கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 3,256 
 
 


(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும். 

கோழித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த ராமநாதன் பயந்து, நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான். ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற் சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் – கட்டில். 

“என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?” விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான். 

‘ஏதா ‘றோ மில்லி’க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!” இன்னமும் பயந்தபடியே முணுமுணுத்தான் சுந்தர். 

றோ மில்லைச் (Raw Mill) சுற்றிப் புகை கவிந்து கொண்டிருந்தது. இரண்டு பேரும் புகை மூட்டத்தினுள் சிக்கினார்கள். ஒவ்வொன்றாகத் தூரத்தே எரிந்து கொண்டிருந்த விளக்குகளும் மெல்ல அணைந்து தொழிற்சாலை இருளாகியது. ‘சைரன்’ மூன்று முறை அலறியது. 

“நான் ஒருக்காப் போய் இஞ்சினியருக்கும் போமனுக்கும் சொல்லிப் போட்டு வாறன்” சுந்தர் படிகளினின்றும் கீழே இறங்கினான். 

விழுந்து கிடந்த ராமநாதன் – எழுந்து என் மீது படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு மீண்டும் குந்தினான். 

சற்று நேரத்தில் இஞ்சினியரும் போமனும் வேறு சிலரும் கதைத்துக் கிழித்தபடியே துடுக்குத் துடுக்கு என்று படிகளில் ஏறிவந் தார்கள். உள்ளே றோ மில் வெடித்திருக்க, வெளிப்புறத்தைச் சுற்றி ரோச் லைற்றை அடித்துத் துருவித் துருவித் தடவினார்கள். ராம நாதனும், சுந்தரும் கை கட்டியபடியே அவர் களின் பின்னால் சுற்றினார்கள். இஞ்சினியர் ஏதோ இங்கிலிஷில் வெளுத்துக்கட்ட போர்மன் ‘ஆ… ஆ…’ என்றார்.

“பெயரிங் (Bearing) போயிட்டுது போல கிடக்கு!” இஞ்சினியர் சொல்ல,

“மனேஜருக்கு சொல்லிட்டியளோ?’ என்றார் போர்மன். 

“ஆருக்குத் தெரியும், என்ன வெடிச்ச தெண்டு? ஒரு ஊகம்தான். பெயரிங் பெயில்யர் ஆகியிருக்கலாம் எண்டு சொன்னனான். அது சரி இப்ப மணி என்ன ஆகுது?” 

“விடியப்புறம் நாலு மணியாப் போச்சு.” 

“விடிய ஆறு மணி மட்டிலை மனேஜர் வாற தெண்டு சொன்னவர். அதுக்கிடையிலை ஸ்ரோ ரிலை இருக்கிற நாலு பெயரிங்கையும் எடுத்துக் கொண்டு வந்து மேலுக்கு வைக்க வேணும். ஒவ்வொண்டும் பிணத்தின்ரை பாரம் இருக்கு மெண்டுதான்” இஞ்சினியர் சொல்லி முடிப்ப தற்குள், 

“தம்பியவை ஸ்ரோரிலை போய், ஸ்ரோர் கீப்பர் மணியத்திட்ட நான் சொன்னதெண்டு சொல்லி, றோ மில்லின்ர நாலு பெயரிங்கையும் எடுத்துக்கொண்டு வாங்கோ. சரியான பாரமா இருக்கும். எங்கையும் போட்டுக் கீட்டு உடைச்சுப் போடாதயுங்கோ! மற்றது சுந்தரும் ராமநாதனும் ‘அவுட்’ பண்ணி வீட்டை போயிடாதையுங்கோ. ஆக்கள் தேவை வரும்” என்று அதிகார தோரணை யில் போர்மன் சொன்னார். 

அதுவரையும் பேசாமடந்தையாக நின்றவர்கள், இஞ்சினியரும் போர்மனும் கீழிறங்கிப் போனவுடன் வளவளவென்று கதைக்கத் தொடங்கினார்கள். 

“என்னடாப்பா? நல்ல ‘பெட்’ ஒண்டு வைச் சிருக்கிறியள்” வந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் என் மீது துள்ளி இருந்தார்கள். நான் பாரம் தாங்க மாட்டாமல் கிரீச்சிட்டேன். “என்ன பிறாண்ட் இது? நியூ மொடல் போலக் கிடக்கு! ஒரு பத்தாயிரம் பெறுமோ?” என்று நையாண்டி செய்தார்கள். எனக் கும் இந்த அரைக்கும் இயந்திரமான ‘றோ மில்லு’க் கும் ஆறு வருஷப் பழக்கம். தொழிற்சாலை கட்டி முடிந்த நாள் முதலாக இங்குதான் என்னுடைய இருப்பு. இந்த நாலு மாடிக் கட்டிடத்தின் உச்சியில் ஒரு கம்பீரமான ராஜா போல வீற்றிருப்பதே ஒரு விசித்திரமான அனுபவந்தான். இந்த செக்ஷனில் வேலை செய்பவர்களின் சாப்பாட்டிடம், விளையாட் டிடம், படுக்கை எல்லாம் நான்தான். அவர்களின் மகிழ்ச்சி, துக்கம், இரகசியம் எல்லாவற்றிலும் நானும் சமபங்கு கொண்டிருக்கிறேன். 

கீழே காலைத் தேநீர் எடுக்கப் போயிருந்த ராம நாதன் பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி மேலே படியேறி வருகின்றான். 

“யூக்கிலிட்டே யூக்கிலிட்டே வா வா பாறாங்கல்லை ஏத்திக்கொண்டே வா வா’ 

அவன் முன்பு ‘கிறஷரிலை’ வேலை செய்தவன். ‘குவாறி’யில் இருந்து ‘யூக்கிலிட்’ ஏற்றி வரும் கல்லுகளை கிறஷரிற்குள் போடுவது அவன் வேலை. தனது பழைய நினைவுகளை சினிமாப் பாட்டுப் பாணிக்கு மாத்திப் பாடுவான். அபூர்வமாக எப்போதாவது இப்படி இயந்திரங்கள் உடைபடுவ தால் நீண்ட நேரம் ‘ஓவர் ரைமுடன்’ ஓய்வு கிடைக் கும் என்பதில் அவனுக்குக் குஷி. தேநீரை என் மீது கொட்டிச் சிந்தி துள்ளிக் குதித்துப் பாடி னார்கள். அவன் தேநீருடன் சுடச்சுட இன்னுமொரு சுவையான செய்தியையும் எடுத்து வந்திருந்தான். 

“ஸ்ரோர் றூமில் நாலு பெயரிங்கையும் காணேல்லையாம்!” 

அந்த மகிழ்ச்சிகரமான செய்தியைக் கொண் டாடிக் கொண்டிருக்கையில், மனேஜர் தனது வண்டி யையும், தொந்தியையும் தூக்கிக் கொண்டு ஒரு யானை அசைவது போல அசைந்து, புஸ் புஸ் என்று இரைந்து நாலாவது ஃப்ளோரினுள் காலடி எடுத்து வைத்தார். 

“யூக்கிலிட்டே யூக்கிலிட்டே வா வா
பாறாங்கல்லை ஏத்திக்கொண்டே வா வா
வரும்போது கவனமாக வா வா
யூக்கிலிட்டே யூக்கிலிட்டே வா வா” 

‘வரும்போது கவனமாக வா வா’ என்று அவர்கள் பாடிக்கொண்டிருக்கும் போது – வாசலில் கிடந்த கதிரையுடன் இடறுபட்டு விழுந்தார் மனேஜர். தொழிலாளர்களின் ‘பைலா’ அவருக்குக் கோபத்தையூட்டியது. 

“இதென்ன ஒரே டஸ்ற்றாக் கிடக்கு. உங்கட கண்ணுக்கு இதொண்டும் தெரியேல்லையோ? கெதியிலை கிளீன் பண்ணுங்கோ” சொல்லிக் கொண்டே றோ மில்லுக்குக் கிட்டப் போனார். ராமநாதனையும், சுந்தரையும் தவிர, மிச்ச எல்லாரும் மடமடவென்று நழுவிக் கீழே ஓடினார்கள். ‘லடர்’ ஒன்றை றோ மில்லிற்கு அருகாக அணைத்து அதன் மீது ஏறி றோ மில்லின் உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே கையை நுழைத்து ஏதோ ஒன்றைத் தட்டி விட்டார். அது சத்தம் போட்டுக்கொண்டு உள்ளே விழுந்து மேலும் புழுதியைக் கிளப்பிற்று. 

சற்று நேரத்தில் ஸ்ரோர் கீப்பர் மணியம் பத களித்தபடியே வந்தார். மனேஜர் தாறுமாறாக அவரைப் பேசினார். கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டி அழுவாரைப் போல நின்றார் மணியம். 

“ஒரு நாளையின்றை ஃபக்டரி புறடக்ஷன் என்னெண்டு உமக்குத் தெரியுந்தானே? நாலு வருஷமா என்னெண்டு காணும் கணக்கெடுப்பு நடத்தினனீர்?” 

“சேர்! குறை நினையாதையுங்கோ. எனக்கு முன்னுக்கிருந்த ஸ்ரோர் கீப்பரும் பெயரிங்கிற்கு நேரை ஸ்ரொக் சரியெண்டு ரிக் பண்ணியிருந்தார். நானும் அதைப் பாத்திட்டு, இவ்வளவு நாளும் செய்து போட்டன் சேர்.” 

“அவர் செய்ததைப் பாத்து நீரும் செய்யிறதுக்கு உமக்கு ஒரு சம்பளம் தரவேணுமோ? ஒரு பெயரிங் கிட்டத்தட்ட நாப்பதாயிரம் மட்டிலை வரும். ஜேர்மன் புறடக்ற்’ 

நாளைக்கு ஜெனரல் மனேஜர் கொழும்பிலை யிருந்து ‘ஃப்ளைற்’றிலை வாறார். அவருக்கு உம்முடைய நாடகத்தை நடிச்சுக் காட்டிப் போட்டு, வீட்டிலை போய் இருந்து றிலக்ஸ் பண்ணும்.” 

“ஐயோ அப்பிடிச் செய்து போடாதையுங்கோ, சேர்! நான் பிள்ளை குட்டிக்காரன். எங்களுக் கெண்டு ஒரு பிரச்சினை வரேக்கை நீங்கள்தான் சேர் ‘பெயரிங்’காக இருந்து எங்களைத் தாங்கிப் பிடிக்க வேணும்.” 

பொதுவாகக் கிழக்கு முஸ்லிம்களிற் பெரும் பாலோர் விவாசாயத்தினையே தமது பிரதான தொழி லாக இன்றுவரை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மீன்பிடி, வர்த்தகம், நெசவு, கைவினைத் தொழில்கள் என்பனவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக கல்வித்துறை முன் னேற்றமடைந்துள்ள காரணத்தினால், கணிசமான தொகையினர் அரச உத்தியோகங்களையும் வகித்து வருகின்றனர். 

மிகச் சமீப காலம் வரை, விவசாய நடவடிக்கை கள் யாவும் நிலப்பிரபுத்துவ முறைமையில் அமைந் திருந்தன. போடிமார், முல்லைக்காரர், ஒற்றி பிடிப் போர், குத்தகைக்காரர், வயற்காரர், கூலி விவசாயிகள் எனும் அடிப்படையில் அவர்கள் இயங்கி வந்தனர். 

சமூக வாழ்வில் பள்ளிவாசல் மிகவும் முக்கி யத்துவம் பெற்று வந்துள்ளது. பள்ளிவாசல் நிர்வாகி களான மரைக்காயர்மார் மிகவும் செல்வாக்குடை யோராயிருந்தனர். ஊராரின் பிணக்குகளைத் தீர்த்தலிலும், பொது விடயங்களில் வழிகாட்டுதல் களைச் செய்வோராயும் அவர்கள் விளங்கினர். 

இம்மக்களின் குடும்ப உறவுமுறை குடிமுறைப் பட்ட தாய்வழி முறையாகும். இவற்றையெல்லாம் விளக்குகிறது முதலாம் அத்தியாயம். 

நாட்டாரியல் பற்றிய பொது விளக்கமொன்றைத் தருகிறது இரண்டாம் அத்தியாயம். நாட்டாரிலக்கியம் என்பது ஏடறியா, எழுத்தறியா மக்களால் அவர்களது அனுபவச் சுவையைச் சுமந்த இலக்கியமாகும். அது வரலாற்றின் வேர்களையும், மக்களின் பண்பாட்டுப் பொக்கிசத்தையும் வெளிப்படுத்தும் தலைசிறந்த கருவியாகவும் இன்று திகழ்கின்றது. இதனை நான்கு உபதலைப்புகளில் நோக்குகிறார், நூலாசிரியர். நாட்டார் பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், நாட்டார் கதைகள் என்பனவே அவையாகும். கிராமியப் பாடல்கள் மனிதனின் இன்ப – துன்பத்தை வெளிப்படுத்துவதில் முன் நிற்கின்றன. அம்மக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், வழிபாடு என்பன அவற்றுட் கலந்து நிற்கின்றன. பழமொழிகள் என்பன நாட்டாரிலக்கிய வடிவங்களுள் மிகச் சுருக்கமானது. மனிதன் தன்னைச் சுற்றித் தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளை உற்று நோக்கி ஒரு கருதுகோளை உருவாக்குகின்றான். அவைகளே பழமொழிகளாகும். ஒரு சமுதாயத்தின் அனுபவச் சுமையும், அறிவுக் கூறுகளும் உள்ளடக்கியவனவாகப் பழமொழிகள் திகழுகின்றன. விடுகதைகள் என்பன மக்களின் சிந்தனைத் தூண்டியாகவும், அறிவுத்துலக்கியாகவும், அறிவின் நுழைவாயில்களாகவும் வழங்கியுள்ளன. இவை நாட்டாரிலக்கியத்தில் ‘நொடி’ என வழங்கப் படுகின்றன. அடுத்தது, நாட்டார் கதைகளாகும். பல நூற்றாண்டு காலத் தொடர்ச்சி இவ்வாய் மொழிக் கதைகளுக்கு உண்டு. இதனால் திரிபடைந்து காணப்படும் தன்மையும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடும் தன்மையும் இக்கதைகளுக்குண்டு. 

‘நம் நாடும் நாட்டாரியலும்’ என்பது மூன்றாம் அத்தியாயமாகும். இந்நாட்டில் இதுவரை நடை பெற்றுள்ள இத்துறை தொடர்பான ஆய்வுகளைப் பட்டியலிடுகின்றது இவ்வத்தியாயம். நூலாசிரியர் கூறுகின்றபடி, இலங்கைத் தமிழ் நாட்டார் வழக் காற்றியல் தொடர்பாக ஆரம்ப காலத்தில் ஆங்கிலேய மிஷனரிமாரும், துரைத்தன உத்தியோகத்தர்களும் அவ்வப்போது எழுதிய குறிப்புகளைத் தொடர்ந்தே, வேறு சிலர் அத்துறையில் அக்கறை கொள்ளலா யினர். சைமைன் காசிச்செட்டி, வ.குமாரசுவாமிப் பிள்ளை, கலைப்புலவர் க.நவரத்தினம், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, மக்கள் கவிமணி மு.இராம லிங்கம் முதலியோர் இத்துறையில் ஈடுபாடு கொண் டனர். 1960களின் பின்பே இத்துறை பற்றிய அநேக கட்டுரைகளும், ஆய்வுகளும், நூல்களும் வெளிவரத் தொடங்கின. இலங்கை வானொலியும் இத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் அக்கறை காட்டியது. இவர்களுள் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன், எம்.சி.எம்.சுபைர், எம்.ஏ.நுஃமான், மருதூர் ஏ.மஜீத், எஸ்.முத்துமீரான், பேராதனை ஷர்புன்னிசா, எஸ்.எச். எம்.ஜெமீல் என்போரின் ஆக்கங்களும் அடங்கும். 

‘கவி’ எனப்படும் நாட்டார் பாடல்கள் பற்றிய தவறான கருத்தொன்றினை நூலாசிரியர் இங்கு தெளிவுபடுத்துகிறார். அதாவது, கவிகள் என்பன பெரும்பாலும் அகத்திணை சார்ந்த காதல் பாடல்களே எனும் கருத்துப்படவே பலர் எழுதியும், பேசியும் வந்துள்ளனர். சங்க இலக்கிய அகத்தினை மரபுக் கேற்ப, இக்காதல் பாடல்களும் தலைவர் – தலைவி யருக்கிடையே பரஸ்பரம் பாடப்பட்டவை எனும் பண்பு வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இக்கருத்தினை மறுத்துரைக்கிறார், நூலாசிரியர். உண்மையில் கவி பற்றிய சமூக நோக்கை நாம் அவதானித்தால், ‘கவி’ யானது காதலை மாத்திரம் அதாவது அகத் திணையை மாத்திரம் சொல்கின்ற ஒரு கருவியாக முஸ்லிம்களிடம் காணப்படவில்லை. அகத்திணை சாராத பல்வேறு விடயங்களை அது எடுத்துரைப் பதனை இங்கு விளக்குகிறார். 

இது தொடர்பாகக் கலாநிதி எம்.ஏ.நுஃமான் அவர் களுடைய கூற்றுக்களை விஸ்தாரமாக எடுத்தாண் டுள்ளார். நுஃமான் பின்வருமாறு கூறுகிறார் : “இக்காதல் பாடல்களை கிராமப்புறத்துக் காதலர்கள் தங்கள் உண்மைக் காதல் உறவிலேதான் பாடிப் பயன்படுத்துகின்றார்களா? என்பது நமது வினா வாகும். கிழக்கிலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரை இது அவ்வாறு இல்லை என்பதே உண்மை யாகும். அவர்கள் காதல் உணர்வுக்கும், உறவு களுக்கும் அப்பாற்பட்டவர்கள், அல்லர். எனினும் அவர்கள் மத்தியில் வழங்கும் காதல் கவிகள் உண்மை வாழ்விற் காதலர்களால் பாடப்படுவன அல்ல. அவை ஆண்களால் பாவனை முறையிற் பாடப்படுபவை என்பதும், ஆண்களாலேயே படைக்கப் பட்ட புனைவியற் பாங்கான இலக்கியங்கள் என்பதும் தெளிவாகின்றது” என்கிறார், கலாநிதி நுஃமான். 

நாட்டுப்புறப் பண்பாட்டியல் தொடர்பான எனது நூலான ‘கிராமத்து இதயம்’ என்பதிலும் இதே கருத்தையே நானும், முஸ்லிம் சமுதாய வாழ்வியல் அமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டு விளங்கி யுள்ளேன் என்பதை இவ்விடத்தில் ஞாபகப் படுத்தலாம். 

எனவே, நூலாசிரியர் கூறுவது போன்று, நாட்டாரியல் முயற்சிகளில் ஈடுபட்டோர், இக்கவிகள் காதலன் – காதலி கூற்றாகவே அமைந்தன என்று கூறுவதும், அதற்குப் புனைந்துரைக் கதை கூறுவது மான பொதுத்தன்மை தவறானதே. எனினும், மிகச் சில பாடல்கள் அவ்வாறு உறவு முறையுள்ளவர் களால் பாடப்பட்டுமுள்ளன. ஆனால், வக்கிரத்தன மான பாலுணர்வு கொண்ட பாடல்கள் நிச்சயமாக ஆண்களாற் பாடற்பட்ட பாவனைப் பாடல்களேயாகும். 

“கிழக்கிலங்கை நாட்டார் இலக்கியமும் முஸ்லிம் களும்’ என்பது நான்காம் அத்தியாயமாகும். இதுவே இந்நூலின் முக்கிய பகுதியுமாகும். இப்பிரதேசக் கிராமிய இலக்கிய வகைகளில் முஸ்லிம்களின் பண் பாட்டுக் கூறுகள் செல்வாக்குற்றிருப்பதை அவை வெளிப்படுத்தும் மதநம்பிக்கைகள், சடங்குகள், மொழி மற்றும் வழக்காறுகள் ஆகிய கூறுகளில் வகைப் படுத்தி ஆராய்கிறார். இப் பண்பாட்டம்சம் பாடல், பழ மொழி, விடுகதை, கதைகளில் எவ்வாறு வழங்கப் படுகின்றன என்பதையும் காட்டுகிறார். 

முதலாவது உப்பகுதி மதநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் சார்ந்த இலக்கியங்களைக் கூறுகின்றது. ‘இறைகாப்பு’ எனும் பண்பு எங்கும் எப்போதும் வியாப்பித்திருக்கின்றது. 

பிசுமி யைச் சொல்லி வெளிக் கிட்டுப்போனா 
யெண்டால் 
படைத்த றஹு மான் பாதுகாப்பான் எந்நாளும்

என்கிறது பாடலொன்று. 

‘வாயில் ஓதல் இருந்தால், வழியெல்லாம் சோறு’ என்பது பழமொழி. இதேபோன்று ஜின்கதைகள், கௌசிக் கதைகளும் உதாரணங்களாகக் காட்டப்படு கின்றன. 

அடுத்த பகுதி மொழியும் வழக்காறுகளும் என்ப தாகும். நாட்டார் இலக்கியத்திலுள்ள அறபு மொழிச் சொற்கள், வேற்றுமொழிச் சொற்கள், வழக்குமொழி, முறைப் பெயர்கள் என்பன இங்கு விளக்கப்படு கின்றன. இதனைத் தொடர்ந்து வரும் ஊரும் மக்களும்; அணிகளும் ஆபரணங்களும்; அரசியலும் சமூகமும் எனும் உப பிரிவுகள் அவ்வத்துறை சார்ந்த கிராமிய இலக்கிய வடிவங்களை எடுத்துக் காட்டு கின்றன. 

இந்நூலுக்கான வாழ்த்துரைகளை தென் கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எஸ். ஏ.காதர், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி.தில்லைநாதன் ஆகியோர் வழங்கி யுள்ளனர். பேராசிரியர் தில்லைநாதன் கூறுவது போன்று “றமீஸ் அப்துல்லாஹவின் ஆய்வு கிழக் கிலங்கை முஸ்லிம்களின் பண்பாடு, உலக நோக்கு, மதி நுட்பம், அழகியலுணர்வு, மொழி வழக்கு, தொடர் பாடல், நயம் முதலானவற்றை ஓரளவுக்காயினும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. நாட்டாரியல் சார்ந்த நவீன அணுகுமுறைகளையும், ஆய்வுநெறி களையும் கையாளும் திறனை வளர்த்துக்கொண்டு அவர் இத்துறைக்கு மேலும் கணிசமான பங்களிப் பினை நல்க வேண்டி வாழ்த்துகிறோம்.” 

இலங்கை வானொலி 
09.07.2001 

– மல்லிகை 44-வது ஜனவரி ஆண்டு மலர் – ஜனவரி 2009 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *