பம்பு ரூம் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,512
பிரலப நடிகர் சாம்புவின் வீட்டிற்கு வருமான அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். பூஜை அறை, பீரோ, கப்போர்டு, சீக்ரெட் அறை என்று எல்லா இடங்களையும் சோதனை இட்டனர்.
”…ம்…ஹூம்..”என்றும் ”ஒன்றுமே இல்லை’ என்றும் ஒவ்வொரு அதிகாரியும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வந்தனர்.
‘சரி’ என்று சாம்புவிடம் சொல்லிவிட்டு ஐந்து அதிகாரிகளும் வெளியே வந்தனர். கட்டியிருந்த அவர்கள் வீட்டு நாய் கயிற்றை இழுத்துக் அழிச்சாட்டியம் செய்தது. ”ஏன் நாய் திமுறுது! ரெஸ்ட்லஸ்ஸா இருக்கு” என்று அதிகாரி வினவினார்
‘எப்பவும் அதோட கெட்டிலிலதான் கட்டுவோம். இன்னைக்கு அய்யா பம்பு ரூம்ல கட்டச் சொன்னார். புது இடமில்ல.. அதான் அதுக்குப் புடிக்கலே’ என்றான் வேலையாள்.
‘புது இடமா’ என்று யோசித்த அதிகாரி பம்பு ரூமை சோதனையிடச் சொன்னார்.
அங்கே குவியலாய் கள்ளப் பணமும் நகைகளும் கொட்டிக் கிடந்தன..!
– மு.சிவகாமசுந்தரி (ஏப்ரல் 2012)