கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2023
பார்வையிட்டோர்: 2,777 
 
 

(2012ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் வீட்டு வாசற் படியில் உட்கார்ந்திருந்தான். 

தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து, விட்டெறிந்து கொண்டிருந்தான். 

அவன் கரங்கள்… வேலை உழைப்பு…… எனத் துடித்தன. 

வயிறும் பசியால் அழுதது. 

இதிலிருந்து கொண்டு வீணாக ஏன் கற்களை எறிகின்றாய்? ஆற்றங் கரைகளில் போய் சிறு மணிக்கற் களைப் பொறுக்கி வா! பணம் தருகிறேன்” -என்றது ஒரு குரல்.

“ஏன்?” 

“கேள்வி கேட்காதே!. சொன்னதைச் செய் கூலியைப் பெற்றுச் செல்!”

-பதில் கடுமையாக வந்தது.  

2

அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான். 

மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தாள். 

“ஏய்…… இன்னுமா சோறு காச்சவில்லைபசியால் பிராணன் போகுது!“. 

3

அவன் ஆவலோடு சோற்றை வாயிலிட்டான். 

“நறுக்”-வாயில் கல் கடிபட்டது. 

அடுத்தவாய்- 

“நறுக்!” 

அவன் வாயில் கடிபட்ட கல்லை எடுத்துப் பார்த்தான். ஆச்சரியத்தால் அதிர்ந்து கூவினான்- 

“கண்டுகொண்டேன். இவை நான் பொறுக்கிய கற்களல்லவா?”.

– குறுங்கதை நூறு (செம்பியன் செல்வன்), டிசம்பர் 1986, நான் வெளியீடு, யாழ்ப்பாணம்

– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *