ஸலூனின் ஆரம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 24, 2025
பார்வையிட்டோர்: 118 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் தொழிலை அவன் வெறுக்க வில்லை. ஊராரின் அட்டகாசத்தை யும், உயர்தலம் என்ற இறுமாப் பையும் பரம்பரை அடிமைத்தனம் என்ற உணர்ச்சியையும், அவனால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. 

நமது நாடு நாகரீகமுற்றிருப்பதற்குக் காரணமா யிருந்தவர்கள், இருப்பவர்கள் ஜாப்தாவில் மந்தா ரம்புதூர் முத்தப்பனுடைய பெயரும் சேர்க்கப்பட வேண்டியதாகும். மந்தாரம்புதூர் மலையடிவாரத்தி லுள்ள ஒரு கிராமம். மற்ற கிராமங்களைப் போலவே இதிலும் அக்ரகாரமும், அரசடிப் பிள்ளையார் கோவிலும், சிற்றாறும், உழவர் குடிசைகளும், கொல்லர் பட்டறையும் முக்கிய அம்சங்களாக விளங்குகின் றன. ஊரிலிருந்து கூப்பிடு தொலையில்தான் முத் தப்பனும், அவனுடைய வயது முதிர்ந்த தாயும் வசித்து வந்தனர். அவன் நாவித குலத்தைச் சேர்ந்தவன். பரம்பரையாகவே – அதாவது மந்தாரம்புதூர் ஏற்பட்ட காலத்திருந்தே – அவன் குடும்பத்தினர் மந்தாரம்புதூர் வாசிகளை நம்பியே வாழ்ந்துவந்தனர். 

யாரோ ஒரு பெரிய ரிஷி இந்த ஊர் மலையில் தவஞ்செய்ததாயும், அவர் சூரிய வெப்பம் தாங்க மாட்டாமல், சூரியன் அங்கு தலைகாட்டக்கூடா தென்று கட்டளை போட்டுவிட்டதாயும் ஸ்தலபுரா ணம் கூறுகிறது. இந்த மலை சமுத்திரத்தை அடுத் திருப்பதால், மேகங்கள் சதா அதோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும். அதனால் சூரிய வெப்பமே அந்த ஊரில் அதிகமாகத் தலைகாட்ட முடியாது. எப்போதும் மப்பும் மந்தாரமுமாகவே இருக்கும். இதுதான் இந்தப் பெயருக்குக் காரணம். 

எது எப்படி இருப்பினும், மந்தாரம்புதூர் சீக்கிரமாகவே பெயர் பெற்றுவிட்டது. எல்லாவற்றுக்கும் முத்தப்பனும், அவனுடைய சகாக்களுந்தான் காரணம். 

முத்தப்பன் என்னுடைய பால்யத் தோழன் கிராமத்து வாத்தியார் அவனை அக்ரகாரத்துக்குள் நுழையச் சம்மதிக்காததால் அவன் அடுத்த கிராமத்திலிருந்த பாதிரியார் பள்ளிக்கூடத்திற்குத் தினமும் மூன்று மைல் நடந்து போய்ப் படித்து வந்தான். அவன் தாழ்ந்த குலத்தான் என்றும் அவன் கூடச் சேரக்கூடாதென்றும் எனது பெற்றோர் கள் எவ்வளவோ தடுத்தும், நான் அவனோடு கொண் டிருந்த தொடர்பை அறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் செல்லப்பிள்ளை. எப்போதும் அவனிடம் காசு இருந்துவரும். எனக்கும் கொண்டாட்டந்தான். அம் பட்டப் பையன் தரும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடலாமா என்ற வேற்றுமைப் புத்தி எனக்கு அப்போது பாடமாகவில்லை. எனக்கும் அவனுக்கும் எந்த விதத்தில் வித்தியாசம் என்பதே என்னால் புரிந்து கொள்ளமுடியாமலிருந்தது. ஆனால் என் பெற்றோ ரது உபதேசம் சிறிதுகூட பலன் தரவில்லை. அவர் களும் அலுத்துப்போய்ச் சும்மாயிருந்துவிட்டனர். 

எங்கள் சிநேகத்தைக்கண்டு பொறாமைகொண்ட வர்களில் பிள்ளையார்கோவில் அர்ச்சகரும் ஒருவர். நாங்கள் இருவரும் உல்லாசமாகப் பொழுதுபோக் கும் இடம் அரசடிப்பிள்ளையார் கோவில்தான். மத் தியானவேளைகளில் அங்கு யாரும் வரமாட்டார்கள். ஒரு முறை நாங்கள் அங்கு உட்கார்ந்து அரட்டை யடித்துக்கொண்டிருப்பதை அர்ச்சகர் கண்டுவிட்டார். அவர் கண்களில் தீப்பொறி பறந்தது. நான் நடுங்கி விட்டேன். முத்தப்பன் மட்டும் அசையவில்லை. ஊர் அம்பலகாரரிடம் சொல்லி முத்தப்பனையும் அவன் தாயையும் ஊரைவிட்டு ஒட்டிவிடுவதாகப் பயமுறுத்தினார். ஆனால் அவரது உறுமல்கள் ஒன் றும் பலனளிக்கவில்லை. இப்போதெல்லாம் அவர் எங்களிடம் மிகுந்த அன்புடன் நடந்துவருகிறார். எங்கள் வழிக்கே வருகிறதில்லை. காரணம் என்னதெரியுமா? ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிப்பிர காரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற சமயம் அவர் ஒரு வண்ணாரக்குட்டியுடன் திருவிளையாடல் புரிந்து கொண்டிருந்ததை அகஸ்மாத்தாகப் பார்த்துவிட் டதுதான். அவர் எங்களையும் பார்த்துவிட்டார். அன்று அவர் எங்களிடம் நல்ல வார்த்தை சொல்லி விஷயத்தை யாரிடமும் சொல்லி விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அவருடைய கோபத்தி லிருந்து தப்ப இது ஒரு நல்ல சக்தியுள்ள பாணமாகி விட்டது எங்களுக்கு. அன்று முதல் அவர் எங்க ளுக்குப்பொரி, கடலை எல்லாம் தருவது வழக்கம். ”நீ கோவிலுக்குள்ளே வந்தாலும், யார் கண்ணிலும் பட்டுவிடாதே” என்றுமட்டும் அவர் முத்தப்பனிடம் சொன்னார். 

முத்தப்பன் பாதிரியார் பள்ளிக்கூடத்தில் படித் தாலும், நல்ல முறையிலேயே ஒழுங்காகப்படித்து வந்தான். ஆனால் திடீரென்று அவன் தகப்பனார் இறந்து போனபடியால் அவன் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, தன் குலத்தொழிலை மேற் கொள்ளவேண்டியதாயிற்று. 

தந்தை இறந்ததும், அவனுக்குச் சுதந்திர உணர்ச்சி அதிகரித்துவிட்டது. தன் தொழிலை அவன் வெறுக்கவில்லை. ஊராரின் அட்டகாசத்தை யும், உயர்குலம் என்ற இறுமாப்பையும், பரம்பரை அடிமைத்தனம் என்ற உணர்ச்சியையும் அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 

கோவிலூர் பத்து மைல் தூரத்தில் இருக்கும் நகரம். மின்சார விளக்கு, நகரசபை, சினிமா முதலிய நாகரீகச் சின்னங்கள் எல்லாம் அங்கு ஏற்பட்டுவிட் டன. முத்தப்பன் அடிக்கடி கோவிலூர் போய்வந்து அங்கு தான் கண்ட காட்சிகளை விசேஷமாக என்னிடம் வர்ணிப்பான். நான் சிறிதும் சலிப்புக் காட்டாமல் கேட்டுக் கொண்டிருப்பேன். 

டவுனில் டாக்டர்கள் கால்சட்டை தொப்பிகளுடன் காட்சியளிப்பதை அவன் கண்டு கொண்டதி லிருந்து அவனுக்கும் அப்படி உடையணிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கவேண்டும். 

ஒரு நாள் அதிகாலை என் வீட்டுக் கொல்லைப்புறவாயி லில், துரைமாதிரி உடையணிந்து நின்ற முத்தப் பனைக் கண்டேன். அவன் சொன்னான், ‘நானும் ஒரு டாக்டர்தானே? பரு, கொப்புளம், சிலந்திப்புண் முதலியவற்றிற்குப் பச்சிலைகளைக்கொண்டு சிகிச்சை செய்யும் முறையை எங்கப்பாவிடமிருந்து நானும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் ஏன் டாக்டர் மாதிரி கால்ச்சட்டை போடக்கூடாது?” என்ற அவனுடைய கேள்விக்கு என்னால் மறுப்புச்சொல்ல முடியவில்லை. ‘”நீ சொல்வது ரொம்பசரி” என்றுதான் சொல்லமுடிந்தது. இந்த பதில் அவனுக்கு அதிக ஊக்கத்தைக் கொடுத்திருக்கவேண்டும். அவன் அந்த உடையுடனேயே மேல்சாதிக்காரர் வீதிக்குள் புகுந்துவிட்டான். ஆற்றிலிருந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்த நீலகண்ட சாஸ்திரிகள் இந்தக் கோலத்தைக் கண்டுவிட்டார். “மேல்வேட்டி போடக் கூடாத அம்பட்டப் பயல், தொப்பியும் சட்டை யும் அணிந்துகொண்டு தெருவுக்குள்ளே வரலாமா? ஒழுங்கா இருந்தால் போச்சு. இல்லே, தோலை உரித்து ஊரைவிட்டுத் துரத்திவிடுவேன்” என்று பய முறுத்தினார். தலைபிழைத்தது தம்பிரான் புண்ணியம் என்று முத்தப்பன் ஓடி மறைந்து விட்டான். இருந்தாலும், எல்லோரையும்போல தானும் ஏன் “சட்டைபோடக்கூடாது என்பதற்கு ஒரு காரணமும் அவனுக்கு விளங்கவில்லை. நானும் “ஒரு பண்டிதன் டாக்டர் தானே? நான் போட்டிருக்கும் உடைகளோ சுத்தமானவை, (கோவில் பூசாரி சில சமயம் உடுத்தி யிருக்கும் எண்ணெய் ஸ்நானஞ்செய்த கருமேக வர் ணத் துண்டு அவன் அகக்கண்முன் காட்சியளித்தது) நான் ஏன் உடுத்தக்கூடாது? உடுத்தினால் துரத்துவா னேன்? நான் என்ன குற்றவாளியா?” என்று கேட் டுக்கொண்டான். அவனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. 

நான் வீட்டுக்குள் போனபோது, அந்த அம்பட்டப் பையன்கூடச் சேரக்கூடாதென்று என் தாய் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தாள். அன்று பகல் முழு வதும் பள்ளிக்கூடத்தில் முத்தப்பனுடைய விஷயத்தைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். வீடு திரும்பும்போது வழியில் அவன் குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன். முத்தப்பனை அங்கு காணவில்லை. 

முத்தப்பன் அடிக்கடி நகருக்கும் போய் வந்தான். அங்கு அவனுக்கு நல்ல வருமானப் கிடைப்ப தாயும், சட்டை போட்டுக் கொள்வதற்காக யாரும் தன்னைத் திட்டவில்லை என்றும், துரத்தவில்லை யென்றும் சொன்னான். தான் ஒரு பிளான் போட்டிருப்பதாகச் சொன்னபோது, அவனுடைய தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் என்னால் பாராட்டா மலிருக்கமுடியவில்லை. 

“இந்த வைதிகப்பித்துப்பிடித்த மனிதர்களுக்கு ஒரு சரியான பாடம் படிப்பிக்கவேண்டும். நான் இவர்களுக்கு இனி வேலைசெய்யப்போவதில்லை. அவர் கள் என்னவேண்டுமானாலும் செய்யட்டும். நான் இங்கிருந்தால்தானே? வேண்டுமானால் எனக்குத்தரக் கூடிய நெல்லை நிறுத்திக் கொள்வார்கள். டவுனில் எனக்குப்போது மானபடி சம்பாதிக்க முடியும். பார்த் துக்கொள்ளலாம்” என்றான் முத்தப்பன். ஒரு ‘உயர் ஜாதிக்காரன்” என்று எண்ணிக்கொள்ளும் எனக்குக் கூட இவ்வளவு துணிச்சல் ஏற்படாதே என்று நான் எண்ணிக்கொண்டேன். 

சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் முத்தப்பன் ஒரு சைக்கிளை உருட்டிக்கொண்டு வந்தான். விஷயம் என்னவென்று விசாரணைசெய்ததில், தான் அதை இருபது ரூபாய்க்கு விலைக்கு வாங்கியிருப்ப தாகச் சொல்லி, சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொள்ளும் படி என்னையும் அழைத்தான். எனக்கு அளவு கடந்த ஆனந்தம் ஏற்பட்டு விட்டது. இருவருமாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டோம். 

முத்தப்பன், முன்பு நடந்துசென்றவன், இப்போது சைக்கிளேறி, ஊரார் முன்னிலையில் சவாரி செய்ய ஆரம்பித்தது வைதிகக் கூட்டத்தாருக்கு அதிக எரிச்சலை உண்டுபண்ணிவிட்டது என்று சொல்லத் தேவை யில்லை. அவன் தினமும் கோவிலூர் சென்று தன் தொழிலை வெற்றிகரமாக நடத்திப் பணம் சேர்த்து வந்தான். சைக்கிளின் உதவியால் அவன் தொழில் அங்கு நன்கு வளர்ந்துவந்தது. இங்கே கிராமத்தாரின் தாடி நாளொரு மேனியும் பொழுதொருவண்ண முமாக வளர்ந்து வந்தது. ஊராருக்குப் பயந்து கிராம ஊழியத்தைச் சரிவரச்செய்யாவிட்டால் கோர்ட்டில் பிராது போட்டுவிடுவதாகச் சிலர் அவன் தாயாரிடம் போய் பயங்காட்டிப்பார்த்தார்கள். ஒன்றும் பயன் படாமற்போகவே, வெகுதூரத்திலிருந்து புதிதாக ஒரு அம்பட்டனை அழைத்து வந்து குடியேற்றினார் கள். 

முத்தப்பன் கிராமத்தாரின் உருட்டலுக்கோ, மிரட்டலுக்கோ சிறிதும் பயப்படவில்லை. அவன் போட்ட திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்தான். இப்போது அவன் கையில் நிறையப் பணம் சேர்ந்துவிட்டது. 

டவுனில் ஒரு நல்ல கட்டிடத்தை வாடகைக்குப் பிடித்தான்; பக்கத்துக் கிராமத்திலுள்ள தனது நெருங்கிய உறவினர்களையெல்லாம் பங்காளிகளாகச் சேர்த்தான். ‘முத்தப்பவிலாஸ் ஸலூன்” என்று போர்டு போட்டுக்கொண்டான். அவன் தொழில் கௌரவமாகவும் லாபகரமாகவும் நடைபெற்று வருகிறது. வேறிடங்களிலும் அவனைப் பின்பற்றிப் பலர் ஸலூன்கள் வைக்க ஆரம்பித்தனர். இவ்வாறு நாடு முற்றும் எராளமான ஸலூன்கன் ஏற்பட்டு விட்டன. 

– கவிக்குயில் நிலையக் கதைத்தொகுதி, முதற் பதிப்பு: ஏப்ரல் 1944, கவிக்குயில் நிலையம், கோட்டாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *