மனிதாபிமானம் – ஒரு பக்க கதை





மதுரையிலிருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து திருச்சியைத் தாண்டி சென்று கொண்டிருந்தது
இருள் சூழ…இரவு உணவிற்காக ஒரு ரோட்டோர ஓட்டலின் முன்பு பேருந்து நிறுத்தப்ப்பட்டது
ஓட்டவில் இலவசமாக வழங்கப்பட்ட கிடாக்கறி பிரியாணியையும், நாட்டுக் கோழி புரோட்டாவையும் பீஃப் வறுவலையும் ஒரு வெட்டு வெட்டிய பேருந்தின் ஓட்டுநர் உலகநாதன் பேருந்தில் தனது சீட்டில் வந்து அமர்ந்தார்.
பயணிகள் அனைவரும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பேருந்துக்குள் வர, பேருந்தின் இன்ஜினை ஸ்டார்ட் செய்தபடி ஓட்டுநர் உலகநாதன், கண்டக்டரிடம், ‘மாரியப்பா, வண்டியை எடுக்கப் போறேன். பஸ்ஸூக்கு அடியிலே நாய் எதுவும் படுத்திருக்கான்னு பாரு. இருந்தா விரட்டி விடு. பாவம் அடிகிடி பட்டுடப் போவுது’ என்றார் பெரிதாக ஏப்பம் விட்டபடி.
அவரது ஏப்பத்தில், கிடா, பீப், கோழி அயிட்டங்களின் வாசனை தூக்கலாக இருந்தது.
– ஜி.ராதா (11-1-12)