மற்றப்படி, எல்லாம் நலம்





ஹலோ மூர்த்தி, சௌக்கியமா?
ஆமா, சௌக்கியம் தான். வீட்டிலேயும் எல்லோரும் நலம்.
அப்போ, மேட்டர் ஒன்னும் இல்ல?.
ஆமா, இப்ப தான் ஞாபகம் வருது. நேத்து ராத்திரி ஒரு வெட்டிங் ரிசப்ஷன் போயிருந்தேன். கோபி மஞ்சூரியன் ஒரே ஆயிலா இருந்திச்சி. காத்தலேயிருந்து வயிறு கடாமுடான்னு இருக்கு. மத்தப்படி வேற ஒன்னும் இல்ல.
துணைவியார் நலமா?
ஆமாம். ஆனா, முந்தாநேத்து அவ வாச கதவை தாண்டும் போது தடுக்கி விழுந்திட்டா. தைலம் தடவினா சரியாகி விடும். முழங்கால் வலி உள்ளது. மற்றப்படி, எல்லாம் நலம்.
மகள் நன்றாக படிக்கிறாளா? பத்தாவதா?
ஆமா, சொல்ல மறந்திட்டேன். அவளுக்கு கொஞ்சம் கண்ணு வலி ஒரு வாரமா இருக்கு. சில பரீட்சைக்காக நடு ராத்திரி வரை இரவுகள் படித்தாள். அதன் விளைவு இருக்கலாம். ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கச் சொன்னேன். டாக்டர் கிட்ட போவணும்.
உங்க மகன் கல்லூரியில் எப்படி இருக்கிறான். ஆஃப்லைன் வகுப்புகள் துவங்கிவிட்டன?
ஓ. மறந்து விட்டேன். கல்லூரிக்கு முதல் நாள் போகும் போது புதிய பைக்கில் சறுக்கி கீழே விழுந்தான். லேசான காயம். மற்றப்படி, எல்லாம் நலம். நீங்க எல்லாம் எப்படி.?. உங்க குரல் என்ன ஒரு மாரியா இருக்கே?
ஆமா , ஒரு வாரமா தொண்டை இப்படி கரகர-ன்னு இருக்கு. டாக்டர்கிட்டே போவனம் . டைம் கிடைக்கிறதில்ல. மத்தபடி நலம் தான் . சரி வச்சிடவா?