பெருமையின் முடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 74 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஸ்பானிய தேசத்து அரசன் பிரான்ஸ் தேசத்தைப் பிடிக்கப் புறப்பட்டான். பத்திரிகை நிருபர்களை வர வழைத்தான்.

“பிரான்சு தேசத்தின்மீது படையெடுக்கப் போகி றோம்; நான் நிச்சயம் அதை ஜெயிப்பேன். யுத்த செய்தி களை வரிசைக் கிரமமாய் எழுதும்படி போதுமான கடிதாசிகளைக் கையில் வைத்துகொள்ளுங்கள்” என்று பெருமையுடன் கூறினான்.

“என்னை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் ஒருவருமேயில்லை” என கர்வத்தோடு மேன்மை பாராட்டினான்.

சேனைகளைத் திரட்டிக்கொண்டு போனபோது வழி யில் கொள்ளைநோய் வந்து சேனையில் ஏராளமானோர் மாண்டனர். எஞ்சினோர் மிகக் கொஞ்சமே! அகந்தை யின் முடிவு அழிவு

பட்டம் பெற்ற பாதிரியார் ஒருவர் முதல் தடவை யாகப் பிரசங்க மேடைமீதேறிப் பிரசங்கம் செய்ய போகிறார். பெருமையோடும், கர்வத்தோடும் மேடை மீது ஏறினார்.

பிரசங்க வாக்கியம் நினைவிற்கு வரவில்லை.பிரசங்கக் குறிப்பை அங்கி அறையில் மறதியாக வைத்துவிட்டார் திண்டாடி ஏதோ சொல்லிவிட்டுப் பத்து நிமிடங் களில் தலை கவிழ்ந்து தாழ்மையுடன் இறங்கினார்.

ஆலயத்திலிருந்த பெரியார் ஒருவர் வந்து, சகோ தரரே. நீர் இறங்கும்போது என்ன நிலைமையிலிருந் தீரோ, அதே நிலையில் நீர் ஏறிப்போயிருந்தால் சந்தே ஷத்துடன் இறங்கியிருப்பீர்” என்றார்.

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

நூற்று முப்பது ஸ்பெயின் போர்க்கப்பல்கள் இ இங்கிலாந்துக்கு விரோதமாய் படைஎடுத்துச் சென்றன இங்கிலாந்தின் கப்பல்கள் எண்பதுதான், அவைகளில் யுத்தத்திற்குப் பயன்படக்கூடியது முப்பதுதான், ஸ்பெ யின் கப்பல்களை நிலவு போன்று வளைவாக விட்டுக் கொண்டு இங்கிலாந்துக் கப்பல்களை சுற்றிவளைத்தனர்.

ஆங்கில நாட்டுக் கப்பல்கள் பின்வாங்கி ஓடின. ஸ்பெயின் கப்பல்கள் மிகுந்த அகந்தையோடு ஆங்கிலக் கப்பல்களைத் துரத்திச் சென்றன.

ஸ்காட்லாந்தின் பக்கம் குன்றுகளடர்ந்த தீவுகள் பல இருந்தன. அக்குன்றுகளில் ஸ்பெயின் கப்பல்கள் மோதி உடைந்தன. ஐம்பத்து நான்கு சேதப்பட்ட கப்பல்கள்தான் ஸ்பெயினுக்குத் திரும்பின.

எஞ்சினோர் மிகக் கொஞ்சமே!
நெஞ்சித்திமிர் என்றும் சஞ்சலமே!

“பெருமையையும், அகந்தையையும், தீயவழியையும், புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்” [நீதிமொழிகள் 8:13]

“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” [1 பேதுரு 5:5]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *