பரியாசம் பண்ணவொட்டார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 95 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிர்விசாரியான பக்தியற்ற ஒரு விவசாயி பத்திரிக்காசிரியருக்கு எழுதிய கடிதம் வருமாறு:

“ஐயா ஆசிரியரே! எனது நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு பரீட்சை செய்தேன். ஞாயிற்றுக்கிழமை உழுதேன். ஞாயிற்றுக்கிழமை விதைத்தேன். ஞாயிற்றுக்கிழமை அறுத்தேன். ஞாயிற்றுக்கிழமை களஞ்சியத்தில் சேர்த்தேன்.”

“ஐயா, பத்திரிகாசிரியரே! இதன் முடிவு என்ன தெரியுமா? இந்த அக்டோபரில் பத்து மடங்கு எனக்கு அதிகத் தானியம் கிடைத்திருக்கிறது. இதற்கு என்ன பொல்லுகிறீர்கள்? பக்கத்து நிலத்துக்காரர்களைவிட எனக்குத்தான் அதிக மகசூல்! தயவு செய்து இதனை தங்கள் பத்திரிகையில் பிரசுரியுங்கள்”.

மறுவாரம் பத்திரிகை வந்தது. விவசாய ஆவலோடு பத்திரிகையைத் திறந்தான். அவன் எழுதினபடியே பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடியில்.. ஒரு சிறு குறிப்யை மாத்திரம் பத்திரிகாசிரியர் சேர்த்திருந்தார். அதாவது:

“கடவுள் எப்பொழுதும் அக்டோபரில் தமது கணக்கு வழக்குகளை முடிக்கிறதில்லையே” என்பது தான்.

“உனது துணிகர செய்கைக்கு நீ எதிர்பாராத வேளையில் கணக்குக் கொடுக்க நேரிடும்; ஜாக்கிரதை யாயிரு” என்பதுதான் அதன் பொருள்.

“ஒவ்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக” [உபாகமம் 5:12|

“ஒய்வுதாளில் செய்யத்தகாதவை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்?” (லூக்கா 6:2)

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *