அலெக்ஸா, மணி என்ன?
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2026
பார்வையிட்டோர்: 4,680
(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானத்தில் மிதப்பது போன்ற சந்தோஷத்தில் இருந்தார் சிவராமன். சிறு வயது முதலே சிவராமனுக்கு பெருத்த குறையொன்று இருந்தது. அவர் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதோ, அவருக்கு பதில் சொல்வதற்கோ யாருக்கும் நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. சிறு வயதில் சிவராமனை ஆட்டிப் படைத்தது அவருடைய அம்மா என்று சொல்லலாம், என்ன உடை போட்டுக் கொள்ள வேண்டும், எந்த விளையாட்டில் ஈடு பட வேண்டும் இவை எல்லாமே அம்மா சொல்படி தான். கல்லூரி நிழலில் ஒதுங்காத அம்மா தான் அவர் கல்லூரியில் எதை எடுத்துப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்கு அம்மாவிற்கு (துர்) போதனைக்கு பக்கத்து வீட்டு அம்மா அம்மாவை எதிர்த்துக் கேட்டால் வருகின்ற பதில் “உனக்கு என்ன வேண்டுமென்று எனக்குத் தான் தெரியும். நான் சொல்றதைக் கேட்காமல், உன்னுடைய மனம் போனபடி செய்தால், நீயும் உங்க அப்பன் மாதிரி உருப்படமாப் போயிடுவே” என்று அப்பாவிற்கும் சேர்த்து அர்ச்சனை விழும். படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த்திலிருந்து, மேலாளர் சொல்வதற்கு “ஆமாம் சாமி” போடும் நிலை. கல்யாணமும் அம்மா சொல்படி.
அம்மாவின் நெருங்கிய சினேகிதியின் பெண். கரம் பிடித்து வந்தவளோ, அம்மாவிற்கும் ஒரு படி மேலே. அவள் சொல்வதை கேட்கவில்லை என்றால் “உங்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்க அம்மா உங்களை அப்படி வளர்த்து வைச்சிருக்காங்க” என்று அம்மாவிற்கும் சேர்த்து மண்டகப்படி நடைபெறும்
அலுவலகத்தில் மேலாளராகப் பதவி உயர்ந்ததும் சந்தோஷப்பட்டார். எனக்குக் கீழே நான் சொற்படி கேட்டு நடக்க ஒரு கூட்டம் என்று நினைத்தார். அவருடைய போராத காலம், அவருக்குக் கீழே வந்தவன் அலுவலக இயக்குநரின் மைத்துனன். அவனைச் சுற்றி மற்ற அலுவலர்கள் பாவம், சிவராமன் ஆசை நிறை வேறவில்லை.
மகனுக்கு மணம் முடித்து வைத்தால் வரும் மருமகளாவது நாம் சொல்படி நடப்பார் என்று எதிர் பார்த்தால், தாவி கட்டிய உடனே மகள் தாசானுதாசன் ஆகிவிட்டான். மருமகள் சொல்வதற்கு தலையாட்டும் பூம் பூம் மாடு.
இப்போது மகன் ஒரு “எக்கோ டாட்” வாங்கி வலைப் பின்னலில் இணைத்து விட்டான். சிவராமன் சந்தோஷமாக “அலெக்ஸா, இப்போது மணி என்ன? இன்று பருவநிலை எப்படியிருக்கும்”? என்று கேட்க அலெக்ஸா சலிக்காமல் பதிலளித்துக் கொண்டிருக்கிறான்.
“அலெக்ஸா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போடு, சன் டிவி போடு, டிவி வால்யூமைக் குறை” என்று சிவராமன் கட்டளையிட உடனுக்குடன் நிறைவேற்றுக் கொண்டிருக்கிறான்.
அலெக்ஸா தான் சொல்வதைக் கேட்டு. அதன்படி செய்ய ஒருத்தர் இருப்பதில் சிவராமனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
– 08-05-2024, தமிழ்நாடு இ-பேப்பர்.காம்.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026
கந்தையரின் கடைசி வித்து!
மா.சித்திவினாயகம்
June 14, 2026
