புதுமையில் ஒரு பழமை





அனுப்பனடி-காமாட்சி அம்மன் கோயில் தெரு,

என் பெயர் சதாசிவம். நான் என் நண்பன் கங்காதரன் வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கிறேன். கங்காதரனும் நானும் சிறு வயது முதல் நண்பர்கள். ஐம்பது வருட நட்பு. எனக்கு வயது அறுபதை தொட்டு விட்டது. தற்போது நாங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.
நங்கள் இருவரும் நண்பர்களாய் ஆன போதிலிருந்து பிரிந்தது இல்லை.
தற்போது எங்கள் பிள்ளைகளின் தொழில் , மற்றும் பேர குழந்தைகளின் படிப்பு கருத்தில் கொண்டு இந்த பூர்வீக இடத்தை காலி செய்து வேற ஒரு இடத்திற்கு குடி போனோம். இருப்பினும் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நங்கள் சந்தித்து பேசி கொள்வோம். ஆரோக்கியமான நட்பு.
கங்காதரன் வீடு வந்தது. வீட்டில் காலிங் பெல்லை அழுத்தினார் சதாசிவம். கதவு திறக்கப்பட்டது. கதவை திறந்தது கங்காதரன் மருமகள் செல்வி.
“ வாங்க சதாசிவம் அப்பா , உங்களை தான் போன வாரம் மிஸ் பண்ணோம் “ என்று செல்வி , வீட்டிற்குள் அழைத்தாள் செல்வி.
சற்று மவுனமாய் உள்ளே நுழைந்தார் சதா சிவம்.
வீட்டிற்குள் ஒரே கரச்சல் சப்தம். எப்போதும் அமைதியாக இருக்கும் வீடாச்சே என்ற கேள்வி சதா சிவம் மனதில் ஓடியது.
வீட்டிற்குள் நுழைந்து , அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தார் சதா சிவம்.
“என்னங்க , சதாசிவம் அங்கள் வந்திருக்கார் , வெளியில வாறிங்கள ? “ என்று செல்வி தன் கணவன் மீனாட்சி சுந்தரத்தை அழைத்தாள்.
“ உள்ளே , கேரம் போர்டு , செஸ் , சீட்டு கட்டு என்று பிள்ளைகளுடன் விளையாடிட்டு இருக்கார் “ என்று செல்வி சதாசிவத்திடம் கூறினாள்.
ஆச்சரியமாக , அதை கேட்ட படி எதிரே இருந்த தன் நண்பன் கங்காதரன் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கினார் சதா சிவம்.
கங்காதரன் சென்ற வாரம் திடிரென இறந்து விட்டார். அவரின் இறப்புக்கு நண்பர் சதாசிவம் வெளி ஊரில் இருந்ததால் வரவில்லை.
இன்று கனத்த இதயத்துடன் துக்கம் விசாரிக்க வந்திருக்கார் சதா சிவம். கண்களில் கண்ணீர் சொட்ட ஆரம்பித்தது.
கங்காதரன் மகன் மீனாட்சி சுந்தரம் வெளியில் வந்தான். “ வாங்க மாமா, உங்க நண்பர் இறப்புக்கு நீங்க வராம போய்ட்டீங்க. நீங்க வராம அவர் எப்டி போவார் “ என்று கேட்ட படி , அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.
“உன் அப்பன் சொல்ற மாதிரி எல்லாம் விதி. அவன் விதி முடிஞ்சு அவன் போய்ட்டான். அவன பார்க்க விடாம பண்ணது என் விதியா கூட இருக்கலாம். ஆனா போன வாரம் நான் பேசுனப்ப கூட உடம்ப பத்தி எதுவும் சொல்லல. திடிர்னு இப்படி போட்டு , கங்காதரனை அமுக்கிருச்சு. என்னால தாங்க முடியல. “ என்று கண்களில் கண்ணீருடன் பேசினார் சதா சிவம்.
செல்வி டீ போட்டு கொண்டு அவர்கள் முன் வைத்தாள். இருவரும் எடுத்து குடிக்க ஆரம்பித்தனர். நெறைய விசயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.
“ ஆமா சுந்தரம் எப்பவுமே உங்க வீடு அமைதியா இருக்குமே , இன்று என்ன விசேசம் , ஒரே கூச்சல் சப்தம் , “ என்று சதாசிவம் விசாரித்தார்.
“அதாவது மாமா , வேற ஒன்னும் இல்ல. ஞாயிறு ஒரு நாள் மட்டும் போன் உபயோகிக்க கூடாதுன்னு அப்பா சொல்லிட்டே இருப்பார். அவசர அழைப்புகளை மட்டுமே போன்ல பேசுவோம். மற்றபடி பிள்ளைகளோட நல்லா பேசி விளையாடுவோம், நல்லா சாப்பிட்டு மதியம் சிறு தூக்கம். சாயந்திரதிர்க்கு மேல எல்லாரும் உட்காந்து டீவில படம் பார்ப்போம். இன்று ஒரு நாள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்போம். இத அப்பா செய்ய சொல்லி, சொல்லிட்டே இருப்பார். பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதால் அதுல ஒரு நன்மை இருக்கு. அவர்களின் மன நிலை , அவர்களின் எண்ணம் எப்படி இருக்கு என்று தெரிய முடிகிறது. அப்பாவின் நினைவாக இதனை தொடர்ந்து செய்யணும்னு பிள்ளைகளும் விரும்புறாங்க. எங்களுக்கு இது பிடிச்சிருச்சு. “ என்று மீனாட்சி சுந்தரம் கூறினான்.
அதனை ஆச்சரியமாக கேட்டு கொண்டு இருந்தார் சதாசிவம்.
“ சூப்பர் , என் நண்பன் , அவனின் குடும்பத்திற்கு புதிய பயிற்சி ஒன்றை செய்ய சொல்லி போயிருக்கான். இது ஒரு நல்லதொரு முயற்சி தான். கட்டாயம் எல்லாரும் தன் குடும்பத்திற்கு செய்யவேண்டிய பயிற்சி தான். புதுமையான உலகில் பழைய காலத்திற்கு ஒரு நாள் செல்லும் முயற்சி. புதுமையில் ஒரு பழமை.” என்று சதாசிவம் கூறி , தன் மறைந்த நண்பன் கங்காதரனின் பெருமையை , மீனாட்சி சுந்தரதிடம் சொல்லி கொண்டு இருந்தார்.
இது உண்மையில் நாமும் வாய்ப்பு கிடைத்தால் பின்பற்ற வேண்டிய ஒன்று தான். வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு நாள் முயற்சி செய்து பார்க்கலாமே…..
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.