மன்மதப் பாண்டியன்





(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30
அத்தியாயம்-21
வீரசேனனுக்கும் பீமசேனனுக்கும் கவலை அதிக மாகியது. திருமங்கையிடம் விசாரித்து வந்துவிட்டார்கள். அவள் சொல்வதில் நம்பிக்கையும் இருந்தது. இருந்தாலும் சிறிதளவு சந்தேகமும் இருந்தது. அவள் இருக்கும். மாளிகையைக் கண்காணிக்க வேண்டும் என்று இருவரும் தீர்மானித்தார்கள். குறிப்பாக இரவு வேளைகளில் அவசியம் கவனிக்க வேண்டும்!.

பகலில் இருவரும் வியாபாரிகள் போல நடித்து ஊரின் கடைத்தெருவில் மற்றவரோடு பழகும்போது, பல செய்திகள் உதிரிகளாக அவர்கள் காதுகளில் விழுந்தன. மதுரை மாநகரம் நிறைய ஒற்றர்களுக்கு இலக்காகி இருந்தது.
ஆனைகுந்திக்குத் தெற்கில் உள்ள அனைத்து நாட் டாரும் தங்கள் தங்கள் ஒற்றர்களை மதுரைக்கு அனுப்பி நிலவரம் பார்த்துவரச் சொல்லி இருந்தார்கள்.
விஜய நகரம் அழிந்து அதன் பலம் குன்றிப்போய் ஆனை குந்திக்குள் அடங்கிப் போய்விட்டதால்,
தெற்கில் கப்பம் கட்டிய மன்னர்களும், கட்டாத மன்னர்களும் இனி நாடுகளின் நிலைமை என்னாகும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவல் பெற்றிருந்தார்கள்.
அவரவர்க்கு வேண்டிய ஆதாயங்கள் ஏதாவது கிடைக்குமா. மதுரை நாயக்கர் ஆட்சி மறையுமா, அல்லது அதன் அதிகாரம் குறையுமா என்பனவற்றையெல்லாம் அறிந்துவர ஒற்றர்களை அனுப்பி இருந்தார்கள். இன்னொரு விஷயமும் அவர்களுக்கு ஆவலை அதிகமாக்கியிருந்தது.
விஜயநகரத்தின் பெரும் சொத்துகள் அனைத்தும், தெற்கே எங்கேயோ ஒளித்து வைக்கப்பட்டிருப்பது பலத்த வதந்தியாக எங்கும் பரவிவிட்டது.
அதனோடு, மதுரை ஆட்சியின் பிரதானி அரியநாயக முதலியார் சமீபத்துக் காலமாய் எங்கிருக்கிறார் காணவில்லை என்பது மற்றொரு பேச்சுச் செய்தியாகப் போய்விட்டது.
அந்தச் சொத்துக்களை அவர்தான் எங்கேயோ வைத்துப் பராமரித்து வருகிறார். அது விஷயமாகத்தான் அவர் எங்கேயோ போய் இருந்து வருகிறார் என்பதும் ஒரு பேச்சாக இருந்தது.
இது தவிர. தஞ்சை மன்னர் அச்சுதப்பனின் பகை பற்றியும் பவரும் பேசினார்கள்,
இந்தப் பகையை அடுத்து. பல மன்னர்களும், பாளையத் தலைவர்களும் தஞ்சைப் பக்கம், மதுரைப் பக்கம் என்று இரு கட்சிகளாகப் பிரித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது.
இப்படி மதுரை பலவித வதந்திகளுக்கும் செய்தி களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் இடமாகியிருக்க,
வீரசேனனுக்கும் தர்மசேனனுக்கும் கவலை அதிகமாகி விட்டது.
தெற்கே தென்காசிப் பாண்டியராக இருக்கும் அவர்களது மன்னர் அதிவீரன். பெயர் பெற்றவர். தெற்கு மண்டலத்தில் பலம் வாய்ந்தவர், பெரியவர்.
அவர் எப்போதுமே மதுரைக்கு உடன்பாடோடு இருந்து வருகிறார்.
இதை மற்ற சில பாண்டியர்கள் (வெவ்வேறு பாளையங்களை ஆண்டு வருகிறவர்கள்) விரும்பாமல் இருக்கிறார்கள்.
மதுரை நாயக்கர் ஆட்சியைத் தள்ளிவிட்டு அதன் மூலம் தாங்கள் தனி ராஜாக்களாக வாழ விரும்புகிறார்கள்.
இதன் காரணமாக தஞ்சை மன்னரோடு ரகசியக் கூட்டுச் சேர, சித்தமாக இருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல!
தாங்கள் கூட்டுச் சேர்வதோடு மற்றவர்களையும் சேர்ப் பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மதுரை, கொந்தளித்துக் கொண்டிருக்க.
அதிவீரர் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறாரோ என்றும் வீரசேனனும் தர்மசேனனும் கவலைப்பட்டார்கள்.
“தர்மா! ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. நாம் வந்து இறங்கிய இரவுதான் மன்னர் காணாமல் போயிருக்கிறார்! ஆனால், நம்மோடு உணவு அருந்திவிட்டுப் படுத்துக் கொண்டது நமக்குத் தெரியும். இல்லையா?” என்றான்.
“ஆமாம்!” என்றான் வீரசேனன்.
“அந்த இரவில் யாராவது சத்திரத்தில் வந்து மன்னரைக் கடத்திப் போயிருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் சச்சரவு ஏற்பட்டிருக்கும். நாம் எழுந்திருப்போம், இல்லையா?”
தர்மன் அதை யோசித்துவிட்டு “ஆமாம்” என்று தலை அசைத்தான்.
“எனவே, இப்படி நடக்காதபோது, நமது மன்னரே தான் எழுந்து அந்த நடுநிசி வேளையில் வெளியே போயிருக்க வேண்டும்” என்று நினைக்கிறேன்.”
“ஏன் போகிறார்?”
“இது தெரியாதா! நம் மன்னர்தான் மன்மதப் பாண்டியர் ஆயிற்றே?”
“ஓ!..” என்று விநயமான சிரிப்போடு தர்மன் தலை ஆட்டினான். “ஏதோ பெண் கல்வி சம்பந்தமாய் நூல் எழுதுகிறார் என்று கேள்வி.”
“ஆமாம்! வடமொழியில் இருப்பது போல் நமது மொழியில் அதுபோல நூல் இல்லையாமே!”
“அப்படியா! எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது நாம் ஒற்றுப் பார்க்க வந்த இடத்திலும், அவர் ஏடும் எழுத்தாணியும் கொண்டு வந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது.
“ஆச்சரியமென்ன? படித்தவர்கள் எல்லாருமே கையில் ஏடு இல்லாமல் இருப்பார்களோ! அதுவும் நம் மன்னர் போல் அதிகம் சுற்றவர் கையில் இவ்வாறு இருக்குமே?”
”உண்மைதான்! அவரேதான் எழுதியிருக்கிறார். “கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று!
“ஆமாம்! நீதி நூல் எழுதியவர் இப்போது காம நூல் எழுதி வருகிறார்”
“ஆகா! படித்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ?”
“அதற்காக நாலு இனப் பெண்களை ஆராய்வதில் இருக்கிறார்.”
“நான்கு இனமா?”
“ஆமாம்! போக உணர்ச்சியில் வெவ்வேறு பெண் களுக்கு வெவ்வேறு ருசி உண்டு.
“அப்படியா!”
“ஆமாம்! தானாகவே விரும்புவாள் ஒருத்தி! அழைத்தால் எழுவாள் ஒருத்தி! சல்லாபம் செய்தால்தான் விழிப்பாள் ஒருத்தி! எது செய்தாலும் ஜடமாக இருப்பான் ஒருத்தி! இதெல்லாம் பிறவியிலிருந்து வளர்ந்து வரும் குணங்கள்”
“புரியுது! அதை எல்லாம் ஆய்ந்து வருகிறாரா?”
“ஆமாம்! இதனால் ஒரு இரவுப் பொழுதை அவர் வீணாக விடுவது இல்லை. ஒன்று நூலைப் படிப்பார், அல்லது ஆராய்வதற்குப் போயிருப்பார்
“எங்கே போவார்?”
“மடையா! இதைக்கூடச் சொல்ல வேண்டுமா? பெண்ணைத் தேடி”
“அப்படியானால், வீரா, மன்னர் அன்று இரவும் பெண்ணணைத் தேடிப் போயிருப்பாரோ?”
வீரசேனன் முகம் பளிச்சிட்டது. “இருக்கலாம்! ஆனால் ஏன் திரும்பி வரவில்லை?”
“அதுதான் பிரச்சினை.”
“அவர் போயிருந்தாலும் அதிக தூரம் போயிருக்க, முடியாது.”
‘ஆமாம்! சமீபத்தில் உள்ள தாசிகளைத் தேடிப் போயிருக்கலாம்”
“அங்கே அவருக்கு ஏதாவது நடந்திருந்தால்…”
“அதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.”
“நாம் ஒன்று செய்யலாம்! இரவில் சத்திரத்து அருகே உள்ள தெருக்களில் உலாவலாம்! யார் நம்மை பெண் சுகத்திற்கு அழைக்கிறார்கள் என்று பார்க்கலாம்.”
அன்று இரவில் அவர்கள் தெருக்களில் மெதுவாகச் சுற்றினார்கள்.
அதற்காக நடு யாமத்தைத் தேர்ந்து எடுத்திருந்தார்கள். ஏனெனில் அதிவீரர் அந்த நேரத்தில்தான் போயிருக்க முடியும்.
ஒருவர் பின் ஒருவராக இடைவெளிவிட்டுப் போகும்போது,
“ஐயா!” என்று முன்னால் போன வீரசேனனை யாரோ அழைத்தார்கள்.
ஒரு நடுத்தர வயது மனிதர் ஒடிவந்தார்.
“இரவில் வழி தெரியாது திண்டாடுகிறீர்களா? அல்லது தங்க இடம் வேண்டுமா? வாருங்கள் மாளிகை இருக்கிறது! தங்கிவிட்டுச் செல்லுங்கள்! அற்புதமான சொர்க்கம் கிடைக்கும்”” என்றான்.
“நல்ல இடமா?” என்றான் வீரசேனன்.
‘”ஆமாம் ஐயா! அது போல மாளிகையையும், தண்ணீர்ச் சுனையையும் எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்! வாருங்கள்! நல்ல சரசத்தையும் சல்லாபத்தையும் அனுபவிக்கலாம்” என்றார் வந்தவர்.
வீரசேனன் அவரோடு போக ஆரம்பித்தான். தர்மசேனன் அவனைப் பின்பற்றி வருவான் என்பது தெரியும்.
மாளிகையுள் நுழைந்தார்கள்.
அவனுக்குப் பின்புறம் கதவு மெதுவாக மூடியது. அழைத்து வந்தவர் நின்றுவிட்டார்.
ஒரு கொத்து பெண்கள் ஒடிவந்து அவன் மீது பன்னீர் தெளித்து. பூவைச் சொரிந்து அவனை அழைத்துப் போனார்கள்.
சல்லாப அறையில் அவனைக் கொண்டு விட்டார்கள்.
சந்திர நிலவு போல ஒரு பெண் அவன் கைகளைப் பிடித்து கட்டிலில் இருத்தி அவனிடம் சரசம் ஆட ஆரம்பித்தாள்.
வீரசேனனுக்கு உல்லாசம் தூக்கி வந்தது.
“உன் பெயர் என்ன?” என்றான்.
“சந்திரப்பிரபா!”
“பொருத்தமான பெயர்!”
அவன் சொல்லும்போதே அவள் எழுந்து அவனைப் பலமாக முத்தமிட்டாள்.
அவள் சுவாசத்தில் எழுந்த நறுமணத்தில் அவன் தன் மனதைப் பறிகொடுத்தான்.
அத்தியாயம்-22
பன்னீர், கஸ்தூரி, அத்தர், சந்தனம் என்று பலவித சுகந்த சந்தங்களுடன், அந்த அறை பரிமளிக்க,
அதில் மஞ்சத்தில் மெல்ல மேனியைச் சயன கோணத்தில் ஆழ்த்தி இருகண் விழிகளால் பார்த்துக் கொண்டிருந்த அந்த தாசி,
வீரசேனனைக் கண்டதும் எழுந்து முகமன் கூறி தன்னிருப்பிடம் அழைத்து, மஞ்சத்தில் அமர்த்திக் கொண்டாள்.
வாசனைகள் அனைத்தும் சுலந்து ஏதோ ஒரு விகிதமாய் வீச,
அதில் ஒரு மயக்க நிலை தோன்றுவதை சீக்கிரம் உணர்ந்தான், வீரசேனன்.
அவனை அருகில் இழுத்து, கைகளை நீவிவிட்டு முதல் சல்லாபத்தை ஆரம்பித்தாள், அவள்.
வீரசேனன் அந்த சுகந்த அனுபவங்களை புளகிதமாய் அனுபவித்துக் கொண்டிருக்க-
மனம் மட்டும் எச்சரிக்கை! எச்சரிக்கை! நீயே இதில் முடங்கிவிடப் போகிறாய்! என்று, கட்டியம் கூறியது!
வீரசேனனும் பொறுப்பு மிகுந்தவனாய் தன் ஆசை எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு அவளிடம் சல்லாபிக்க ஆரம்பித்தான்.
“நீ வித்தயாசமாக இருக்கிறாயே!” என்றான், அவன்.
“எப்படிச் சொல்கிறீர்கள்?”
“அழகு மட்டுமல்ல! நீ எங்களை அழைக்கும் முறையும்!”
அவள் சிரித்தாள்.
அவளுக்குப் புரிந்து விட்டது.
பொதுவாக, அந்தி நேரங்களில் வாயிலில் நின்று போவோர் வருவோர் மீது அம்புகளைத் தொடுப்பார்கள். சிலர் கையால் கூட அழைப்பார்கள்.
சிலர் வீதிக்குள் சென்று கையால் தொட்டு இழுத்து விடுவார்கள்.
இந்த முறைகள் எல்லாவற்றையும் தவிர்த்து வீட்டில் இருந்தவாறே அவள ஆடவர்களைக் கவர்ந்து கொண்டிருந்தாள்.
அதற்கு உதவியாகச் சிலர் அவளைப் பற்றித் தனித் தனியாக ஒவ்வொருவரிடமும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
“இதில் மட்டும் நூதனம் இல்லை என்று தொடங்கினாள், சந்திரப் பிரபா. “இங்கே இன்னும் எத்தனையோ புதுமைகளைக் காணப்போகிறீர்கள்! இதுவரை காணாத இன்பங்களைக் காணப் போகிறீர்கள்’ என்றாள்.
இதற்குள் ஒரு பணிப்பெண் இரு குடுவைகளில் மதுவை அவர்களிடம் கொடுத்தாள்.
“பருகுங்கள்?” என்று சந்திரப்பிரபா சொல்ல, அவன் அதைச் செய்யவில்லை.
“உன் பார்வையே போதை கொடுக்கிறது. இது, எதற்கு?” என்று சொல்லி அவளை இழுத்து அணைத்தான்.
“அய்யோ!” என்று பொய்யாக வலி காட்டித் திமிற நினைத்தாள், அவள்.
வீரசேனன் அவளை விடவில்லை.
அதற்குள் அவளது கச்சுவின் முடியை அவனது ஒரு கை அவிழ்க்க, மற்றொன்று அவள் மார்பில் புகுந்து, பெரிய வியாபகமாகப் பரவியது.
“ம்ம்ம்ம்” என்று ஒரு பரவச முனங்கல் அவனை மீறியும் வந்தது.
அவ்வளவு மிருதுவாக இருந்தன அவள் மார்புகள்!
சருமம் எந்த அப்பழுக்கும் இல்லாமல் வழுக்கிவிட்டது.
அவனது கைகளுக்கே போதை ஏறுவதை அவன் உணர்ந்தான்.
அவன் இப்போது இரு கைகளையும் பரிமாறி. தனது திறமைகளை சாமர்த்தியமாக உபயோகிக்க-
அவள் தன்னை மீறி தானே நெகிழ்ந்து போனாள்.
பரவசங்கள் அவள் கண்களை மூடின.
வீரசேனனுக்கு உற்சாகமாக இருந்தது.
சரி! இவளிடம் ஆரம்பித்த உடனேயே இவ்வளவு துணிச்சலாக யாரும் செய்திருக்கமாட்டார்கள்?
இப்போது அவன் செய்வதால் மனம் குமைந்து போகிறாள்.
எவ்வளவோ முயன்றும் முடியாமல் தன்னைத் தானே இழந்து, தனது உடல் சுகங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் பலியாகி விட்டாள்.
இப்போது அவளது மோக வெள்ளத்திலே அவளே அழைத்துச் செல்லப்பட்டாள்.
வீரசேனன் அவளை விடவில்லை!
விட்டால், எங்கே முறுக்கிக்கொள்ளும் நிலைக்குப் போய்விடுவாளோ, என்று நினைத்து-
அவன் அவசர அவசரமாகத் தனது கைவிளையாடல் களை, கீழே கொண்டு போனான்.
இத்தனை சுகம் அதில் உற்பவிக்கும் என்பது அவளுக்குத் தெரியாது போலும்,
அவன் மிருதுவழி, கூடுவழி, மிகக் கூடுவழி என்று வெவ்வேறு வேகவகைகளையும் கையாண்டு அவளை இடையறாது மெய்மறக்கும் நிலைக்குக் கொண்டுபோய்க் கொண்டே இருந்தான்.
அவள் உடம்பு முழுவதும் வெட்கை கொதித்துக் கொண்டு வந்தது.
“அம்ம்… அம்ம்…” என்று மெல்லிதாக முனகினாள்.
உடம்பு அடிக்கடி நெளிந்து அவன் செய்கைக்கு ஜாடை செய்து கொண்டிருந்தன.
வீரசேனனும் சந்தர்ப்பத்தை வீணடிக்கவில்லை. அவளுக்கு இசைவாக செயல்படத் தொடங்கினான்.
கடைசியில் எல்லாவற்றையும் தாண்டி பெண்மையின் மையத்தை நோக்கிப் போனபோது, அங்கே அவள் சித்த நிலையில் இருப்பது தெரிந்தது.
அவனுக்குத தடை சொல்லாமல், அவள் இசைந்தபோது-
“எனக்கு இன்றைக்கு எதுவும் செய்யப்பிடிக்க விலலை” எனறாள்.
“அய்யோ!” என்று பாதி வேதனையாக அவள் கூறினாள்.
“எனக்கு இன்றைக்குத் துக்கநாள்!”
“என் நண்பன் வெளியிலே போனவன், இரண்டு நாளாய்க் காணவில்லை! ஒரே வருத்தமாக இருக்கிறது”
“யார் அந்த நண்பன்!”
“என்னோடு மதுரைக்கு வந்தான்? இங்கே பக்கத்திலே சத்திரத்திலேதான் இருந்தோம். கொஞ்சம் விளையாட்டு புத்தி உண்டு. ராத்திரி வெளியிலே போனான்! அப்புறம் காண வில்லை” என்றான்.
அவள் மேலும் உலைந்தாள்,
“உங்கள் நண்பரைப் பற்றிய விசாரிப்பை அப்புறம் வைத்துக்கொள்ளுங்கள்! இப்போது இங்கே சொர்க்கத்தை அனுபவியுங்கள்!” என்று முனங்கினாள், அவள்,
“அப்படி இல்லை சந்திரப்பிரபா அவன் என் உயிர்! அவன் இல்லாவிடில் எனக்கு எதுவும் ஒடாது!” என்றான்.
“எங்கே போய்விடப்போகிறார்! நிச்சயம் எந்த அநியாயமும் நடக்காது. வாருங்கள்!” என்றாள்.
“இல்லை, சந்திரப்பிரபா! இங்கே எங்கேயாவது ஒரு தாசி வீட்டில் அவன் இருக்கவேண்டும் அவர்கள் ஏனோ வெளியில் விடாமல் வைத்திருக்கவேண்டும்” என்று கூறினான். வீரசேனன்.
“வந்துவிடுவார்! கவலைப்படாதீர்கள்” என்றாள், அவள்.
“அவன் இருக்குமிடம் தெரிந்துவிட்டால் போதும் நிம்மதியாகி விடுவேன் நிச்சயம்?” என்றான். அவன், அவள் மறுமொழி கூறவில்லை.
“உனக்குத் தெரியுமா சந்திரப்பிரபா?” என்றான், அவன்.
“தெரியாது!”
“நிச்சயம் தெரியும் அல்லது இருக்கிற இடத்தையாவது தெரிந்து வைத்திருப்பீர்கள்! சொல்லுங்கள்” என்றான்.
“தெரியாது!”
“நான் நம்பவில்லை நிச்சயம் நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள்! சொல்லுங்கள். அதற்குமேல் நான் உங்கள் ஆசைக்குக் கட்டுப்படுகிறேன்!” என்றான்.
அந்த விஸ்தார கூடத்தில் திருமங்கை ஒரு மஞ்சத்தின் மீது அமர்ந்தாள்.
சேடி ரூபாவதி ஒடி ஓடி வந்தாள்.
“வீரபாளையத்தார் வருகிறார்” என்று பரபரப்போடு கூறினாள்.
திருமங்கை எழுந்து அமர்ந்துகொண்டாள்.
அவசரமாக முகத்தைத் துடைத்து பளிச்சிட வைத்தாள்.
வீரபாளையத்தார் கம்பீரமாக கட்டிடத்துள் நுழைந்தார். நல்ல உயரம்! அதற்குத் தகுந்த தேகக்கட்டு! வயதாகிவிட்டாலும் இன்னும் இளைஞர் போல் தோற்றம் கொடுத்தார்.
மிடுக்கும் துடுக்குமாக நடந்து வீரபத்திரர் சிலை வருவது போல வந்தார்.
“வரவேண்டும் வரவேண்டும்!” என்று எழுந்து கைகூப்பினாள், திருமங்கை.
வீரபாளையத்தார் கைகூப்பி தனது மரியாதையைத் தெரிவித்துவிட்டு-
“சவுக்கியந்தானே!” என்று கூறி மீசையோடு சேர்ந்து பெரிய புன்னகை காட்டி, அவள் எதிரே அமர்ந்தார். திருமங்கை அமர்ந்ததும்,
“தாங்கள் வந்தது ரொம்ப நல்லதாயிற்று நமக்கெல்லாம் இதனால் நன்மை ஏராளம் பிறக்கப் போகிறது!” என்று கூறினார், வீரபாளையத்தார்.
“பிறக்கட்டும்! பிறக்கட்டும்! நம் வம்சங்கள் தழைக்கட் டும்” என்று கூறினாள், அவள்,
“ஆளைப் பிடித்துவிட்டோம். தெரியுமா?” என்றார், வீரபாளையாத்தார்.
“அப்படியா! ஆச்சரியமா இருக்கிறதே இனி நம் அதிருஷ்டந்தானா?” என்று கேட்டாள். திருமங்கை.
“இனி தென்பாண்டியத்தைக் கைப்பற்றிவிடலாம்!” என்றார். அவர்.
“அய்யா! தாங்கள் யாது சொல்கிறீர்கள்? யாரைச் சிறை வைத்திருக்கிறீர்கள்? சொல்லுங்கள்” என்றாள், அவள்.
அவள் முகத்தில் கலவரம் ஓடியது.
அத்தியாயம்-23
சந்திரப்பிரபா அந்த இரவில் உடல் வேகம் தாங்காது தவித்துக் கொண்டிருந்தாள்.
வீரசேனனோ அவளிடம் அந்த நேரத்தில் அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
சந்திரப்பிரபா கடைசியில் உடல் தினவு தாங்காது “முதலில் உடல் சுகத்தைத் தாருங்கள். பிறகு மற்றதெல்லாம்” என்று கூறினான்.
வீரசேனனுக்கு யோசனைகள் பறந்தனர் உண்மையில் சந்திரப்பிரபா துடிக்கிறாள் என்பது தெரிந்து விட்டது. பொதுவாக இது தாசிகளிடம் நிகழாத செயல்! அந்த அளவுக்கு அவன் அவளுக்குப் போக இச்சையைக் கொடுக்க முடிந்தது. சில வித்தைகள் செய்து, அவள் உடலை முறுக்கிவிட்ட வீணை போல் ஆக்கிவிட்டான். இப்போது எங்கே லேசாகத் தொட்டாலும் அவள் பேசுவாள். கொதிப்பாள்! ஆர்ப்பரிப்பாள்.
இந்த நிலையில் அவனுக்கு ஒன்று தோன்றியது.
எப்போது ஒரு பெண்ணுக்குப் போக இச்சையை இந்த அளவுக்குக் கொடுத்து விட்டோமோ, அவள் நாளையும் இதை வேண்டி அவனிடம்தான் வந்து சேருவாள்.
வேறு யார் போகம் செய்தாலும் அது திருப்தியாக இராது.
ஆக, எப்படியும் அவனைத் தேடி வருவாள் என்ற நினைப்பு உறுதி ஆக-
சரி இவளுக்கு இவளது விருப்பத்தைக் கொடுத்து விடுவோம் என்று, அவள் மீது படர்ந்தான்.
அவன், உச்சத்தில் இருந்து இறங்கியபோது-
அவன் புலம்பி முனகி, உடம்பை பல தினுசுகளில் வளைத்து ஒரு போகத்தின் பின் அதிர்ச்சிகளை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
கடைசியில் அவன் அவளை மெல்ல உலுப்பி, “இப்போ சொல்லு யார் இங்கே சிறைப்பட்டிருக்கிறார்கள்?” என்று அதட்டிக் கேட்டான்.
சிறிது நேரம் வரை இங்கும் அங்கும் புரண்டு அவள் புலம்பினாள்.
பிறகு அவள் ஆசுவாசமானாள். வெகு நேரம் இயக்கப்பட்ட வாகனம் போல், அவள் சூடு இழந்தான்.
“இந்தா, சொல்லு!” என்று வீரசேனன் வற்புறுத்த-
“இங்கே எங்கள் எஜமானி வீட்டில் இருக்கிறார். அவள் அவரைச் சிறைப்படுத்தி இருக்கிறாள்” என்ற திடுக்கிடம் செய்தியைக் கூறினாள்.
“அவரை ஏன் சிறைப்படுத்தினாள்? இன்னும் பல நாள் அவரோடு மோகம் துய்க்க ஆசையா?” என்றான் அவன்.
”அல்ல!’ எங்கள் எஜமானி வீரபாளையக்காரரின் அபிமான தாசி ஆயிற்றே! அந்தப் பாளையக்காரர் சொற்படிதான் அவரைச் சிறைப்படுத்தி இருக்கிறார்கள்!” என்றாள்.
“ஆ” என்று மனசுக்குள் ஒலி எழும்ப, வீரசேனனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. வஞ்சகப் பாளையக்காரர் இங்கே யும் வந்துவிட்டாரா? எப்போது வந்தார்? எப்படி வந்தார்? அவருக்கு எப்படி அதிவீரன் இங்கே வந்துள்ளார் என்பது தெரிய வந்தது?
இது ஒரு பயங்கர விஷயமாயிற்றே! நாளைக்கு இதனால் எத்தனையோ விபரீதம் நடக்குமே. சீக்கிரம் மன்னரை மீட்க வேண்டுமே! நேரம் தாழ்த்தக் கூடாதே. இப்படிப் பலவாறாக எண்ணியவன் அவளிடம் விடை பெற்றுப் புறப்பட்டான்.
பெரிய சித்திரக் கூடத்தின் கீழே ஆசனத்தில் அமர்ந்திருந்தார், வீரபாளையாக்காரர்.
எதிரே திருமங்கை சற்று திகைப்புடன் காணப்பட்டாள்.
“சரியான குள்ள நரி இந்தத் தென்காசிப் பாண்டியன்! இலேசில் அகப்பட மாட்டான்! யாரும் பிடிக்கவும் முடியாது. அத்தனை வித்தைகளையும் பிடிப்பது என்றால் இரண்டு விஷயங்களை உபயோகிக்க வேண்டும். நூலையும் தையலையும்!” என்று சொல்லி பலமாகச் சிரித்தார் வீர பாளையக்காரர்.
“நூலும் தையலுமா?” என்று கேட்டாள் திருமங்கை.
“ஆமாம்! நூல் என்றால் தமிழ் நூல், தையல் என்றால் பெண்! இந்த இரண்டும் இருந்தால்போதும், மடக்கி விடலாம். ஆள் மசிந்துவிடுவான்!” என்றார்.
“நூல்களைப் படிக்க ஆர்வமுள்ளவரா?!” என்றாள் திருமங்கை.
‘”ஆமாம்.! அது மட்டுமல்ல; நூல்களை ஆக்கவும் வல்லவன்!”
“அப்படியா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் திருமங்கை.
“ஆமாம்! அதனால் அவனது காம லீலைகளைக் கூட பலர் மறந்து அவனை ரசிக்கிறார்கள்!”
திருமங்கையின் கண்கள் பிரமை தட்டின. தணிந்த குரலில் காற்றை நோக்கிப் பேசுபவள் போல் “ஒரு கவியா அவர்?” என்று கேட்டாள்.
”ஆமாம்! நூதனக் கவி. பெரியவர்களுக்கும் நூல் எழுதுவான். சிறியவர்களுக்கும் எழுதுவான். இன்றைக்கு தமிழ் கற்பதற்கு யாரெல்லாம் பால பாடத்தைப் படிக்கிறார் களோ அவர்கள் எல்லாரும் அவன் எழுதியதைத்தான் ஆரம்ப நூலாகக் கற்றுவிட்டு மேலே போகிறார்கள்! அப்படி ஒரு நீதி நூலை ரொம்ப எளிதாக யாவரும் படிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறான்.”
“அப்படியா!” என்று குதூகலத்துடன் கேட்டாள் திருமங்கை. தங்களுக்கு ஏதாவது மனப்பாடமாகத் தெரியுமா?” என்றான் அவள்.
“ஏன் தெரியாமல்’ என் ஊரில் தமிழ்ப் பாடசாலை வழியாகத்தான் நான் ஆற்றுக்குக் குளிக்கச் செல்வது வழக்கம். ஒவ்வொருநாளும் அவன் எழுதியதைக் கேட்காமல் இருக்க முடியாது. மாணாக்கர்கள் எல்லோரும் முறை வைத்துப் பாடுவார்கள்” என்று சொல்லி-
“இதோ கூறுகிறேன், பார்” என்று ஆரம்பித்தார்.
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்.” என்று பாடி நிறுத்திவிட்டு “எப்படி?” என்றார் வீரபாளையக்காரர்.
“அற்புதம்! அற்புதம் கவிதை என்றால் பண்டிதர்க்கு மட்டும் என்று அல்லாமல் கீழே பாமரர்க்கும் கொண்டு வந்துவிட்டாரே!” என்று ஆர்ப்பரிப்புடன் கூறினான் அவள்.
“இன்னும் என்ன சொல்றான் கேளு!”
“கற்கை நன்றே
கற்கை நன்றே
பிச்சை புகினும்
கற்கை நன்றே!”
திருமங்கை மனத்தின் மகிழ்ச்சி மாளவில்லை! தமிழ்க் கவிதைகள் இப்படி இருக்கலாமே என்று நினைத்திருக் கிறாள். அப்படியே மாற்றிவிட்டாரே அவர்! எளிதாக, எல்லாரும் புரியும்படி சுலபமான சாதாரண வார்த்தைகளில் பாட்டு இயற்றிவிட்டாரே! இனி கவிதைகளுக்கு மனசுகளை எளிதில் திறந்துவிடலாமே! சிக்கல் இல்லாது உள்ளே நழுவிச் செல்லுமே!
அவள் அந்தப் பாட்டுகளை பரவசமாய் ரசிப்பதை வீரபாளையாக்காரர் ரசிக்கவில்லை.
“இப்படிப் பாட்டுப் பாடி எல்லாரையும் பாட வைத்து தென்பாண்டிய நாட்டையே கெடுத்து வைத்துவிட்டானம்மா!
இவன் இந்த மதுரை நாயக்கருக்கு ஒரு பாதம் தாங்கி! அவருக்கே அடிமையாக வாழ்பவன்! இவன் மட்டும் நம் கோஷ்டியோடு சேர்ந்தால் நாயக்கர் ஆட்சியிலிருந்து என் றைக்கோ தப்பியிருப்போம்! இவன் இணங்காமல்தான் நமது லட்சியம் எல்லாம் கெடுகிறது. எனவே, இவன் நமக்குப் பரம விரோதி!” என்றார் வீரபாளையக்காரர்,
திருமங்கை அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர, கேட்டுக் கொண்டிருந்தாளா, தெரியவில்லை.
“மங்கை! உங்கள் தந்தையும் அவனைப் பரம விரோதி என்றுதான் கருதுகிறார். அவனை ஒழித்து விட வேண்டும் என்கிறார்” என்று உரக்கக் கூறினார் வீர பாளையக்காரர்.
அவளை அது உலுப்பி விட்டிருக்க வேண்டும்.
“ஓ சொல்லியிருக்கிறார்!” என்று சொல்லி “இப்போது அந்தப் பாண்டியரை எங்கே வைத்திருக் கிறீர்கள்?” என்றாள்.
“என் மாளிகையில்தான்! பின்னால் கிடங்கு கட்டி பாதாள சிறை வைத்திருக்கிறேனே! அங்கே தள்ளி இருக்கிறேன்!” என்றார் அவர்.
அத்தியாயம்-24
“கிடங்கிலேயா தள்ளி இருக்கிறீர்கள்? அது நேர்மையா?” என்றாள் அவள்!
“ஏன், செய்தால் என்ன?” என்றார் வீரபாளையக்காரர்.
“அதனால் என்ன லாபம்?” என்றாள் மங்கை. சிரித்தார் வீரபாளையக்காரர்!
“ஒன்று அவன் நம் வழிக்கு வரவேண்டும் அல்லது உயிரை இழக்க வேண்டும்” என்று சொல்லிச் சிரித்தார் அவர்.
”சரி! அந்த விஷயத்தை விட்டுத்தள்ளுவோம்! உங்கள் தந்தையிடமிருந்து ஒலை வந்திருக்கிறது. உங்களை வெகு ரகசியமாக தஞ்சையில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று! நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்! நாளையோ, மறுநாளோ புறப்படுகிறீர்கள் இன்று இரவில் நமது மாளிகையில் விருந்து அருந்துகிறீர்கள்!” என்றார்.
இரவு பாளையக்காரர் மாளிகையில் விருந்து கொடுத்தார்கள். வீரபாளையக்காரருக்கு ஒத்துழைக்கும் இன்னும் ஐந்து பாளையக்காரர்களும் வத்திருந்தார்கள். அவரவருடைய மனைவி மாரும் வந்திருந்தார்கள்.
கோலாகலமாக தங்கத் தட்டங்களில் அமர்ந்து உண்டு விட்டு, அவரவர் சிறிது நேரம் அளவாளாவி விட்டு, பிரிந்து போக, வீரபாளையக்காரரின் நான்காவது மனைவி மின் கண்ணாளுடன் தனியே சென்று அவளுடன் சீக்கிரம் சிநேகமாகிக் கொண்டாள்.
இருவரும் வெகு நேரம் பேசி இருந்துவிட்டு, “உங்கள் மாளிகையில் சிறைக் கிடங்கு இருக்கிறதாமே! நான் பார்க்க வேண்டுமே!’என்றாள்.
“ஒ! நானும் அதை இங்கே வந்ததும் போய்ப் ‘ஓ’ பார்த்தேன்! எனக்கு அந்தப் பாதாளத்தில் இறங்குவதற்கே மயக்கமாக வரும். அமிர்தவல்லியை அனுப்புகிறேன்! அவளுடன் போய்ப் பாருங்கள்!” என்றாள்.
அமிர்தவல்லி அங்கே பணிப்பெண். அவள் கையில் சிறிய தீவர்த்தி ஏந்தி, பின்புறம் அழைத்துச் சென்றாள்.
உண்மையில் அது ஒரு பாதாளக் கிடங்குதான் மூன்று முழ அகலப் படிக்கட்டில் எச்சரிக்கையாக இறங்க வேண்டி வந்தது.
பூமியின் கர்ப்பத்துள் நுழைகிறோம் என்று கூட எண்ணம் தோன்றியது. அவ்வளவு அதி ஆழமாகச் சென்றது படிகள்.
கீழே சமதளத்தை அடைந்ததும், அவள் மனம் பதக் பதக் என்று அடித்துக் கொண்டது.
இரண்டு இரும்புக் கதவுகள் அங்கே தென்பட்டன. “உள்ளே யாராவது இருக்கிறார்களா அமிர்தவல்லி?” என்றாள் மங்கை,
தன்னை இவ்வளவு அழகாக, பெயர் சொல்லி பாசத்தோடு அழைப்பதைக் கண்டு அமிர்தத்துக்கு ஒரே மகிழ்ச்சி!
“ஆமாம், அம்மா! ஒருவர் இருக்கிறார்” என்று அவள் சொல்ல-
“இந்தா, அமிர்தம்! என்னை “அக்கா” “அக்கா” என்றே அழை! அம்மா மரியாதை வேண்டாம்” என்றாள்.
மேலும் அது அமிர்தத்தை புளகாங்கிதம் ஆக்கிவிட் டது. கண்ணில் நன்றியும் விசுவாசமும் பொங்க அவளைப் பார்த்தாள்,
“ஆமாம்! நீ என் சகோதிரி மாதிரி” அவளது ஒரு கரத்தைப் பிடித்தாள்.
“தள்ளி நில்லுங்கள் அக்கா! தீவர்த்தி!” என்றாள். “ஆழிக்குள்ளே நான் பார்க்கலாமா?” என்றாள். “இருங்கள்!” என்று சொல்லி முதலில் அவள் பார்த்துவிட்டு வந்தாள்.
“ஆள் மயக்கமாக இருக்கிறான் போல இருக்கிறது. பாருங்கள்!” என்றாள்.
மங்கை நடுங்கிக் கொண்டே கதவின் ஆழியை நெருங்கினாள்.
உள்ளே தீவர்த்தி வெளிச்சம் அடித்துக் கொண்டு பரவியது.
தரையில் கிடக்கும் அந்த உருவம் அதிவீரனா? நம்ப முடியவில்லையே.
அதற்குள் எவ்வளவு இளைத்துக் குற்றுயிராக இருக்கிறார்?
மயங்கியா கிடக்கிறார்?
தாபத்தில் அவள் கண்கள் மருண்டன! தலை சுற்றுவது போல இருந்தது. ‘ஆ’ என்று வெளிவரும் அனுதாப
ஒலியை அவள் அடக்க-
“என்ன? என்ன?” என்று கேட்டு அமிர்தம் அவள் பக்கத்தில் வந்தாள்.
சிறைக்குள் அதிவீரன் தொய்ந்த தாம்புக் கயிறு போல் கிடந்தான்.
அவன் முகம் பாதி மறைந்திருந்தது.
உடல் மெலிந்திருந்தது.
கையும் காலும் துவண்டு போய் மடிந்திருந்தன.
இடுப்புத் துணியின் இடுக்கில் ஏடு ஒன்று ஓரமாகத் துருத்தியிருந்தது.
“ஆ” என்று மனம் அலறியது.
கண்கள் படபடத்தன.
கண்ணீர் ஒரு நதிபோல் உருவாகிக் கொண்டிருந்தது.
அந்தக் கொடுமைக் காட்சி அவளை நிறையத் தாக்கியது போலும். கால் நிற்கப் பெறாமல் சேடி மீது சாய்ந்துகொண்டாள்.
“என்ன அம்மா! இவ்வளவு பயப்படுறீங்களே?” என்று கேட்டாள் அவள்.
திருமங்கை அழுகையை அடக்கிக்கொண்டாள்.
“ஏன் இவரை இங்கே போட்டிருக்கிறார்கள்?” என்று கேட்டாள் பாதிப் புலம்பலாக.
“நமது எஜமானின் எதிரி இவர்” என்றாள் அவள்.
“எதிரியா! உங்கள் எஜமானுக்கு எதிராக என்ன செய்தார்?”
“என்ன செய்தாரோ தெரியாது. இங்கே போட்டு வைத்து, வாட்டுகிறார்கள்!”
“உணவு போடமாட்டார்களா?”
“போடுவார்கள். வெறும் கஞ்சியும், மிளகாயும்தான். அதுகூட வேளா வேளைக்குக் கொடுப்பதில்லை”.
“ஏன் இப்படிச் செய்கிறார்கள்?'”
“பட்டினி போட்டு வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று பார்க்கிறார்கள்.”
“யார் வழிக்கு?”
“எங்கள் எஜமானர் வழிக்கு!”
“அதனால் என்ன லாபம்?”
சேடி மறுமொழி சொல்லாது திகைத்தாள். “இதற்கு எனக்குச் சொல்லத் தெரியாது. நீங்கள் எஜமானரையே கேளுங்கள்!” என்றாள்.
சற்று நேரம் இருவரும் மவுனமாக நின்றார்கள். பிறகு “அம்மா, போகலாமா?” என்றாள் மெதுவாக. இருவரும் படிகளில் ஏறினார்கள். அது வளைவுச் சுருளாக மேலே சென்று வீட்டின் பின்புற முற்றத்தில் கொண்டு போய் விட்டது.
பின் இரவு அது. மேலே கார்த்திகைக் கூட்டம் மினு மினுத்தது. கண்ணாடி போல ஆகாயம்.
முற்றம் பெரிய முற்றம் சலவைக் கல் பாவிய முற்றம் மேற்கு மூலையில் கிணறு இருந்தது. தொட்டிகளும் தேயக்கும் கல்லும் இருந்தன.
ஒருபுறத்தில் துளசி மாடம் இருந்தது.
மேற்கு ஓரமாக ஒரு கதவு இருந்தது! அடுத்த புறத்தில் தெரு இருக்கிறது என்பதை வரிசையாகத் தெரிந்த அந்தக் கட்டிடங்கள் சொல்லின.
சற்று நேரம் அங்கே நின்றுவிட்டு. பிறகு இருவரும் ள்ளே நுழைந்தார்கள்.
“இதோ! இங்கே சாவி வைத்துவிட்டு வருகிறேன். சற்றே இருங்கள் அம்மா!” என்று சேடி இடதுபுறம் இருந்த. அறையின் கதவைத் திறந்து உள்ளே போனாள்.
தீவர்த்தி வெளிச்சத்தில், உள்ளே நிறைய சாவி வளையங்கள் சுவர் முழுதும் பதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அரை நொடியில் சேடி வெளியே வந்தாள். திருமங்கையை அவளது சயன அறையில் கொண்டு விட்டுப் போனாள்.
திருமங்கை சயனித்துக் கொண்டாள்.
விஸ்தாரமான அறை அது!
சாளரங்கள் வெளி நோக்கி இருந்தன.
இதமாகக் காற்று வீசியும் மனது கொதித்தது.
தூங்க முயன்றாள்.
கண்ணை மூட முடியவில்லை,
அடுத்த நொடி அதிவீரன் உருவம் தோன்றி மனதில் கிலேசத்தைக் கொடுத்தது.
பெருமூச்சு வந்தது!
என்ன கம்பீரமான வாலிபன் அவன்! வழிப் பிரயாணம் முழுதிலும் அவனைப் பார்ப்பது ஒரு பொழுது போக்காக இருந்தது.
என்ன கண்ணியமாக அப்போது நடந்து கொண்டான்?
தனது பாதுகாப்பில் இரு பெண்கள் வருகிறார்களே! இவர்களைப் பெண்டாடலாமே என்று நினைத்தானா?
இல்லை!
அவளும் சேடியும் இருக்கும் பக்கம் தலையைக்கூடக் காண்பிக்கவில்லை.
தான் உண்டு தன்காரியம் உண்டு என்று இருந்தான். என்னவோ காம வெறியன் என்று இவனைப் பற்றி ஊரெல்லாம் சொன்னார்களே? ஆனால், என்ன கட்டுப் பாடோடு நடந்து கொண்டான் அவன்!
அவன் தமிழ்ப் பண்டிதனா?
அதுதான் கவிதை மீது அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு!
முகத்தில் சரசுவதியும் லெட்சுமியும் நடமாடுகிறார்கள்!
இப்படிப்பட்ட உத்தம் மனிதரையா கிடங்கில் தள்ளி, வீரபாளையக்காரர் மீது கோபம் வந்தது. இவரது பாளையம், அந்தத் தென்காசி ராஜ்ஜியத்தில் பத்தில் ஒரு பங்குகூட இராது.
அதிவீரனை இங்கே தந்திரமாக சிறைப் பிடித்து வைத்துள்ளார்.
ஆமாம். இவன்தான் அதிவீரன் என்று வீர பாளையக்காரருக்கு எப்படித் தெரிந்தது?
அந்த விஷயம் அவளுக்கு (திருமங்கைக்கு) மட்டும் தானே தெரியும்? அதுவும் கரிசூழ்ந்தமங்கலம் கோட்டைக் காவலரிடம் அதிவீரன் சகா ஒருவன் தவறுதலாசு பெயர் சொல்லப் போய்த்தானே தெரியும்?
அவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
யோசித்தாள். சட்டென்று எதுவும் புலப்படவில்லை ஒருவேளை ஒற்று மூலம் தெரிய வந்திருக்குமோ? அப்படித் தான் இருக்கும்!.
ஒரு நல்ல யாத்திரீகன் போலத்தான் வேடம் தரித்திருந்தான். அல்லது அவனை ஒரு வர்த்தகர் என்று கூறலாம்.
அவன் இப்படி வசமாக மாட்டிக் கொண்டானே.
உறக்கம் வரவில்லை.
மனதில் இப்போது சிலிர்ப்பாக ஒரு எண்ணம் தோன்றியது.
அவனோடு இன்னும் பயணம் செய்ய வேண்டும் போல தோன்றியது.
ஆமாம் அது என்ன இன்பமாக இருந்தது.
அங்கங்கே தங்கி இரவுகளைக் கழித்து, பிறகு ஐவருமாய்ச் சேர்ந்து புறப்படுவது..
குதிரை மீது சும்பீரமாய்ச் செல்லும் அவன் உருவத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறாள்.
குதிரை ஒட்டுவது மட்டும் கலை அல்ல. அதன் மீது அமர்வதும் ஒரு சுலை. அமர்ந்து நான்கு பக்கமும் பார்ப்பது ஒரு கலை….
அவனைப் பொறுத்த வரையில், அவன் செய்த செய்கை எல்லாமே “கலை” ஆகத் தெரிந்தன.
முதல் கோழி கூவியதும் அவளுக்குப் பகீர் என்றது. திடீரென்று ஒரு பரபரப்பு அவளைப் பற்றிக் கொண்டது.
ஏனோ தெரியவில்லை. அதிவீரனின் நிலையை னைத்தால் கண் உருகியது.
எந்தக் காரணம் ஆனாலும், அவனை அடைத்து வைத்திருப்பது சரியாகத் தோன்றவில்லை.
அவனுக்கு அவளே ஏதாவது செய்ய வேண்டும் போல் தோன்றியது.
மனதில் தத்தளிப்புகள் வந்துகொண்டே இருக்க, சட்டென்று எழுந்தாள்.
அறையைத் திறந்து வெளியே வந்தாள்.
இருட்டு உச்சத்தில் இருந்தது. நிசப்தம் வேறு. யாவும் இறந்து ஜடம் ஆனது போல் பிரமை!
பெருமூச்சுகள் வந்தன. யோசித்தாள். பிறகு விரைவாக நடந்து அந்தச் சாவி அறைக்குப் போனாள்.
தொட்டுத் தொட்டுப் பார்க்கும்போது அந்த நீண்ட துறவு கோல் அடையாளம் தெரிந்தது. அதைப் பற்றிக் கொண்டாள்.
அதிவீரனுக்கு உடம்பில் எங்கேயோ ஏதோ ஊர்வது மாதிரி இருந்தது.
கண்ணை விழித்த போது ஆச்சரியமாக இருந்தது யார் அது? அல்லிக் கொடியா? அவள் எப்படி இங்கே வந்தாள்.
ஒரே இருட்டாக இருந்தது. கண்களைச் கசக்கிக் கொண்டு பார்த்தான்.
“ஐயா! நான்தான் திருமங்கை!” என்று மெல்லிதாகக் கூறினாள் அவள்,
“மங்கை?” என்று புரியாதவன் போல் அவன் கேட்டான,
“நான் மங்கை! தங்களோடு மதுரைக்குப் பிரயாணம் செய்தேனே?” என்றாள் அவள்.
இதற்குள் அதிவீரனுக்கு முழு நினைவும் வந்து விட்டது. அந்தப் பழம் காற்றும், அதன் புழுக்கமும், கெட் டுப் போன உணவின் வீச்சமும் மூக்கில் ஏற,
“ஆ! அந்த வீரபாளையத்தான் கிடங்கில் அல்லவா அடைபட்டிருந்தோம்” என்று நினைத்தான் அவன். சடக்கென அவளை நோக்கி, “மங்கையா? என்று கேட்க,
“ஆமாம் சுவாமி!” என்றாள் அவள்.
“இங்கே நீங்கள் எப்படி வந்தீர்கள்?”
“இங்கே நான் ஒரு விருந்தினராக வந்திருக்கிறேன்!”
“எழுந்திருங்கள்! நீங்கள் உடனே வெளியே போக வேண்டும். இங்கே இருந்தால் ஆபத்து” என்றாள்.
”அப்படியா? வெளியே போசு முடியுமா”
“முடியும் வாருங்கள்.”
அவன் தடுமாறி எழுந்தான். சட்டென்று அவள் கை கொடுத்தாள்.
இல்லாவிடில் விழுந்திருப்பான்.
அவனை அழைத்துக் கொண்டு, அவள் வெளியே வந்தாள்.
சுருள் படிகளில் அவர்கள் ஏறினார்கள். மேலே முற்றத்துக்கு வந்தார்கள்.
“இந்தக் கதவைத் திறக்க முடியுமா?” என்றான், அவன், தெருவை நோக்கி இருக்கும் கதவைப் பார்த்து.
“திறக்க வழியில்லை! நீங்கள் சுவர் ஏறித்தான் வெளியே குதிக்க வேண்டும்”.
அதிவீரனுக்கு அதற்குள் சுய தைரியம் வந்துவிட்டது! சுவரைச் சுற்றி வசம் பார்த்தான்.
“அம்மணி! உங்கள் உதவி வேண்டுமே!” என்றான்.
“என்ன உதவி?”
“நான் தொத்தி நிற்கிறேன். நான் கீழே சாயாமல் முன்னால் தள்ளுங்கள்” என்றான்.
இரண்டு முறை அவன் எத்தனித்தான். முடியவில்லை. மூன்றாம் முறை அவன் சாயாமல் இருக்க, அவள் பலத்துடன் முட்டுக் கொடுக்க, அதிவீரன் சுவர் மீது தொத்திவிட்டான்.
மேலே நின்று அவளை ஒரு முறை பார்த்து “நன்றி” என்றான்.
பிறகு மறுபுறம் குதித்தான்.
அத்தியாயம்-25
திரும்பி வந்து மஞ்சத்தில் சயனித்தபோது, திருமங்கைக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவு இல்லை.
பஞ்சணைகள் மீது பலமுறை புரண்டு நிசப்தமான சிரிப்புக் கொத்துக்களைச் சிதறவிட்டாள்.
சமயத்தில் கால்களை உயர்த்தி மாறி மாறி வெறுமையில் உதைத்தாள்.
கைகளில் இன்னும் அதிவீரனைத் தொட்ட உணர்ச்சி தங்கி இருந்தது.
மென்மையாக நாசியில் வைத்து அதன் வாடையைப் பறிக்க முயன்றாள்.
அந்தக் கைப்பகுதிகளை அடிக்கடி தொட்டு அதன் உணர்ச்சிப் பகுதிகளைக் கலைத்துவிட விரும்பவில்லை.
பாதாள அறையில் போய் அவரை உலுப்பி எழுப்பிய வுடன் அவருக்கு எவ்வளவு ஆச்சரியம்?. அவளை ஒரு பார்வை பார்த்தாரே!
அதை மறக்க முடியுமா?
குறுகுறு என்று உள்ளத்தில் புகுந்து அவன் உயிரின் அடிவாரத்தைத் தொட்டது.
அப்புறம் கடைசியில் அவர் ஏறியதும் ஒரு பார்வை பார்த்தாரே-
அதில், ‘மாயமான கணை’ இருந்தது. அவளைக் கட்டிப் போட்டாற்போல மடக்கிவிட்டது.
இன்னும் அதன் சிக்கலில்தான் அவள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அதை ஒவ்வொரு இழையாக எடுக்க வேண்டும். மேலும் அந்தச் சிக்கல் அதிகமாகிறதே தவிர, குறையவில்லை.
அத்தனை இரவும் எண்ணங்களாகவே ஓடியது.
காலையில் எழுந்ததும், தன்னைச் சித்தம் செய்து வீரபாளையக்காரரிடம் விடைபெற்று வெகுவிரைவாகத் தன் மாளிகைக்கு வந்துவிட்டாள்,
வந்ததிலிருந்து ஒரு இடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் தத்தளித்துக்கொண்டே இருந்தாள். சேடி மதனா வாய் புதைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எஜமானிக்கு என்ன நேர்ந்தது?
ஒரு இரவுப் பொழுதுக்குள் என்ன நடந்திருக்க முடியும் என்று யோசித்தாள்.
”ஏது, ஏது, அம்மா! இப்படி சதிர் ஆட்டம் ஆடுகிறீர்களே! இன்னும் சொல்லப் போவதைக் கேட்டால் எவ்வளவு ஆடப்போகிறீர்களோ?” என்றாள்.
“ஏன், என்ன விஷயம்?” என்று தன்னை நிறுத்திப் பேசினாள், திருமங்கை! அவள் அதரம் என்றுமில்லாத குழைவில் குங்குமம் ஆகியிருந்தது. கண்கள் இரண்டும் துள்ளித் துள்ளி கிளி விளையாட்டு ஆடின.
“சொன்னால் என்ன வெகுமதி தருவீர்கள்?” என்றாள். மதனா கண்ணை வளைத்து.
“எதைக் கேட்டாலும் தருவேன்!” என்றாள். திருமங்கை..
“அப்புறம் நழுவக் கூடாது?” என்றாள், மதனா.
“நிச்சயம் மாட்டேன்!” என்றாள், திருமங்கை.
உடனே மதனா அடுத்த அறைக்கு ஓடி உறை போட்ட எதோ ஒன்றைத் தூக்கி வந்தாள்.
ஒரு ஆசனத்தின் மீது அதை நிறுத்தி வைத்தாள்.
திருமங்கை விழிகள் பொங்க அதைப் பார்த்தாள். நிலத்தில் பளபளக்கும் பட்டுத் திரையில் அது போர்த்தப்பட்டிருந்தது.
அதற்கு அவள் மரியாதை கொடுத்த விதமே அது முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டிற்று,
“என்ன இது?” என்று நெற்றி சுருங்கக் கேட்டாள். திருமங்கை.
“தங்களுக்கு விருப்பமானது?”
“கவிதையா?”
“தங்கள் கருத்தைக் கவரப்போவது?”
”உலா நூலா?”
“பார்த்ததும் எப்போதும் எண்ணி மகிழப்போவது?”
திருமங்கையின் ஆர்வம் மீறி வந்தது.
“என்னது மதனா? என்ன?” என்று கேட்சு,
மதனா ஒவ்வொரு கொஞ்சம் அடிவைத்து ஆசனம் அருகில் சென்றாள்.
அபிநயமாக கையை வளைத்து, திரை நீக்கி, அப்பால் வைத்தாள்.
சடக்கென திருமங்கையின் பார்வை அந்தப் பொருள் மீது பாய்ந்தது.
அடுத்தகணம் புருவம் சுழித்தது.
“யார் இது?” என்றாள்.
மீசை முறைப்புடன் ஒரு அரசர் அதில் நின்றிருந்தா பட்டுத்துணி அங்கி தரித்து கழுத்தில் பல முத்து மாலைகள் அணிந்திருந்தாள்.
இடுப்பு ஓரம் உடை வாள் நீண்டிருந்தது.
35 வயது இருக்கும்.
சாதாரணப் பார்வை என்றாலும் உக்கிரப் பார்வை அதில் இருந்தது.
முகத்தில் சிறிது கடுப்பும் இருந்தது.
“யாருடீ, இந்தக் கடுகடு?” என்றாள். திருமங்கை.
“உஸ்ஸ்ஸ்…!” என்று வாயில் விரல் வைத்து ஊதினாள், மதனா.
“யார் என்று தெரிவதற்குள் ஏதாவது சொல்லிவிடாதீர்கள்?”
“யாராம்?”
“உங்கள் உள்ளத்தைக் கவரப்போகிறவர்.”
”இவரா? என்னை நிச்சயம் கவரமுடியாது! மூஞ்சியைப் பார்!” என்றாள்.
”அய்யோ! அம்மா! அப்படிச் சொல்லாதீங்க! நாளைக்கு நேரிலே வந்தால்…”
“யாருடீ, மதனா, சீக்கிரம் சொல்லு!”
தலைகளை ஒருமுறை மரியாதைப் பூர்வமாக வணங்கி,
“தஞ்சாவூர் மன்னர்!” என்றாள்.
“இவரா?”
“இவர்தான்! மகா ராஜராஜ ராஜப் பிரவீண, ராஜ கோலாகல ஸ்ரீஸ்ரீ அச்சுதப்ப ராஜா!” என்று கூறினாள்,மதனா.
“அச்சுதப்பரா? என்று திடுக்கிட்டுக் கேட்டாள்,திருமங்கை
“ஆமாம்! தங்களுக்காக வரையக் சொல்லிக் கொண்டு வந்தேன்,”
திருமங்கை முகத்தில் இருந்த வெளிச்சம் எல்லாம் மறைந்துவிட்டது. அரைவிநாடியில் ஒரு நிழல் தோன்றி விட்டது.
சோகமாக ஒரு மூச்சு விட்டு, எதிரே ஒரு ஆசனத்தில் அமர்ந்துகொண்டாள்.
மதனா திடுக்கிட்டாள்
எஜமானி மகிழ்ச்சி அடைவாள் என்று நினைக்க, அவள் அந்த ஓவியத்தைப் பார்த்ததும் சோர்த்து ஒரு வார்த்தை பேசாமல் நாற்காலியில் போய் அமர்ந்து விட்டாளே.
திகைப்புடன் நடந்து அவள் அருகில் போய், “என்ன அம்மா!” என்று கேட்டாள்.
மீண்டும் பெருமூச்சு விட்டு திருமங்கை, “இவரா அச்சுதப்பன்?” என்றாள்.
“ஆமாம” என்றாள், மதனா!
“ஒரு கவிதைபோல் இருப்பார் என்று நினைத்தால், கடுவன்போல இருக்கிறாரே?” என்றாள். திருமங்கை.
சேடி மதனா மெதுவாகப் பேசினாள். “இல்லை அம்மா! நேரில் பார்த்தால் நன்றாக இருப்பார்!”
“நீ பார்த்திருக்கிறாயா?”
“இல்லை.”
“பின் எப்படிச் சொல்லுவாய்?”
மதனா பேசவில்லை! “இல்லை அம்மா! புகழ்பெற்ற நாயக்க வம்சம்: மதுரை நாயக்கரை எதிர்த்து சுதந்திரமாகவே வாழும் வம்சம்! அந்த வம்சத்தில் இவர் திலகம் போன்றவர்! இல்லாவிடில் உங்கள் தந்தை இந்த சம்பத்தத்திற்கு ஒத்துக் கொள்வாரா?”
திருமங்கை சற்று வாய் திறக்காமல் இருந்தாள். பிறகு.
”மதனா! என் மனம் இப்போது அல்லாடுகிறது”.
“ஏன்?”
“அதுதான் புரியவில்லை!”
“பாருங்கள் அம்மா! நீங்கள் எல்லாவற்றுக்கும் உடன் பட்டு மதுரை வரை வந்துவிட்டீர்கள்! இனி ரகசியமாக தஞ்சாவூர் செல்வதுதான் மிச்சம் உள்ளது. இந்தச் சமயத்தில் தாங்கள் அல்லாடுவது என்றால்..”
ஒரு பெருமூச்சுவிட்டாள். திருமங்கை.
“என்னவோ மதனா? அப்பா கொடுத்த உந்தலில் தலையாட்டிவிட்டு வீரப்பிரதிக்ஞை எடுத்தவள் போல கிளம்பி வந்து விட்டேன்! ஆனால் இப்போது.. என் மனம் பேதலிக்கிறது…”
“ஏன அம்மா?”
“முதலில் இந்த ஓவியத்தைக் கண்டாலே பிடிக்க வில்லை. நான் மணக்கப்போகிறவர் இப்படியா இருப்பார்?”
“அரசர்களுக்கு வீரம்தான் அழகு” என்றாள், மதனா.
“என் மனம் அதை ஏற்க மறுக்கிறது. எனக்கு இவரைப் பிடிக்கவில்லை மதனா!”
“இதை ஊரிலேயே தெரிவித்திருக்க வேண்டும். அம்மா!”
“தெரிவித்திருப்பேன், ஆனால் எனக்குப் பரந்த ஞானம் இல்லாமல் போய்விட்டது”
“இப்போது மட்டும் அது எப்படி வந்தது?”
”ஏன் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து ஓரளவு ஞானம் பெற்றிருக்கிறோம் இல்லையா?”
“இந்தப் பிரயாணத்தில் தங்களுக்கு அப்படி என்ன ஞானம் வந்துவிட்டது?”
“எது. வந்ததோ வரவில்லையோ! ஒரு வீர புருஷனுக்கு உரிய லட்சணங்கள் தெரிந்துவிட்டன.”
மதனா யோசித்தாள்.
பிறகு, விரித்த விழிகளை திருமங்கை மீது பரிமாறினாள்.
“ஓ அவரைக் கண்டு கொண்டதாலா?’
திருமங்கையிடம் மறுமொழி இல்லை! நாற்காலி பஞ்சணையில் நுனியைப் பிடித்துத திருகிக் கொண்டிருந்தாள்.
நெடுங்கால் சத்திரத்து தென்னந்தோப்பு உள்ளே அந்த மூவரும் ஒரு கிடுகின் மேல் அமர்ந்திருந்தார்கள்.
பக்கத்தில் பொதி மூட்டைகள் மூன்று இருந்தன.
தலைப்பாகை தரித்து நன்றாக நாமம் போட்டு வைசியர்கள் போல அவர்கள் தெரிந்தார்கள்.
“இனி அடையாளம் காண விடக்கூடாது! மூன்று பேர் சேர்ந்தும் போகக்கூடாது. இரண்டுபேர் சேர்ந்தும் மற்றொருவர் தள்ளியும் போகவேண்டும். யாரைப் பற்றியும் பிறகே பேசவேண்டும்!” என்றார். அந்தக் குழுவில் தலை போன்றவர்.
அவர் குரலை அறிந்தவர்கள் அவர் யார் என்று கூறி விடுவார்கள்.
தென்காசி வீரர் அதிவீரர்தான் அவர்.
“சுவாமி! தாங்களே தங்ள் குரலை மாற்றிக் கெள்ள வேண்டும்!!” என்று கூறினார். வீரசேனன்.
“ஓ! அதை நான் கவனித்துக்கொள்ளுகிறேன். வீரா! இப்போது நமது லட்சியத்தை முடித்து விட்டு நாம் சீக்கிரம் நமது ஊர் திரும்பவேண்டும். அல்லிக்கொடியை மதுரைக்குள் தான் கொணர்ந்தார்கள் என்பதை அறிவோம். அவள் எங்கே இருக்கிறாள் என்பதைச் சீக்கிரம் அறியவேண்டும்.”
“நீலத் தலைப்பாகைக்காரர் யாரையாவது பிடித்து விட்டால் போதும்!”
“சீக்கிரம் அவர்களைக் கண்டுபிடியுங்கள்!”
“ஏன்?”
“யுத்த அபாயம் நெருங்கி வருவதால்,”
“எதிரி உளவாளிகள் இங்கே நிறைய வந்திருக் கிறார்களே! அதை மதுரை நாயக்கர் அறிந்திருக்க மாட்டாரா?”
அவன் பேசி முடிக்கவில்லை. அவன் கண்கள் நிமிர்ந்து பார்த்து திடுக்கிட்டு நின்றது.
– தொடரும்…
– மன்மதப் பாண்டியன் (நாவல்), முதல் பதிப்பு: 1998, பூம்புகார் பதிப்பகம், சென்னை.