மனைவிகள் இப்படித்தான்..! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,464 
 
 

கிரிக்கு மகா ஆத்திரமானது. மனைவி காயத்ரி நகர்ந்ததும் தாங்காமல் கேட்டு விட்டான்.

நடந்தது இதுதான். காயத்ரி மாமனார் சம்பத் தஞ்சாவூரிலிருந்து வந்திருந்தார். சொன்னார், ‘தமிழ் பேப்பர் வேணாம். இங்கிலீஷ் பேப்பர் வாங்கலாம்மா…’’

நீங்க படிச்சா போறுமா…? எல்லாரும் படிக்கணும்ல …’’

காப்பி வேணாம், டீ போடும்மா…’’

காபி போட்டுட்டேன், பேசாம குடிங்க…’’ மாமியார் கல்யாணி வாய் திறக்கவில்லை.

மாமனாரும் மல்லுக்கு நிற்கவில்லை.

பிள்ளை கிரிக்கு ஆத்திரமானது. வெடித்தான்.

‘’இவ, இப்படிப் பேசறா…? கம்முனு இருக்கீங்க…?

ஏம்மா, நீயும் வாயைதத் திறக்காம இருக்க…?’’

அப்பா சம்பத் சிரித்தார்.

‘’சும்மா இர்றா! என் அப்பா பேச்சை உங்கம்மா கேட்டதேயில்லை. அதை என் மருமகளும் செய்றா. இது ஒய்ஃப்களோட சைக்காலஜி…! பேசாம உன் வேலையைப் பாரு…’’

கிரியிடம் பதிலில்லை.

– ச.பிரசன்னா (20-10-10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *