பூவும் சூரியனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 84 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆங்கிலக் கவிஞன் டென்னிசன் ஒருநாள் தம் நண்பருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந் தார். நண்பர் அவரைப்பார்த்து. “கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருக்கிறார்?” என்று கேட்டார்.

டென்னிசன் சற்று அமைதியாக உலாவினார்.

பின்பு, ‘அதோ பாருங்கள்,’ என்று ஒரு மலரைச் சுட்டிக் காட்டினார்.

‘அது ஒரு அழகான புஷ்பம்,’ என்றார் நண்பர். ‘அப்பூவிற்குச் சூரியன் எப்படியோ அப்படியே கிறிஸ்துவும் எனக்கு’ என்றாராம்.

கிறிஸ்து நமக்கு எப்படிப்பட்டவர்?

“நான் பச்சையான தேவதாரு விருட்சம் போலிருக் கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று.” [ஓசியா 14:8]

“என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்.” [யோவான் 15:4]

திருமொழிகள்

அடே அப்பா! மனிதனுக்குத்தான் எவ்வளவு பைத்தியம். அவனால் ஒரு புழுவை உண்டாக்க முடிய வில்லை. ஆனால் கணக்கில்லாத கடவுள்களை மட்டும் உண்டாக்கிக் கொண்டே போகிறான்.

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *