கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 20,240 
 
 

மனிதனுக்கு ஒரு பொருள் கிடைக்கும் வரையில் அதன்மேல் – மோகம் இருப்பது இயல்பு. தேடிய பொருள் கிட்டியதும் அதன் மேல் வைத்திருந்த ஆசை கரைந்து போய்ப் புதுத் துயரங்களும் சங்கடங்களும் மனிதனைப் பிடிக்கும், போர் புரிவதும் பகைவனைக் கொல்லுவதும் க்ஷத்திரிய தருமமாக இருந்தாலும், சகோதரர்கள் கொன்று கிடைத்த பதவியும் செல்வமும் என்ன சுகத்தைத் தரும். இதைத்தான் அருச்சுனன் யுத்தம் ஆரம்பிக்கும் தறுவாயில் கண்ணனிடம் முறையிட்டது. அதற்கு சமாதானமாகக் கண்ணன் கருமதிதைப் பற்றியும் கடமையைப் பற்றியும் உபதேசம் செய்தான். ஆயினும் அருச்கனன் சொன்னதிலும் பெரிய உண்மை இல்லாமலில்லை. பாண்டவர்கள் கௌரவர்களை ஜெயித்துவிட்டுச் சம்பூரண ராஜ்ய பதவி அடைந்தார்கள். பிறகு கடமையை உத்தேசித்து ராஜ்ய பாரம் வகித்து கடத்தினார்கள். ஆனாலும் எதிர்பார்த்த சந்தோசம் அடையவில்லை.

“வெற்றி பெற்று ராஜ்யா திபத்தியம் அடைந்த பாண்டவர்கள் திருதராஷ்டிரனை எவ்விதம் கடத்தினார்கள்” என்ற ஜனமேஜயர் கேட்க, வைசம்பாயனர் கதையைச் சொல்லுகிறார்:

துக்க சாகரத்தில் மூழ்கிய திருதராஷ் டிரனிடம் எல்லாவிதத்திலும் கௌரவம் காட்டியே பாண்டவர்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள். எல்லாக் காரியங்களையும் திருதராஷ்டிரனிடம் தெரிவித்து அவனுடைய அனுமதி பெற்றே ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள். தான் பெற்ற நாறு மக்களையும் கனவில் பெற்ற தனத்தைப் போல் இழ்ந்த காந்தாரியைக் குந்திதேவி மிகவும் அன்போடும் பக்தியோடும் பார்த்து வந்தாள். திரௌபதி யானவன் அவர்கள் இருவரையும் சமமாகவே பாவித்துப் பணிவிடை செய்து வினயமாக நடந்து கொண்டான். திருதராஷ்டிரனுடைய மாளிகையில் அவனுக்காகச் சிறந்த சயனாசனங்கள்யும் ஆடை யாபரணங்கயும் யுதிஷ்டிரன் அமைத்தான், அவனுக்கு வேண்டிய ஆகாரங்களையும் செய்து அனுப்பினான்.

கிருபாச்சாரியர் திருதராஷ்டிரனுடன் வசித்து வந்தார். வியாசர் அவனுக்கு ஆறுதல் கொடுக்கக் கூடிய கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். அரசியல் விவகாரங்கள் யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனை அவ்வப்போது கேட்டு அவனுடைய அனுமதியின் மேல் செய்வது போலவே செய்து வந்தான். ராஜாவான தருமபுத்திரன் திருதராஷ்டிரனுக்கு வருத்தம் வரக் கூடிய பேச்சு ஏதும் பேசாமல் ஜாக்கிரதையாக இருந்தான்.

பலதேசங்களிலிருந்து வரும் மன்னர்கள் கௌரவ சிரோடனான திருதராஷ்டன் முன் போலவே மகாராஜனாக உபசரித்தனர். எதிரிகள் காந்தாரிக்குப் பணிவிடை செய்வதில் ஒரு குறையும் இல்லாமல் பார்த்து வந்தார்கள். யுதிஷ்டிரன் “புத்திரர்களை இழந்த இவர் சிறிதும் துயரப்படாமலிருக்க வேண்டும்” என்று தன் சகோதரர்களுக்கு உத்தரவிட்டிருந்தான்.

இவ்விதம் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனால் நன்கு பூசிக்கப்பட்டுத் தன் புத்திரர்கள் ஜீவித்திருந்தால் எவ்வளவு சுகம் கிடைக்குமோ அவ்வளவு சுகத்தையும் போகங்களையும் அடைந்தான். திருதராஷ்டிரனும் பாண்டவர்களை அன்போடு பார்த்து வந்தான். அவர்களிடம் சிறிதும் அபிப்பிராய பேதம் காட்டவில்லை.

பாண்டவர்களில் பீமன் மட்டும் அப்பிரியமான காரியங்கள் சில சமயம் செய்வான். ரகசியமாக ஆட்களைச் கொண்டு அவனுடைய கட்டளைகள் நடக்க வொட்டாமல் செய்து வந்தான். “மத்த மதியினரான துரியோதனாதிகள் கொல்லப்பட்டனர்” என்று திருதராஷ்டிரன் காதில் விழும்படி சொல்லுவான். துரியோதனன், கர்ணன், துச்சாதனன் இவர்களுடைய செயலை எண்ணி யெண்ணித் தன் கோபத்தை மறக்கவோ அடக்கவோ அவனால் கூடவில்லை. அதனால் சில சமயம் திருதராடிரனுக்கும் காந்தாரிக்கும் கேட்கும்படியாகக் கூடக் கடுமையான வார்த்தைகளைச் சொல்வான்.

பீமனுடைய வார்த்தைகளும் சில்லறைக் காரியங்களும் திருதராஷ்டிரன் மனதைக் குத்தும். இதைக் கண்டு காந்தாரியும் வருத்தப்பட்டாள். ஆனால் அவள் மகா விவேகசாலி. தர்மம் அறிந்தவள். பீமன் சொல்லும் அப்பிரிய வசனங்களக் கேட்கும்போதெல்லாம் தருமமே வடிவங் கொண்டது போல் விளங்கும் குந்திதேவியைப் பார்த்து மனதில் சாந்தம் அடைவாள். இவ்வாறு பதினைந்து வருடங்கள் கடந்தன.

– 14-04-1946

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக 1948 முதல் 1950 வரை பொறுப்பில் இருந்தவரும், 1952 முதல் 1954 வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவரும், 1955-ம் ஆண்டில் பாரத ரத்னா விருதுபெற்ற முதல் இந்தியருமான மூதறிஞர் ராஜாஜியை, ஒரு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகம் போற்றுவதில்லை. அறிஞர் அண்ணாவுக்கு நேர்ந்த கதிதான் மூதறிஞருக்கும் ஏற்பட்டது. டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *