இரண்டு பக்கமும் முடிவில்லாத நீளம். வலது பக்கம் மலையை துளைத்த நீளம். இடது பக்கம் பனி மூட்டங்களில் மாயமாய் போகும் கண் எட்டா தூரத்தில் துரத்தி இருந்தது. தண்டவாளத்தின் அருகில் சென்றவுடன் ஒரு பயணத்திற்கான புறப்பாடு போல் ஒரு உணர்வு. தண்டவாளத்தில் புகையிரதத்திற்கு வழி அமைத்த பாதை ஒரு வழியை எப்படியாவது காட்டி விடும் என்ற எண்ணத்துடன் கால் அந்தப் இரும்பு வழி பாதைக்கு அருகில் சக்கரம் போல் ஓட்டம் எடுத்தது. அது சாதாரண மனித காலின் வேகம் இல்லை. காலின் வேகம் தீ போல் பனிக்கற்றோடு மோதுவது போல் எதிரில் பாய்ந்தது.
சிறிது நேரம் ஓட்டம் கண்ட பின்,
அவனின் கால்களின் வேகத்திற்கு போட்டி போடும் இரும்பு சக்கரங்களின் சத்தம். அவன் பின்னே இருந்து புறப்பட்டது. சக்கரம் போல் சுழன்ற கால்கள் நின்றது. திரும்பிப் பார்த்தான். தண்டவாளத்தில் வோர் அரக்கர்களின் இரும்பு கவசங்களை முகத்தில் போர்த்திக்கொண்டு இதோ வருகிறேன் என்று புகையிரதம் ஒன்று கிளம்பியது. மூச்சை இழுத்து இருக்கிப்பிடித்தான். கைகளை முறுக்கி கை உரைகளை சரிசெய்தான். கால்கள் இரண்டும் நிலத்திற்கு உறுதி கொடுத்து உடல்கள் பறப்பதற்கு தயாரானது. சிறிய புகையிரத முகங்கள் பெரிதாகிக் கொண்டே நெருங்கியது. அருகே நெருங்கும் போது காற்றை கிழித்து உடலை அதிர்வில் அடித்து சென்றது. கண்கள் முன்னே இரும்பு பெட்டிகள் ஒவ்வொன்றும் மின்னல்கள் போல் முகத்தில் காற்றை இடியாக ஊட்டிச் சென்றது. பனி மூட்டங்களை நோக்கி செல்லும் அசுர வேக இரும்பு பெட்டிகள் வோர் கட்டிடங்களை நெருங்கியவுடன், வேகம் ஒரு கட்டத்திற்கு குறைந்தது. அதன் பின்னே சாரவ்விடம் போட்டிப் போட வந்தது.
மின்னல் பார்வை-
அவனின் பார்வைக்கு தொடரியின் வேகம் தோற்றுவிட்டது. புயல் போல் சுழன்ற காற்றுக்குள் உடல் மூழ்கியது; பார்வை சக்தியால். இரும்பு புகையிரதம் ஒவ்வொரு பெட்டிகளையும் ஆமை வேகத்தில் கண்
முன் கடத்தியது. அவனது உறுதியற்ற வெளிப்படும் உருவம் பிறியும் போது உடல், வேகத்தின் சக்தியால் அதனுடன் சேர்ந்து ஒட்டிக்கொண்டான். அந்த விம்பம் ரயிலின் கடைசிப் பெட்டியை இறுதி வழியாக கைப்பற்றியது. இரும்பு பிடிகளை பிடித்த போது உயிரை கையில் பற்றிய உணர்வு, இதயத் துடிப்புடன் அதிர்ந்து கொண்டது. பனிச்சீரல் மூச்சி இரைப்பில் உறை தடையாகி சிறிது கணங்கள் மீழ முடியவில்லை. பற்றிய கையும், உடலும், அதிர்வில் இருந்து மீழ்வதற்கு சிலை போல் சிறிது கணம் நீடித்தது.
கால்களும் கைகளும் ஊர்ந்து சென்று ரயிலின் மேல் தளத்தில் ஓய்வானது. உடல்கள் புகையிரத வேக சீரலில் சீரிச்செல்லும் போது பனிப்பொழிவுகள் உடலை துளைக்கும் ஊசியாக மாறியது. குளிர் சீரல் காற்று, உடலை உறைய வைக்கிறது. பார்வைகள் உயரத்தில் இருந்து எங்கு பார்த்தாலும் வோரின் பாதாள தேசம் தான் என்ற உருத்தல். தன்னை கவ்விச் செல்லும் புகையிரதம், விடுதலை அடைந்து செல்கிறாய் என்ற மெருடல். விடுதலை அடைந்தாலும் பதிமூன்று நாள் சிறை வாழ்க்கை என்றும் நிரந்தரத்தில் நீங்காத வடுக்களை ஞாபகத்தில் செதுக்கி விட்டது.
தண்டவாளம் காட்டும் பாதையில் சக்கரங்களை சுழலில் வைத்து வெகு வேரம் கழிந்த உணர்வு. பிரம்மாண்ட பனி படர்ந்த மலைகள் வேகத்திலும் தூரத்திலும் எப்பவும் மரியவில்லை. தேசங்களை கைவிட்டு கடல் மேல் வழி அமைத்த தண்டவாளம், பாலத்தில் தான் அடுத்து இனி செல்ல வேண்டும் என்றது. துளி அலைகளை கூட கொண்டிராத கலங்கமற்ற நீலத்தில் பளிங்கு போல் கடல் தேசம் வரவேற்றது. தன்னைத் தாங்கிக் கொண்டிருந்த ரயிலை விட்டுப் பிரிந்தான். பற்றிப் பாயும் அனுபவ உணர்வு கால்களை இரும்பு பெட்டிகள் பயணத்தில் இருந்து எழ வைத்தது. பாயும் போது துளி பதட்டம் இல்லை. கால்களும் கைகளும் பறவைகளின் இறக்கை போல் ஆனது. கடல் ஆழம் சாரவ்வை ஈர்த்துக் கொண்டது.
சேஃப் ஆழுகையையும், வோர் தீவிரவாதத்தையும் பிரிப்பது கடல்கள் மட்டுமே. கருங்காடுகளின் கடல்களின் உறை நிலையை இங்கு ஒப்பிட முடியாது. அதைப் பார்க்கிலும் குறைவு. ஆழமும் அதிகமில்லை. நீண்ட நேர நீச்சல் பலம் அவனை தீய தேச பிடியிலிருந்து கொண்டு செல்லும் என்ற தைரியம். அதோடு விசித்திர வேகம் நீருக்குள் ஒரு பயணமாக மாறும். கடல் நீரில் மூழ்கிய மரு வினாடி நிரந்தர விடுதலை. அடுத்த நிமிடங்கள் அவசரமில்லாத, அஞ்சி ஓடாத பயணங்கள் உருவாகும். உடல் சிறு கணங்கள் ஓய்வைத் தேட செயல்களை இழந்து ஜடமானது. நினைவுகள் மட்டுமே செயலாக மாறியது. தன்னைப் பற்றிய பயம் முற்றாக துறந்த உடல், இனி வோர் இல்லை, அழுக்கு இல்லை, தரித்திரம் இல்லை, சூனியம் இல்லை என்று நீரில் கரைந்தது நினைவுகள். ஒரே ஒரு மனக்காயத்திற்கு நினைவுகள் மட்டும் உடலோடு சேர்ந்து அந்தமில்லாத செயலானது. ஆழம் அமையாத கடல், சுழலானது. வாழ்க்கைச் சுழலானது.
அதன் பிறகு…?