முற்றுகையும் வெற்றியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 62 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆஸ்ட்ரியா யுத்த ஆயத்தம் எதுவும் செய்யா திருக்கும் வேளையில், திடீரென்று பிரான்ஸ் தேசத்து மன்னன் நெப்போலியன் 18000 பேர்களைக்கொண்ட ஒரு சேனையை ஒரு கமாண்டர் கையில் ஒப்புவித்து ஆஸ்ட்ரியா தேசத்தை முற்றுகை போடும்படி கட்டளை யிட்டான்.

கட்டளைப்படி முற்றுகை போடப்பட்டது.

அன்று ஈஸ்டர் ஞாயிறு. காலை ஏழு மணிக்கு முற்றுகை போடப்பட்டது.

ஆஸ்ட்ரியா நாட்டுப் பேரரசர் இதையறிந்து பேராயரிடம் போய் ஆலோசனை கேட்டார்.

ஆலயங்களில் மணியடித்து ஈஸ்டர் ஆராதனை நடக்கட்டும். ஆராதனை முடிவில் ஆலோசிப்போம் என்று பேராயர் கூறவே மணி அடிக்கப்பட்டு ஆராதனை நடந்தது.

ஆஸ்ட்ரியா தலைநகர் முழுவதும் மணிச் சத்தம் கேட்டவுடன். ‘நபமை எதிர்க்க மணியடித்து சேனை யைத் திரட்டுகிறார்கள். நாம் அவர்களை எதிர்த்துப் போராட முடியாது’ எனக்கண்ட கமாண்டர் தன் சேனையை பிரான்ஸ் தேசத்துக்குத் திருப்பிவிட்டான்.

ஆஸ்ட்ரியா தேசத்து மக்கள் மீண்டும் ஆலய மணி யடித்துத் துதி தோத்திர ஆராதனை நடத்தினார்கள்.

ஆண்டவருடைய பிள்ளைகளிடத்திலும் இப்படி நடக்கிறதில்லையா?

“குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்”. [நீதிமொழிகள் 21:31]

“தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு இயேசு வந்து தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து வாசிக்க எழுந்து நின்றார்”. [லூக்கா 4:16]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *