முதியோர் வாழ்க!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 3,627 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தானும் இருக்கிறதாகக் காட்ட மெல்லிய தூறலாய் மண்ணுக்கும் வெளிக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுதிலே, தமது படுக்கையை விட்டு எழுந்து முற்றத்துக்கு வந்த நடராசாக் கிழவருக்குத் தம்மைப் போலவே வற்றி வறண்டு போன பூஞ்செடி ஓர் அதிசயத்தைத் தன்னிலே பொதிந்து வைத்து அவர் வருகைக்காகவே காத்திருப்பது போலத் அந்தச் செடியின் கணுவொன்றிலே வெண்பச்சை நிறத்தில் குருத்து ஒன்று…

அதனைப் பார்த்து அதிசயத்தால் திக்கித்துப் போன நிகழ்ச்சியொன்று நினைவுத் தரங்கிலே குமிழியிட்டது.

இடப்பெயர்வினால் அவருடைய வீடு போலவே சிதைந்து சூனியமாகியிருந்த முற்றத்திலே, மழைபெய்து மலர்த்தும் என்ற தளராத நம்பிக்கையில், அவருடைய பேர்த்தி அருள்மொழி நாட்டி வைத்த பூஞ்செடிகளில் ஒன்று கடந்த சில நாள்களாய் மழைமேகம் காணாது தனது இலைகளை எல்லாம் உதிர்த்து இனியும் துளிர்க்கும் என்ற நம்பிக்கை கானலாகிவிடப் பரிதாபக்காட்சி தந்ததைக் கண்ட நடராசர் அதனைப் பிடுங்கி எறியப் போனார்.

“அப்பப்பா, என்ன மோட்டுவேலை செய்யிறியள்? அதிலை இன்னுங் கொஞ்சம் பசுமை இருக்குது. பிடுங்காதையுங்கோ” என்று பதற்றத்துடன் அருள்மொழி குரல் கொடுக்க அவர் ஏளனமாகச் சிரித்தார்.

“இன்னும் உனக்கு நம்பிக்கை இருக்கோ?’

“ஓம். இன்னும் இரண்டு நாள் பாப்பம்” -என்றாள் அருள்மொழி.

நேற்று இரவு கணிசமான மழை. அருள்மொழியின் நம்பிக்கையிலும் அந்த மழைத்துளிகள் விழுந்து பட்டுக் கொண்டிருந்த செடியையும், அதைத்தாங்கி நின்ற மண்ணையும் நனைத்ததன் பயன்…….? இன்று அதிகாலைப் பொழுதில் அந்தச் செடியில் சின்னஞ் சிறியதொரு குருத்து முளை விட்டிருந்தது.

அருள்மொழியின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

நடராசர் நாடறிந்த கல்விமான். ஆனால் தாவரங்கள்

பதினாறே வயதான, முற்றத்துப் பூஞ்செடிகளை வளர்த்து அனுபவம் பெற்ற அருள்மொழிக்கு அந்த ஞானம் கைகொடுத்ததால் நடராசரால் பிடுங்கி எறியப்படவிருந்த செடி தப்பிப் பிழைத்தது.

அவருக்குத் தோல்விதான்! ஆனால்… அவரின் செல்லப் பேர்த்தியின் வெற்றியில் அவர் தமது தோல்வியை மறந்துவிட்ட பெருமிதத்தோடு…. “அருள்… இங்கை ஓடி வாடா. உன்ரை செடியிலை குருத்து வந்திருக்கு” என்று கூறி அருள்மொழியை அழைத்தார்.

அருள்மொழி அரைகுறையாக முகங் கழுவிய கையோடு, ஆவலாய் ஓடிவந்து பூஞ்செடியைப் பார்த்து மகிழ்ந்து போனாள். தனது வெற்றியைத் தலை நிமிர்த்தி ஏளனமாகப் பேரனைப் பார்ப்பதன் மூலம் அவள் வெளிப்படுத்திய போது, கிழவர் அசடு வழிந்தார்.

“குஞ்சு கெட்டிக்காரிதான்…” என்று மனநிறைவோடு அவளைப் பாராட்டினார்.

பேரனாரின் மனக்கனிவைத் தனக்குச் சாதகமாக்கித் தனது தேவை ஒன்றை நிறைவேற்றிக் கொள்ளத் தீர்மானித்த அருள்மொழி, “அப்பப்பா இண்டைக்கு நீங்கள் எனக்கு ஓரு உதவி செய்யவேணும். நான் முகங்கழுவி, சாமி கும்பிட்டுட்டு வாறன்” என்று அவள் கெஞ்சுங் குரலிலே வேண்டிக்கொண்டாள்.

நடராசர் எஞ்சியிருந்த தமது இரண்டொரு பற்களை வெளிப்படுத்திச் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“என்ன குஞ்சு, வேணும் சொல்லு” என்றார்.

“இண்டு பின்னேரம் எங்கடை கொலிச்சிலை ‘முதியோர் தினம்’ கொண்டாடுறம். நான் ஏ.எல். தமிழ்ச் சங்கத்தலைவி எண்டு உங்களுக்குத் தெரியுந்தானே? ‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ எண்ட தலைப்பிலை நான் பேச வேணுமாம். கொஞ்சம் பொயின்ற்ஸ் நடராசரின் முகம் மலர்ந்தது போலவே திடீரென்று குவிந்தும் போயிற்று. பேச்சுக்கள், பட்டிமண்டபங்கள் என்று அருள்மொழி தம்மை நாடுவதும், தாம் சொல்லும் விஷயங்களைக் குறிப்பெடுத்துச் சென்று பேசிவிட்டு வந்து ‘அவை சுத்தப் பழசுகள்’ என்று தோழிகளும் ஆசிரியை

யிருந்து வருவதால், மீண்டும் ஒரு முறை பேர்த்தியின் சொட்டைக்குத் தாம் இலக்காக நேருமே என்று நினைத்ததாலேயே அவரின் முகம் கருகியது.

அவர் பெருமூச்சு விட்டார்.

“நான் பழங்காலத்து மனிசன். நீங்களோ நவீனகாலத் தாக்கள். என்ரை பொயின்ற்ஸ்கள் உன்ரை ஆக்களுக்குக் கேலியாய்த்தான் இருக்கும். ஏன் மோனை என்னை அவையின்ரை வாய்க்குள்ள நுழையவைக்கிறாய்?” என்று மிகவும் சலிப்போடு சொன்னார்.

அருள்மொழி விடவில்லை. “இண்டைக்கு நான் பேசப்போறது உங்களைப்போல முதியோரைப் பற்றித் தானே அப்பப்பா, ‘ஓல்ட் இஸ் கோல்ட்’ அல்லோ? சொல்லுங்கோ அப்பப்பா”

அருள்மொழியின் செல்லக் கொஞ்சற் பேச்சில் நடராசர் நெகிழ்ந்து போனார்.

“சரி, பிள்ளை , முகங்கழுவிச் சாமி கும்பிட்டுவிட்டு வா” என்றபடி ‘ஹோலு’க்குள் சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

சிறிது நேரத்தில் அருள்மொழி பேனையும், கடதாசியும் கொண்டு வந்து அவர் அருகிலிருந்த நாற்காலி யில் அமர்ந்தாள்.

“சொல்லுங்கோ …”

நடராசர் தமது வாத்தியார்த்தனத்தோடு – கேள்வி ஒன்றோடு – தமது விளக்கத்தைத் தொடங்கினார்.

“மூத்தோர் என்ற சொல்லுக்கு ஒத்த கருத்துச் சொல் ஒண்டு சொல்லு பார்ப்பம்…”

…கிழவர் என்ற வார்த்தை உதடுவரை வந்ததைப் பலவந்தமாக உள்வாங்கிக் கொண்டு “முதியோர்” என்றாள்.

“… மூத்தோர் எண்டால் வயதால் முதிர்ந்தோர் என்று அர்த்தம். ஆனால் கிழவர் என்பதுதான் மூத்தோருக்கு அருள்மொழிக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள்.

சொன்னாலே முகம் சுழித்துச் சிடுசிடுப்பவர் ஆயிற்றே அப்பப்பா! இப்பொழுது அதே சொல்லை மிகவும் சகஜமாகச் சொல்கிறாரே?…”

அவள் மௌனமாக அவரையே உற்று நோக்கி

“….கிழவன் என்ற சொல், கிழமை என்ற பண்புச் சொல்லடியாகப் பிறந்தது. கிழமை என்பதற்கு உடைமை,

தலைமை என்பன பொருள்கள். முற்காலத்தில் குடும்ப த்தின் உடைமையாளனாகவும் தலைவனாகவும் இருந்த வன் வயதில் மூத்தவன்தான். எனவே மூத்தோன் கிழவன் எனவும் அழைக்கப்பட்டான்.” என்று செந்தமிழ் பேசத் தொடங்கினார் நடராசர்.

“அதுதான் கிழவன் மார் செத்தால் மரண அறிவித்தலிலை ‘எங்கள் குடும்பத் தலைவர்’ எண்டு இடுகினம் போலை…”

நடராசர் பெருமூச்சு விட்டார்.

“இன்று குடும்பத் தலைவர் என்று போடுவது வெறும் உபசாரம். உலகத்தை ஏமாற்றுகிற பம்மாத்து வேலை. உதாரணமாக இன்று இந்தக் குடும்பத்தின் தலைவர் யார்…? உன் அப்பாதானே? என்னைக் குடும்பக் கடையராய்த் தானே அவன் நடத்துகிறான்?…”

அருள்மொழிக்கு அவர் கூறியது நியாயமாகவே பட்டது.

“அப்பா, உங்களுக்கு வயசு போட்டுது. இண்டைய நேச்சர் உங்களுக்குத் தெரியாது. வாயை மூடிக்கொண்டு தாறதைச் சாப்பிட்டிட்டு ஒரு மூலையிலை கிடவுங்கோ. எனக்கு எல்லாம் தெரியும்” என்று அப்பா, அப்பப்பா வின் உள்ளத்தை எத்தனை நாள் காயப்படுத்தியிருப்பார்?

அருள்மொழி இரக்கத்தோடு பேரனைப் பார்த்தாள். நடராசர் தமது கவலையை மறைக்க முகத்தைத் தாழ்த்திக் கொண்டார்.

மௌனம் சில கணங்கள் தேங்கி நின்றது.

பேரனாருக்கு என்ன சமாதானம் சொல்வது என்று ஒன்றுமே தோன்றவில்லை அருள்மொழிக்கு.

வழக்கமாக அவர் சொல்லும் ஒவ்வொரு விடயத்தை யும் நோண்டி, நோண்டி வாதம் புரிந்து அவர் விடை கூற முடியாது விழிப்பதைப் பார்த்துத் தன்னுள்ளே வக்கிர மான மனநிறைவை அடைந்து வந்த அருள்மொழி, இன்று நல்ல பிள்ளையாகிக் குனிந்த தலை நிமிராது அவர் சொல்பவற்றை ஒன்று விடாது குறித்துக் கொண்டாள்.

கிழவர் சொன்னவற்றில் அருள்மொழியின் நெஞ்சைத் தொட்டது. அவர் கூறிய சிறியதொரு கதைதான்.

அது…

சீனநாட்டிலே உள்ள கிராமத்து வீதியின் ஒரு பக்கத்தில் ஒரு நாள் கிழவன் ஒருவன் அமர்ந்து அழுது கொண்டிருந்தான். அவனுக்குச் சுமார் எண்பது வயதிருக்கும். நரை, திரை, மூப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக

அவன் விளங்கினான். அவன் ஏன் அழுகிறான்?

அந்த வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவனுக்குக் கிழவனைப் பார்க்கப் பெரும் பரிதாபமாய் இருந்தது. அருகில் சென்று ஆதரவோடு அவனது தோளைப் பற்றித் தடவியபடி “பெரியவரே,

ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்துவிட்டது?’ என்று கேட்டான்.

கிழவனின் அழுகை விம்மமலாய் வெடித்தது. விம்மலுக்கிடையே அவன் சொன்னான்.

“அப்பா எனக்கு அடித்துப்போட்டார்.” இளைஞனுக்கு வியப்பு, தொடர்ந்து திகைப்பு!

“இந்தக்கிழவனுக்கு ஓர் அப்பாவா? அவர் இவனுக்கு அடித்தாரா?” அவனால் நம்ப முடியவில்லை .

“உங்களுக்கு அப்பாவா? அவருக்கு வயசு எத்தனை?’

“இந்த மாசத்தோடு நூற்றைந்து வயதாகிறது தம்பி” “அவர் அடித்தது உங்களுக்கு நொந்ததா?”

“நொந்திருந்தால் பிரச்சினை இல்லையே! நோகவில்லையே என்பதுதான் எனக்குக் கவலை!”

“இரண்டு வருசத்துக்கு முன்பும் அவர் எனக்கு அடித்தவர். அந்த அடி எனக்கு நோவை ஏற்படுத்தியது உண்மைதான். இப்பொழுது நோகவில்லை என்றால்…? முதுமையின் பலவீனம், தளர்ச்சிதானே காரணம்? அப்பா விரைவில் எங்களைப் பிரிந்து விடுவாரோ என்பதுதான் இப்பொழுது எனக்குக் கவலை. அதுதான் அழுகிறேன்.”

– சஞ்சீவி (10.1.1998)

– சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *