ராஜாராமன் ரவிக்(கை) மாற்றின வரலாறு




ஆதௌவ்….. விடியற்காலை ஒன்பது மணிக்கு மலர் ஆபிஸுக்கு வந்தால் ரொம்ப முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்…
“ஹாய் …மலரு.. என்ன பல்லுவிளக்காம ஆபிஸ் வந்துட்டியா..”
“சும்மா இர்ரா உனக்கு எப்பொவும் கேலி ..ராத்திரி பூரா உன்கூட பேசியே ஆகனும்னு ஒரே ஆத்திரம்…”
” ஆஹா உனக்கு இப்பிடி ஒரு யொகமாடா பயலே …சரி..சான்ஸை விடாதே மலரு இன்னைக்கே ஒடிப்போகலாம்….. என்ன கண்ணம்மா..பாரு கொடைக்கானல்ல எனக்கு ஒரு ரிசார்ட்டு இருக்கு..ஊட்டின்னா இன்னம் சௌகரியம்…உன் வசதி எப்பிடி..”.
“ஏன்டா உனக்கு மாத்திரம் ரோஷமே இருக்காதா…”
“பாரு தங்கம்.. ஒரு ஐஸ்வர்யா ராய்கிட்ட ரோஷமே இருக்ககூடாது..பட்டுனு கால்லே விழுந்துடனும் அதான் நல்ல ஆம்ப ளைக்கு அழகு… இல்லையா செல்லம்…
‘’டேய்….அளவுக்கு மீறாதே…நசுக்கிடுவேன்..’
‘அப்ப நீ சொல்ல வர்ர உன் சமாச்சாரம் எனக்கு வேண்டாம்…’
‘சனியனே எப்பிடியோ கூப்புட்டுத்தொலை பக்கத்துலேஉட்காருடா ..யோக்கியன் தூரத்திலே உட்கார்ந்து கழுத்தறுக்காதே…உட்காருடா..பக்கத்துலே நகர்ந்து உட்காரு…… நல்லா வேஷம் போடுவே….ரொம்ப ரகஸியம்…பக்கத்திலே வாடா எருமை…
‘ இப்படி மரியாதையா பேசனும் … சரி சொல்லு….’
‘ரொம்ப ரகசியம் ..என்ன…’
‘அட தெரியம் கண்ணம்மா…’
‘ஏண்டா நீ திருந்தவே மாட்டியா..கண்ணம்மா நொண்ணம்மான்னுகிட்டு..’
‘அதவுடுப்பபா …சமாச்சாரத்துக்கு வா….’
‘கேளு..நேத்து கவுர் ரூமுக்க போனனா.. கீழ ஒரு பத்து ரூபா கிடக்குது …எடுத்து குடுத்தேன்…அட கெடச்சிட்டதா…. கீழ இன்னம் ரெண்டு பேர் கார்டைப்போட்டுட்டு தேடினான்கள்… கெடக்குதா பாருன்னா..கூடவே அவளும் குனிஞ்சு தேடரா… அப்பத்தான் கவனிச்சேன் …..அவ ‘ ரவிக்’ போட்டிருக்காடா’ ரவிக்’ னா தெரியமா அதுக்கு கை இருக்காது..அதுமட்டும் இல்லேடா. அவ ..உள் பாடி கூட போடலை .. எல்லாம் அப்பிடியே தெரியுது …இவனுக கார்டைப்போட்டுட்டு கீழே தேடலைடா..அவளைக் கீழே குனிய விட்டுப்ப பாக்கறானுங்கடா….’
‘தேவிடியாப்பசங்க….’என்றான் ராஜா
‘அதான் எனக்கு ஆத்திரம் …ராத்திரி சரியான கோவம் தூக்கமே வரலை…’
‘ஏன் கவுர் கிட்ட நேக்கா சொல்லிடேன் ‘என்றான் ராஜா
‘விஷயம் புரிஞ்சா சாமி யாடிடுவா..கொறஞ்சது அஞ்சு பேர்சீட்டு கிழிஞ்சுடும்… ‘ எவனாவது அதுலே நல்லவன் இருப்பான் ..நமக்கெதுக்கு பாவம்….’
‘லாடம் கட்டனும் தாயோலிகளை….’.
‘கோவப்படாதேடா…நான் அவசரமா எதுக்கு உங்கிட்ட சொல்றது நீ கரெக்டா டீல்பண்ணுவேன்னுதான். .இப்பிடிஇவனுக செய்யறது அசிங்கமில்லேடடா…….
‘அக்கா தங்கச்சி கெடையாதா இவனுங்களுக்கு கெட்ட நாய்கள்டா’ ‘ . ‘அநாகரீகம்…சாகடிக்கனும் …நாய்களை….’
‘ராத்திரி தூங்கலை மனசே கேட்கலைடா…என்னடா செய்யறது…..’
‘ஐயே….சப்பை விஷயம் எனகி.ட்ட .சொல்லியாச்சில்லே விடு….சரி ‘பண்ணிக்கலாம்..சாப்ட்டியா…
‘இல்லேடா சாப்புடவே பிடிக்கலை உன்கிட்ட சொல்லாமே மனசே ஆறலை..டேய் ..சர்தாருக்கோ கவுருக்கோ தெரிஞ்சா கதை முடிஞ்சது …சர்தார் கத்தியோட வந்துடுவான்…’
‘எல்லாம் எனக்குத் தெரியாதா…வா.. …இவனுங்க எங்கேயாவது அடிபட்டு சாவானுங்க… அவனுங்களை விடு…. கவுரைக் காப்பாத்துவோம் …கவுர் முழு ஜாக்கிட் போட்டா விஷயம் முடிஞ்சது…. எப்பிடி…..’
‘முடியுமாடா …தண்ணி குடிக்கற மாதிரி பேசறெ…அவ அப்பபிடி போடுவாளா
‘எல்லாம் முடியும்…..அவ பாரேன் கோட்டே போட்டுக்குவா…’
‘டேய் என் பேரைக்கெடுத்துடமாட்டியே…’
‘கவலைப்படாதே…உன்னையும் கெடுக்கமாட்டேன் ….உன் பேரையும் கெடுக்கமாட்டேன்..’
‘ சோத்துலே எலி மருந்து வச்சி சாகடிச்சுடுவேன்..’
***
ஆவேசமாய் ராஜாவின் இருக்கைக்கு வந்தான் தொண்டபாணி .. அவன் தொண்டை பெரிசு அதனால் தொண்ட பாணி…
‘ டேய்..ராஜா…அவசரம் ஒரு ஐம்பது ரூபாய் வேணும்…’
‘அவ்வளவு தானே.. அதுக்கு ஏன் பேய் துரத்தரமாதிரி வர்ரே…மலரு..தம்புக்கு
ஒரு அம்பது கொடுத்துரு …உனக்கு மொத்தமா செட்டில் பன்னிடரேன்…’
‘எருமை… நீ மொத்தமா புடுங்கு … அவன் கேக்கறது அம்பது ரூபாயில்லே அம்பதாயிரம் ரூபா….’
‘டேய் …நிஜமாவாடா…அம்பதாயிரம் பாத்து நான் வருஷமாச்சேடா…ஆமா உனக்கு என்னடா அவ்வளவு அவசரம்.. சின்ன வீடு பிரசவமா….அவ கெழவி ஆகாது..இல்லே ரேஸா..ப்ளு கிராஸோட அம்மா அப்பா விசாரிச்சு கட்டு..எப்பிடி நம்ம டிப்ஸ்…’
‘உம் மூஞ்சி..நான் உன்னைக் கடன் கேட்டனா டிபஸ் கேட்டனா…நாளைக்கு ட்…டோனி ஆடறான்..ஆஹா அவன் இந்த தடவை சென்சுரி போடறான்..பத்து கட்டுனா நூறுடா…’
‘அப்ப கோலி..அவன் நூத்தி எம்பது அடிப்பானா….’
‘அதப்பத்தி பேசாதே..அவன் எவ்வளவு அடிச்சா எனக்கென்ன…டோனி சென்சுரி அடிக்கறான்…’
‘டோனி டொக் அடிச்சா….’
‘த்தூ..ஊத்தப்பயலே…அபசகுமாப்பேசாதே…உனக்கெல்லாம்கொஞ்சமாவது தேசப்பற்று நாட்டுப்பற்றே இல்லையாடா…இன்னும் சாகாம இருக்கே..’
‘இரு..இரு அதென்ன தேசப்பற்று…அப்பபுறம் நாட்டுப்பற்று மலரு…’
‘முண்டம் அவன் இந்தியாவுக்கு வெளையாடறான் அது தேசப்பற்று…தமிழ் நாட்டுலே விளையாறதால அது நாட்டுப்பற்று…தமிழ்நாட்டுப்பற்று…’ என்றாள் மலர்…
‘அட..இவ்வளவு இருக்கா இதுலே..விடு…. இப்பிடிப் பேசேன்…ஒரு வேளை..அடிக்க வராதே..சும்மா பேச்சுக்கு கேக்கறேன்…. டோனி டொக் அடிச்சா நீ என்னடா செய்வே…’
‘முதல்லே உன்னைக்கொலை செய்வேன்…அப்புறம் தூக்கு மாட்டிகிட்டு செத்துடுவேன்…;
‘டேய் வேணாண்டா..எனக்கு நீ இருபதாயிரம் கடன் தரனும்..மலருக்கு பத்து..ஆபிஸ்லே உன் மொத்தக்கடன் ஆறு லடசம்…மலருக்கு நீ தரவேண்டாம்…’
‘அப்பிடிங்கறே….’என்றான் தண்டா…
‘டேய்..என் பணத்துக்கு அவன் என்ன மணியக்காரன்…மொதல்லே என் பணத்தைக்கொடுத்துட்டு நீ எப்பிடியோ போய்த்தொலை…..நீ சாவு ..இல்லே எவனையாவது சாகடி…எனக்கு அக்கரை இல்லே…என் பணத்தை முதல்லே கொடு…வந்துட்டான்கள்…. மொள்ள மாரிப்பசங்க….
‘ஆஹா….மலருக்கு கோவம்டா ராஜா…’
‘கெடக்குது விட்ரா…அது ஒரு லூஸுக்கேஸு….’
‘என்னடா மொணகறே….’என்றாள் மலர்…
‘பாரு மலரு…தொண்டா பணத்துக்கு நான் காரண்டி…அடுத்த மாசம் அவன் பணத்தைக்கொடுக்கலே என்னை செருப்பால அடி….’ இது ராஜா…
‘முண்டம்…உன்னை செருப்பால அடிச்சா எனக்கு எப்பிடிடா பணம் வரும்…’
‘அவன் அடிபட நான்விடுஉவனா …இல்லடா ராஜா…பணத்தை விசிறிடமாட்டேன்’
‘அவன் முண்டம் …நீ தண்டம் இப்ப நீங்க தூரப்போகல்லே..உங்களை
போஸ்ட் மார்ட்டம் ரூம்லே பார்ப்பேன்…ஓடிருங்க…’
‘உடு தண்டா…அக்காவுக்கு உன் பணம் ஒரு விஷயமே கெடையாது…. . அவ்வவளவு வசதியானவங்கடா….இருந்தாலும் குடுத்துடு.அதோட அவசியம்
என் கடன் பணத்கைக்கொடுத்துட்டு நீ எப்ப வேணாலும் செத்துப்போ..அடுத்த ஜென்ன்மத்துலே நீ கழுதமேல கட்டுனாக்கூட அது ஜெயிக்கும்…சர்த்தானே…’
‘அதும் சரி ..உங்க பாவம் எனக்கு வேண்டாம்..சரி.. இப்ப பணத்துக்கு வழி சொல்லு…’
‘சரி கடன் கேக்க வந்துட்டே… விதி வலியது… வரும் வினை வழி நில்லாது..பாரேன் எங்க பேங்குலே ஒருத்தன் பத்து லட்ச ரூபா டெபாசிட் போட்டிருக்கான்.. நேத்து அஞ்சு லட்சரூபா டெபாசிட் பண்ண வந்தான்டா.. எங்கப்பன் இருக்கானே அவன் ஒரு ராவு காலம்…டெபாசிட்டை வாங்க மாட்டேன்னுட்டான்…’
‘ஏன்டா..’
‘கேட்டேனே..அவன் குளிச்சு ஆறுமாசம் ஆச்சி..அவன் கோட்டுலே இருந்து எலி செத்த நாத்தம் வருதுன்னு சொல்றாருடா.. ஒருவருஷ தாடிமீசை வச்சிட்டு ..பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்..இவன்கிட்ட வாங்குனா நம்ம பேங்க் பேர் கெட்டுடும்னு சொல்றார்….. போய்யா பொளைப்பத்தவனே.. உன்னைப்பாத்தாக்கூட’ காக்கா புடுக்கி’ மாதிரி இருக்கே…பணம்ன்னு வந்தா வாங்கி போடுவியா .நீயெல்லாம்.பேங்கு வச்சி நடத்த வந்துட்டேன்னு போட்டு வறுத்துட்டேன்,.சரிதான்னு இன்னிக்கு அவனைப் பிடிக்க ஓடறார்…..ஏண்டா தண்டா ..இப்பிடி ஒரு மனுஷனை நீ பாத்திருக்கியாடா…
‘அநியாயமா இருக்கே…அவன் பிச்சைக்காரனா ..குஷ்டரோகியா..அதா முக்கியம்.. பணம் நாத்தமா அடிக்கும்…அதுக்கு குஷ்டம் கூடப் புடிக்குமா ……. என்ன ஆளுடா உங்கப்பன்…நீ சோல்லு உங்கப்பனுக்கு முன்னே நான் போய் அவனைப்பபிடிச்சுடறேன்…எப்பிடி….’
‘டேய்..அவரு நம்ம ஆபிஸ்லே வைஸ் பிரஸிடெண்டா இருந்தாராம்..’
‘அட…அப்பிடியா…’
‘ஆமாண்டா ..கம்ப்யூட்டர் பசங்ககிட்ட மாரடிக்கறதை விட கழுதை மேய்க்க போகலாம்னு ஓடிட்டார்.. கழுதைகளும் சரிப்படல்லேன்னு…இப்ப பிச்சைக்காரர் உத்தியோகம் பாக்கறார்..எப்பிடி…..’
‘சூப்பர் …ஒரு நாள் நான் கூட அப்பிடியே போயிடறேன்…’
‘அப்பிடியே ஆகட்டும்….ததாஸ்த்து..நீ இதே வேகத்துலே போ ஜெயிப்பே.. நீ பிச்சைக்காரன் ஆகறதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது..ஜெய் விஜயீ பவ..’
‘ஆமா ..அவரை எப்பிடி கண்டுபிடிக்கறது…’
‘சுலபம்…நம்ம காம்பவுண்டு தாண்டு லெப்டுல திரும்பு…நூறு கஜம் …ஐயா
சாப்ட்டு ஒரு நாளாச்சு..ஒரு கட்டிங்குக்கு துட்டு குடுங்கய்யா..உங்க மாமனார்
மாமியார் பொட்டுனு போயிடுவாங்கய்யா….உங்க கொழுந்தியா மச்சினி எல்லாம் அடிக்கடி உங்க வீட்டுக்கு வருவாங்கய்யா… அப்பிடின்னு சொல்லிகிட்டேஇருப்பாரு… விஷயத்தைச்சொல்லி காரியத்த முடி..தைரியம் பலம்…சீக்கிரம் போ ..புளிய மரத்துகிட்ட நிழல்லலே உட்காரந்திருப்பாரு…சரியா பனிரெண்டு மணிக்கு மைலாப்பூர் பிரான்ச் போவார்….’
‘டேய்..உன் உதவியை மறக்கவே மாட்டேன்டா..உடுக்கை இழந்தவன் கை போலன்னு உன்னைத்தான் வள்ளுவன் சொன்னான்டா…’
‘பாரு வள்ளுவன் கூட நம்ம ஆளு மாதிரி தாடிதான் வச்சிருக்கான்..அவனும் பிச்சைதான் எடுத்து இருப்பானோ…. வள்ளுவனுக்கும் மைலாப்பூர்…இவரும் மைலாப்பூர்… பாத்தியா..ஒற்றுமை…வள்ளுவர் கூடஇதுமாதிரி பைனான்ஸ் வச்சிருந்திருப்பாரோ..தமிழ் படிச்சவனாவது பைனானஸ் வக்கிறதாவது…
சிவு ஓடி வந்தான்’…டேய்…ஒரு சந்தேகம் அன்னிக்கு..நீ சொன்னியே..’
‘இரு தொண்டா இவன் பேசவே விடமாட்டான்….குரங்குக்கு சொறங்கு புடிச்சமாதிரி… சாகடிச்சுடுவான்…என்னடா சந்தேகம்…’
‘அட அதை மறந்து உட்டுட்டேன்..’
‘எதை கொரங்கையா… பாவி உனக்குத்தான் கிளி மாதிரி பொண்டாட்டி இருக்காளே..ஏண்டா கண்டம் விட்டு கண்டம் தாண்டுறீங்க…’
‘சும்மா இர்ரா..என்ன கேக்கவந்தேன் அதே மறந்துடுச்சி..ஆமா கொரங்குக்கு சொறங்கு புடிச்சா என்ன செய்யும் அதை முதல்லே சொல்லு…’
‘அது ரகஸ்யம்…குனி சொல்றேன்..ஆங்…அப்பிடி..மலரு இருக்காளே அவ
இந்த மாதிரி விஷயங்களிலே எக்ஸ்பர்ட்..நேத்து சொல்றா அவ
வீட்லே நாலு குரங்கு இருக்காம்..குரங்கு சமாச்சாரம் எல்லாம் அவளுக்கு
அத்துபடி..அவதான் எனக்கு இத சொன்னா அவளைப்புடி.. உடாதே.. நீ கேட்டா சொல்லிடுவா…சரியா.. புறப்படு…சிவு ஓடு… ‘ ‘மவளே செத்தேடி இன்னிக்கு… உனக்கு கண்டம்தான்….ஐம்பது ரூபாய்க்கா டபாய்க்கிற…. இப்ப உனக்கு வச்சதுதான் ஆப்பு…என்று கருவினான் ராஜா…
‘தொண்டா..நீ எதுக்கு காத்திருக்கே..கலங்காதே…சுத்த வீரனுக்கு சபலம் வரக்கூடாது..இந்த உலகம் ஒரு சூதாட்டக்களம் ..சூதாட்டமே உலகம் உலகமே ஒரு சூதாட்டக்களம்…பிச்சைக்ககாரனாவதே நம் லட்சியம்…லட்சியம் மறவாதே..சொந்தங்களை மற..வில்லை எடு..அம்பை விடு…கொடுப்பதும் கெடுப்பதும் நாராயணன்என்று நம்பு..புறப்படு…ம்..உனக்கே ஜெயம்…’
அடுத்த நிமிஷம் தொண்டபானி காம்பவுண்ட் தாண்டியிருந்தான்..
‘இது என்னடா புது கீதையா..பத்து நிமிஷத்திலே உன் சாயம் வெளுக்கும் …அப்ப இருக்கு உனக்கு….’என்றாள் மலர்…மவனே செத்தேடா இன்னிக்கு…’
‘நாராயண…நாராயண…நம்பு மகளே….நம்பு..மலர்மிசை ஏகினான் நாரயணண் அவனை நம்பு அவன் உனக்கு சொர்க்க லோகம் காட்டுவான்….’
‘அஞ்சு நிமிஷத்துலே உனக்கு பாதாள லோகமே தெரியும் இருடா… முடிஞ்சேடா நீ …..அவன் திருப்பி வந்ததும்.உனக்கு எல்லா லோகமும் தெரியும்..இரு..அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து உன் வேடிக்கை பாக்கறேன்..’
‘மலரு ….அவனை விடு ..நான் கேக்கறதுக்கு சொல்லு…கொரங்குக்கு சொறங்கு புடிச்சா என்ன ஆகும்…’ சிவு ஆரம்பித்தான்…
‘அத அந்த கொரங்கு கிட்ட போய்க்கேளு…என்கிட்ட கேட்டா…எனக்கு என் அவசரம்….நேரம் தெரியாம வந்து குரங்கு பத்தி கேக்கறான்…முண்டம்…
‘அவன்தான் உங்கிட்ட கேக்க சொல்றான்…’
‘சொல்லிடு மலரு ….நேத்து கூட என் வீட்லே நாலு கொரங்கை வச்சிட்டு ஒரே இம்சைன்னு சொல்லை… எம் மேல சத்தியம்….பையனை..அதுலேயும் சின்னப் பையனை ஏமாத்தாதே.. ரொம்ப சின்னப்பையன் மனசு விட்டுடுவான்….சொல்லிடும்மா..’.
‘சொல்லு மலரு…..என்னாலே வேலையே செய்ய முடியலை…தப்பு தப்பா வருது’ கம்யூட்டரைப்பார்த்தா குரங்காவே தெரியுது…என்றான் சிவு…..
‘டேய்… கட்டைல பொறவனே…’என்று ராஜாவைப்பார்த்து உறுமினாள் மலர்..
‘டேய் சிவு.. இதான் கடைசிதடவை…இந்த நாய் கேட்டான்னு மாத்திரம் என் கிட்ட எதுவும் கேக்காதே…அப்புறம் நான் பத்ரகாளி ஆயிடுவேன்…ஆமா’
‘இப்பவும் அப்பிடித்தானே இருக்கே…’என்றான் ராஜா
‘டேய்…என்னைக் கொலைகாரி ஆக்கிடாதே…டேய்..சிவு இனிமே என்கிட்ட எப்பவுபே சந்தேகமே கேக்காத…’
‘சரி கேக்கலை..இப்ப பதில் சொல்லு……அதோட பொம்பளை குரங்க்குக்கு சொறங்கு வந்சா அது என்ன செய்யும் அதே சொறங்கு ஆம்பிளை குரங்குக்கு வந்தா அது என்ன செய்யும்…சொல்லு மலரு..நீதானே என் ப்ராஜக்ட் லீட்….’
‘அடேய்…இந்த உத்யோகத்தைவிட்டுட்டு நாலு வீட்லே துணி துவைச்சி பொழக்கலாம்டா..ஐயோ ஈஸ்வரா அடுத்த ஜென்மத்திலே நான் துணிக்கடையில துணிமடிக்க போவேன் இல்லே படு கிழவனைக்கல்யாணம் செஞ்சாக்ககூடப் பரவாயில்லே இந்த கம்யூட்டர் உத்தியோகம் மாத்திரம் வேண்டாம்……’
‘ அத விடு மலரு இதுக்கு பதில் சொல்லு மலரு…’
‘தாயோலி மகன்களா…கில்லடின் வச்சி வெட்டனும்டா..’என்று மனசுக்குள் திட்டினாள் மலர்..’.இந்த நாய் சுரண்டியே சாகடிப்பான்….சனியன்…’
‘பார்ரா சிவு..நம்ம காம்பவுண்டு பக்கத்துலே ஒரு புளிய மரம் இருக்கு ….அங்கே ஒரு ஆம்பிளை குரங்கும் பொம்பிளைக் குரங்கும் இருக்கு..உத்துப் பாரு….எல்லாம் உனக்கே தேரியும்..சரியா…’
‘எல்லாம் சரி…ஒரே சந்தேகம்….ஆம்பிளைக் குரங்கையும் பொம்பிளைக் குரங்கையும் எப்பிடி அடையாளம் தெரிஞ்சுக்கறது..அத முதல்லே சொல்லு…’
‘அடேய் ராஜா ராவணா…உம் பொண்டாட்டி பன்னண்டு வருஷம் உம் பக்கத்திலே படுக்க மாட்டா…ஏண்டா சிவு…இவ்வளவு கேள்விதானா இன்னம் பாக்கி இருக்கா…’
‘ஒரு முக்கியமான கேள்வி இருக்கு அதை அப்புறம் வச்சிக்கறேன்… …இப்போதைக்கு இவ்வளவுதான்….’
‘பாருப்பா… புடவை கட்டி ஜாக்கட்டு போட்டிருந்தா அது பொம்பிளைக்குரங்கு பேண்ட் போட்டு ஷர்ட் போட்டிருந்தா அது ஆம்பிளைக்குரங்கு..சரியா போ கண்ணா…போ…’ ‘அவன் போனதும் அப்பா தப்பிச்சேன் ..’என்றாள் மலர்..
‘பத்து நிமிஷம் கழிச்சு பாரும்மா’ ‘ ப்ரா- ஜாக்கட்டு லீடு. ..’எமன் கூட அவன் கிட்ட தப்ப முடியாது..அம்பது ரூபா கேக்கறேன்…ஒட்டு மொத்தமா செட்டில் பன்றேன்னு சொல்றேன்..நம்பமாட்டேங்கறே நீ…இப்ப தலைய பிச்சிகிட்டு ஓடப்பபோற… பாரேன் கூத்தை…’
‘ச்சீ…வாயைமூடு….கடங்கார வெட்டிப்பயலே…’
‘எல்லா கணக்கையும் எடுத்து வை..நாளைக்கு உனக்கு செட்டில்மெண்டு
மூனு மாச பஜ்ஜி காபி கணக்கயும் முடிச்சுடறேன்..அப்புறம் இருக்கு உனக்கு..’
‘போடா புருடா … கொஞ்சம் அந்த பக்கம் போயிட்டு வர்ரேன்… தெரிஞ்சிரும் யாருக்கு இருக்கு.ன்னு…எனக்கா உனக்கான்னு …இப்ப அந்த தண்டா கடன் கெடைக்காம திரும்பி வருவான்.. மவனே..கொத்து புரோட்டாடா நீ…’
‘போ அழகம்மே…உன் சிஷ்யன் திரும்பி வந்து சந்தேகம் கேட்பான்..தலை விரிச்சி பொடவயை அவுத்துட்டு… ங்கீ…ங்கீ ..ன்னு ஓடப்போற ..இருடி…பஜ்ஜி கணக்கா முடிக்கப்போறேன்…உனக்கு பஜ்ஜியே இல்லாம பன்றேன்…அம்பது ரூபாய்க்கா டபாய்க்கறே…’
‘என்னடா மொணகறே….’
ஒன்னுமில்லே ..சீக்கிரம் போ ..டாங்க் ஒடஞ்சா ஆபிஸ் தாங்காதுன்னு சொன்னேன்…
ச்சீ…ச்சீ…ஆம்பிளையாடா நீ…
மலர் அந்தப்புறம் நகரவும் போன் வந்தது..கம்பீரமாக எடுத்தான் ராஜா
‘ஹலோ..ராஜாராமன்..டீம் லீட் ஸ்பீக்கிங்…அட..தண்டா என்ன..முடிச்சேபுட்டியா முடிஞ்சிட்டதா..அடப்பாவி..என்னடா செஞ்சே தப்பு தப்பா என்னெவோ சொல்றே…கொன்னேபுட்டடா.. டேய் ….சண்டாளா…அவ்வளவு சிக்கிரமாவா முடிச்சிட்டே.. .கொஞ்சம் நிதானமா இருந்திருக்கக் கூடாதா …நான் வரட்டுமா ..ஜாக்கறதை…இருடா வச்சிராதே..டென்ஷன் பன்னிட்டேடா….எனக்கே புரியலை டேய்….எப்பிடிடா இப்பிடியெல்லாம் நடந்தது….இப்பிடி முடியும்னு நான் நினைக்கவேயில்லையேடா..இப்பிடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா உனக்கு கை காட்டி இருக்கவே மாட்டேனேடா….தவறிப்போய் உனக்கு இப்பிடி கை காட்டினது
பெரிய தப்பா போச்சேடா… கொஞ்சம் விளக்கமா சொல்லு எனக்கு தலை சுத்துது…என்னதாண்டா நடந்தது….’ராஜா குனிந்துகொண்டு தண்டாவுடன் ரகஸிய சம்பாஷனையில் ஈடுபட்டான்..
‘ஐயோ’ என்று அலறினான் பக்கத்து கணேசன்…’பாவி உன் விபரீத விளையாட்டாலே ஒரு உசிர் போச்சே…நீ..உருப்புடுவியா…..’என்று அலறினான்..
ராஜா அவனை…. கவனிக்கவேயில்லை..பேச்சில் மிக கவனமாக இருந்தான்…’ ‘என்னடா இது …என்ன நடக்குது இங்க… பிச்சக்காரனாவது அம்பதாயிரம் இவனுக்குப் பட்டுனு தூக்கி தர்ரதாவது …எல்லாம் சரியான பண்டலா இருக்கே…உலகமே நம்மளை மாதிரி ஊத்தி மெழுகவே ஆரம்பிடுச்சா…நாராயணா பிச்சக்காரன் தந்தது கள்ள நோட்டாயிருக்குமோ..
இந்த நாய் அதுலே போய் சிக்கிட்டானோ. நோட்டுமாத்தர கேஸாயிருக்குமோ… என்றெல்லாம் தணக்குள் புலம்பிக்கொடண்டான் ராஜா ‘
‘நான் இப்பிடி நடக்கும்னு எதிர்பார்க்கவேயில்லே…எல்லாம் அவன் செயல்..நாராயணன் நமக்கருளுவான் சரிதான் ..நாராயணா நீயும் நோட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டியா… வேண்டாம்…… இவனை விட்ரு ..இவனைக் கொஞ்சம் காப்பாத்து..தண்டா கொஞ்சம் நல்லவன்..போலிஸ்லே மாட்டி விட்ராதே…போலிஸ்லே மாட்டி விட்ராதே……கடைசி வார்த்தைகளை நம்ம ஆள் அதான் ராஜாராமன் கொஞ்சம்வெகு சத்தமாக ஆபிஸ் முழுக்க கேட்கிறமாதிரி ஜபித்து தொலைத்து விட்டான்…..போலிஸ்லே மாட்டிவிட்ராதே..நாராயணா இவனை போலிஸ்லே மாட்டி விடராதே…..
ஒரு நூல் கேப்…அதற்குள் -ஒரு அஞ்சு- வினாடியில் எப்படி என்று தெரியாமல் நம்ம தண்டா பிச்சக்காரனைக் கொலை செய்து விட்டான் என்று செய்தி பரவிவிட்டது…அது ரெக்கை கட்டி ‘வைஸ் பிரஸிடண்ட் கௌர்’ ரூம்வரை போய்விட்டது…
ராஜா உலகம் மறந்து எந்த கவனமுமின்றி போன் சம்பாஷனையில் இருந்தான்…பேச்சு முடிந்திருந்தது..
‘சரி..சரி ..உடனே போ….’என்று போனைத்துண்டித்தான் ராஜா.அவனைச்சுற்றி ஒரே கசமுசா… நாலா பக்கத்திலும் ஜனக் கூட்டம்…அவனுக்கு இப்போது நிஜமாகவே தலை சுற்றியது..’ இவனுங்க ஏன் என்னச்சுத்தி இப்பிடி நிக்கறானுங்க…என்ன ஆச்சு .இவனுங்களுக்கு…ஒரு வேளை பேண்ட் ஜிப் போடாம இருக்கேனோ..இல்லையே…’
‘ஏன்டா இப்பிடி நிக்கறீங்க…நம்ம கூட்டம் சாயந்திரம்தான்…அவசரப்படாதீங்க’
‘பாரு ஒன்னும் தெரியாதமாதிரி பேசறான்…மறைக்கிறான் கள்ளன்..’
ஆளுக்கு ஒரு பக்கம் பேசினார்கள்..
‘நீ தண்டாவை அங்க அனுப்பினது மொத தப்பு…தண்டா கோவக்காரன் …ஏன்டா உனக்கு புத்தியேயில்லையாடா…இப்ப அந்த பிச்சைக்காரன் உசிரு அநியாயமாயப் போச்சி …தண்டாவுக்கும் தூக்குதான்….’.
இன்னொருத்தான் குறுக்கே வந்தான் ‘அத உடு…இப்ப நடக்கறதை பேசு கணேசா….’
‘அது சரிதான் இப்ப தண்டா எந்த போலிஸ் ஸ்டேஷன்..போயிருக்கான்…’
‘பாடி எங்க இருக்கு..’
‘எப்பிடி கொன்னான்…’
எல்லோருமாக கேட்க எதுவம் புரியாமல் ராஜா தடுமாறியபோது எப்போதுமில்லாமல் புதுசாய் பின்னாடி நெருப்பு பிடித்த மாதிரி நடு ஹாலுக்கு
திடீரென்று கௌர் வந்தாள்…
‘எல்லாம் ஒதுங்குங்க…என்னமோ இங்கேயே கொலையான மாதிரி கூட்டம் போட்டிருக்கீங்க’ ஏய் ராஜா என்னதான் இங்கே நடக்குது ….நீ சொல்லு..நம்ம ஆபிஸ் வைஸ் பிரசிடெண்ட்டை கொன்னது யாருய்யா…’
‘ஐயோ..நீங்கதானே மேடம் வைஸ் பிரசிடெண்ட் உங்களை யாராவது கொன்னுட்டாங்களா….நீங்கதான் உசிரோட இருக்கீங்களே..’ என்றான் ராஜா
‘தப்பே அதான்யா..மலரு ..பாத்ததுகிட்டிருக்கியே… அவனைக்கேளு..’
‘இருங்க மேடம் இப்பத்தான் எனக்கும் சொன்னாங்க…நான்கொஞ்சம் முன்னே அந்தப்பக்கம் போனேன்…எல்லாம் பேசரதாலே…அவன் புரியாம முழிக்கறான்…. டேய் அந்த பிச்சக்கார வைஸ் பிரசிடெண்ட் இருந்தானே…’
‘நீ என்ன சொல்றே மலரு…இருந்தாருங்கறே ..இப்ப அவரு இல்லையா…’
‘டேய்..டேய்…. அந்த வைஸ்பிரஸிடெண்ட்தான் இப்ப பிச்சக்காரனா இருக்கான்னுனே..நீ சொல்லை…’
‘நானா சொன்னேன் மலரு…’
‘இவன்தான் சொன்னான் …நாங்க எல்லோருமே கேட்டோமே…’கோரஸாய் எல்லோரும் கத்தினார்கள்…
‘அத விடு……நம்ம தண்டா அந்த பிச்சக்காரனைக்கொன்னுட்டானாம் இப்பபுரியுதா.. ..’என்றாள் மலர்..
‘ஐயோ..அவனைக்கொன்னுட்டாங்களா….யார் சொன்னாங்க மலரு தண்டா தான் கொன்னான்னு…… என்றான் ராஜா
‘நீதான் போன்லே சொன்னேயாமே தண்டா கொன்னுட்டான்னு..இவங்க எல்லாமே கேட்டாங்களாமே..’
‘ஆமாம் இவன்சொன்னதை நாங்க கேட்டோமே…’கோரஸாய் எல்லோரும் பேசினார்கள்…
‘அதையும் நானா சொன்னேன்….’ ராஜா பரிதாபமாய்க் கேட்டான்..
‘பின்னே நீ சொல்லாம எங்களுக்கு எப்பிடித் தெரியும்..’ என்று கோரஸாய்
சத்தம் கேட்டது….
கவுர் குறுக்கே வந்தாள்…
‘இரு மலரு என் வீட்டுக்காரரைக் கூப்பிட்டிருக்கேன் ..இவன் உளர்றான் எல்லாரும் கொஞ்ச நேரம் பேசாம இருங்க இதா சர்தார்ஜி வந்தாச்சி ..வாங்கஜி.’
சர்தார்ஜி அங்கே ஆஜர்’..ஆமா.. கவுரு என்ன அவசரம்..இங்கே எதுக்கு
இவ்வளவு கூட்டம்…என்ன ஆச்சு கவுரு..மலரு உன்னை யாராவது கையைப்பிடிச்சு இழுத்துட்டானா சொல்லு வெட்டிடறேன்..என்கிட்ட பெரிய கத்தி இருக்கு…’
’ ஐயோ… சர்தார் தமாஷ் பண்ணாதீங்க……நம்ம ஆபிஸ்காரன் புளிய மரத்தடி பிச்சக்காரனைக் கொன்னுட்டானாம்…’என்றாள் கவுர்…
‘ ஐயோ.அவன் பிச்சக்காரனில்லே..இந்த ஆபிஸ் பழைய வைஸ் ப்ரஸிடெண்ட்… ….என்றான் சர்தார் …
‘நிஜமாவா சர்தார்ஜி …’என்று வியப்புடன் கேட்டான் ராஜா
‘ஏண்டா அரைமணி நேரம் முன்னாலே நீதானே அந்த பிச்சைக்கார்ரை வைஸ் ப்ரஸி டெண்ட்ன்னு சொன்னே ….’என்றார்கள் ஒரே கோரஸாய்..
‘அதையும் நானா சொன்னேன்…’
‘பின்னே கொஞ்ச நேரம் முன்னே நீ சொல்லலை….’கோரஸ் சத்தம்..
“ஆமா இல்லே….என்று பரிதாபமாக ஒத்துக்கொண்டான் ராஜா..அது எனக்கு …ஆன்சனேயர் அருள் இருக்காம் அம்மா சொல்லுவாங்க..சும்மா தமாஷா சொன்னாக்கூட..அந்தப் பொய் நிஜமாயிடுமாம்..அத விடுங்க …வைஸ் பிரஸிடெண்ட் நிஜமா செத்தாருன்னா அவரு பாடி என்னாச்சு….அவரைக் குத்திக்கொன்னாங்களா…வெட்டுனாங்களா..கழுத்த நெரிச்சு.. இல்லே அடிச்சி கொன்னங்களா…இல்லே எரிச்சாங்களா..’என்றான் ராஜா
‘அப்பிடிப்போடு…அத்தை ஜட்ஜ்…அத்தை புருஷன் ஜட்ஜ்…அக்கா எஸ்.பி அக்கா புருஷன்.எஸ்.பி உத்தியோகம் வேண்டாம்னு ஓடிப்போனான்…ரத்தம் இருக்கில்லே…கேள்வி கேக்கறான்…யாருப்பா அந்த பிச்சக்காரனைப்பத்தி கௌர் கிட்ட போட்டுக் குடுத்தது … ‘என்றான் சர்தார்..
‘சர்த்தார்ஜி என்குடும்பம் பத்தி உங்களுக்கு எப்பிடி இவ்வளவு சமாச்சாரம் தெரியும்..’என்றான் ராஜா
‘உன் ரெஷ்யூம்லே உன் சரித்திரிமே இருக்கே …அத உன் ஊட்லே போய்க்கேளு.. ஏம்பா.. பிச்சக்காரன் பாடி எங்க….’
சிவு ஓடி வந்தான்…குரங்கு கிட்ட பாடி இருக்கு…மலரு..புளியமரத்துலேஒரு குரங்கு பேண்ட் போட்டு பாடி போட்டிருக்கு …அது ஆம்பிளைக் குரங்கா..இல்லே பொம்பிளைக் குரங்கான்னு சந்தேகம்..நீ தானே ப்ராஜக்ட் லீட் ..சொல்லு மலரு…’
‘குருடா அங்க நிக்கறது யாருன்னு பாரு….’
‘ஐயோ குரங்கு..மேடம் வணக்கம்…குட் மார்னிங்…குட் ஆப்டர் நூன்….நான் சிவு எனகிற சிவராமன்….மலர் என்னோட ப்ராஜக்ட்…ராஜா என் டீம் லீட்..’
‘மலரு நீதான் அவன் ப்ராஜக்டாம்..தேருவானா..ஆமா அது என்ன குரங்கு
விஷயம் இதான் உன் ப்ராஜக்டா…’என்றாள் கவுர்…
‘இது வேற கதை மேடம்……’
‘ம் ..சரிதான் இங்க வந்தா நிறைய கதை கேக்கலாம்னு சொல்லு…ஏன்யா அங்க வேற பாடி எதாவது பாத்தியா…’
‘ஒரே பாடிதான் அது குரங்குகிட்ட இருக்கு மேடம்….
சர்தார் சத்தம் போட்டு சிரித்தான்.’பேசாம குரங்காட்டியா போயிடு கவுரு…’
‘அது கூட பரவாயில்லை மாதிரி தெரியுது….ஏன்யா …புளியமரத்தடியிலே பரபரப்பு தெரியுதா….’என்றாள் கவுர்
‘ஆமாம் மேடம்…குரங்குங்க எல்லாம் பரபரப்பாத்தான் இருக்கு மேடம்…’
‘ஆஹா.. காலைலே எழுந்திருக்கிறபோதே இந்த மாதிரி குரங்கு விஷயம் எல்லாம் யோசிப்பீங்க இல்லையாய்யா ….’என்று ஆரம்பித்தான் சர்தார்
‘இல்லைஜி….காலைல எழுந்ததும் மொதல்லே தண்டால்…அது மாத்திரம் அவசியம்ன்னு என் பொண்டாட்டி சொல்லியிருக்கா…’ என்றான் சிவு…
‘பல்லு விளக்கிட்டு தண்டாலா…இல்ல அப்புறம் பல்லு விளக்குவியா..’
‘இல்லஜி… சீக்கிரம் எழுந்தா உடனே தண்டால்..லேட்டாகும்னா காபி வச்சு அவளுக்கு தந்துடுவேன்..அவளுக்கு மூடுவந்துடும் அப்புறம் எ ன்ன கஷ்டம்
தண்டால்தான் ..அதுலே தப்பு இல்லியே….’
‘ச்சீ..ச்சீ…ஒரு தப்பும் இல்லே…’
‘ஐயோ சர்தார்..உங்களாளே சும்மாயிருக்கவே முடியாதா..’என்றாள் கவுர்..
‘இதா பாருங்க ….எல்லாம் கேட்டுகுங்க.அந்த பிச்சைக்கார வைஸ் பிரசிடேண்ட் கார்லே ஏறிப்போனதைப் பார்த்த சாட்சி என்கிட்டயே இருக்கு..ஓகேயா.. இந்தப் பூனைத் தின்னி என்னவேனாலும் பேசுவானாம்.. ஊரே திரண்டு இங்க வந்து நிக்குமாம்… என்கிட்ட வேற அத சொல்லுவாங்கலாம்….புத்திசாலிங்கய்யா நீங்க…ஆபிஸுக்கு வந்தா வேலை மாத்திரம் பாருங்க ஓகேவா…”
‘மேடம்..ஒரு சந்தேகம் நான் பூனைத்தின்னின்னு கூட என் ரெஷ்யூம்லே இருக்கா…’ என்றான் ராஜா…..
‘கண்டீப்பா…அதும் இருக்கே… இல்லே சர்த்தார்..’
‘ஆமாம் நான் கூட பார்த்தேன்.. என்றான் சர்தார்ஜி.
‘சர்தார்ஜி… ‘மேடம் மேலெ எனக்கு சந்தேகம்….’’இது நம்ம ராஜா
‘ஐயோ அவ என் பொண்டாட்டி….அவளை நீ எப்பிடி சந்தேகப்படலாம்..’ என்றான் சர்தார்..
‘அதெல்லாம் தெரியாது….அத நான் பார்த்தே ஆகனும்…..’
“எதை அதையா… அத அவ எனக்கு மட்டுமே காட்டுவா….இல்லே கவுர்…அவ எனக்கு மாத்திரமே பொண்டாட்டி… அத மத்தவங்களுக்கு அதக் காட்ட மாட்டா…சரிதானா கவுர்…’
‘ ஆமா….’ என்ற கௌர் திடுக்கிட்டாள்……
‘ஆமா..இருங்க இருங்க.. நீங்க ரெண்டு பேரா பேசினா எப்பிடி.அவன் என்னமோ
பேசறான்..நீங்க என்னோவோ பேசறீங்க.எல்லாம் வேற சிரிக்கறீங்க .நகருங்க
அவங்கவங்க எடத்துக்குப் போங்க என்று உறுமினாள் கவர். ராஜாவிடம் திரும்பி
‘ஏன்யா உன் மூஞ்சி இப்பிடி இருக்கு..உன்னை இருபத்து நாலு மணி நேரம் கவனிக்கறேன் …புரியுதா… ஜாக்கிறதையா இரு…என்று பார்த்துசொல்லிவிட்டு
கௌர் அகல சர்தார் ஆரம்பித்தான்…
‘…யோவ் உன்னை இருபத்தி நாலு மணி நேரம் அவ கவனிச்சா என்னை யாருய்யா கவனிக்கறது..எங்கிருந்தய்யா வர்ரீங்க…’
‘சர்தார் … கோவிச்சுக்காதீங்க…மலர் எதுக்கு இருக்கா …அவ உங்களை அன்போட கவனிச்சுக்குவா ..இல்லே மலரு….’என்றான் ராஜா..
‘இது கூட நல்லா இருக்கே…தேங்க்ஸ்பா…. மலரு…அப்புறம் இதப்பத்தி பேசலாம் …ஓகேவா..வர்ரேன்…’ சர்தார் நகர்ந்தான்….
‘ஏண்டா …ஏலம் போட உனக்கு நான்தானா கெடைச்சேன்..அறுத்து ஐஸ் பாக்ஸ்லே வச்சி சைனாவுக்கு அனுப்பிச்சிருவேன்…ஜாக்றதை….’
மலலரைத் தவிர்த்தான் ராஜா….என் பரம்பரை பெயர் இந்த பஞ்சாபி பொம்பிளைக்கு எப்பிடி தெரிஞ்சது…மலருக்கே தெரியாதே…ம்…ம்…
***
தண்டா சரியாக நாலுமணிக்கு ஆபிஸ் வந்தான்…வழக்ககம் போல சத்தம்…
‘ டேய்…. ராஜா…..மலரு…. ..எல்லாம் இங்க கொஞ்சம் வாங்களேன்
உங்களுக்கு விஷயம் தெரியுமா…நான் பிச்சைக்கானைக் கொன்னுட்டேன்…’..
‘ உன் வால்யூமைக் கொ றைடா மறுபடி கௌர் உங்க வந்தா நம்ம எல்லாரையமே
அவளே கொன்னுடுவா….
‘அ விடு. விஷயம் தெரியுமா நான் பிச்சைக்காரனைக் கொன்னுடேன்..அவன் செத்துட்டான்…ஓ.கே…இப்ப நான் எவ்வளவு ப்ரீ தெரியுமா…..’
‘ஐயோ.. ‘என்று அலறினான் கணேசன்’..இதா பாரு தண்டா..இப்ப நாலு மணி நேரம் முன்னாடி நாங்க எல்லாருமா செத்துப் பொழச்சோம்…நீ பிச்சக்கானைக்கொல்லு… இல்லே நீயும் அவடனோடட சாவு எங்களை விட்டுரு… ஏண்டா வதைக்கறே…மலரு நீயாவது காப்பத்தேன்..உன் கால்லே கூட விழரேன் என்றான் கணேசன்’…டேய் ராஜா பேசித் தொலையேண்டா..மங்குனி மாதிரி சிரிச்சிட்டடே இருந்தா எப்பிடி…அந்த பிச்சைக்காரனை இந்த நாய் கொன்னுட்டேன்னு கவலைப்படாமே தண்ணி குடிக்கற மாதிரி சிரிச்சிட்டேல்ல சொலறான்….என்னதாண்டா நடக்குது..இங்கே……’
தண்டா குறுக்கே வந்தான்…’அவசரப்படாதீங்கடா..இந்த ஆபிஸ்லே ஒரு பிச்சைக்காரன் இருந்தான் அவன் யாரு ..டேய் ரகுபேதி நீ சொல்லேன் …உனக்கு தெரியலை டேய் ..ஒத்த நாத்து நீ சொல்லேன்..புண்ணாக்குபானி நீயாவது சொல்லேன்…’
‘முண்டம் இங்க இருக்கற எல்லாம் கம்ப்யூட்டர் என்ஜிலனயருங்க..எவனும் பிச்சைக்ககாரனில்லே….புடிச்சி கடிச்சிடுவேன் .என்றான் ரகுபதி…+
‘ அங்கதான் தப்பு பன்றீங்க ..கம்ப்யூட்டர் என்ஜினியர்லே பிச்சக்ககாரன் இருக்கான் …பிச்சக்காரன்லே கம்ப்யூட்டர் எனஜினியரும் இருக்கான்….என்ன நான் சொல்றது.. ‘
‘ இவன் கஞ்சா அடிச்சிட்டு வந்திக்காண்டா…மயக்கத்திலே இருக்கான்..’
‘இல்லே மகனே நான்தெளிவா இருக்கேன் ..அதும் இப்பத்தான் பாரு ..பிச்சைக்காரன்லே கம்ப்யூட்டர் என்ஜினியர் யாரு ..புரியலையா…இரு ..அடிக்கவராதே..சொல்லலிடறேன் பிச்சக்கான்லே கம்ப்யூட்டர் எனஜினியர் அந்தப் புளிய மரத்தடியிலே இருக்காரு அவரு }ஞானி ..சரியா…அப்புறம் எனஜினியர்லே பல பிச்சைக்காரன் இருப்பான் அதுல ஒருத்தரை சொல்லுங்க பார்ப்போம்.அதான் .உங்களுக்கு தெரியாது…’
‘சூப்பர்டா தண்டா கொண்ணுட்டேடா…என்றான் ராஜா…மலரு பையன் சொலறது உனக்குப் புரியுதா..’
‘ ஒரு பைத்தியம் பேசுனா இன்னொன்னுக்குத்தான் புரியும் …என்றான் ரகுபேதி..
‘ராஜா புத்திசாலிஅவன் பரிஞ்சிட்டான்…நம்மகிட்ட இஉருக்கற .கம்ப்யூட்டர் என்ஜினியர்லே பிச்சைக்காரன் ஒருத்தன் இருக்கான் ..அது யாரு…அதுயாரு ‘
அது யாரு…. ஆபிஸ் முழுக்க தண்டபாணி சத்தமே எதிரொலித்தது…..
‘அடுத்த டைம் இன்னொரு கேள்வி கேட்டா உன்னைக் கத்தியாலே மவனே குத்துயே சாகடிப்பேன்…’
சாந்தம்…சாந்தம்…பிராண ஹத்தி கூடாது..ஆனா இப்பபிடி சித்தரவதை பன்னுகிரவனை அடிச்சே கொல்லலாம்னு கருட புராணம் சொல்லுது…என்றான் ரகுபேதி…
‘சரி இம்சை பன்னாம சொல்லிடறேன்…நம்ம என்ஜினியர் மத்தியிலே பிச்சக்காரன் ஒருத்தன் இருக்கான் ..அவன் யாரு தெரியுமா….அவன் பேரு யாருக்காவது தெரியுமா…’
‘நற நற’ வென்ற சத்தம் கேட்க தண்டா உஷாரானான் …பொருமை ..பொருமை.
‘பொறுமை.. ….நானே சொல்லிடறேன் சொல்லிடறேன்..அந்த பிச்சைக்காரன் பேரு த..ண்..ட..பா…னி….தண்டபானி…கரெக்டா..எனக்குள்ளேதான் மோசமான. ஒரு பிச்சைக்காரன் இருந்தான் நான் சொல்றது சரியா… .என்றான் தண்டா
‘அடப்பாவி ..இதச்சொல்ல இவ்வளவு இழுப்பா..நீ மாத்தரம் ஒரு காலேஜ் வாத்தியானா இருந்தா உன்னைப்படுக்க வச்சி அறுத்து அத தூக்ககுலே போடுவானுங்டா..என்றான் ஒத்த நாத்து என்கிற வைத்தியநாதன்….ஆமா அப்ப உனக்குல்லே இருக்கற ..அந்தப் பிச்சக்காரனை ஏன் கொன்னே எதுக்கு கொன்னே எப்பிடிக் கொன்னே….
‘சரியான கேள்வி கேட்டீங்க ..மொறக்காதீங்க நானே சொல்லிடறேன்…ராஜா சொன்ன மாதிரி புளிய மரத்ததடிக்ககு போய் அந்த ஞானியைப் பார்த்து நான் யாரு எனக்கெதுக்கு பணம்னு நிஜம் சொல்லி பணம் கேட்டேன்… அவரு ஒன்னும் பேசலைடா..அம்பதாயிரம் எடுத்து முன்னலே வைக்கிறாரு…அப்புறம் ஒரு பத்தாயிரம் தனியே எடுத்து வச்சி .’.பாருப்பா..இந்த. அம்பதா….யிரத்த உன் இஷ்டப்பபடி செலவி செஞ்சிகோ…ஆனா முதல்லே இந்தப் பத்தாயிரத்தை நான் சொல்ற மாதிரி செலவு பண்ணனும்…சரியா.. …அத நீ எனக்குத் திருப்பித் தர வேண்டியதில்லேன்னு கண்டிஷன் போடறார் நம்ம நேரத்த பார்ரா..இந்த ஆள் பிச்சைக்கான்னு நெனைச்சா பைத்தியக்காரனா வேற இருக்கானேன்னு நினைக்கறேன்… சரிங்கய்யா….இந்த .பத்தாயிரத்தை நீங்க சொல்றபடி செலவு பண்ண நான் தயார்னு சத்தியம் பன்றேன்…அத எப்பிடி செலவு பண்ணனும்னு அவரு சோல்றாரு…சொன்னா நம்பவே மாட்டீங்க…பத்தாயிரத்தை எப்பிடி செலவு பண்ணச் சொன்னாரு தெரியுமா…பாரு இதுக்கல்லாம் அடிக்ககூடாது ……
‘எப்பிடிடா செலவு பண்ணச்சொன்னாரு…சொல்லு தாக்கிடுவேன தாக்கி’ என்றுகையை ஓங்கினான் கணேசன்
‘அங்க தான்டா ஒரு ஞானி ஒளிஞ்சிருந்தான்..எங்கம்மாவுக்கும் என் சம்சாரத்துக்கும் ஆளுக்கு மூனு புடவை எடுத்துக்க சொலுறாரு .நாலு பிளேட் பிரியாணி ஸ்வீட் எல்லாம் வாங்கிக்கோ…அவங்க புடவை கட்டி சாப்பிட வச்சி நீ அதை பார்க்கனும் அப்பிடிங்கறார்..எப்பிடி..புள்ளைகளுக்கும் ட்ரஸ் எடுத்து குடு
அதுக்கு அப்புறம் நீ இந்தப் பணம் அம்பதாயிரத்தை உன் இஷ்டப்படி செலவு செய்யலாம்ங்கறார்…நான் சரின்னு ஏத்துகிட்டு அதே மாதிரி.. அதே மாதிரி செய்யறேன்…’
‘கதை மாதிரி இருக்குல்ல…என்றான் சீனு…மேல சொல்லு…’
‘அப்பிடிதான் இருக்கு… என்ன சொலறது.. புடவை பிரியாணி ஸ்வீட் இதெல்லாம் பார்த்ததும் ..எங்கம்மாவுக்கும் அவளுக்கும் சந்தோஷம் தாங்கலை அழுதுட்டே அள்ளி அள்ளி சாப்பிடறாங்க..அப்ப அம்மா கேட்டாங்க இதுக்கல்லாம் ஏதுப்பா பணம்னு..திக்குங்குது திங்கற சோறு எப்பிடி வந்ததுன்னா மாத்திரம் பொய் சொல்லக் கூடாதுன்னு அப்பா சொல்லலுவாரு அம்மா கிட்ட வெலாவரியா நடந்த்தை சொல்றேண்டா.. அம்மா அப்பிடியே திங்கறதை நிறுத்தி கையை உதறி எழுந்திட்டாங்கடா ..என் சமசாரமும் சாப்பிடறதை நிறத்திட்டா…அம்மா சொல்றாங்க…உசிரைக்கடுத்து உழைச்சு உங்காம திங்காம உன்னைப்படிக்க வச்சோம் ..எனஜினியர் ஆக்குனோம் ..பிச்சை மாத்திரம் எடுக்கலைன்னு சந்தோஷப் பட்டிருக்கோம்பா …இப்ப உன் மூலமா அதும் நடந்துடிச்சி,,ரொம்ப சந்தோஷம்ப்பான்னு சொல்லிட்டு என் எதிர்லேயே புடவை மாத்தறாவ்கடா அப்ப ஒரு நொடியிலே நான் செத்துட்டேன்டா..அப்பிடியே அவங்க கால்லே விழறேன் …என்னை மன்னிக்கச் சொல்றேன்…இனிமே ஜன்மத்திலும் யார்கிட்டயும் பிச்சைக்காரன் மாதிரி நிக்க மாட்டேன்னு சத்தியம் பன்றேன்…நான் அப்பவே செத்துட்டன்டா பழய பிச்சக்கார தடண்டா அப்ப செத்துட்டான்டா நான் பாவிடா.. கடவுள் கூட என்னை மன்னிக்க மாட்டான் பெத்தவளையும் கட்டினவளையும் பிச்சைக் காரங்களாக்கின படுபாவி… என்று தன்னை இழந்து நடு ஆபிஸில் ‘ஓ’ ‘ என்று அழது பரிதாபமாய் நின்ற தண்டாவை ஒடிவந்த அணைத்ததுக்கொண்டாள் மலர்….
‘…ச்சூ..ச்சூ..என்ன இது குழந்தையா நீ.. ஆம்பிளை அழக்கூடாது…அதான் எல்லாம் சரியாப்போச்சில்லே….இனிமே எங்க தண்டா ஒரு ராஜ குமாரன் சரியா…..நீ கனவிலே கூட பிச்சைக்காரன் கிடையாது…ஒ.கேயா…’டேய் தண்டாவுக்கு எல்லாமா சேர்ந்து ஒரு’ ஓ ‘போடுங்க….
.ஓ’ என்று சத்தம் எழுந்தது…..
சனியனுங்க எத்தனை திட்டினாலும் அடங்காத நாய்ங்க ..’.என அலுத்துக்கொண்டாள் கௌர்…
+++ ++++++++++ ++++++++++++ +++++++++++++
‘டேய் கணேசா …..ஆறு மணிக்கு கார் பார்க்கிங்லே நம்ம மகா சபை கூடனும்…ஓகே…ரெண்டு நாள் மீட்டிங் எல்லாம் டபுள் எக்ஸ் சப்ஜெக்ட்…கேட்டா தூங்க மாட்டீங்க…’
‘வைஸ் பிரசிடெண்டு அங்க வந்துட்டா….’
‘அவங்க வயசுக்கு வந்துட்டாங்களா…என்றான் ராஜா
‘அதெல்லாம் எனக்கு எப்பிடித்தெரியம்…’. என்றான் கணேசன்
‘வயசுக்கு வந்த பொம்பிளைக்கு என் கூட்டத்திலே அனுமதி கெடையாது..
வயசுக்கு வந்த வரப்போற ஆண்பிள்ளை..வயசானவன்..கல்யானமானவன்
பொன்னு பார்த்தே பொழுதைக் கழிக்கிற தியாகராஜன் மாதிரி பதினெட்டுல
பாதி….’
‘செருப்பால அடிப்பேன்….’
சரிடா …நீயும் வரலாம்…கோவிச்சுக்காதே …அப்புறம் மாமா காதுலே போட்ராதீங்க..பறந்தடிச்சு வந்துருவாரு.. மலருக்கு தப்பியும் சொல்லிடாதீங்க ..பாரு என்னையே ..கவனிக்கறா..ம் ..என்ன செய்யறது..அவ வயசுக்கு வந்துட்டாளே…அவளுக்கு நோ அட்மிஷன்…
‘அவ வயசுக்கு வந்தான்னு உனக்குஎப்பிடித் தெரியும்…’
‘அவளே சொன்னாளே…அவ இருபது வயசானப்புறம்தான் வயசுக்கே வந்தாளாம்…’
‘ஐய்யயோ மலருக்கு அவ்வளவு தள்ளிப்போச்சா…’ என்றான் கணேசன்…அவன் போட்ட சத்தத்தில் தன் இடத்தை விட்டு எழுந்து வந்தாள் மலர்…..
‘என்னடா தள்ளிப் போச்சாம்..என்னடா என்னைப்பத்தி குசு குசு…. ‘
அது ஒன்னுமில்லே மலரு…உனக்கு ஒரு வருஷம் தள்ளி வேலை கெடச்சது பத்தி சொன்னேன்…இல்லே கணேசா…’
‘ஆமா ….ஆமா அதுதான் சொன்னான்… ‘
‘டேய்..எவனாவது என்னப்பத்தி ஏதாவது பேசினதா தெரிஞ்சது..ஆபிஸ்லே மட்டுமில்லே மொத்த கதையே முடிச்சுடுவேன்…அடங்குங்கடா…’
‘டேயப்பா …ஆமாம் சொல்லி காப்பாத்தினே..இல்லே நான் சுக்கா வருவல்தான்..கொன்னேயிருப்பா….அவளுக்கு தள்ளிப்போச்சுன்னு சொன்னா எனக்கு கொள்ளியே போட்டிருப்பா..தப்பிச்சேண்டா சாமி..என்றான் ராஜா…’
சிவு திடுக்கென்று ஒடி வந்தான்…’.எதப்பத்தி மீட்டிங்…டாபிக் என்னடா ராஜா…’
‘சிக்குனடா மவனே…’என்று முணகினான் ‘ராஜா..நீ பெண்டாட்டி கிட்ட அடி வாங்க நான் காரணமாக எனக்குப் பிரியமில்லே… நீ மாத்திரம் வேண்டாம்..’
‘என் பெண்டாடி என்னை அடிப்பா ஒதைப்பா அது என் சொந்த விஷயம்…உன் டாபிக்கை சொல்லுடா…’
..எனக்கென்ன…குறிச்சுக்கோ…கபாலம்..புண்டரீகம்..நேத்ரம் அதரம் ..உதரம் யோனி .கஷ்கம் ஸதனம்….அப்புறம் ஜான் ஜோசியம்… டயர் ஜோசியம் …மயிரொழுங்கு..பாலப்பிரவியா..ஸ்வாதகது… இவங்க உரை இப்பிடி நிறைய சமாச்சாரம்… பாரு .. மாமாகிட்ட உளறி வைக்காதே,,,மலர் கிட்ட மூச்சுவிடாத…’
‘சரி சரி..… நெறய சமாச்சாரம் வரும் போல தெரியுதே ‘ என சிவு நகர ராஜா வுக்குத் திருப்தி ‘ அப்பா ஆபிஸ் பூரா பரவிடும்….’.
( அடுத்த தொடரில் அனேகமாக கௌர் ரவிக்கை போடலாம்…ஆகவே )
( கதை தொடரும்…… ஆனாலும் தொடர்ஆனா கதையில்லை)