கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2026
பார்வையிட்டோர்: 200 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா வந்திருக்கார்” காத்துக் கொண்டு நின்ற மதுமிதா சுசிந்தர் ஸ்கூட்டரை விட்டு இறங்கும்போதே மகிழ்ச்சியோடு அறிவித்தான்.

இறங்கி உள்ளே நுழைந்தவன்–

“வாங்க” மாமியாரை வரவேற்றன்.

அபிராமி அவனுக்கு மரியாதை காட்டும் வகையில் அடுக்களை வாசலில் பாதி மறைத்தும் மறையாததுமாய் நின்று கொண்டிருந்தாள்.

கூடை மாற்றிக் கொண்டு வந்து ஓய்வாகக் கூடை நாற்காலியில் சாய்த்து கொண்ட சுசிந்தர் கேட்டான் “நன்னா இருக்கேளா, தாமுவும் பைரவியும் சௌக்கியம் தானே?”

‘உம்…உம்… அவாளுக்கு என்ன சௌக்கியமாத்தான் இருக்கா!”

பதில் ஒரு விதமாக வரவும் சுசிந்தர் மனைவியையும் மாமியாரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

இதற்குள் அவனுக்கு மிகவும் பிடித்த, நாகூர் அல்வா, உப்பு பிஸ்கட் இரண்டையும் ஒரு தட்டில் கொண்டு வந்து மதுமிதா அவன் எதிரில் வைத்தாள்.

அபிராமி எப்போது வந்தாலும் அவனுக்கென்று அவைகளை வாங்கி வரத் தவறுவதில்லை. கல்யாணமான புதிதில் ஒருமுறை நாகபட்டினம் மாமனார் வீட்டுக்குச் சென்றிருந்த போது அவசரத்திற்காகக் கடையில் வாங்கி வந்து அவைகசே வைத்ததைச் சாப்பிட்டுமிட்டு ஓகோ என்று இவன் புகழ்ந்தான், இன்றைக்கும் அபிராமி மறக்காமல் எப்போது வந்தாலும் அரைக் கிலோ அல்வாவும் கால் கிலோ உப்புப் பிஸ்கட்டோடும் தான் வருவாள்.

“என்ன மது உங்க அம்மா பதில் ஒரு மாதிரியா வருது?” தன்னிடம் அவள் நெருங்கிய போது இவன் கேட்க-

“சாப்பிடுங்கோ. அப்புரம் சாவகாசமா விசாரிச்சுக்கலாம்” மெல்லிய குரலில் அவள் அவன் வாய்க்குப் பிளாஸ்திரி போட்டாள்.

இரவு-

“அம்மா கோவிச்சுக்கிட்டு வந்திருக்கா.”

“ஓ!”

”மாட்டுப் பெண் மதிக்கிறதேயில்லை யாம். தாமோதரனும் அவ இஷ்டப்படிதான்

“சரி, அதற்காகப் புறப்பட்டு வந்துடதா? இங்கே எத்தனை நாளைக்குத் தான் இருந்துட முடியும்?”

மதுமிதா அந்த இருட்டிலும் அவனைக் கோபமாகப் பார்த்தாள், கேட்டாள் –

“ஏன்? எத்தனை நாள் இருந்தால் என்ன?”

சுசிந்தர் இதமாகவே சொன்னான்.

“அசடே! இருச்கிறதைப் பத்தி ஒண்ணுமில்லை. சின்னஞ் சிறுசுகள் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும், அதை விட்டு விட்டுத் தன் வீடு தன் வாசல்ங்கறதை மறந்து இப்படிப் புறப்பட்டு வரத் தொடங்கினா அவாளுக்கு இடம் கொடுத்துப் போயிடும். இவ இல்லாமலே சமானிச்சுக்கலாம்கற தைரியம் ஏற்பட்டு அந்தத் தனிமைச் சுதந்திரத்தில் அப்புறம் இவளை ஓர் அந்திய மனுஷியாவே நினைச்சு ஒதுக்கிடச் சொல்லும்!”.

“எங்கே இருந்து சமாளிக்கிறது. கைக்குழந்தையையும் வச்சுக்கிட்டு வேலைக்காரியும் இல்லாம அவ எத்தனை நாள் சமாளிக்க முடியும்? இன்னும் கொஞ்ச நாளில் தானா வந்து அம்மாக் காலில் விழுத்து அவ அழைச்சிட்டுப் போறாளா இல்லையா பாருங்கோ”.

“தப்பாச் சொல்றே மது. குழந்தை அவளோடது மட்டுமா? உன் அம்மாவுக்கும் அது பேரக் குழந்தை இல்லை? அந்த ஐந்தாறு மாதக் குழந்தைக்கு ஒரு கஷ்டம்னு வந்தா அது உன் அம்மாவுக்குச் சந்தோஷம் தரக் கூடிய விஷயம்னு நினைக்கிறியா? பாவம் அந்தக் குழந்தையைக் குளிப்பாட்ட, மருந்து புகட்ட உடம்புக்கு ஒண்ணு வந்துட்டா தைரியமாப் பக்கத்தில் இருந்து பார்த்துக்க கொள்ள உங்க அம்மா அங்கே இருக்கிறது தான் நல்லது. பெரியவங்கள்னு ஒருத்தர் இல்லாமக் கஷ்டப்படறது வேறே. ஆனா இருந்தும் ஒருத்தருக்கொருத்தர் இந்த மாதிரி வீம்பினால் சிரமப்படறது இரு தரப்புக்கும் நல்லதல்ல. கெளரவமுமில்லே”.

“அதற்காக?”

“என் யோசனை என்னன்னு கேட்டா இன்னும் இரண்டொரு நாள் கழிச்சு நீயே உன் அம்மாவை உன் தம்பி கிட்டே அழைச்சிக்கிட்டுப் போய் அவன் சம்சாரத்துக்கும் அவனுக்கும் நல்ல புத்தி சொல்லிச் சமாதானப்படுத்தி விட்டுட்டு வந்துடு.”

“அதாவது எங்கம்மாவை அலங்க காலில் போய் விழச் சொல்றேள். அப்படி ஒண்ணும் அவசியமில்லை. உங்களுக்கு அவளுக்குச் சோறு போடறது கஷ்டமாத் தெரிஞ்சா சொல்லிடுங்கோ, இப்பவே அவரைப் போகச் சொல்லிடறேன். பொண்ணு வீடாச்சேன்னு உரிமையோட வந்திருக்கா. இப்படின்னு தெரிஞ்சா எட்டிக் கூடப் பார்க்கமாட்டா, அவளுக்கும் வேற இடம் இல்லைங்கிறதனால தானே நீங்களும் இவ்வளவு அலட்சியமாப் பேசறேள். அவ மானஸ்தி, உங்க பிச்சைச் சோத்தை எதிர்பார்த்து இங்கே ஒண்ணுன் வந்து நிக்கலை”.

இதுவரை அவள் கண்களில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் இப்போது கன்னங்களில் வழியத் தொடங்கவும் சுசிந்தர் நிஜமாகக் கலங்கிப் போனான். இந்தச் சமயத்தில் தான் என்ன சொன்னாலும் எடு படாது என்பதை உணர்ந்து மேலும் பேச்சைத் தொடராது விட்டு விட்டான்.

வழக்கம் போல் நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்க-

அபிராமியும் மதுமிதாவும் மட்டும் ஒவ்வொரு நாளையும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பிலும் ஏமாற்றத்திலுமாகக் கடத்திக் கொண்டு வருவது தெரிகிறது. தாளுக்கு நாள் அவர்களது இந்த அமைதியின்மை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது.

சுசிந்தர் எதையும் கண்டு கொள்வதில்லை.

ஒருசில சமயங்களில் மதுமிதா அவள் தம்பியைப் பற்றியும் அவன் மனைவி பைரவியைப் பற்றியும் ஏதாவது பேசத் தொடங்கினால் கூடக் காதில் வாங்கிக்கொள்வதில்லை. அதே சமயத்தில் அபிராமி அங்கிருப்பதில் தனக்கு எத்தச் சுமையும் இல்லை என்பது போலவும் நடந்து கொண்டான்.

ஆயிற்று, அபிராமியும் அங்கு வந்து ஓன்றரை மாதம் ஓடி விட்டது.

தாய் மகள் இருவருமே ஒருவித ஏமாற்ற உணர்வை ஜீரணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது தெரிகிறது.

இப்போதெல்லாம் மதுமிதா காரணம் இன்றி சுசிந்தர் மேல் கோபப்படத் தொடங்கினாள். அவனது வழக்கமான நடைமுறை கூடக் குறைகள் சொன்னாள். எதையும் கவனிப்பதில்லை. எதிதும் பட்டுக்கொள்வதில்லை என்று குற்றம் சாட்டினாள்.

சுசிந்தர் மனத்துக்குள் சிரித்துக்கொண்டான்.

மதுமிதாவின் தாழ்வு மனப்பான்மையைக் கண்டு அவனுக்கு அவளிடம் உண்மையிலேயே ஒரு அனுதாபம் தொடங்கிவிட்டிருந்த சமயத்தில் தான்-

ஒரு நாள்-

“அம்மா ஊருக்குப் போகணும்கறா!”

“ஊருக்கா… எந்த ஊருக்கு?”.

“….”

“சொல்லேன், எந்த ஊருக்கு?”

“தம்பி வீட்டுக்குத்தான்.”

“மானஸ்தி அங்கே ஏன் போறா?”

“அவளைப் பார்க்க யார் போறா. பேத்தி வகுளாவைப் பிரிஞ்சிருக்கிறது கஷ்டமாய் இருக்காம், ராத்திரி என்னென்னவோ அவளைப் பத்திக் கனவெல்லாம் கண்டாளாம். போறேங்கறா”.

”ரொம்பச் சந்தோஷம். அவ வீட்டுக்கு அவ போறதை யார் தடை பண்ண முடியும்”

“உங்களுக்கு நிம்மதி தானே!”

“என்ன சொல்றே நீ?”

“இல்லையா பின்னே? என் அம்மா இங்கே இருக்கிறது சுமைங்கிற மாதிரித்தானே அன்னிக்குப் பேசினேள்?”

அவனுக்கு உண்மையாகக் கோபம் வந்தது.

“அறிவில்லாம பேசாதே, அன்னிக்கு உன்கிட்ட நான் எடுத்துச் சொன்னது நியாயம். என்னிக்கும் நியாயத்தை ஏத்துக்கவும் ஒரு தைரியம் வேணும், குத்தம் யார் மேலே இருந்தாலும் குடும்பம் ஒண்ணுங்கிற எண்ணம். மாமியார் மருமகள் இரண்டு பேருக்குமே எல்லாக் குடும்பத்திலும் இருக்கணும். அதில்லாமல் இவளோ அவளோ யார் கோவிச்சுக்கிட்டு எங்கே போனாலும் பத்து நாள் கௌரவம் தான். அப்புறம் மேயப் போன மாதிரி வீட்டுக்குந்தான் திரும்பி ஆகணும். அன்னிக்கு இதைச் சொன்ன போது உனக்குக் கஷ்டமாகத் தெரிந்தது. இப்போ அனுபவப்பட்டு உணரச்சே அந்த உண்மையை ஏத்துக்கத் தைரியம் இல்லாமே அதன் இயலாமையையும் கோபத்தையும் என்கிட்ட காட்டிப் பேசறே. இன்னும் சொல்லப் போனா….” மேலும் ஏதோ பேசத் தொடங்கியவன் அதோடு நிறுத்திக்கொண்டு விட்டான்.

மறுநாள்-

“ஸ்டேஷனுக்குப் போக வண்டி சோல்லி இருக்கேளா?” மது கேட்க,

“இதோ வத்துடும்” – சுசிந்தர் பதில் சொன்னான்.

அபிராமி புறப்பட்டு விட்டாள்.

நெய்யில் செய்த அதிரசம் (தாமோதரனுக்கு மிகவும் பிடிக்கும்) ரவா கோதுமை உருண்டைகள். ஏழெட்டுத் தேங்காய் கொஞ்சம் மாங்காய் வற்றல் வடாம் ஊறுகாய் வகைகள் எல்லாம் பக்குவமாய்ப் பாச்சல் செய்து அபிராமியிடம் கொடுத்திருந்தாள் மதுமிதா.

வாசலில் வண்டிச் சத்தம்.

“போயிட்டு வரேன்.”

அபிராமி சொல்விக் கொண்டு கிளம்பிய போது சுசீந்தருக்கே என்னலோ போல்தான் இருந்தது.

“எல்லாம் சரியாப் போவிடும். போய்க் கடிதாசு போடுங்கோ, வகுளாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க.”

அவள் கண்னிரோடு தலையசைத்துவிட்டுப் புறப்பட்ட அதே சமயம்-

ரேழியில் யாரோ நுழைந்து வரும் காலடி ஓசை.

அடுத்த நிமிடம்-

அங்கே தாமோதரன், பைரவி கையில் வருளாவுடன்!

“வா தாமு, வா பைரவி” – சுசிந்தர் வரவேற்றான்.

மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் அபிராமி பாய்ந்து சென்று வகுளாவைத் தூக்கிக் கொண்டாள்.

“வாடாப்பா, இப்போத்தான் வழி தோனிச்சோ” – மது தன் ஆத்திரத்தை எல்லாம் தம்பி மேல் பொழிய-

”என்னை ஏன் கோபிக்கிறே மது, இதோ இவளைக் கேள், பெரிவங்க தயவில்லாம தானே சர்வாதிகாரியா விளங்கணும்னு நினைச்சா, அம்மாவை மதிக்கிறதே இல்லை, எதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டி, அம்மா வருத்தத்தோடு புறப்பட்டபோது கூட அதனால் தான் நான் தடை பபண்ணலை. அடுத்த இரண்டு நாளைக்கெல்லாம் என்ன கவனமின்மையோ வகுளாவுக்குக் காய்ச்சல். டாக்டர் மருந்து. மாத்திரைகள் ஒரு வாரம் தூக்கமில்லை. கொஞ்சம் அவளுக்கு உடம்பு சரியானதும் இவ படுத்துட்டா. கவனிக்கக் கூட ஆள் இல்லை. எப்படியோ தேறி எழுந்ததும் என்னை மீறி ஒரு நாள் சண்டை போட்டேன். கோபம். பிறந்த வீட்டுக்குப் போனா. எத்தனை நாள் வச்சிருப்பா நாலு பேர் என்ன ஏதுன்னு விசாரிக்கிறதுக்குளளே நல்ல புத்தி சொல்லி அவங்க அப்பா கொண்டு வந்து விட்டுட்டுப் போனார், அழதா செய்தது தப்புன்னு ஒத்துக்கிட்டா, என்கிட்டே சொல்லி என்ன பிரயோசனம் அம்மா கிட்டே வந்து சொல்லுன்னு அழைச்சுக் கிட்டு வந்திருக்கேன்.”

பைரவி தலையைக் குனிந்து கொண்டு நின்றாள்.

அன்றும் மறுநாளும் அந்த வீடு மகிழ்ச்சியில் திளைத்தது.

அனைவரும் புறப்பட்டுச் சென்ற பிறகு-

“என்னை மன்னிச்சிடுங்க” – மது தன் கணவனின் மார்பில் புதைந்து கொண்டாள்.

“என்ன மது? ஏன் கலங்கறே? அம்மா ஊருக்குப் போயிட்டாள்னா?”

அவள் அவனை அண்ணாந்து பார்த்தாள்.

கண்ணீருக்கிடையே சொன்னாள். “ஆமா, ஆனா என் அம்மா இல்லை, உங்க அம்மா, அவர்களை நான் எவ்வளவெல்லாம் அலட்சியப் படுத்திட்டேன். அவ்வளவுக்கும் கோப படாமே இருந்தவங்க ஒரு சமயம் உங்களுக்கும் எனக்கும் இது சம்பந்தமா மனஸ்தாபம் வந்து ஒரு வாரம் பேசாமே இருந்தவுடன் நம்மால் இவர்களுக்குள் ஏன் தகராறுன்னு மக வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் மாசம் ஆறாகிறது. என்ன இருந்தாலும்அவர்களுக்கு அது கௌரவமா இருக்குமா? நான் அதைப் பத்தி யெல்லால் இதுவரை கனவிலே கூட சிந்திக்கலையே. இப்போ எனக்குன்னு வரச்சேதானே என் முதுகு எனக்குத் தெரியறது.”

அவன் அவளை ஆதரவாக அனைத்துக் கொண்டே கேட்டான்.

“அது சரி, உனக்கென்ன பிள்ளையா குட்டியா அவர்கள் தயவு தேவைப்படறதுக்கு”

மது பொய்க் கோபத்தோடு அவனை முறைத்தாள்.

“இந்தக் குதர்க்கம் தானே வேண்டாம் கிறது. பிள்ளை குட்டியை வளர்க்கறதுக்கு மட்டும் இல்லை, பெறுவதுக்கும் கூடப் பெரியவங்க மனப் பூர்வமான ஆசிர்வாதம் வேணும். அப்படியே குழந்தை இல்லைன்னாலும் பரவா இல்லை. அவர்களுக்கு நான் குழந்தையா இருந்துட்டுப் போறேன்,”

சுசிந்தர் அவளிடம் ஓர் உள் நாட்டுக் கவரை எடுத்து நீட்ட…

மதுமிதா எழுதத் தொடங்கினாள்…

“தேவரீர் அத்தை அவர்களது பொற்பாத கமலங்களுக்கு…”

– 01-02-1983, மங்கையர் மலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *