மஞ்சல் கலர் நோட்டீஸ்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2026
பார்வையிட்டோர்: 1,453 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

விடியல் காலை:

அவன் கண் விழித்தவுடன் அவன் மனது ஓட ஆரம்பித்துவிட்டது. அவன் சொந்த ஊருக்கு போய் 9 மாதங்கள் ஆகிவிட்டது. அம்மா, அப்பாவை பார்த்து 9 மாதங்கள் ஆகிவிட்டது. சொந்த ஊரு மண்ண மெதுச்சி 9 மாதங்கள். அன்று வெள்ளிக்கிழமை. அலுவலகம் மாலை 4 மணிக்கு முடிந்தவுடன் ஊருக்கு போகவேண்டும் என்ற ஆசை. சனி, ஞாயிறு விடுமுறை தான். சொந்த ஊரை பார்க்க, அம்மா அப்பாவை பார்க்க மனம் துடித்தது. இந்த எண்ணங்கள் தான் அவன் மனதில் காலை கண் விழித்தவுடன் அவன் மனதுக்குள் ஓட ஆரம்பித்தது. உர்ச்சகத்துடன் படுக்கையை விட்டு துள்ளி எழுந்தான்.

வேலை நேரம்:

அவன் அலுவலகத்தி வேலை செய்துகொண்டு இருக்கும் போது என்ன ஆச்சோ தெரிய வில்லை அவனுக்கு ஊரை பற்றித்தான் நெனப்பு. எப்போது 4 மணி ஆகும் என்று காத்திருந்தான். அவன் காய் கடிகாரத்தை திரும்ப திரும்ப பார்த்தபடி இருந்தான். அன்றையதினம் கடிகார முட்கள் சோம்பேரி தனமாக சுற்றி வருவதை உணர்ந்தான். ஏதோ ஒரு உணர்வு அவனை சொந்த ஊர்ப்பக்கம் இழுப்பதுபோல உணர்ந்தான். அவனுக்கு நல்ல வேலை கை நெறைய சம்பளம். அவனை உருவாக்கியது அவன் பெற்றோர்கள்தான். மாலை நரம் நெருங்க நெருங்க ஆர்வம் கூடியது ஊருக்கு போக.

மணி 4 ஆகிவிட்டது:

சின்ன முள் 4ஐ காட்டியது, பாரிய முள் 12ஐ காட்டியது. 4 மணி ஆகிவிட்டது என்ற பேரானந்தத்தில் மிச்சம் இருந்த வேலையை கட கடவென முடித்தான். டீம் லீடரிடம் சொல்லிவிட்டு புறப்பட ஆரம்பித்தான். ஐடி கார்டுஐ சுருட்டி அவன் கருப்பு பைக்குள் வீசினான். காதலியை பார்க்க போகும் காதலன் முகன் போல அவன் முகம் இருந்தது. பயோ மெட்ரிக் இல் ஆல்காட்டி விரலை அழுத்திவிட்டு கிளம்பினான். அலுவலகத்தை விட்டு வெளிய வந்தவன் ஒரு மாபெரும் சுதந்திரத்தை உணர்ந்தான். சுத்தமான காற்றை சுவாசிப்பது போல பெரும்மூச்சு விட்டான். 5 மணி நேரம் பயணம் செய்யவேண்டும் அவன் சொந்த ஊருக்கு சென்றடைய. பஸ்ஐ பிடிக்க பேருந்து நிலையம் விரைந்தான்.

பஸ் பயணம்:

பஸ்ஐ பிடித்து ஜன்னலோரம் சீட்டு பிடித்து உக்கார்ந்தான். சொர்கத்தை பிடித்து உக்கார்ந்ததை போல உணர்ந்தான். சிரித்த முகத்துடன் டிக்கெட் வாங்கிக்கொண்டான். பேருந்தில் இளையராஜா பாடல்கள் பாட ஆரம்பித்தது. பெரும்பாலும், பேருந்துகளில் இளையராஜாவின் பாடல்கள் பாடவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. பஸ் குலுங்கி குலுங்கி ஓடுவதும், இளையராஜாவின் பாட்டும் அவனுக்கு சிறுவதில் தொட்டிலுக்குள் உறங்குவது போல உணர்வு. ஊரையும், அம்மா அப்பாவை பார்க்க போகும் ஆர்வம் இருமடங்கு ஆகியது.

ஊருக்கு வந்தவன்:

அவன் சொந்த ஊர் பெயர் மகிழம்பட்டி. மகிழிச்சியான மக்கள் வாழ்கின்ற ஊர் என்று அர்த்தம். மகிழம்பட்டி பேருந்து நிலையம் வந்ததும் குடு குடுவென இறங்கி வீட்டுக்கு வேகமாக நடந்தான். மகிழ்ச்சியில் திக்கு முக்குகாடினான். வீட்டின் கதவை தட்டினான், அப்பா கதவை திறந்தார். வந்துட்டியாப்பா, வா, உள்ள வா, என்று சிரித்தார் அப்பா. அந்த சிரிப்பில் ஒரு சோகம் இருந்தது. அப்பாவின் முகம் வாடி இருந்ததை அவன் கவனித்தான். அம்மாவை கண்டவுடன் மகிஷ்ச்சியோடு நலம் விசாரித்தான். அம்மாவும் அவனை கட்டித்தழுவி வரவேற்றாள். அம்மாவின் முகம் வாடியிருப்பதையும் மகிஷ்ச்சியாக இருப்பது போல நடிப்பதையும் கண்டு புரிந்துகொண்டான்.

மஞ்சல் கலர் நோட்டீஸ்:

குளிச்சிடுவா சாப்பிடலாம் என்றல் அம்மா. கணக்கு நோட்டில் கணக்கு அழுத்திக்கொண்டு இருந்தார் அப்பா. பழைய சந்தோசம் அவன் மனதி இல்லை. குளிக்க சென்றவன் கை கடிகாரத்தை கழுற்றி டிவி டேபிள் மீது வைத்தான். அந்த டேபிள் மீது ஒரு மஞ்சள் நோட்டீசில் அவன் பெயர் எழுதி இருந்தது. அவன் பெயர் சதிஷ். மஞ்சள் நோட்டீஸ்ஐ பிரித்து படித்தான் சதிஷ். “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சதிஷ் கல்லுரி படிப்பு செலவிற்கு கல்வி கடன் (education loan) ஆறு லச்சம் வாங்கியது, இப்பொது வட்டி மீது வட்டி சேர்ந்து 20 லச்சம் ஆகிவிட்டது என்று எழுதி இருந்தது”. “பல முறை நோட்டீஸ் அனுப்பியும் 20 லச்சத்தை கட்டவில்லை என்பதால் அவர்கள் வாழ்ந்த சொந்த வீட்டை இன்னும் 1 மாதத்தில் ஜப்தி செய்யவேண்டும் என்று எழுதி இருந்தது”.

இதை படித்தவுடன் சதிஷ்கு தலை சுற்றியது. வீடு வாசல் இல்லாமல் நடு தெருவில் நிற்பது போல உணர்ந்தான் பி. சதிஷ் குமார் BE…

1 thought on “மஞ்சல் கலர் நோட்டீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *