பெரியகடவுளா? சின்னக் கடவுளா?
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 89
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு சாதா ரண விவசாயியை இடைமறித்து – அயர்லாந்து ராஜ தந்திரி காலின்ஸ் என்பவர் கீழ்க்கண்டவாறு உரை யாடினார்;
“எங்கே போகிறாய்?”
“கடவுளைத் தொழுதுகொள்ள!”
“அந்தக் கடவுள் பெரிய கடவுளா, சின்னக் கடவுளா?”
“வானங்களும், வானாதி வானங்களும் கொள்ளாத அவ்வளவு பெரிய கடவுளாகவும், என் இருதயத்தில் தங் கும்படியான அவ்வளவு சின்னக் கடவுளாகவும் இருக்கிறார்” என்றான் விவசாயி.
“கடவுளைப் பற்றி எத்தனையோ புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் இந்தச் சாதாரண விவசாயி கொடுத்த உத்தரவுதான் என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது” என்றார் காலின்ஸ்.
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” [சங்கீதம் 111:10)
”நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தின வரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” [வெளிப்படுத்தல் 22:13]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
