பண்டிகைப் பரிசு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 9, 2025
பார்வையிட்டோர்: 1,122 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தளராஜ், ஏரிக்கரைப் புல்சரிவில் அமர்ந்திருந்தாள்.

சுற்றியிருந்த இலைகளில் அசைவில்லை. 

ஏரியும் குளிரில் விறைத்து சலனமற்று பளபளத்தது.

அவனுள்ளும் சலனமில்லை.

ஆனால், வெறுமை இருந்தது. 

16 வருடங்களாய் வாழ்க்கை இந்த ஊரில் தான், கொடைக்கானலில்தான். 

டூரிஸ்ட்டுகள் ‘ஐயோ’, ‘அடடா’ என்று சிலாகிக்கும் குளுமை, அழகு, பசுமை அவளை எட்டுவதில்லை. உள்ளே வெற்று மனம் முடங்கிச் கிடந்தது. 

ஒரு ஆண் சூழ்நிலைகளை உணர ஒரு குடும்பம் அவசியம்.

‘சாயங்கால நேரத்து ஏரி வெள்ளியும் பச்சையுமா எப்படி மினுக்குது பாருங்களேன்.’ 

‘ரெண்டு மாசமா சதா நொய்யுன்னு சாரலு போட ஒரு காஞ்ச துணி கிடையாது. நல்ல ஊரு போ.’ 

‘நாப்பது பேருக்கு ஒண்டியா சமைச்சு இறக்கு. நம்ம ஊரில் வேர்க்காது.’ 

‘பாலு டிப்போக்கு அஞ்சு நிமிஷ நடையின்னாலும் ஏத்த இறக்கத்தில நெஞ்சு உலந்திடுது.’ 

‘கீழ்நாடு போலயா? மூணு மடங்கு துணிச்செலவு இங்கே. குல்லா, சாக்ஸ், கம்பளி, மப்ளருன்னு’ 

இப்படி சலித்தும் வியந்தும் பெண் அவனுக்குப் பலதும் உணர்த்தியிருப்பாள். 

தினைவு தெரிந்ததிலிருந்து அவனைச் சுற்றிலும் சண்டையும் இல்லாமையுமாய் தெரிந்த குடும்பங்கள் அவனுக்கு அச்சமூட்டின. ஆக தனக்கொரு துணையை அவன் பரபரப்பாய்த் தேடவில்லை. 

‘என்னலே உலக்கைக்கு அஞ்சுன பயலே! உணக்குன்னு ஒருத்தி, குஞ்சு குளுவானுக இவ்லாத என்ன வாழ்க்கை போ. டூரிஸ்ட்டு வேறு ஒட்டுற பய, உள்ளளய நம்பி வர்ரவளுக்கு முணு வேளை கஞ்சி ஊத்திர மாட்டா வௌவா வீட்டுக்குப் போனா தீயுந் தொங்குதான் நானுந்தொங்குதான். நல்ல பொண்ணாப் பாத்துருவோம், என்ன…? என்று பேசி அவன் வாழ்க்கையில் மங்கள சவனங்கள் உண்டாக்க பல்போன உறவுகள் யாருமில்லை. 

பெற்றோரை இழந்து, தன் மாமனுடன் இம்மலையூருக்கு ஏறிய போது தனராஜாக்கு வயது பத்து. 

‘அஞ்சு பாஸ் மாமா. எழுதப் படிக்கத் தெரியும், போதும்’ என்று விட்டான். படிப்பு அவ்வளவுதாள், 

சில காலம் ‘கைடு வேலை பார்க்கிறேன் என்று ஊர் சுற்றியது அலுத்தபின், பட்டறையில் எடுபிடியாகி எண்னெவ்யிட்ட கரிச்சிலை போல உழண்டாள். பிள் கிளீனர், டிரைவிங் என்று ஒவ்வொரு படியாக ஏறிய போது மாமாதான் துணை. வீடு நுழைபவனிடம், 

‘வெந்நி காயுதுப்பா. துணியக் கழட்டி ஊற வச்சிட்டுக் குளி மொச்சக் குழம்புகூட ரெடிதான்’ என்பார். 

மனைவியை இழந்து ஒண்டியாய் நின்றிருந்த அவருக்கு இவனிடம் பரிவான பற்று. புஜங்கள் திரண்டு மீசை முறுக்கிய பின் அவரைப் பேணுவது இவன் முறையாயிற்று. 

‘மாமா கடுக்குதுன்னீங்களே – படுங்க. கால் அமுத்தி விடுறேன்.’ 

‘கீரைக் குழம்பு வச்சு, கட்லா மீனு வறுத்திருக்கேன் உக்காருங்க. 

‘பாத்தீங்களா புது ஷால் வாங்கினேன் – பிடிச்சிருக்கா?.

மாமா இறப்பில் மனம் சடாரென வெறுமைப்பட்டுப்போனது.

பாசங்காட்டி அரவணைக்க ஆளில்லாத வெறுமை வதக்கியது.

வீட்டின் பின்னால் உபரியாய்க் கிடந்த நிலத்தில் பழைய வேன் ஒன்றை வாங்கி ஓட்ட ஆரம்பித்தான். பட்டறையில் பழகிய அனுபவத்தில் வாகனத்தைக் கச்சிதமாய்ப் பேணிக் கொண்டான் உழைப்பு, நேர்மைக்குத் தொழில் லாபம் காட்டியது. 

அவ்வப்போது ‘இதுக்கு மேலே என்னா’ என்ற நினைப்பு.

நினையாத நேரங்களில் சலிப்பு ‘சுருக் சுருக்’ கெனச் சுட்டது.

இடுப்பில் கைபோட்டு இழையும் ஜோடிகள்: 

குல்லா, சாக்ஸ் போட்டு ஓடும் குழந்தைகளைப் பெருமிதமாய் பின்தொடரும் பெற்றோர்- 

‘அம்மா ஷாலை நல்லாப் போர்த்திக்கோங்க. இன்னும் கொஞ்சம் நடக்கலாமா? போதுமா?’ என்று அக்கறையாய் விசாரிக்கும் தொந்தி போட்ட, தலை நரைத்த ‘பிள்ளைகள்,’ 

ம்ம்… தனக்கென்று ஒரு குடும்பம் வேண்டும்தான்.

தனிமை போகும். ஆனால் இந்த வெறுமை…? 

இது வேறு ஜாதி. தன்னுள் ஊறும் அன்பை பிறருக்கு வடியவிட வேண்டிய ஏக்கம். தன்ஆற்றலை நாலு நல்லது செய்யாமல் நேக்கி சுமக்கும் தவிப்பு… 

‘ஏன்? நல்லது செய்ய, ஒத்தாசை பண்ண விடாது உள்ளைய யாரு தடுத்தா இப்போ?’ என்று குத்தியது புத்தி. 

சிரித்துக் கொண்டாள். மாமா போன பிறகு இப்படி தனக்குத்தானே வாதம் பேசும் வழக்கம் வந்து விட்டது. 

“ஓய்… தவராஜு” 

உடல் முறுக்கித் திரும்பினாள். 

‘உன்னத் தாம்ப்பா நினைச்சேன். வெளியே போட் வாசல்ல உன் வேன் நின்னுது. சைட் சீயிங் பார்ட்டி கூட்டிட்டு வந்திருக்கியா?’

வெள்ளைத் தொப்பியை ஆட்டியபடி ஆரோக்கியசாமி கேட்டான். சீருடையின் பித்தளை பொத்தான்கள் மின்னின. 

எளியோரம் ஜாலமாய் நிற்கும் நட்சத்திர ஓட்டலின் வேன் டிரைவர் அவன், 

“இல்லண்ணே. வெள்ளென ஒரு டூர் அடிச்சுட்டேன்”.

புல்லைத் தட்டி விட்டபடி எழுந்து கொண்டான். 

“நல்லதாப் பேச்சு. உன்னால் ஒரு வேலையாவணுமே.”

”சொல்லுங்க” 

“வியாழக் கிழமைதோறும் நம்ப ஹோட்டல்லேருந்து ‘வில்லிமேரி ஹோமு’க்கு மதியச்சாப்பாடு போகும். நாந்தான் வேன்ல ஏத்திப் போவேள். இன்னிக்கு வேனு தகராறு செய்யுதுப்பா.” 

“கோமாளி மடம்னு சொல்லுவாங்களே? நா போகணுமாண்ணே?” 

“எழுவது, எம்பது வயசுக்கு மேற்பட்ட வயசானதுங்க இருக்கற ஹோமு. பசி பொறுக்காதுங்க. எடுத்திட்டுப் போயிரு, மேனேஜருட்டச் சொல்லி உனக்குக் காசு வாங்கி வைக்கிறேன். பாத்திரங்களைத் திரும்பக் கொணரையிலே வாங்கிக்கோ, மித்த பயலுவ துட்டு பிடுங்கிருவானுங்க.” 

மறுபேச்சின்றி ஹோட்டலுக்குள் வேனைத் திருப்பி, அங்கிருந்த மூன்றடி டிபன் கேரியரை, ஹாட்கேஸை ஏற்றிக் கொண்டான். 

“எத்தனை பேரு அங்க?” 

“20, 25 பேருக்குள்ள” 

கட்டிடத்தின் உச்சிகளை கோமாளியின் தொப்பிகளைப் போன்ற கூம்புகள் அலங்கரித்த மடத்தை அடைய, என்ஜின் சத்தம் கேட்டு ஒரு சிஸ்டர் எட்டிப் பார்த்தார்கள். 

பரிச்சயமான பாத்திரங்களைக் கண்டவுடன், 

“ஆரோக்கியசாமி வரலியா?” புன்னகைத்தார். 

“வேனு ரிப்பேருங்க சிஸ்டர். நீங்க விடுங்க – இதையெல்லாம் நா தூக்கியாரேன்.” 

“இப்படி மேஜை மேலே வைப்பா.” 

சாப்பாட்டு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்த இரு டஜன் முதிய முகங்கள் அவனை ஆவலும் ஆர்வமுமாய் பார்த்தன. 

“தம்பி புதுசா?” 

“பேரு என்ன ராஜா?” 

”ஆரோக்கியத்தோட தம்பியா?” 

“வெள்ளை யூனிபார்ம் போடல- அப்ப ஹோட்டலு வேலையில்ல அப்படித்தான?” 

ஓரமாய் அமர்ந்திருந்த இருவர், இவன் தோள் தடலிப் பேசினர்.

உலர்ந்த கைகளிலும் பாசம் வடிந்தது. 

அத்தனைக் கை நடுக்கமில்லாத இரு பாட்டிகள். அனைவர் டம்ளர்களிலும் நீர் வார்த்தபின் அனைவரும் ஒரு கணம் அமைதியாகி ஜெபித்தனர். 

இவனும் கண்மூடிக்கொண்டான். ‘குப்’பென்று மனதுன்குடை விரித்தாற்போல ஒரு உணர்வு. அவனுமாய்ச் சுற்றி வந்து பரிமாறினாள். 

கறியும் சோறும் மணத்தன. 

“நீயும் சாப்பிடணும்ப்பா – என்ன சிஸ்டர்?” பல்லில்லாத தாத்தா அன்பாய் குழறினார். 

“ஆமாப்பா தனராஜ்.” 

கூச்சப்பட்ட அவனை அவர்கள் விடுவதாயில்லை. அவனுக்குப் பரிமாறி விட்டுச் சுற்றி நின்று பேச்சு கொடுத்தனர்.

அவன் தனியாள் என்று புரித்தபின் அவர்கள் பேச்சின் கனிவு மேலும் இறுகியதாக அவனுக்குத் தோன்றியது. 

“குழம்பு ஊத்தவர் ராசா?”

“மென்னு சாப்பிடுப்பா என்ன அவசரம்?” என்ற உபசரணையோடு பேச்சு வளர்ந்தது. 

“மறுவாரம் கிறிஸ்மஸ் இல்ல தம்பிற” 

‘அப்படியா’ என்ற ரீதியில் சற்று விழித்தவன் பின், 

“அ… ஆமா – உங்களுக்கு ஏதேனும் வாங்கிட்டு வரவா?”

“ஆண்டவரு கிருபை போதும்பா. நீ அப்பப்ப வந்து எங்ககூட பேசிட்டுப் போ.” 

முழு முந்திரி வாயில் அரைபட்டது. ராஜா வீட்டுச் சாப்பாடு தான் இது. உணவு, உடையில் குறைவில்லை. கேட்டு விட்டானே தவிர, என்ன வாங்கித் தந்து இவர்களைச் சந்தோஷப்படுத்த…? 

“நீ பண்டிகைக்குப் புதுசு வாங்கிட்டியா?” 

“இன்னும் இல்ல பெரியம்மா.” 

“மதுர, திண்டுக்கல்லு போகச்சே வாங்கி வந்தாணும். இங்கே துணிமணி வில ஜாஸ்தி,” 

“இனி நாளில்லையே. இங்கேயே எடுத்திடும்”

“சரி”- தலையாட்டினாள். 

“எங்களுக்குப் போன மாசமே புதுசு தந்துட்டாங்க”

“கட்டிட்டு இங்கயே வளைய வர வேண்டியது தான். வெளி வாசலுன்னு போக முடியாது.” 

சட்டென்று உற்சாகமானான். 

“வர்ற ஞாயிறு, கோயில் கிறிஸ்மஸ் விழா, ஆராதனை, மரம் நட்டு, பரிசு, ஜெபம், பாட்டுன்னு நிறைய உண்டு. வர்ரீங்கல்னா வேன்ல கூட்டிப் போறேன்.” 

சளபுளவென்று பேச்சும் சிரிப்பும் பரவியது. 

“என்ன இஷ்டத்தானே?” கேட்டபின் சிஸ்டரிடம் அது குறித்து விரிவாகப் பேசி பின் உத்தரவு வாங்கிக் கொண்டான். 

“நிசமாலுமா தம்பி?” 

“எப்ப வருவ?” 

“புதுசு கட்டிக்கலாமா சிஸ்டர்?” 

குழந்தைகளாய் நச்சரித்த பெரியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு காலி பாத்திரங்களுடன் ஹோட்டல் திரும்பினாள். 

ஆரோக்கியசாமியின் டெம்போ ‘டர்புர்’ என்று சீறி அதிர்ந்தது. ஸ்டீயரிங்பிள்ளேயிருந்தவன்தலைநீட்டி, “என்னப்பாரெண்டு அவர் ஆச்சு?” கேட்டான். 

“பேசிட்டிருந்தேன்” 

“பெருகங்களுக்குச் சாப்பாட்டைலிட அதுதான் முக்கியம், வுடாதுங்க. அதுங்க கல்யாணம், புள்ளகுட்டி, சந்தோஷம், ஒப்பாரி எல்லாம் சொல்லுங்க. கேக்க ஆள் வேணும்”

“பாத்திரம் எங்க வைக்க?” 

“இப்படி வை. நூறு வாங்கி வச்சிருக்கேன்.” மொட மொடப்பாய்ப் பணம் நீண்டது. 

“வேண்டாம்னே.” 

“ஏன்ல?”‘ எம்பி இறங்கி நின்றான். 

“எம்மனசுக்குத் திருப்தியாப் போட்டுமே” 

“அடடே! அப்ப மானேஜராண்ட வா. பய துட்டு வாங்க மாட்டேனுட்டான்னா அவருக்கும் உன்னைய மனசுலாக்கின மாதிரியிருக்குமில்ல.” 

“அதுக்கென்ன அவசரம்ணே?” 

“அப்ப ரூவா எஞ்ஜோபிக்கா? வாப்பா…” விடாது இழுத்துப் போனான். பளிங்கு, பித்தளை, தேக்கு, கண்ணாடி, கிறிஸ்டல் சரம் என்றிருந்த ஹோட்டலில் கூனிக் குறுகி நடந்த தனராஜ், 

‘எ குட் யங்மேன். உன்னைச் சந்தித்ததில் சந்தோஷம்’ என்ற சூட் அணிந்த மேனேஜரின் புன்னகையில் நிமிர்ந்தான். 


இரண்டு நாட்களும் ஒரு உற்சாக ஜூரம் அவனைப் பிடித்தாட்டியது. கடை கடையாய் ஏறி இறங்கி கண்ணாடி. சோப்பு, சிறுபெட்டி – சீப்பு செட், பேனா, டர்க்கி துண்டு, மப்ளர் என்று விதவிதமாய் வாங்கினான். வண்ணத் தாள்களில் பொதிந்து, ஒவ்வொன்றிலும் பெயரெழுதி, பாதிரியாரிடம் சேர்த்த பிறகு மனம் சற்று ஆசுவாசப்பட்டது. 

ஞாயிறு மாலை ஐந்து மணி. அத்தனை வருடங்கள் தனியே போய் வந்த ஆலயத்திற்கு, 24 முதியோர்கள், சிஸ்டர்கள் சூழ ஆரவாரமாய்ப் போய் இறங்கியது புது அனுபவம். 

ஆலயத்தின் அகல கல்படிகளில் ஏற பலர் சிரமப்பட்டாலும், புள்னகையும் பேச்சும் குறையவில்லை. 

“இந்த கோயிலுக்கு 25 வருஷத்துக்கு முன்ன வந்தது.”

“அவ இருக்கையில ஒரு வாரம் தவறாத வருவோம்.”

“நம்ப ஃப்ளாரா கல்யாணம் இங்கதான?” 

“ஃப்ளாரா பேத்தி கண்டுட்டாப் போ” 

பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுக் கொண்டு அசை போட்டனர் அனைவரும். 

உள்ளே பெரிய பைள் மரம் கிளைபரப்பி கின்றது- மேலெங்கும் பொடி வண்ண விளக்குகள் கண்ணடித்து ஒளிர்ந்தன. உச்சியில் வெள்ளி நட்சத்திரம். 

“ஜோரான ஜோடனை. என்ன தொங்குது இடையிடையே?”

காட்ராக்ட் கண்களை இடுக்கிக் கேட்டனர்.

“பண்டிகைப் பரிசுப் போட்டி” 

“ஆங்?” 

நடுங்கும் விரல்களால் முக்காடிட்டு, சுற்றும் முற்றும் சற்றே வாய் பிளந்து பார்த்தனர். 

கோயில் முழுக்க ‘பச்’சென்ற பைன் வாசனை.

“ஜெபம் பண்ணக் கடவோம்” ஆராதனை ஆரம்பித்தாயிற்று.

வெள்ளை அங்கிகள் பாதம் மறைக்க மிதந்து வந்த சிறுவர்கள் பாடினார்கள். இவன் விழிகள் தான் கூட்டி வந்தவர்கள் மீது மாறி மாறி நிலைத்தது. 

அடிக்கடி அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டது… பஞ்சடைத்த பார்வையைத் தெளிவிக்கவா அல்லது ஆனந்தத்தில் கசிந்த நீரை வடிக்கவா என்பது புரியாமல் பார்த்திருந்தான். 

எங்கும் இசை சூழ வேற்றுலகில் சஞ்சரிக்கும் பிரமை, சுற்றிலுமிருந்த சிறுவர்கள் திடீரெனக் கிளுகிளுவென சிரித்தபடி எம்பி எம்பிப் பார்க்க அவனும் திரும்பினான். 

சிவப்பு அங்கிக்குள் தொப்பை உருள, பஞ்சு தாடியை நீவிக் கொண்டு வந்தார் ‘கிறிஸ்துமஸ் தாத்தா” 

“ஹாப்பி கிறிஸ்மஸ் எவ்ரிபடி” ரோஜாநிற முகமூடிக்குப் பின்னிருந்து குரல் வந்தது. 

‘தத்தக்கா புத்தக்கா’ அசைவுகளுடன் குரல் அதிர அவர் பாட, பாட்டிமார் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து சிரித்தனர். 

“இப்போது பரிசுகள்” தாடி தாத்தா ஆரவாரத்தினிடையில் ஒவ்வொரு பரிசாய் மரத்திலிருந்து உருவி பேர் வாசிக்க, பிள்ளைகள் பாய்ந்து முன்னே ஓடின. பலூன் கொத்து பிடித்திருந்த தாத்தாவின் ‘க்ளவ்ஸ்’ போர்த்திய கரங்களைக் குலுக்கி பரிசுகளைப் பெற்றுத் திரும்பின. 

“இப்போது சில விசேஷ பரிசுகள் சின்னாயி 

தாடி தீவி, சுற்றும் பார்த்தார் தாத்தா. 

“வாங்கம்மா – சின்னாயி அம்மா” 

சிஸ்டர், முன்னேயிருந்த பாட்டியின் தோளைத் தொட்டு

“நீங்கதாம்மா. போங்க” என்றார். 

“என்ன… எனக்கா? யாருக்கும்மா இங்க என்னையத் தெரியும்?” 

“தனராஜ் தம்பிக்குத் தெரியுமில்ல? அதான்!”

“ஐயோ…” 

புதுப்பெண் கூச்சத்துடன் எழுந்து, கால் பின்னி நடந்த பாட்டியை முகம் மலரப் பார்த்திருந்தான். 

“லூர்து ராசப்பா” 

“ராஜ கணபதி” 

“தங்க வள்ளி அம்மா” 

“பிஸ்மினிஸா அகமது”

“எங்களுக்குமா?'” 

“அட எல்லாருக்குமா?” என்ற உற்சாகம் பிய்த்துக் கொள்ள பிறரும் தயாராய் எழுந்து நின்று கொண்டனர். மப்ளரை, சேலையை நீவி சரிசெய்தபடி பொக்கை வாய் மலர்ச்சியுடன் “ராசா, நீயா சொன்ன எங்க பேரெல்லாம்?” – பொய்க் கோபம். “சின்ன புள்ளையாட்டம் எங்களுக்குப் ப்ரைசு” – பூரிப்பு.. 

முன்னே போய் தாத்தாகிட்ட வாங்கத்தான் லஜ்ஜையாயிருக்குப் போ” – கூச்ச சிரிப்பு. 

அத்தனை பேரும் வாங்கி வந்த பரிசுப் பொட்டலங்களைப் புரட்டி தடவிய நேரத்தில் விளக்குகள் அணைந்தன. 

“ஆண்டவரே… நல்ல நேரத்தில் இப்படி…” 

“ஷ், தாத்தா…! உங்க பொட்டலத்திலே மெழுகுவத்தி செருதி வச்சிருக்கும் பாருங்க” என்றான் தனராஜ். 

“ஆமா இருக்குது. வத்திப் பொட்டிக்கு எங்க போறது?” நுழாவிய விரல்கள் அரைச்சாண் மெழுகுவர்த்திகளை எடுத்துப், பிடித்துக் கொண்டன. 

“இருங்க வெளிச்சம் வரும்.”ஆலயத்தை இருள்போர்த்திவிட, ஆல்டரிலிருந்த மெழுகுவர்த்திகளின் ஒளி மொட்டுகள் மட்டும் மொட்டுச்சுடராய்… அம்மங்கிய ஒளியில் நிழலாய் சிலுவையும், லில்லி மலர் கொத்துக்களும், மணமும் சொப்பன காட்சியாய் மயக்கின. பாதிரி தன் மெழுகுவர்த்தியில் ஏற்றி சபையோருக்குத் தர, ஒருவர்கை ஒளி மற்றொருவர் கையில் திரிக்கு விளையாட்டுக் குழந்தையாய் நாவிற்று. 

அத்தனைக் கைகளிலும் ஒளி முத்து மின்ன, ஏந்தியவரின் முகங்கள் மலர்ந்த சிப்பிகளாய்… 

ஒடுங்கி, சுருங்கிய முதிய முகங்களிலும் பரவசம். 

மங்கிய விழிகளிலும் கடர்ன் ஜொலிப்பு, 

ஆனந்த பெருமூச்சுகளில் சுடர் படபடத்தது. 

பாடகர் குரல்கள் பட்டாய் இழைய போதகர் பைபிளை வாசித்தார். 

“இப்போது கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள் – வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள். தேவன் ஒளியாயிருக்கிறார் – அவரில் எள்ளளவேனும் இருவில்லை…. நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவருக்கொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். 

தனராஜ் அந்த ஐக்கியத்தை உணர்ந்தான். சக மனிதர்களோடு மட்டுமல்ல தன்னைப் படைத்தவரோடும் புது ஐக்கியத்தை உணர்ந்தான். பியானோ இசை வலுக்க; மின் விளக்குகள் கண்கள் கூசும் விதமாய்ப் பொங்கி பாய்ந்து பரவின. கண்களைச் சுருக்கி ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். 

‘ஹாப்பி கிறிஸ்மஸ்’ – பரஸ்பரம் மென்மையாய். உண்மையாய் முணுமுணுக்க -இவன்மனம் நிரம்பிக்கொண்டது. ஆனால் பாரமற்ற சிறகாய் மிதந்தது. 

– ராஜம், டிசம்பர் 1995.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *