பால்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘பசுவின் சுவையோ? பாலின் சுவையோ?’
அந்த மகாவாக்கியத்தை என்றும் த்யானிக்கவும்’ என்றார் மகான்.

‘மகாவாக்கியம் என்றால்….’ விளக்கத்தின் பூரணத்துவம் அறிவுப் பிடிமானத்திற்குட் சிக்குப்படாததினால் சீடன் தத்தளித்தான்.
‘மகாவாக்கியம் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கு முள்ள தொடர்பை விளக்குகின்றது….’
‘தத் த்வம் அஸி எவ்வாறு மகாவாக்கியமாகும்?’
‘த்வம் நீ என்றும், தத் அது என்றும், அஸி இருக்கின்றான் என்றும் பொருள்படும். ஜீவாத்மாவாகிய நீ, பரமாத்மாவாகிய அதற்கும் வேறானவனல்லன் என்ற கருத்திலேதான் எத்தகைய மகத்துவம் தேங்கி நிற்கின்றது!’
“இந்த மகாவாக்கியத்தின் விளக்கமாக அமையும் நூல்?”
‘ஏன்? பகவத்கீதையே அதற்கு உன்னத விளக்கமாக அமைந்துள்ளதே! கீதை மூவாறு அத்தியாங்களிலே அருளப்பட்டுள்ளது. முதலாறு அத்தியாயங்களும் என்று நீயேயான ஜீவ தத்துவத்தின் விளக்கம். அடுத்து வரும் ஆறு அத்தியாயங்கள் பரமாத்மா எப்படியிருக்கின்றார் எவ்வாறு அவர் அந்தராத்மாவாகவும், தவராகவும் மூன்றாம் பகுதி பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்குமுள்ள இணக்கத்தை விளக்குகின்றது. தத் த்வம் அஸி மூன்று பகுதிகளுக்கும் சமாமன அந்தஸ்துகொடுப்பதினாலும் கீதை உயர்வு பெற்றது. எனவே இஃது உபநிஷதங்களின் சாரமாக அமைந்தது என்பதும் பொருந்தும்…’
உபநிஷதங்கள் நான்கு வேதங்களிலிருந்தும் பெறப் பட்டவை. ஆனால், கீதை மகாபாரதத்தின் ஒருபகுதி. அப்படி இருந்தும்….’
‘எவ்வாறு உபநிஷதங்களின் சாரமாயிற்று என்பது உன் கேள்வி. கண்ணன் உயிர்களை அறியும் கோவிந்தனாகவும், பசுக்களைப் பராமரிக்கவல்ல கோபாலராகவும் விளங்குகின்றான். உபநிஷதங்களைப் பசுக்களென வைத்துக்கொள். பசுக்கள் பல நிறத்தவை; அவற்றைப் பராமரித்தல் உன் உணர்பவன் போன்றசாமானியனுக்கு மிகவுஞ்சிரமமானது. உணர்ந்தான். பசுக்களைப் பராமரித்து, வெண்மையான பசும்பாலைக் கறந்து கீதையாகத் தந்தான். பசுவின் சுவையோ ; பாலின் சுவையோ?’ எனக் கேட்டுக் குருதேவர் சிரித்தார்.
சீடரின் உள்ளத்தில் எல்லாமே விளங்கியதான ஒளிப்பிழம்பு ஒன்று தோன்றி மறைந்தது!
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.