பூதம் – கீதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 115 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – வாச்சொல்லு வீரண்டு ஒருத்தனும், செயல் வீரண்டு ஒருத்தனும் இருந்தாங்க. எங்க போனாலும் சேந்துதா போவாங்க. என்னா செஞ்சாலுஞ் சேந்துதா செய்யிவாங்க. ஒருத்தனுக் கொருத்த விட்டுப் பிரிய மாட்டாங்க. 

ரெண்டுபேரும் ஆடு களவாண்டப் போனாங்க. அப்ப, கெடயில, ஆட்டுக்கார ஒக்காந்திருக்கா. ஒக்காந்திருக்கவும், ஆட்டுக்கார் போகட்டும்ண்டு, ஒரு பொதைக்குள்ள ஒளிஞ்சுகிட்டாங்க. 

அப்ப, ஒரு பூதமும், ஆடுபுடிக்க வந்து ஒளிஞ்சிருக்கு. அப்ப: ஆட்டுக்கார், கம்ப நட்டு, அதுமேல போர்வயப் போட்டுட்டு, தம்பி ! நீர் வீட்டுக்குப் போயிட்டு வரே. நா வர்றது வரைக்கும், ஆடுகளப் பாத்துக்க. ஒரங்கிறாத. ஒரங்குனயிண்டா, பூதங்கீதம் (பூதம் – கீதம்) வந்து, ஆடுகளப் புடுச்சிட்டுப் போயிரும்ண்டு சொல்லிட்டு, வீட்டுக்குப் போயிட்டா. சும்மா வாச்சுக்கும். பேசிட்டுப் போறா. 

அப்டி பூதங்கீதம்ண்டு சொல்லயில், அங்க ஆடு களவாண்ட வந்த பூதம் கேட்டுக்கிட்டிருந்து, கீதம்ண்டு ஒண் இருக்குதுபோல, நம்மளக் காட்டிலும் பெருசுபோலண்டு பயந்துகிட்டு இருந்திட்டு, இவ போகவும். பூதம் ஆட்டுவடிவதில் வந்து, ஆட்டுக் கூட்டத்துக்குள்ள மொளஞ்சு ஆடு மாதிர் நிண்டுருக்கு. 

ஆட்டுக்குள்ள இருக்ற பூதம், கீதம் வருமண்டு பயந்துகிட்டிருக்கயில, இவங்க, சொல்வீ ரனும் – செயல்வீ ரனும் ஆடு புடிக்க கெடைக்கு வராங்க. 

கொளுத்த ஆட்டப் புடிக்கணும்ண்டு, எல்லா ஆட்டயும் தடவிக்கிட்டே வந்தாங்க. வரயில, ஆடு மாதிரி நிண்டிருந்த பூதத்தத் தடவிப் பாத்தாங்க. தடவிப் பாக்கயில, இது கொளு கொளுண்டு இருக்குது. கொளு கொளுண்டு இருக்கவும், புடுச்சுக் தூக்கிட்டாங்க. தூக்கிட்டுப் போறாங்க. 

போகயில, பூதம் என்னா நெனக்கிது. கீதம் வரும்ண்டு ஆட்டுக்கார் சொன்னானே! கீதத்துகிட்ட வசமா மாட்டிக்கிட்டோம் போல இருக்கு. இதுகிட்ட இருந்து எப்டித் தப்பிக்கிறதுண்டு நெனச்சு, பூதம் பயந்துகிட்டிருக்கு. இவங்க, தூக்கிட்டுப் போனவங்க, என்னடா இந்தக் கனங்கனக்குது, கொளுப்பாடு போல, இண்ணக்கி நல்ல கறிண்டு நெனச்சுக்கிட்டுத் தூக்கிட்டுப் போறாங்க. 

பூதம், இவங்ககிட்ட இருந்து தப்பிக்கப் பாக்குது. இவங்களக் கீதம்ண்டு நெனச்சுக்கிட்டு, பூதம் தப்பிச்சு ஓட வழி பாக்குது. 

போகயில், செமக்க மாட்டாம், ஒரு எடத்ல எரக்கி வச்சிட்டு, ஒண்ணுக்கிருக்கப் போனாங்க. போகவும், பூதம் இதான் சமயம்ண்டு தப்பிச்சு, ஒரேயடியா ஓடிப்போச்சு. 

ஒண்ணுக்கு இருந்திட்டு வந்தாங்க. வந்து பாக்கயில். ஆட்டக் காணம். தோலுமட்டும் அங்க இருக்கு. இருக்கவும் பூதம் நம்மள ஏச்சிருக்குண்டு நெனச்சுப் பயந்து, நல்லவேள, நம்ம தப்பிச்சோம்ண்டு, இவங்க வீட்டுக்குப் போனாங்களாம். 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *