பிச்சைக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2025
பார்வையிட்டோர்: 138 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல-ஒரு பிச்சக்கார் இருந்தர். அவா, இந்த ஊரு ராசா வீட்லதா பிச்சை எடுத்துச் சாப்பிடுவா. இது, ராணிக்கு ரெம்பத் தொந்தரவா இருந்திச்சு. 

இந்தப் பிச்சக்காரன, எட்டிண்டாச்சுங் கொல்லணும்ண்டு நெனச்சு, ராசாவும், மந்திரியும் வேட்டைக்குப் போயிருக்கிற சமயத்ல, பச்ச நாவிய, சோத்ல வச்சுக் குடுத்திட்டா. 

அந்தப் பிச்சக்கார, அந்தச் சோத்தத் திங்காம, கண்டதக் கடியதத் திண்டுகிட்டு, இந்த சோத்தயும் செமந்துகிட்டு, காட்டுவழியாப் போறர். 

போகயில, அங்கிட்டிருந்து ராசாவும் மந்திரியும் வேட்டயாடிட்டு, ஒண்ணுமே கெடைக்காம, கெரங்கிப் போயி வராங்க. 

வரயில, ராசா! பிச்சக்கார் சோறு வச்சிருக்றதப் பாத்து, மந்திரிகிட்ட, மந்திரி! பிச்சக்காரங்கிட்ட இருக்ற சோற வாங்குண்டு சொல்றாரு. மந்திரி, பிச்சக்காரனக் கூப்பிட்டு, அவ் வச்சிருக்கிற சோத்தப் பாத்துட்டு, அந்தக் சோத்தக் குடுண்டு கேக்குறாரு. 

கேக்கவும், பிச்சக்கார், அந்தச் சோத்த ராசா முன்னால வச்சு, சாப்பிடுங்க ராசாவே, இது ராணியம்மா போட்ட சோறுதாண்டு சொல்றர். சொல்லவும், அந்தச் சோற, ராசா சாப்பிட்டாரு. 

சாப்பிட்டுட்டுப் படுத்தவரு, எந்திரிக்கல. மந்திரியும் பிச்சக்காரனும் உசுப்பி உசுப்பி பாத்தாங்க எந்திரிக்கல. 

ராசா செத்துப் போயிட்டாருண்டு நெனச்சு, ராசாவக் தூக்கிக்கிட்டு அரமணக்கிக் கொண்டு வராங்க. அரமணயில் கொண்டு வந்து போடவும், ராணின்டா ஓடி..ஓடி… முட்டி… முட்டி, மோதி… மோதி அழுகுறா. முட்டி அழுதாப்ல, ராசா வரப் போறாரா? செத்தவரு எப்டி வருவாரு. 

அவரவர் மோசம் அவரவர்க்கு. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நீதி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *