பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்னும் ஒரு விதம்!
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 5,834
(கதைப்பாடல்)

பறவைகள் தம்மை அழகாக்க
படைக்கும் கடவுள் அவற்றிற்கு
நிறத்தை அளிக்கும் விருப்பத்தில்
நிறங்கள் பெட்டி எடுத்தாராம்!.
சமாதா னத்தின் பெருமையினை
சாற்றிட விரும்பி புறாவிற்கு
சாம்பல் வெள்ளை நிறத்தினயே
சாற்றி அழகு படைத்தாராம்!
கொக்கு தனக்குக் கூர்மூக்கும்
கொள்ளை கொள்ளும் பொறுமைக்கு
நோக்க அழகு வெளிர்வெள்ளை
நிறத்தை வழங்கிக் களித்தாராம்!
இப்படி ஒவ்வொரு பறவைக்கும்
இனிய நிறத்தைப் பூசிவிட்டு
செப்படி வித்தை செய்துநமை
சீக்கிரம் ஏய்க்கும் காக்கைக்கும்
கருப்பு நிறத்தைக் கலந்துதந்து
காகம் தன்னை அழகாக்கி
இருக்கும் ஒப்பில் குயிலுக்கு
இருட்டுக் கருப்பு நிறமளித்தார்.
திருடும் காக்கை தன்னைபோல்
இருட்டுக் கருப்பில் இருந்திடவே
விருப்மில்லை எனச்சொல்லி
வேதனைப் பட்டுக் குயிலழவும்
வேதனை நீயும் படவேண்டாம்
விட்டுவி டு நீ கவலையினை
சகலரும் போற்றும் நற்குரலை
சாதனை புரியத் தருகின்றேன்
என்றே கரிய நிறமளித்தார்
இதயம் நெகிழும் குரலளித்தார்
ஒன்றாய் எல்லாப் பறவைகளும்
உயரப் பறக்க இறகளித்தார்..!
பறவைகள் நமக்கெல்லாம்
பற்பல வரங்கள் தமையளித்து
இறைவன் பூமியில் விட்டுள்ளான்
எண்ணி யாவரும் மகிழ்ந்திருப்போம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கால ஓட்டம்
சாரல் நாடன்
September 30, 2026
உயிர் மல்லாரி
அனந்த் ரவி
September 30, 2026
இதுதான் ட்ரெண்ட்!
இரா.கலைச்செல்வி
September 30, 2026
