ரப்பர் பை
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 61
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காற்று அடைக்கிற ரப்பர் பையைக் காற்று அடைக்காமல் தண்ணீரில் போட்டால் அமிழ்ந்து போகும். ஆனால் அதே ரப்பர் பையை காற்று அடைத் துத் தண்ணீரில் போட்டால் மிதக்கும்
அப்படியே நம் இதயமானது பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தால் பாவத்தை மேற்கொள்ளவும் உலகக் காரியங்களில் சிக்கி அமிழாமல் மிதக்கவும் கூடும்.
ஆதித்திருச்சபையில் தூயஆவியின் வல்லமையைப் பெற்றவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்கள். பரிசுத்த ஆவியைப் பெற்ற பேதுரு பிறவிச் சப்பாணியைத் துள்ளி நடக்கச் செயதார்.
மின்சக்திவரும் மின்சாரக் கம்பியைத் தொட்டுக் கொண்டிருக்கும் வரைதான் மின்சார ரயில் ஓடிக் கொண்டிருக்கும். அவ்வாறே ஜெபத்தின் மூலம் கடவு ளோடு உறவு கொண்டிருக்கிறவர்கள் யார் யாரோ அவர்களுக்கு வல்லமை வந்து கொண்டேயிருக்கும்.
தூய ஆவி உங்கள் மேல் வரும்போது வல்லமை யைப் பெறுவீர்கள்.
“அவன் மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால்’ அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம் பண்ணப் புறப்பட்டான்.” [நியாயாதிபதிகள் 3:10]
“நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்.” [அப்போஸ்தலர் 10:38]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
