மதிப்பெண்






மீனாட்சி சுந்தரம் தனியார் பள்ளியில்,
பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகம்,
காலை முதல் வகுப்பு ஆரம்பித்த நேரம்,
தலை குனிந்தபடி , நான்காம் வகுப்பு ஈ பிரிவு படிக்கும் நிரஞ்சன் நின்று கொண்டு இருந்தான்.
மதிப்பெண் சான்றிதழை , தன் டேபிளின் மீது வைத்து கோவமாக இருந்தார் பள்ளி தலைமை ஆசிரியர் பரந்தாமன்.
“என்ன சார் சொல்றீங்க.? உங்க பையன் மார்க் வர வர ரொம்ப கம்மியாகுதுன்னு உங்களுக்கு எதுவும் கவலை இல்லையா ? நல்லா படிச்ச பையன் நிரஞ்சன். வகுப்புல முதல் மாணவனா வருவான். இப்போ என்னன்னா ஒவ்வொரு பாடத்திலும் பாஸ் மார்க் வாங்கவே சிரம படுறான். அவனுக்கு வேற எதுவும் பிரச்சனையா ? நீங்களும் இதுவரை எங்க கிட்ட எதுவும் கேக்கல? ஏன் சார் என்னாச்சு ? “ என்று நிரஞ்சன் மீது இருந்த அக்கறையோடு , அவன் பெற்றோரிடம் கேட்டார் பரந்தாமன் தலைமை ஆசிரியர்.
நிரஞ்சனின் அப்பா வரதராஜன் – அம்மா சுமதி இருவரும் தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறார்கள்.
இருவருக்கும் நான் தான் பெரிய ஆளு அதிகம் சம்பளம் வாங்குறேன் என்ற மமதையில் இருக்கின்றனர். இப்போது அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டும்.
இருவரும் நல்ல கணவன் – மனைவியாக தான் இருந்தனர். ஊரார் பேச்சை கேட்டு இருவரும் யார் பெரியவர் என்ற போட்டியில் ஓடி கொண்டு இருக்கின்றனர்.
இவர்களின் போட்டியில் பெற்ற பிள்ளையை கவனிப்பதில் நேரம் ஒதுக்குவது இல்லை.
“சார் , உங்க கிட்ட தான் , கேக்குறேன். ரெண்டு பேரும் எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம் .பதில் சொல்லுங்க ? “ என்று தலைமை ஆசிரியர் பரந்தாமன் கேட்டார்.
“அவரு கேக்கலையா சார் ! “ என்று சுமதி கேட்டாள்.
“அவ கேக்கலயா சார் ? “ என்று வரதராஜன் கூறினான்.
இருவரின் பேச்சில் தலைமை ஆசிரியர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்னை என்ன என்பதை சட்டென புரிந்து கொண்டார்.
“அது சரி , பிரச்சன உங்களுக்குள்ள தான் இருக்கு போல ! நீ கவனிக்கலையா என்று இருவரும் கேட்பதில் இருந்தே தெரியுது. பையன் நிரஞ்சன் மதிப்பெண் குறைய காரணம் நீங்க ரெண்டு பேர் தான் போல! “ என்று தலைமை ஆசிரியர் பரந்தாமன் கூறினார்.
“அதெல்லாம் என் மேல எந்த தப்பும் இல்ல. இவ வேலைக்கு போய் என்னைய விட அதிகமா சம்பளம் வாங்கிற திமிரு , பெத்த பிள்ளைய கவனிக்காம விட்டுட்டா. அதான் நான் வேலைக்கு போறேன் குடும்பத்த நடத்துற அளவுக்கு சம்பளம் வாங்குறேன் , அத வச்சி சமாளிக்காம , நானும் சம்பாதிப்பேன்னு இப்படி பையன் படிப்பில விளையாடுறா.” என்று வரதராஜன் கூறினார்.
“அது ஏன் ? பொம்பளைங்க வீட்டில் தான் சும்மா இருக்கனுமா? நாங்க வேலைக்கு போய் எங்க தேவைக்கு நாங்க பணம் சம்பாதிக்க கூடாதா? ஒவ்வொரு செலவுக்கும் இவர் கைய எதிர் பார்த்து நிக்க முடியாது. நான் நல்லா படிச்சிருக்கேன். அதுக்கு தகுந்த வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன். அவர விட நான் அதிகமா சம்பாதிக்கிறேன் அதான் அவருக்கு பிரச்சன” என்று சுமதி கூறினாள்.
இவர்கள் இருவருக்கும் வாழ்க்கை பாடத்தை புரிய வைக்க நினைத்தார் தலைமை ஆசிரியர் பரந்தாமன்.
ஆனால் அதற்குள் அழுகையோடு நிரஞ்சன் தன் பேச்சை ஆரம்பித்தான்.
“இப்படி தான் சார். வீட்ல ரெண்டு பேரும் சண்ட போடறாங்க. சண்ட போட்டு தனி தனியா போய்றாங்க. நானும் தனியா இருக்க வேண்டிய நிலைமை வந்திருது. ரெண்டு பேரும் என்கிட்ட சிரிச்சு பேசி பல மாசம் ஆய்ருச்சு. லீவு நாலா இருந்தா கூட , ரெண்டு பேரும் தனியா வெளியில போய்றாங்க. என்னைய தனிமைல விட்டு போறாங்க. நல்லா இருந்த அப்பா அம்மாக்கு என்ன ஆச்சு என்று எனக்கு தெரியல. காசு தான் முக்கியம் , காசு சம்பாதிச்சா போதும்னு நெனைக்கிறாங்க. பெத்த பிள்ளைய கவனிக்க நேரம் இல்ல. நேரம் இல்ல என்பது பொய். நேரம் இருக்கு , நான் தான் பார்க்கணுமா ? நீ பார்க்க வேண்டியது தானே ? என்று இருவரும், அதற்க்கு ஓர் சண்ட போட்டு வீட்ல இருக்கிற பொருளை உடச்சிட்டு போய்றாங்க. காசு முக்கியம்னு நெனைக்கிற இவங்களுக்கு எதுக்கு குழந்தை. என்னைய ஹாஸ்டல்ல சேர்த்து விட வேண்டியது தான. என் கூட படிக்கிற பசங்க அம்மா அப்பா வந்து ஸ்கூல் முடிஞ்சு கூட்டிட்டு போறாங்க. ஆனா நான் பஸ்ல போறேன். நான் வீட்டுக்கு வந்துடேனா இல்ல வரலைனு கூட கேக்கல. நானும் நல்லா படிச்சு இவங்கள மாதிரி காசு தான் முக்கியம்னு போகுறதுக்கு பதிலா , நல்ல படிக்காம இருந்தா நல்லா இருப்பேன்ல.” என்று நிரஞ்சன் தன் மனதில் இருந்த வலியை கொட்டி தீர்த்து , தாரை தாரையாக கதறினான்.
“இப்படி ஒரு பொக்கிசத்த பிள்ளையா பெத்து , அழ வைக்கிறீங்களே. இப்போ அவன் பேசுன பேச்சு தான் உங்களுக்கு ஒரு வாழ்க்கை பாடம். வாழ்க்கையில் நல்ல மதிப்பெண் எடுக்க முயற்சி பண்ணுங்க. படிப்புல அவன் நல்ல மதிப்பெண் எடுக்க கூடிய மாணவன் தான் என்பதை நிருபித்து விட்டான். இனிமே நல்ல மதிப்பெண் எடுப்பது உங்க இருவரின் கையில் தான் உள்ளது.” என்று தலைமை ஆசிரியர் பரந்தாமன் கூறினார்.
வரதராஜன் – சுமதி இருவரும் , “என் புள்ள! , என் புள்ள! “ என்று மீண்டும் ஆனந்த கண்ணீருடன் சண்டை யிட்டனர்.
“இனிமே சண்டை போட மாட்டோம். உனக்காக உன் கூடவே இருந்து உன்னை நல்லா பார்த்துப்போம்.” என்ற இருவரின் வாக்கு மூலம் நிரஞ்சனின் மனதை சற்று தேற்றியது.
# வீட்டில் குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர் சண்டை இட வேண்டாம். அது அவர்களின் மனதை பாதிக்கும்.
# குழந்தைகளின் தேவை அல்லது அவர்களுக்கு வேறு பிரச்சனைகள் உண்டா என்பதை பெற்றோர்கள் அறிய வேண்டும்.
# குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
![]() |
என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க... |