மனம் – ஒரு பக்க கதை





ஏங்க..எதுத்தாப்ல இருக்கிற இந்த காலி இடத்தைப் பாருங்க, முள்ளும் முடிச்சும் எவ்வளவு அசிங்கமா இருக்குது. தினமும் காலைல இது முகத்தில் முழிக்கறதுக்கு கஷ்டமா இருக்குது. பேசாம இந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வேற வீட்டுக்கு போயிடலாங்க…”
உனக்கு விஷயம் தெரியாதா, ரம்யா. இந்த இடத்துக்காரர், பழைய கேஸ் ஒண்ணுல ஜெயிச்சுட்டாராம் அவருக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கப் போகுதாம். அதை வச்சி கூடிய சீக்கிரம் இங்கு வீடு கட்டப் போறாராம்”
அப்படியா? ரம்யாவின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
ஒரு வருடம் ஓடி விட்டது
ஏங்க..இந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வேற வீட்டுக்குப் போயிடலாமா?
ஏன்…ஏன்…?
எதிர் வீடு எவ்வளவு பிரமாண்டமா வசதியா இருக்குது. பாருங்க காலைல இந்த வீட்டைப் பார்க்கிறதுக்கே எனக்குப் பொறாமையா இருக்குது. பேசாம இந்த விட்டைக் காலி பண்ணலாங்க” என்று சொன்ன மனைவியை அதிர்ச்சியோடு பார்த்தான் சித்தார்த்!
– இரா.வசந்தராசன் (ஜனவரி 2013)