வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 75
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அமெரிக்காக் கண்டத்தில் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என இரண்டு நாடுகளிருக்கின்றன. மக்கள் முதலில் குடியேறிய நாடு தென் அமெரிக்காதான், தென்அமெரிக்காவின் காடுகளில் உலகில் எங்குமில்லாத 286 வகையான பெரிய பெரிய மரங்கள் நிற்கின்றன. இரும்பு, நிலக்கரி, செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய பெரிய சுரங்கஙகளும் அங்குதான் இருக்கின்றன. உலகில் பெரிய நதிகளும் அங்குதானுண்டு.
இவ்வளவு இயற்கை வளம் வட அமெரிக்காவில் கிடையாது. ஆனால் வட அமெரிக்காதான் உலகத்தில் பணக்கார நாடாயிருக்கிறது. பணத்தில் மாத்திரமல்ல, எல்லாத் துறைகளிலும் முன்னணியில் நிற்கின்றது. தென் அமெரிக்காவோ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போகின்றது.
இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
தென் அமெரிக்காவுக்கு முதலில் வந்து குடியேறினவர்கள் ஸ்பெயின் தேசத்தார். அவர்கள் தங்கத்தைத் தேடிவந்தார்கள்.
ஆனால் வட அமெரிக்காவுக்கு முதலில் வந்து குடியேறினவர்கள் இங்கிலாந்திலிருந்து வந்த பரதேச பிதாக்கள். அவர்கள் தேவனைத் தேடி வந்தார்கள்.
தென் அமெரிக்கா கீழான நிலைமையிலும், வட அமெரிக்கா உன்னத நிலைமையிலும் இருப்பதற்கு இது தான் காரணம்.
“கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது” [சங்கீதம் 34:10].
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்க ளுக்குக்கூடக் கொடுக்கப்படும்” [மத்தேயு 6:33]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
