மழைக்குறி





அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் நான்கு
சாம்பிராணிக் குச்சிகளை இரும்புப் பெட்டியிலே குற்றி விட்டு இரும்புப் பெட்டியைப் பழைய துண்டால் துடைத்தான் மயில்வாகனம். இரும்புப் பெட்டியிலே பெயிண் ரால் எழுதப்பட்டிருந்த “தனலக்சுமி ஸ்ரோர்ஸ் கே.பி.நாகலிங்கம்” என்ற எழுத்துக்கள் மழுங்கிப்போய் விட்டது அதிகாலையில் எழுந்து குளித்து முடித்த சின்னத்தம்பி பக் கத்துத் தெருப்பைப்பிலிருந்து இரண்டு கைகளிலேயும் இரண்டு பெரிய வாளிகள் நிறைவான நீரைக் கொணர்ந்து வாசலில் அள்ளியள்ளி வீசித்தெளித்தான்.

ஒருநாளுமில்லாத திருநாளாக முதலாளியார் அன்றைக்கு அந்த ஆறரை மணி வேளையிலே வந்ததைக் கண்ட சின்னத் தம்பி பிரமித்துப் போனான்.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சின்னத்தம்பி யைக் கண்டதும் அவருக்குக் கருணை பிறந்தது கண்களிடையே அரும்பியிருந்த பூளையைத் துடைத்த வண்ணம் சொன்னார்.
“நீ என்னட்டை வந்து பதினெட்டு வருசத்துக்கு மேலை யாச்சு. நீ என்னோடை ஒத்து வாறவனாய் இருந்தால் உன்னை நான் எப்போதைக்கோ ஒரு கணக்கப் பிள்ளையாய் ஆக்கி யிருப்பன். இந்த அளவுக்கு நீகூட ஒரு முதலாளியாய் இருப் பாய். நீ நல்லவனாய் இருந்தால் நானே எங்கையேனும் உனக்காகக் கடைபோட்டு என்ரை காசிலையே முதலும் விட்டு தந்திருப்பன்”
”எனக்குச் சுரண்டிச் சுரண்டிக் கொளுக்கிற முதலாளி ஆக வேண்டும் எண்டு விருப்பங் கிடையாது நான் எண் டைக்கும் உழைக்கிற தொழிலாளி தான்”
”அப்ப உப்பிடியே தான் நெடுக இருப்பாய். உலக்கை தேய்ஞ்சு உழிப்பிடியாகும். பொங்கை பிடரியைப் பார். பிடரி மயிரெல்லாம் நரைக்கத் தொடங்குது. இனிக் சுலி யாணம் முடிக்க ஆர் உனக்கு கிழட்டுப் பொம்பிளையாய் தலை நரைச்சவளாய் வைச்சிருக்கினம். இப்புடியே நெடுகலும் இருந்தா உன்ரை சீவியம் என்ன கதி? நாங்கள் பிறக்கிற துஞ் சாகிறதும் கடவுளின்ரை கையிலை கிடக்குது கலியா ணம் செய்கிறது ஓண்டுதான் எங்கடை கையிலை.அதையும் வேளாவேளைக்குச் செய்யாட்டிப் பேந்து என்ன சீவியம்?”
உள்ளே போய் ஏதோ சாமான்களை எடுத்துக்கொண்டு திரும்பிப்போனார்.
அவருடைய தலை மறைந்ததும் கட்டியிருந்த சண்டிக் கட்டினை அவிழ்த்துக் கொண்டான். வேட்டியின் கரையில் இலேசாக அழுக்குப் படிந்தது.
அவனிடம் உள்ளதோ மூன்றே மூன்று வேட்டிகள் ஒன்று நட்ட நடுவே கிழிந்து போய் றங்குப் பெட்டியின் அடியில் இருக்கிறது. மற்றது அநேகமாக யாழ்ப்பாணம் போகும்போது மட்டும் உடுத்திக் கொள்ளுகின்ற வேட்டி. இந்த வேட்டி சலவை கண்டு சுமார் ஐந்து மாதங்கள் ஆகின்றன. அதனால் அழுக்கடைவதற்காக மிக அவலப் பட்டான்.
“முதலாளி என்ன சாமான் எடுக்க வந்தவர்?”
தேவராசாவைக் கேட்டான்.
“அங்கை பெஞ்சாதி காலமை எழும்பினவுடனை தேத் தண்ணியிலை கலக்கிறதுக்குப் பால் வரேல்லை எண்டு கலைச் சிருக்கிறா போலை கிடக்குது. அதாலைதான் நெஸ்ரோமோல்ற் வந்தெடுத்துக்கொண்டு போறார்.”
தேவராசா நையாண்டிப் பதில் தந்தான்.
பக்கத்துக் கடையான ஃபஷன் ஜூவலரி ஹவுஸுக்கு வெளியே போர்ட்டில் எரிந்து கொண்டிருந்த மெக்குரி பல் புகள் எல்லாம் பட்டென்று அணைந்தன. அதையடுத்து பூட்டுத் திராங்குகள் மொமொடவெனத் திறக்கின்ற சத்த மும் எழுந்தது. முதல் மரக்கதவுகளைத் திறந்து பின்னர் இரும்புச் சட்டங்களைக கழற்றி வெளியில் வந்தான் ஜமால் டீன்.
ஜமால்டீன் கேட்டான்.
“என்னிக்குத் தான் நாம சங்கம் போடுறது? நம்மளு டைய குறைகளையெல்லாம் நம்மைப் போலக் கஷ்டப்படுற தொழிலாளியளுக்கு எல்லாம் உணத்திறது எண்ணிக்கு? அவங்களை எல்லாம் உணரச் செய்யிறதுதான் பெரியவேலை அவங்கள் உணர்ந்தெழுந்து ஆவேசப் பட்டாத் தான் எல் லாருக்கும் சேர்ந்த ஒரு விடிவு வரும். அது வரும் வரைக் கும் ஒருக்காலும் விடிவு இல்லை. உனக்குத்தான் ஆயிரமாயி ரம் வேலைக்காறங்களை தெரியுமெல்ல, நீயாய்த் துணிந்து ஒரு சங்கம் அமைச்சா என்ன?”
“நானும் உதைப்பத்திக் கனகாலமாய் யோசிச்சுக் கொண்டு தான் வந்தனான். ஊக்குவிக்கத்தான் உன்னைப் போலப் பத்து இருபது பேரெண்டாலும் கூட நாட இல்லை. இப்ப நீயே வந்து சொல்லிப் போட்டாய்.”
“இந்த விசயத்திலை காலங் கடத்திறது சரியில்லை யெல்ல'”
“அது உண்மைதான் ஆனால் எல்லாரும் எங்களோடை ஒத்து வருவினமே!'”
“நாங்கள் நீதிக்காக உழைக்கும்போது அவங்கள் கரம் நீட்டாமப் போனா அவங்க அநீதிக்குத்தான் துணையாவங்கள்”
“அதை உணரவெல்லோ வேணும்.”
“நாங்க அதை உணர்த்தத் தான் வேணும். அவங்க உணரவில்லையென்று விட்டுப் பேசாம இருக்கக் கூடாது. பேசாம இருக்கிறது மனிசத் தன்மையும் இல்லை.”
”உந்தக் கொம்பாதி கொம்பு முதலாளிமார் இப்பவே நாங்கள் ஏதாவது சில்லறைச் சச்சரவுகளை எதிர்த்துக் கதைச்சவுடனை வேலையை விட்டு நீக்கிப் போடுவினம். இந்த இலட்சணத்திலை சங்கத்திலை அங்கத்தவராய் இருக்கிற தோழரை எவ்வளவு குறைச்சு நிறுத்துப் பாப்பாங்கள்.
“உப்பிடியான விஷயங்களை கட்டுப்படுத்தத்தான் சங்கம் வேணும்.”
“காரணம் இல்லாமை ஒரு தொழிலாளியை நீக்கினால் அது பற்றி வாதாடச் சங்கம் வேணும்தான்.”
“அதோடை நாமள் ரண்டுமூண்டு பேர்வாயல சொன்னா ஒருத்தரும் கேட்க மாட்டாங்க. சங்கம் எண்டா அதுஎல் லாரின்ரை வாயும் சேர்ந்து சொன்னாத்தான் அர்த்தமாய் இருக்கும்.”
”நீ சொல்றதிலை நியாயம் இருக்குது தான்”
“தொழிலாளியள் எல்லாரும் நியாயத்துக்குத் தான் போராடுறாங்கள். இதை எதிக்கிற முதலாளியள் தான்அக் கிரமஞ் செய்கிறாங்க அநியாயத்தின்ரை பக்கம் நிக்கிறாங்க. அசுரரை அழிச்சாத் தான் அதர்மம் ஒழியும். அரக்கரைத் தொழுதால் அதர்மம் ஒருக்காலும் ஒழியாது. தர்மம் தானாய் நுலை தூக்காது.'”
கணக்கப்பிள்ளை மயில்வாகனம்தான் முதலாளி இல்லாத நேரத்தில் அக்ரிங் – முதலாளியாக நிற்பான்.
அவன் வெளியே வந்த வண்ணம் சொன்னான்:
“என்ன விடிஞ்சும் விடியாததுமாய் விளல் அலம்பத் தொடங்கியாச்சுதே!”
“அடிவருடியள் அடையிற சொகுசு எத்தனை நாளைக்குத் தானோ”
பெருமூச்சு விட்டான் ஜமால்டீன்.
சின்னத்தம்பி கடைக்குத் திரும்பினான்.
“முதலாளியார் சு- ரண்டிற காசிலை ஒருபங்குதானே உங்களுக்குச் சம்பளமாய்க் கிடைக்குது. அப்ப நீங்களும் சுரண்டல் காறங்கள் தானே. முதலாளி சு – ரண்டா விட் டால் உங்கடை சம்பளம் எங்கை ஆகாயத்திலை இருந்தே விழும்? இலா த்தைச் சுறண்டல் சுறண்டல் எண்டு சொல் லுறியள். இந்த இலாபம் இல்லாட்டி இந்தக்கடை நடத்தக் கடை வாடகை, லயிற்றுக் கட்டிணம் கூட எங்கை இருந்து வரும் எண்டு உங்கடை அவிஞ்ச மூளையிலை யோசிச்சு பாத் தியளா? இதுஇல்லாட்டி எந்த மினக்கெட்ட அம்பட்டன் கடை வைச்சுத் தொழில் பாப்பான்?..
“தொழிலாளியள் புத்தம்புதிய உலகத்தை ஆக்கிறதுக் குத் தான் விரும்பினம். அந்த உலகத்திலை மனிசனை மனிசன் எந்த ரூபத்திலையாவது சுரண்டிற முறை கிடையாது. சக லதும் சமூகத்திற்கே என்றது தான் லட்சியமாயிருக்கும். இப்ப இருக்கிற காசுக் கொடுமை இராது.”
“ஜமால்டீன் போட்டான் எண்டவுடனை என்னைப் பிடிச்சு உன்ரை விழலை அலம்பத்தொடங்கி விட்டியே. உது வாயாது. உன்ரை பம்மாத்தை ஜமால்டீனோடை வைச்சுக் கொள். நான் உயிர்போகும் வரை காந்தியைத் தான் சப் போற் பண்ணுவன். உன்னைவிட எனக்குப் பொலிற்றிக்ஸ் கூடத் தெரியும்.”
“நீர் சாய்ஞ்சு நிற்கிற வர்க்கத்தின்ரை சுபாவம் எனக்கு நல்லாய்த் தெரியும். அதை இதிகிலும் குறைவாய் வெளிக் காட்டாதையும்.”
“கண்டறியாத வர்க்கமும் சொர்க்கமும். சமத்துவம் சமத்துவம் எண்டு குலைக்கிற நீங்களே மனிசரை வர்க்கங் களாய்ப் பிரிக்கிறது சரியே. எல்லாரும் மனிசர் தானே.”
”நீர் மாக்சியத்திலை அடிப்படைக் கொள்கையளை எண்டாலும் படிச்சுப் போட்டு என்னோடை இந்த விசயத்தை பற்றிக் கதைக்க வாரும்.”
கூறிக் கொண்டே வெற்று வாளிகளைத் தூக்கிக் கொண்டு சென்றான் சின்னத்தம்பி. மயில்வாகனத்திற்கோ முகத்தில் அடித்தது போலிருந்தது. சின்னத்தம்பி பேசுகிற விடயத் தில் தனக்குள்ள அறிவுச் சூனியத்தை வெளிப்படுத்தி விட்டோமோ என்று சந்தேகித்தான் மயில்வாகனம்.
வெற்றுவாளியை பைப்படியில் வைத்துத் தண்ணீரைத் திரும்ப நிறைத்தான். ஜனதா ரீ றூம் திறந்து விட்டிருந்தது, வாசலில் பொயிலரின் ஆவி பறந்து கொண்டிருந்தது. பொயிலரடியில் நின்று அப்புத்துரை சின்னத்தம்பி யைச் சாடை காட்டி அழைத்தான். சின்னத்தம்பி தன்னு டைய கடையின் பக்கமாகக் கண்ணோட்டம் விட்டுக் கணக்கப்பிள்ளை மயில்வாகனம் நிற்கின்றானோ என்று பார்த்தான்.
“இந்தாவன் பிளேன்ரி”
கோப்பையை நீட்டினான் அப்புத்துரை.
“சீ. உன்ரை முதலாளி கண்டார் எண்டா பேந்து பேசத்தேள்வையில்லை”
“நீ பயப்பிடாதை இதையெல்லாம் என்ரை கணக் கிலை தாள் போடுறனான். சம்பளத்திலை பிடிச்சுக் கொள்ளாமல் அவர் விடமாட்டார்”
“எங்கை திரும்பினாலும் முதலாளித்துவத்தின்ரை ஈவிரக்கமற்ற அகோரக் கொடுமையள் தான். இது எத்தனை நாளைக்குத் தான் எண்டு பாப்பம்.”
“சொன்னாப்போலை தேவராசாவை வீ.டீ கிளினிக்குள்ளை கண்டனான். என்ன விஷியம்.”
“மெய் தானே! எனக்குத் தெரியாது.”
“உதெல்லாம் பருவக் கோளாறு. இக்பாலின்ரை தங் கச்சிக்காறியை தேவராசாக்கு கட்டிவிடலாம். ஆனால் இக்பால் சம்மதிப்பானோ இல்லையோ?”
“எனக்கும் உப்பிடி ஒரு யோசினை இருக்குது தான். இக்பால் சரியான பிற்போக்கு. முந்தி எங்களோடை நிண்ட ஜெயசிங்காவைத் தெரியுமெல்லே”
“ஓமோம்.”
“அவன் பாத்திமாவை விரும்பினான் எண்டு தெரிஞ்ச வுடனை அங்கை போய்த் தன்ரை தங்கச்சியாரை அடிச்சா னாம். அப்பிடிக் கொத்தவன் தேவராசாவை, அதுவும் வீ. பிடிச்ச தேவராசாவைக் கட்டச் சம்மதிக்கான். அவன்ரை தாய் தேப்பன் ஒருவேளை சம்மதிப்பினம், அவன் சம்மதி யான் அதுக்கும் மேலாலை பாத்திமா சம்மதிப்பாளோ?”
“எதெப்புடி இருந்துது எண்டாலும் நீ இதிலை ஒ முயற்சி எடுத்துப் பார்”
சிந்தனை அப்புத்துரை சொன்னதை எடைபோட்டது.
“நீ யாப்பாணம் போய் வரேக்கை தேவராசா வின்ரை தாய் தேப்பனைக் கண்டு பார்”
அப்புத்துரை மீண்டும் வற்புறுத்தினான்.
”சரி”
“இண்டை பேப்பர் பாத்திட்டியே”
“ஏன்”
“மட்டுவில்லை பள்ளர் பறையர் உள்ளுக்கை நுழைய விடாமல் முள்ளுக்கம்பி போட்டுக் கோயிலைச் சுத்தி அடைச்சுப் போட்டாங்களாம்.”
சின்னத்தம்பி புன்னகை புரிந்தான். அதனிடை ஏதோ மிக ஆழமான பொருள் இருப்பது அப்புத்துரையால் உணர முடியாதது.
“என்ன பேசாமலிருக்கிறாய்”
“உதிலை பேச என்ன இருக்குது. உக்கிப்போய் உளுத்துக் கொண்டு வர்ற விஷ்யம்”
“என்ன சின்னத்தம்பி, திரும்ப நெடுக நெடுக அங்கை நிண்டு கதை?”
உரத்த குரல் கொடுத்தான் மயில்வாகனம்.
குரல் கேட்டவுடன் சின்னத்தம்பி அப்புத்துரையின் காதினுள் கிசுகிசுத்தான். வாளியைத் தூக்கினான். சின்னத் தம்பியின் கிசுகிசுப்பைக் கேட்ட அப்புத்துரை மயில்வா கனத்தைப் பார்த்துச் சிரித்தான். மயில்வாகனத்திற்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது. வந்த கோப வேகத் தோடு சரக்கென நுழைந்தான் மயில்வாகனம். சின்னத் தம்பி வாளியோடு உள்ளே நுழைந்தான்.
“கெதியிலை தேத்தண்ணி போடு”
“ஏன் சும்மா இருக்கிற நேரத்திலை தேத்தண்ணியை நீரே போட்டிருக்கலாமே”
“சும்மா நாய் போலை வாய் காட்டாதை சொல்லுற வேலையளைச் செய்”
“மட்டுமரியாதையில்லாம கதையாதையும். நாய் பேய் எண்டால் உம்மடை தலைதான் போகும்.”
“சரி சரி மன்னியுங்கோ அய்யா'”
மயில்வாகனம் பதட்டத்தோடு சமாளித்தான்.
சீனி கட்டிக் கொண்டு நின்ற தேவராசாவிற்குக் கொடுப் புக்குள் சிரிப்பு வந்தது.வந்தது போல் காட்டிக் கொள்ளாது வேலையில் முனைப்பானான்.
செங்கதிர்கள் பரவின.
அத்தியாயம் ஐந்து
மகாவலிகங்கை சலசலத்துப் பாய்ந்த வண்ணமிருந்தது. பின்னிரவுப் பிறைச் சந்திரன் இன்னமும் மறையவில்லை. இன்று இக்பால் வராததால், நிசப்தம் உருவாக்கிய சிந்தனை யில் முகிழ்ந்து நீருள்ளும் முகிழ்ந்து எழுந்தான் சின்னத் தம்பி. வஞ்சிக்கப்பட்ட மக்களது கொடுமைகள் தீரப் போகும் நன்னாளுக்கான கட்டியத்தை அவனுடைய சிந்தனையிலே அசை போட்டது மனம்.
‘கொடுமை. கொடுமை, கொடுமை.’
‘பணமே நீ உலகினை விட்டே போக மாட்டாயா’ என மயாவாதம் புரிந்தது மனம்.
‘மயிலே மயிலே இறகு போடு என்றால் இறகு போட்டு விடுமா’ எனப் பிரதிவாதம் புரிந்தது அதே மனம்.
வாதங்கள் அவனுள் வளர்ந்தன.
குழப்பமும் தெளிவின்மையும் அவனுள் அவனைச் சிக்க லின்மேல் சிக்கலாக்கி சித்திரவதை செய்தது. உயிருள்ளவை எவை? உயிரற்றவை எவை? ஒளியே இருளா? மெய்யே பொய்யா?” அவனது மனக்கேள்வி கேள்வியாகவே இருந் தது. விடை எங்கோ.
ஆயினும் சிக்கலைத் கூர்மைப் படுத்தி உள்ளியல்பினை பகுத்துணர்ந்து கொண்டான்.
அதனால்; அவனுக்குக் கொடுமையின் சார்புடமை தெரிந்தது. அக்கிரமத்துக்குத் துணை போகாத மனம் விரிவடைகிறது.
அம்மன் கோவில் பண்டாரி குளிக்க வந்தான். அவன் இடையில் சொன்னான்.
“உன்ரை முதலாளியாற்றை பொம்பிளை நல்ல வடிவெல்லே. அவள் வெள்ளிக்கிழமை தவறாமைக் கோயிலுக்கு வாறவள். நீ எப்பாலும் வளைச்சுப் பாக்கேல்லையா?”
பண்டாரி ஓதிய புதிய தாரக மந்திரம் அவன் உடலி னுள் நுழைந்து அவனுடைய திருப்தியற்ற ஆசைகளைத் தூண்டி வேடிக்கை காட்டிற்று.
“சொத்துடமை பேணுவதற்காக உயர் வர்க்கத்தினரால் தெய்வீகமாக்கப்பட்ட காதல் இதுவா? இல்லை! இது காதல் இல்லை! இது தூய்மையான அன்பு!”
குழப்பம் குழப்பம்’ ‘இதுவும் காதலா?’ ‘காதல் பொய்மையானதா? இல்லையா?’
‘நான் பால் உணர்வின் வயப்படுகிறேனா? பால் உணர்வினை வசப்படுத்துகின்றேனா?’
மனிதனின் பிரமை உணர்வுகள் ஏற்படுத்திய சிலந்தி வலையிலிருந்து விடுபட முடியாது தவித்தான். தனித்து விடுபட முடியாது என உணர்ந்தான். தவிப்பே தவறான அடிப்படை கொண்டது எனத் துணிந்தான்.
கரையோரம் நின்று கொண்டிருந்த மங்குஸ்ரான் மரத்தி லிருந்த காக்கை கரைந்தது. எழுந்துவந்து மேனியைத் துடைத்தான்.
இக்பால் வீடு போனான்.
இக்பாலின் வாப்பாவும் உம்மாவும் மன்னாரிலுள்ள உற வினரின் வீட்டுக்குப் போய்வர விரும்பினதால் இக்பால் கூட்டிச் சென்றிருந்தான். பாத்திமா மட்டும் பக்கத்து வீட்டுப் பையன் வகாப்புடன் இருந்தாள்.
செங்கட்டிச் சுவரிடையே சார்ந்து நின்றபடி சின்னத் தம்பி குரல் கொடுத்தான்.
பாத்திமா வெளியே வந்து உள்ளே வந்து இருக்கும்படி சொல்லிவிட்டு மறுபடி மறைந்தாள். தரையில் படுத்திருந்த வகாப்பு குரல் அரவம் கேட்டு எழுந்து பாயை வாரிச் சுருட்டினான்.
இக்பால் போடும் பெரிய – டப்பா பெளடர் வதனத்தில் ஏறிய வண்ணமாய்த் திரும்பி வந்தாள் பாத்திமா. அதற் கிடையிலே தலையை மிக ஒழுங்காகச் சீவியதுடன் வெகு லாவண்யமான இரட்டைப் பின்னல் பின்னி விட்டிருந்தாள்.
“உம்மா போய்ச் சேர்ந்தது பத்திக் கடிதம் போட்டாவா?'”
சின்னத்தம்பி கேட்டான்.
“ஆமா சொகம்மா போயிட்டாங்களாம். சனிக்கிழமை திரும்பி வருவாங்களாம்.”
பாத்திமா சொன்னாள்.
“உங்களுக்கு ஆரையேன் கலியாணம் முடிச்சுச் சீவிக்க விருப்பம் இல்லையே”
மெளனம் அவளை ஊமைப் பிறவியாக்கியது,
“வெட்கப்படாமை சொல்லலாம்”
”விருப்பம்”
“மெத்தச் சந்தோஷம். ஆரைப் போலை ஆளைக்கட்டலாம் எண்டு நினைக்கிறியள்”
“உங்களையே”
“நீங்கள் பகிடி விடாதையுங்கோ'”
“அல்லாவாணை”
சின்னத்தம்பி அதிர்ச்சியடைந்தான். இவள் என்ன அமுசடக்கிப் பூனையா? மளமளவென்ற திகைப்புத் தன்மை அவனுடைய நரம்புகளை எல்லாம் வெகுவாகத தாக்கிக் கொண்டது. பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் இடைநடு விலான சூன்யத்தில் தவித்தான். நனவிற்கும் கனவிற்கும் நடுவிடை வெறுமையில் வரண்டான்.
“நீங்கள் சொல்றது உண்மையா?”
“ஆமா”
“அப்ப நீங்கள் முந்தி ஜயசிங்காவை நேசிச்சது எல்லாம் பொய்யோ”
”பொய்தான். நாணாக்குக் காட்டத்தான் அப்படி மெய்யா நடிச்சன்”
“விளங்கேல்லை'”
“எனக்கு உங்கள்ளை தான் விருப்பம்”
“பெரிய பிழை விட்டிட்யள். நான் கலியாணம் கட்டிற தில்லையெண்டு பிரமச்சாரியாய்க் காலங் கடத்தி வாறவன். என்னை விரும்பிறது மோட்டுத்தனம்”
பாத்திமா தலையைக் குனிந்து தரையை நோக்கிச் கால் களால் ஏதோ வரைந்தாள்.
“கடையிலை நிற்கிற தேவராசாவிலை இஷ்டம் இருக்கே”
பாத்திமா இல்லை என்பதன் பொருளாய்த் தலை ஆட்டினான்
“அவனைக் கட்டிக் கொண்டு சுகமாய் சீவிக்கிறதுதான் நல்லது. அவன் நல்ல இளந்தாரிப் பெடியன். என்னைவிட வடிவானன் தான். நான் எப்பதன்னும் ஆரைத்தன்னும் கலியாணம் கட்டப்போறதில்லை. என்னாலை கொண்டு நடத்தேலாது எண்டு பயப்பிடேல்லை. ஆனால் என்ரை போக்குக்கு அது தடை. கட்டிறதாயிருந்தால் இவ்வளவுக்கு நாலு ஐஞ்சு எண்டு பெத்திருப்பேன்”.
சின்னத்தம்பி சொன்னான்.
பாத்திமா உள்ளே ஓடிப்போய் கோவிக்கோவி விசும்பலோடு அழுதாள்.
விசித்திரமான மனோவியல்புகளை அவளது ஒவ்வொரு விசும்பலும் அவனுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது.
அத்தியாயம் ஆறு
வாடிக்கைக்கார மல்லவராச்சி வீட்டிற்குச் சாமான் கொண்டு போய்க் கொடுக்க வேண்டியிருந்தது. சின்னத்தம்பி சாமான்களைச் சுமந்து கொண்டு புறப்பட்டான்.
முதலாளியார் சொன்னார்:
“அங்கையே போய் இருந்திடாதை. சுறுக்கெனத் திரும்பி வா. கனவேலை கிடக்குது.”
சின்னத்தம்பி மௌனமாய்ப் போகவே மீண்டும் முத லாளியார் உரத்த குரலில் வற்புறுத்தினார்:
“என்ன கேட்டுதே.உதிலை கிடக்கிற கஹட்டப்பிட்டிக்கு போய்வர நாலு நிமிஷம் காணும்.”
இப்போது சின்னத்தம்பி சாமான்களை எல்லாம் நிலத் திலே வைத்தான். அவனது முகம் கறுத்தது.
“கஹட்டப்பிட்டியா சரியாய்ப் போய்வர ஒண்டரைக் கட்டை, நடந்து போய்வர இருவது நிமிஷம் செல்லும். நாலு நிமிஷத்திலை போட்டு வாறதெண்டால் ஒரு ஏறப் பிளேன் பிடிச்சு விடுங்கோ”
இப்போது முதலாளி மௌன ஆளியானார்.
திரும்பவும் தூக்கிக் கொண்டு சின்னத்தம்பி நடந்தான். மயில்வாகனம் சிரித்தான்.
“பிவெயர் ஒஃப் டோக்ஸ்”
பிறாஸோ போட்டு மினுக்கிய பித்தளைத்தட்டு வலது பக்கம்.
“ஸி, எம்.டீ. மல்லவராச்சி ‘”
அதுவும் பிறாஸோ போட்டு மினுக்கி விட்ட பித்தளைத் தட்டு. அது இடப் பக்கம்.
வெளியே நின்றவாறு.
“சிரிசேனா, விஜயட்ட எண்ட கோ”
குரல் கொடுத்தான் சின்னத்தம்பி.
வாசலில் ஆளின் அரைப்பங்கு உயரத்திற்கு வளர்ந்து நின்ற அல்சேசியன் நாய் தான் தின்ற எலும்புத் துண்டு களுக்கு நன்றிக்கடனாக நாலைந்து தடவைகள் குரைத்துக் கொட்டியது. அன்தூறியம், பிக்காட்லி, மக்காதி, ஃபை னேல், உவின்சென்ற் சேச்சில், நியோ ஹனிமூன் வகையறா ரோசாப் பூஞ்செடிகள் வெகு அழகாக சிமென்துத் தொட்டி களுள் வைக்கப்பட்டிருந்தது. கொம்பவுண்ட் மதிலைத்தாண்டி வெளியிலே பற்றை பற்றையாகச் சூரியகாந்திப் பூக்கள் கொள்ளைகொள்ளையாகப் பூத்திருந்தன அமெரிக்கன் மொடல் வீடு. றோயிங் றூமின் கவர்ச்சி பிளேயின் கண்ணாடியிட்ட வாச லால் தெரிந்தது. நிலத்திலே போட்டிருந்த றோல் கார்பெட் டில் பல வகையான டிசைன்கள், வெள்ளி எவர் சில்வர்ப் பாத்திரங்களின் மினுமினுப்பை கபினெற் பறைசாற்றியது. நீலக் குஷன் போட்ட செற்றிகள். சின்னஞ்சிறு ஸ்டூல்களிலே வைக்கப்பட்டிருந்த சிகரெட் தூள்த்தட்டு அழகுக்காக வைக் கப் பட்டதா அல்லது சிகரெட் துகளைக் கொட்டத் தான் வைக்கப்பட்டிருக்கிறதா என்பது சின்னத்தம்பிக்குப் புரியவில்லை. சிறகுகளை அகல விரித்த மூன்று சோடிப் பறவை களும் சுவரின் வண்ணக் கவர்ச்சிக்கு மெருகூட்டிற்று. வண்ணப் பீங்கான் பல்ப் சேடுகள் மேலே தொங்கிய வண்ண மிருந்தன. வாயிலோரம் கோலிங் பெல்.
இத்தனைக்கும் மல்லவராச்சியிடம் இருப்பது வெறும் வயல் காணிகள் தான்.
“சிறிசேனா!”
“கௌத ஏ. யக்கடயாகே கறதெர?” உள்ளே யாரோ பெண் குரலின் நச்சரிப்பு.
சிரிசேனா கறாஜ் ஓரமாக எட்டிப் பார்த்து உள்ளே வரும் படி சைகை கொடுத்தான். சிரிசேனாவின் சைகையைக் கவனித்த நாய் அதிகப்படியாக அலட்டிக் கொள்ளாது தலையை முன்னங்கால்களின் இடையே போட்டுக் கொண்டு படுத்தது. சின்னத்தம்பி கேட்டைத் திறந்து பின்பக்கம் போனான்.
வெளியே கருங்கல்லும் தாரும் குத்தக்குத்த நடந்தவ னுக்கு உள்ளேயிருந்த பச்சைப் புற்றரை இதமளித்தது. சுமந்து வந்த பாரத்தை சிரிசேனா ஓடிப்போய்த் தாங்கிக் கொண்டான்.
“பொட்டாக் இண்ட ஓயாலங்கத் டிக்கக் காதாக் கரண்ட ஓணே”
“பா மட்டஹுங்கக் வட தீயெனுவா.”
“மொண வட ஓய் இன்ட கோ.”
“ஹரி விகஹாட்ட எண்ட.”
சாமான்களைக் கொடுத்து விட்டு நின்றான்.
சிரிசேனா திரும்பி வந்து சின்னத்தம்பியின் காதுள் குசுகுசுத்தான்.
“ஏஹேனம் உம்ப லேபர் சுந்தோறுவட்ட லியன்ட”
“மொணவ ஓய். மட்ட லிபியைக் லியண்ட தன்னுவா நம் மம மே யக்கடயா வடட்ட ஆவ நதிம ஹிட்டின்ட புளுவங் நேயத.”
இருவர்களது உரையாட்டையும் கேட்டு விட்ட லான்ட் லேடி வெளியேவந்து இருவரையும் முறைத்துப் பார்த்தாள்.
சிரிசேனாவைப் பார்த்து அவள் கேட்டாள்-
“உம்பட்ட கள்ளத்தோணி மினிஹா லங்க மொண கதாவா?”
“கௌத கள்ளத்தோணி?”
சின்னத்தம்பியின் கேள்வியிலே அனல்,
“உம்ப தமாய்!”
லான்ட லேடியின் பதிலிலே இறுமாப்பு.
வீறு கொண்டவனாய் லேடியின் முகத்திலே சுளீரென்று அறைந்தான். மறு தடவை அடிக்கும் முன்னர் சிரிசேனா அவன் கைகளைக் தடுத்து மடித்துக்கெண்டான். சின்னத் தம்பியோ திமிறினான். லான்ட லேடி குளறினாள்.
வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் வெளியே வந்து லான்ட் லேடியைத் தாங்கிக் கொண்டனர். லான்ட் லேடிக்குப் பட்ட அடி தமக்குப்பட்ட அடியாகவே அந்தக்கும்பலுக்குப் பட்டது.
‘இவனுக்கு எத்தனை திமிர்’
அவளது ஆணவ விமர்சனம் கண்களிலே தொக்கியிருந்தது.
நிலைமை விபரீதமாகும் எண்றெண்ணி நடுநடுங்கிய சிரிசேனா விறுவிறென சின்னத்தம்பியைக் கேட்டண்டை தள்ளிக் கொண்டு வந்தான். படுத்திருந்த நாய் மறுபடியும் வீரியத் தோடு குரைக்கவே செய்தது. அவ்வீட்டுக் குழந்தைப் பெடிச்சி ஒருத்தி கல்லொன்றைக் தூக்கிச் சின்னத் தம்பியின் மண்டையிலே போட்டாள்.
“ங்ணக்”
சின்னத்தம்பியின் தலை சுரீரெனச் சுற்றிற்று.
கல்லெறி விழுந்த இடத்திலே கை வைத்துப் பார்த்தான். இரத்தம் பீறிட்டது. ஆவேசப்பட்டு அக்குமரியைப் பதில் தாக்குதல் போடக் கல்லெடுத்தான். சிரிசேனா பலங் கொண்டு தடுத்தான்.
தன்னுடைய கழுத்தோரத்தில் வைத்திருந்த அழுக்கேறிய கைக்குட்டையைக் கழற்றிச் சின்னத்தம்பியினுடையபண்டைய யில் கட்டினான். அக் கட்டையும் கடந்து சிவப்பு வட்டம் போட்டது.
முதலாளியார் கேட்டார்.
“என்ரா தலையிலை கட்டு.”
”அந்த வீட்டுப் பெட்டை கல்லெறிஞ்சுது.”
“ஏன் உன்னை விசர் நாயெண்டு நினைச்சாளோ?” வழமை போலப் பெரிய நகைச்சுவையைக் கேட்டவனாய்ச் சிரித்தான் மயில்வாகனம்.
பதில் பேசாது பின்சுட்டுப் பக்கம் சென்று அமர்ந்து தலைக்கட்டை அவிழ்த்தான். சூரிய வட்டம் போட்டிருந்த இரத்த அச்சு அந்த அழுக்கேறிய துப்பட்டியில் தென்பட்டது.
– தொடரும்…
– மழைக்குறி, முதற் பதிப்பு: ஜனவரி 1975, ஆர்.எஸ். அச்சகம், யாழ்ப்பாணம்.