பழக்கங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 9 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

”சே! இப்படியே பொட்டணியிலிருந்த துணிமணிகளை மொத்தமாக அந்த வீட்டுக்காரர்கள் கேட்ட போது நான் மறுத்திருக்கக்கூடாது ஐயா! யாருக்கு 25 சதம் குறைத்து அவர்கள் கேட்டபடி கொடுத்திருந்தாலும் 50 சதப்படி இலாபம் கிடைத்திருக்கும். ஒரு பொட்டணியில் கிடைக்கும் இலா பத்தில் பங்கை ஒரு நாளில் சம்பாதித்துக் கொள்ளத் தவறி, நான் இன்று தெருத் தெருவாகக் கூவித்திரிந்தும், படலை படலையாகத் திறந்தும், ஆயிரம் தடவை புடவைகளைப் புரட்டிப் புரட்டிக் காண்பித்தும் பங்கு கூட விலைப்பட வில்லை. இலாபத்தின் கூடத் தேறவில்லை”

எங்கள் வீட்டுக்கு வாடிக்கையாகப் புடவைதரும் நாகேந்திரன் தொழிலிரகசியம் என்றும் பாராமல் இப்படி என்னிடங் கூறினான். அவன் கழிவிரக்க வார்த்தைகளைக் கருத்திலேற்றுக்கொண்ட நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்.

”ஏன் நாகு! இப் பொழுதும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லையே! உன் பொட்டணியில் எஞ்சியிருப்பவற்றை அவர்கள் கேட்ட விலைகளுக்கே நான் வாங்கிக் கொள்ளட்டுமா?”

அவன் சற் றும் யோசிக்காமல் பட்டென்று ”கொடுக்கக் கட்டாது ஐயா!” என்று மறுத்துத் தயங்கினான். நான் சிரித்து வீட்டுச் சொன்னேன்.

“பார்த்தாயா! சற்று முன்பாக எதைச் செய்யாததற்கு வருந்தினாயோ, எதைச் செய்திருக்க வேண்டும் என்று உன் விவேகம் ஒப்புக்கொண்டதோ, அதையே மீண்டும் வாய்ப்புக் கிடைத்த போதும் நீ செய்யத் தயாராயில்லை. இதைத்தான் பழக்கம் என்பது. அதாவது மொத்தமாக வாங்கிச் சில்லறையாக விற்றுப் பழகியவன் நீ! ஆகவே மொத்தமாக வாங்கியதை மொத்தமாகவே விற்றுவிட உன் பழக்கம் அனுமதிக்காது. நீயோ இந்தப் பழக்கத்துக்கு அடிமை. நானோ இதற்கு முரண்பட்ட பழக்கத்துக்கு அடிமை. எனது தோட்டத்தில் நான் ஒன்றொன்றாக நாட்டி, ஒன்றொன்றாகப் பராமரித்து வளர்த்த இராசவள்ளிக் கிழங்குகளை ஆண்டுதோறும் அகழ்ந்தெடுத்து தோட்டத்தில் குவித்து வைத்து மொத்தமாக விற்றுச் சுளைசுளையாகப் பணம் எண்ணுவதே என் பழக்கம். முதல் கரைந்து விடும் என்ற பயத்தால் ஒன்றிரண்டாக அகழ்ந்து சென்று சந்தையில் விற்பதில்லை. அதன் மூலம் பத்து மடங்கு இலாபம் கிடைக்குமென்றாலும் நான் அப்படிச் செய்வதில்லை. ஆகவே கவலைப்படாதே நாகு! இப்படியான முரண்பட்ட பழக்கங்களிலேயே உலக இயக்கம் தங்கியுள்ளது.” என்று நான் சிரித்தபோது என்பேச்சு அவனுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *