மூன்றுதரம் உயிர்த்தெழுந்தார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 170 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது ஒரு கிராமக் கிறித்தவ சபை. அன்று உயிர்த் தெழுதல் பண்டிகை. இந்நாட்களில்தான் இப்பகுதியில் அறுவடைக் காலமாதலால் உயிர்த்தெழுந்த பண்டிகை மிகுந்த உற்சாகமாக இருக்கும்.

வாணவேடிக்கைகளும், கழியல் ஆட்டங்களும், கதாகாலட்சேபங்களும், நாடகக் கூத்துக்களும் வெகு விமரிசையாக நடைபெறும்.

ஈஸ்டர் ஆராதனை ஆரம்பமானது.

“கர்த்தர் உயிர்த்தெழுந்தார்” என்ற பாடலைப் பாடும்படி குருவானவர் சொன்னார்.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இராகங்களில் காட்டுக் கூச்சல் எழுப்பினார்கள்.

அலைகளையும் விஞ்சி பெரு குரல் கணீரென்று வெடித்தது.

மக்கள் யாவரும் உற்றுக் கவனித்தனர். “கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – மூன்று தரம் கர்த்தர் உயிர்த்தெழுந்தார்” என்று ஒரு சிறுவன் மிகுந்த உற்சாகமாகப் பாடினான்.

‘மூன்று தரம்’ என்பது தனிக்குரலாக ஓங்காரமாக ஒலித்தது.

ஒரே சிரிப்பொலி; சிறுவன் யார் என்ற வினாக்குறி?

ஆராதனை முடிந்த பிறகுதான் செய்தி விளங்கியது. “கர்த்தர் உயிர்த்தெழுந்தார்” என்ற பாடல் வரியை அடுத்து அடைப்புக்குறிக்குள் “மூன்று தரம்” என்று போடப்பட்டிருக்கிறது. கர்த்தர் உயிர்த்தெழுந்தார் என்று மூன்று தரம் பாடவேண்டும் என்ற பொருள் தெரியாத சிறுவன் அப்படிக் கத்தினான்.

இன்று ஆலய ஆராதனைகளில் அநேகர் பொருள் தெரியாமலே பாடுகின்றனர் அல்லது கூப்பாடு போடுகின்றனர்.

இறை வழிபாடும்கூட அவ்வித அர்த்தமற்றதாகவே இருக்கிறது.

“அந்நாளிலே தேவாலயப் பாட்டுகள் அலறுதலாக மாறும்.” – [ஆமோஸ் 8:3]

– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *