வாழ்க்கைச் சக்கரம்..

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2025
பார்வையிட்டோர்: 3,139 
 
 

சுந்தரேசன் கன்னாடி பேழைக்குள் சடலமாய் மலர்மாலைகள் சூழ கிடத்தப்பட.. அவரது படமோ கண்ணாடி பிரேம் போட்டு மேலே தொங்கியது. 

டேய் விஷ்ணு பூசாரி வந்துட்டாருடா. கீழ வா, சடங்கு ஆரம்பிக்கணும். லேட்டாக வந்த மகனை கடிந்து கொள்ள,  last over மா. இந்தியா தோத்துடுச்சி என்றான் சோகமான முகத்துடன்..

அப்பாவையே தோத்துட்டு சடலமாய் இருப்பதில் சோகமில்லை இவனுக்கு..20/20 மேட்ச் முக்கியமாய் போய்விட்டது. இது போன்ற இளைஞர்களை மனதில் கொண்டு 2020 இந்தியா வல்லரசாகும் என்று எப்படி கனவு கண்டாரோ கலாம் அய்யா..

மற்றொரு அறையில் கொல் என்று ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்டு, ஹலோ யார் அங்க? ஒரு பொணம் விழுந்திருக்கு வீட்ல, என்ன சிரிப்பு சத்தமா..என்று கேட்டவுடன் அமைதி நிலவ..  அங்கிருந்து வெளியே வந்தவர் சொன்னார்.. பிக்காஸ்சில் இந்த வார எலிமினேஷன் யார் என்பது பற்றிய  டிஸ்கஷன், சி்ரிப்பு.. இவங்களுக்கு பத்தோட பதினொன்ணா இதுவும் ஒரு நாள். அவ்வளவுதாங்க.

 பாவம் இந்த மனுஷன் இவங்களுக்காக ஓடி ஓடி ஒழச்சாரு. எனக்குத் தெரியும்..  

பிரேதம் வெளியேறியது. அழுது அழுது அவரது மனைவியின் கண்களில் வரட்சி. துக்கத்தால் தூக்கத்தை இழந்தாள்.  தேம்பல் ஒலிகள் ஓய்ந்தன. சாவுக்கு வந்த உறவினர் கூட்டத்தில் ஒரு குரல்.. பக்கத்துல தான் இருக்கு அந்த mall. போய்ட்டு போயிடலாமா. இனிமேல் எப்போ வரப்போறோம் என்று அட்டன்டென்ஸ் எடுக்க.. எல்லாரும் ஓக்கே என்கிறார்கள்.

சுந்தரேசன் பயன் படுத்திய பாய், தளகாணி வீதிக்கு வந்தது.  அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி கேட்பாரற்றுக் கிடந்தது. அதிசயம் ஆனால் உண்மை அங்கு மாட்டப் பட்டிருந்த டிங்டாங் கடிகாரம் அவர் உயிர் நீத்த அந்த மணி்த்துளியில் நின்று போயிருந்தது. அணிந்திருந்த வாட்ச், செயின், மோதிரத்திற்கு போட்டி. 

இறந்தவரின் சாம்பல் வரவில்லை. அதற்குள் எந்தெந்த சொத்துக்கள் யார் யாருக்கென ஒரு அலசல். 

அலமாரியில் இருந்த மாத்திரை டப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் மனைவி. சுகர் மாத்திர போட்டீங்களா என்று யாரிடம் கேட்பாள் இனி. 

இவரைப் பற்றிய  நினைவு கொஞ்சம் கொஞ்சமாக fade ஆனது குடும்பத்தில்.

லீவில் இருந்த மகன், மகள், மருமகள் வேலைக்குச் சென்றனர். பேரன் பள்ளிக்குச் செல்கிறான் அதே குதூகுலத்துடன். சத்தமாக சவுன்ட் வைத்து கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறான் மகன். மற்றொரு அறை டீவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி , அதே சிரிப்பொலி.. இவ்வளவு ஏன் இவரது மனைவியே டீவியில் வந்த ஏதோ ஒரு காட்சிக்கு வாய் விட்டு சிரிக்கிறாள்..

முதலாண்டு நினைவு நாள் வருகிறது. அதைமட்டும் பொறுப்புணர்ச்சியுடன் அனுஷ்டிக்கின்றனர். அவருக்குப் பிடிக்காத,  அவர் ருசித்திராத பலகாரங்கள் பிடிக்குமெனக் கூறி படைத்துண்கிறார்கள். அந்நாளிலும் ஒரு இன்பச்சுற்றுலா அரங்கேறுகிறது.

காலச்சக்கரம் சுழல்கிறது. அனேகமாக மறக்கப்பட்டு விட்டார் சுந்தரேசன் என்றே சொல்லலாம். என்றாவது யாராவது ஒரு புகைப்பட ஆல்பத்தில் அவரைப் பார்த்தால் அந்நேரம் மட்டும் அவரது நினைவுகள் சில நிமிடங்கள் அங்கே நிழலாடும்..

இவ்வளவு சீக்கிரம் தன்னை மறந்து போகும் உறவுகளுக்காகவா இவ்வளவு காலம் ஓடோடி உழைத்தார்.  உங்களைப் பற்றி கவலைப்பட அவர்களுக்கு நேரமில்லை. மறுபிறவி என்று ஒன்று இருப்பது உண்மையானால் எங்காவது யார் ரூபத்திலாவது வாழ வழி உண்டு..

1 thought on “வாழ்க்கைச் சக்கரம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *