மனோகர் மைசூரு

 

1961-ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்த மனோகர், சென்னை ஐஐடி-யில் (IIT Madras) வேதிப் பொறியியல் படிப்பை முடித்தவர். சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலில் முதுகலை அறிவியல் பட்டமும் (M.Sc.), உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றவர்.

மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (CFTRI) விஞ்ஞானியாக முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகப் பணியாற்றி, 2021-ல் ஓய்வு பெற்றார்.

இவருடைய 80-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் உலகளாவிய அறிவியல் இதழ்களில் வெளியாகியுள்ளன.

பணிஓய்வுக்குப் பின் இலக்கிய உலகில் தடம் பதித்த இவரது படைப்புகள் மை-விகடன், குவிகம், திண்ணை, அனிச்சம் போன்ற முன்னணி மின்னிதழ்களில் வெளிவந்துள்ளன.

இவருடைய பின்வரும் மின்னூல்கள் கூகுள் பிளே புக்ஸ் (Google Play Books) தளங்களில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன:

  • சில பயணங்கள் – சில எண்ணங்கள் (பயணக் கட்டுரைத் தொகுப்பு)
  • சிரிக்க சிந்திக்க (சிறுகதைத் தொகுப்பு)
  • சிரித்து வாழ வேண்டும் (நகைச்சுவைத் தொகுப்பு)
  • படிப்பினை (சிறுவர் சிறுகதைகள்)