மிகச் சரியான வயது!




மியூஸியம் ஒன்றைப் பார்வையிட, ஒரு டூரிஸ்ட் குழு சென்றது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்தக் கால மன்னர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள், இசைக் கருவிகள், பாத்திரங்கள் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சென்றது அந்தக் குழு. அங்கேயே பணியில் இருந்த ஒரு கைடு அவர் களுக்கு ஒவ்வொன்றையும்விளக்கிக் கொண்டே வந்தார்.
ஓரிடத்தில் வித்தியாசமான வடிவத்தில் பெரிய பெரிய மண் குடுவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்க, கைடு சொன்னார்… ”ஆதி மனிதன் காடுகளில் திரிஞ்சுட்டிருந்தப்போ, அவனிடம் பாத்திரம் எதுவும் இல்லே. தான் சேகரிச்ச உணவைச் சேமிச்சுவைக்க, முதன்முறையா மனிதன் உண்டாக்கிய மண் பாத்திரம் இது. மண்ணைச் சுட்டால், அது கல் போல உறுதியாகும்னு அவன் தெரிஞ்சுக்கிட்டது இந்தப் பாத்திரம் செஞ்சபோதுதான்!”
டூரிஸ்ட் குழுவினருக்கு ஆவல் அதிகமாகி, ”அப்படின்னா இந்த மண் பாண்டத்துக்கு இப்போ என்ன வயசு?” என்று கேட்டனர்.
”சரியாச் சொல்லணும்னா இதன் வயசு இன்னியோட 4003 வருஷம், 7 மாசம், 16 நாள் ஆகுது!” என்றார் கைடு.
டூரிஸ்ட் குழு ஆச்சர்யப்பட்டு, ”அதெப்படி அவ்ளோ சரியா இதன் வயசை உங்களால சொல்ல முடியுது?” என்று கேட்டனர்.
கைடு சொன்னார்… ”நான் இங்கே வேலைக்குச் சேர்ந்தபோது, எனக்கு முன்னே இருந்தவர் இதன் வயசு 4,000 வருஷங்கள்னு சொன்னார். நான் வேலைக்குச் சேர்ந்து இன்னியோட சரியா 3 வருஷம், 7 மாசம், 16 நாள் ஆகுது!”
– 11th ஜூன் 2008