புடமிடுதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 87 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நம் நாடோடிய வாழ்க்கையில் ஒரு கதவு அடை பட்டிருந்தால் பிறிதோர் கதவு திறந்து தானிருக்கும். இது இயற்கை விதி.

உபத்திரவம், வேதனை, சோதனை இவைகளைத் தாங்கமுடியாமல் அவதிப்படுகையில் திறந்திருக்கிற கதவைத்தேடிக் கண்டுபிடிக்காமல் அடைப்பட்டிருக் கிற கதவிலே பலர் முட்டி முட்டி மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஆன்ம வாழ்வில் பின்வாங்கிப் போகிறார்கள்.

‘நான் உபத்திரவப்பட்டது நல்லது’ என்ற இங்கித மான சங்கீதமொழியை இவர்கள் நம்புகிறதில்லை.

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களும் அன்றொரு நாள் சொன்னார்களே,

‘எங்கள் ஆண்டவர் எங்களை இந்நெருப்பிலிருந்து விடுவித்தாலும் விடுவிக்காது போனாலும் பொற் சிலையை வணங்கப்போவதில்லை’ என்றார்கள்.

நீர் என்னைப் புடமிடுவதை நிறுத்தினாலும் சரி, நிறுத்தாவிட்டாலும் சரி என் விசுவாசம் மாறாது என்று சொல்லக்கூடிய வைராக்கிய புத்தியைத்தான் கடவுள் நம்மிடம் வேண்டுகிறார்.

“தேவனே, எங்களைச் சோதித்தீர்: வெள்ளியைப் புடமிடுகிறது போல என்னைப் புடமிட்டீர்”. [சங்கீதம் 66:10]

“தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடார்.” [1 கொரிந்தியர் 10:13]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *