மேலானவைகளையே தேடுங்கள்!
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 75
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாத்திரங்களிலுள்ள தண்ணீரில் ஈக்களும் தங்கள் உடலை நனைத்துக் குளிக்கின்றன. இறக்கைகள் இரண்டும் மேலேதான் இருக்கின்றன. தண்ணீரில் இறக்கைகள் நனைந்தால் பறக்க முடியாதென்ற சுய அறிவால் தூண்டப்பட்டு அவ்வாறு செய்கின்றன. தேவனுடைய பிள்ளைகளுக்கும் துக்கம், துன்பம், கவலை, கஷ்டம் இருக்கலாம்; ஆயினும் அன்பு ஆழமான விசு வாசம் ஆகிய ஆத்தும இறக்கைகளைக் கொண்டிருந் தால் துன்ப துயரங்களை உதறித்தள்ளி விட்டு மேலே பறக்கலாம்.
பறவைகள் பறந்து செல்கையில் துப்பாக்கி வேட் டைக்காரர்கள் அதனைச் சுடுவது கடினம். அப்படியே நம் மனமானது மேல் நோக்கியே பறந்து செல்கையில், வேதனைகளும், சோதனைகளும் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது.
“உயரத்திலிருந்து கர்த்தர் கைநீட்டி, என்னைப்பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்”. [சங்கீதம் 18:16]
”நீங்கள் கிறிஸ்துவுடனேகூட எழுந்ததுண்டானால் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்”. [கொலோசெயர் 3:1]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
