பக்குவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2026
பார்வையிட்டோர்: 52 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் சுப்பமார்க்கட் வாசலில் நிற்கிறாள். 

யாராவது சிநேகிதிகள் வருகின்றார் களா என இருபக்கங்களிலும் நோட்டம் விடுகின்றாள். 

எவரும் தென்படவில்லை. 

வலதுபுறமாய் சற்றுத்தூாரத்தில் இரண்டு ஆண்கள் கதைத்துக் கொண்டு நிற்கின்றனர். 

‘எங்கடை ஊராக்கள் போல கிடக்கு’. உன்னிப்பாகப் பார்க்கிறாள். இருவரில் ஒரு ஆள் பக்கவாட்டாக நிற்கின்றான். 

‘அறிமுகமான சாயலாய்க் கிடக்கு’. உற்று நோக்குகின்றாள். 

‘எங்கடை நடேசனப் போலகிடக்கு’. 

‘அவன் ஏன் இஞ்சை வரப்பேர்றான். இப்ப அவன் ஊரிலை கலியாணம் கட்டி பெண்சாதி, பிள்ளை குட்டிய ளோடை இருப்பான்.’ 

‘அவன் எப்பிடி இருப்பானோ? சந்தோசமாய் இருப்பானோ அல்லது துன்பப்படுவானோ?’ 

அவளது மனதில் சிறிது நெருடல். அவளது கண்கள் பனிக்கின்றன. 

‘அது வேறை யாராகவோ இருக்கக்கூடும்.’ 

அது யாரென்று அறிய அவளுக்கு ஆவல். 

‘சரி அது ஆரென்று அறிய சற்று முயற்சித்துப் பாப்பம்’. 

‘எப்பிடி?.’ 

‘நடேசன்ரை பேரைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாப்பம். அவனென்டால் திரும்பிப் பாப்பன்தானே. இல்லாட்டிப் போகட்டும். என்ன தலையா போகப்போகுது? 

“நடேசா”. 

தன்னை மறந்தவளாய் உரத்துக் கத்துகிறாள். 

உரத்துக்கத்தி கதைப்பது அன்னலட்சுமியின் சுபாவம். அவள் பாடசாலைக்குப் போய்வரும் காலத்திலும்கூட உரத்துக் கத்தித்தான் கதைப்பாள். ஏதாவது சண்டை சச்சரவு வந்தால் அவள் சண்டமாருதமாகி விடுவாள். 

எல்லோரும் அவளுக்குப் பயம். காரணம் அவள் எப்போதும் நியாயத்தின் பக்கம்தான் நிற்பாள். 

நடேசன் அவளது நெருங்கிய நண்பன். அத்துடன் அவளுடைய அயல் வீட்டுக்காரன். அவர்களது இரு குடும்பக்களுமிடையில் நெருக்கமான உறவு. பந்தபாசம். நடேசனுடன்தான் அவள் பாடசாலைக்குப் போய் வந்துகொண்டிருந்தாள். யாராவது அவளைக்கிண்டல் பண்ணினால் நடேசன் பெரும் புயலாக மாறிவிடுவான். 

சக மாணவ மாணவிகள் அவளுக்கும், நடேசனுக்கும் பயம்கலந்த மரியாதை. எவருக்காவது, ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அவர்களுக்கு முதலில் கைகொடுப்பது நடேசனும் அவளும்தான். 

அவர்கள் இருவருக்குமிடையில் இறுக்கமான நட்பு, நேசம். 

அவளுடைய வீட்டில் ஏதாவது விசேஷமான பலகாரம் செய்தால் அவள் அவனுக்கும் கொடுத்து அதை இருவரும் பங்கிட்டு ரசித்து ருசித்து உண்பார்கள். 

அவனும் அவ்வாறேதான். அவளுக்கென்று பிரத்தியேகமாக சிற்றுண்டிகளை எடுத்துச்செல்வான். 

அவள் பருவமடைந்து ஒருமாத காலம் பாடசாலைக்குச் செல்லவில்லை. அவளைப்பார்த்துக் கதைக்க நடேசனுக்கு எவளவோ ஆசையாக இருந்தது. பல தடைவ அவளைப்பார்த்துக் கதைக்க பகீரதப் பிரயத்தனம் செய்தான். எதுவும் பலிக்கவில்லை. அவளும் அவ்வாறான ஆவலுடன் முயற்சித்தாள். எதுவுமே நிதர்சனமாகவில்லை. 

இக் காலகட்டத்தில் இரண்டு உள்ளங்களும் பட்ட தவிப்பை சொல்லி மாளாது. ஒரு மாதம் கடந்தபின் அவள் புதுப்பொலிவுடன் பாடசாலைக்கு வருகின்றாள். 

முன்பு அவள் பாவாடை சட்டையுடன் சென்றாள். இப்போ பாவாடை, சட்டை, அரைத்தாவணி. 

அவனுடன் கதைக்க அவளுக்கு ஆசை. ஆனால் வெட்கம். ஒருவித கூச்சம். மனதில் பதட்டம் 

அவனக்கு அவளுடன் கதைக்கத் தவிப்பு. ஆனால் பயம். இரண்டு மூன்று நாட்களாய் மௌனப் பயணிப்பு. 

நான்கைந்து நாட்களின் பின் அவர்களுக்கிடையிலுள்ள மௌனத்திரை அகல்கிறது. மன இறுக்கம் கரைகின்றது. இரு அன்றில்பறவைகளும் சிறகடித்து மோகன வானில் பறக்கின்றன. இருவருக்குமிடையில் நிதானமான சொல்லாடல்கள். 

காலகெதியில் அவர்களுக்கிடையில் மென்மையான பாசம் வளர்ந்து மென்காதலாக மலர்கின்றது. 

அவர்கள் இருவரது உள்ளத்திலும், உடலிலும் பருவ எழுச்சி. 

தங்கள் ஆத்மார்த்த காதலை எப்படி வெளிப்படுத்துவது, யார் முதலில் வெளிப்படுத்துவது? என்ற தவிப்பு, தயக்கம் இரு உள்ளங்களிலும். 

பல தடவைகள் அவர்கள் முயற்சிப்பு, இருவரும் தயக்கம்,தோல்வி. இறுதியில் அவள்தான் முந்துகின்றாள். 

இருவரது இதயங்களிலும் ஏற்பட்ட பிரளயம் முடிவுக்கு வருகின்றது. இருவரது இதயங்களிலும் சாந்தி, ஆனந்தம் பொங்கிப் பூரிப்பு. 

அவளது தந்தை செல்லையா மோட்டார் வாகன விபத்தில் இறந்துவிட்டார். அவளுக்குத் தலையில் இடிவிழுந்ததுபோன்ற பேரதிர்ச்சி. மூத்த பெண்பிள்ளை என்பதால் அவள்மீது அவர் அளவற்ற பாசம் கொண்டிருந்தார். அவளும் தன் தந்தைமேல் ஆழமான அன்பு கொண்டிருந்தாள். 

செல்லையருக்கு நான்கு பெண்பிள்ளைகள். கடைக்குட்டி ஆண். செல்லையரின் திடீர் மரணம் அக்குடும்பத்தை நிர்க்கதிக்குள்ளாக்கிவிட்டது. அன்னத்தின் தாயார் நோயாளி. குடும்பப் பாரம் அன்னத்தின் தலையில் செல்லையரின் மரணச்சடங்கின் போது அன்னத்தின் காதலன் பக்கபலமாக நின்று செயலாற்றினான். ஆனால். அவளது குடும்ப பாரத்தை அவனால் பொறுப்பேற்க முடியவில்லை. காரணம் அவனுக்கு மூன்று சகோதரிகள் திருமண வயதில். இரண்டு தம்பிமார் எட்டு பத்து வயதுகளில். அவனுக்கு தகப்பனுமில்லை. நோயாளி வயோதிபத் தாயார். 

அவன் பல நோகு்குக் கூட்டுறவுச் சஙக மனேச்சர். சொற்ப வருமானம்தான். செல்லையரின் இறுதிச் சடங்கின் போது அவனது மூன்று சகோதரிகளும் உதவி ஒத்தாசையாக இருந்தனர். ஆனால் அதற்கு அப்பால் அவர்களால் என்னதான் செய்யமுடியும்? 

செல்வநாயகம் செல்லையரின் நெருங்கிய குடும்ப உறவினன். செல்வநாயத் தாரின் மகன் தேவதாசன் அண்மையில்தான் ஆஸ்ரேலியாவிலிருந்து வந்திருந்தான். 

தேவதாசன் செல்லையரின் மரணச்சடங்கை நடாத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளான். அதன் பின்னரும் தேவையான உதவி ஒத்தாசைகளைச் செய்வதில் அவன் பின்னிற்கவில்லை. காரணம் அன்னத்தை அவனுக்குப் பிடித்துவிட்டது. அவளை அவன் திருமணம் செய்ய முன்வந்தான். 

சீதனபாதனம் ஒன்றுமே தேவையில்லை பெண்ணை மாத்திரம் தந்தால் போதும். அத்துடன் அன்னத்தின் தம்பியின் படிப்புச் செலவை தான் பொறுப்பேற்பதாகவும், மூன்று நான்கு வருடங்களின் பின்னர் அவனை ஆஸ்ரேலியாவுக்கு எடுப்பதாகவும் உறுதியளித்தான். 

அன்னம்? 

நடேசனை அன்னத்தால் எப்படிக் கைவிட முடியும்? 

நடேசனை நாடுகின்றாள் அன்னம். 

கையறு நிலையில் நடேசன். 

நான்கு சகோதரிகளைக் கரைசேர்க்கும் பொறுப்பு நடேசனின் தலையில். அத்துடன் அன்னத்தின் குடும்பப் பாரத்தையும் அவனால் எப்படி பொறுப்பேற்க முடியும்? 

அன்னமும் நடேசனும் இரு தலைக் கொள்ளி எறும்பின் நிலையில். இருவரும் தங்கள் இதயங்களைக் கல்லாக்கி பிரிவதற்கு முடிவெடுக் கின்றனர். 

தேவதாசன் – அன்னம் திருமணம் நிறைவேற்றம். ஆறு மாதங்களில் அன்னம் ஆஸ்ரேலியா பயணம். 

அன்னத்தின் சகோதரி யோகேஸ்வரிக்கும் தேவதாசன் திருமணம் செய்து வைக்கின்றான். யோகேஸ்வரியும் ஆஸ்ரேலியா செல்கின்றாள். 

தேவதாசன் பிரபலமான பால்மாக் கொம்பனியில் எட்டு வருடங்களாக வேலை செய்கின்றான். கனரக வாகனச்சாரதி வேலை. திருமணம் முடிக்குமுன்னரே மூன்று அறைகளைக் கொண்ட வீடு வாங்கியிருந்தான். தேவதாசனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண். கடைக்குட்டி. காலை ஐந்து மணிக்கு அவன் வேலைக்குச் சென்றால் இரவு எட்டு மணியளவில் வீடு திரும்புவான். சிலவேளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலைக்குச் செல்லவேண்டியிருக்கும். 

கடுமையான வேலை. கனரக வாகனம் ஓட்டுவதென்றால் லேசுப்பட்ட வேலையா? வேலை கடுமையானதாக இருந்தாலும் சம்பளம் நல்ல சம்பளம்தான். அத்துடன் ‘ஓவர்டைம்’, அதற்கு இரண்டுமடங்கு வேதனமும் பட்டாவும் கிடைக்கும். 

தேவதாசன் செலவாளியல்ல. கஞ்சனுமல்ல. மனைவி பிள்ளைகளின் தேவைகளுக்கு அவன் போதியளவு செலவு செய்வான். பிள்ளைகளை பாடசாலைக்கு கொண்டுசென்றுவர ஒரு நல்ல சொகுசான மோட்டார் வாகனத்தையும் மூன்று வருடங்களிற்கு முன்பே கைக்காசு கொடுத்து கொள்வனவு செய்து கொடுத்துள்ளான். வீட்டுக்கடனையும் சென்ற வருடம் தீர்த்துவிட்டான். மனைவியின் கைச்செலவிற்கு போதியளவு பணம் கொடுக்கின்றான். ஆனால் அவன் ஒருநாளும் கொடுத்த காசுக்கணக்கை கேட்பதில்லை. 

அன்னம் ஆடம்பரப்பிரியை. தனது உடைகளுக்கும் அழகுசாதனப் பொருட்களுக்கும் தாராளமாகச் செலவு செய்வாள். உணவைப் பொறுத்தளவில் வாரத்தில் இருதடவைகள்தான் சமையல். சமைத்த சோறுகறி வகைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு தேவையான நேரம் அவற்றைச் சூடாக்கிக் கொடுப்பாள். 

அவளுக்கு சமைப்பதற்குப் போதிய நேரமில்லை. நண்பிகளுடன் சேர்ந்து அரட்டை அடிப்பதற்கும் சுப்பமார்க்கட்டுக்குச் சென்று ஆடம்பரப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் பெருமளவு நேரத்தைச் செலவு செய்வாள். 

பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கொண்டுசென்று வரும்பொழுது அயலவர்களின் மூன்று, நான்கு பிள்ளைகளையும் கொண்டு சென்று வருவாள். இதன்மூலமும் அவளுக்கு மேலதிக வருவாய் கிடைக்கின்றது. 

“சாப்பாடு சரியில்லை. ஓரே சாப்பாட்டையே திரும்பத்திரும்ப சாப்பிட்டு என்ர நாக்கே செத்துவிட்டது” என்று அவன் அடிக்கடி புலம்புவான். ஆனால் இதற்காக அவன்தன் மனைவியுடன் ஒருநாளேனும் சண்டை போட்டதில்லை. அவனுடைய சகிப்புத்தன்மையை அவள் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றாள். 

அன்னம் தன் சிநேகிதிகளுடன் அப்பிரதேசத்திலுள்ள சொப்பிங் சென்ரேர்ஸ பூட்சிற்றிஸ், சுப்பர்மார்கட் போன்ற இடங்களில் பொழுது போக்குவாள். சிட்னியிலுள்ள திரையரங்குகளில் ஓடுகின்ற தமிழ் இந்திப் படங்களின் மெட்னிக் காட்சிகளை நண்பிகளுடன் சேர்ந்து பார்க்காமல் விடமாட்டாள். இன்று தனது நண்பி சசியைச் சந்திப்பதற்காக காலை நேரகாலத்துடன் ‘பென்டில்ஹில்’ சுப்பர்மார்க்கட் வாசலில் காத்துக்கிடக்கிறாள். தெரிந்தவர் கள் யாராவது வருகின்றார்களா என்று இருபக்கமும் நோட்டம் விடுகின்றாள். 

வலதுபுறமாய் சற்றுத் தூரத்தில் இரண்டுபேர் கதைத்துக்கொண்டு நிற்பதை அவள் அவதானிக்கின்றாள். 

‘எங்கடை நாட்டாக்கள் போலை கிடக்கு . ஆர் அவர்கள் என்று அறிய ஆவல். 

‘எங்கடை நடேசன் போலைகிடக்கு? சே அவன் இஞ்சை ஏன் வரப்போறான். அவன் ஊரிலை கலியாணம் கட்டி இப்ப பெண்சாதி,இரண்டு மூன்று பிள்ளைகளுடன் இருப்பான்’ 

அவர்கள் யார் என்று அறிய வேண்டும்போலிருக்கு. ‘சரி ஒருக்கா முயற்சித்துப் பாப்பம்’ 

“கிட்டப் போவது சரியில்லை அவையள் ஏதாவது வித்தியாசமாய் என்னைப்பற்றி நினைச்சால்….? 

“தெரிஞ்ச நடேசன் எண்ட பேரைச்சொல்லிக் கூப்பிட்டுப்பாப்பம். அது நடேசனில்லாட்டி அவர்கள் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள் சரி ‘நடேசா’ என்று கூப்பிட்டுப் பாப்பம்.” 

“எடே நடேசா’ 

தன்னை மறந்து உரத்தக் கத்துகின்றாள். 

உரத்துக்கத்தி கதைப்பது அன்னலட்சுமியின் சுபாவம். அவள் பாடசாலைக்குப் போய்வரும் காலத்திலும்கூட உரத்துக் கத்தித்தான் கதைப்பாள். அதுவும் நடேசன் என்றால் கேட்கவா வேண்டும். 

தன்னுடைய பெயரைச்சொல்லி யார் கத்துகின்றது என்பதை அறிய ஆவலுடன் கதைத்துக்கொண்டு நிற்பவர்களில் ஒருவன் திரும்பிப் பார்க்கின்றான். ஒரு பெண் அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றாள். இறுக்கமான ஜீன்சும், ரீ சேட்டும் போட்டுக்கொண்டு கறுப்புக் கண்ணாடியுடன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றாள். கிட்ட வருகின்றாள். தன்னெதிரே நிற்கின்றவனை உற்றுப்பார்க்கிறாள். நடேசன்! அவளுக்குத் திகைப்பு. 

“எங்கடை நடேசா?’ 

தன்னை மறந்தவளாய் உரத்தக் கத்துகின்றாள். 

நடேசன் ஆச்சரியத்துடன் வைத்தகண் வாங்காமல் அவளது முகத்தைப் பார்க்கின்றான். 

‘அன்னம் நீயா?’ அதிசயித்தவனாய் நடேசன். 

“சரி நாங்கள் பிறகு சந்திப்பம்.” நடேசனுடன் கதைத்துக்கொண்டிருந்தவர் நாகரிகமாய் அவர்களிருவரையும் விட்டகலுகின்றார். 

“நடேசா நீ எப்பிடி இஞ்சை வந்தனி? எப்படா வந்தனி?” 

ஆச்சரியத்துடன் ஆவலாய் அவனைக் கேட்கின்றாள். 

“நாங்கள் மூண்டு வரியத்துக்கு முன்னம் இஞ்சை வந்தனாங்கள்”. 

“என்ன மூண்டு வரியங்களுக்கு முந்தியா?” நாங்கள் எண்டால் ஆரடா? எப்பிடியடா?” 

கேள்விமேல் கேள்வி கேட்கின்றாள். 

“நான், என்ரை மனைவி புஸ்பமலர், மூண்டுவயது மகன் அதிசயன்” அன்னத்திற்கு ஆச்சரியம். 

“இப்பவே எனக்கு அவையளைப் பாக்கவேணும் போல கிடக்கடா” 

“எப்பவும் நீ எங்கடை வீட்டுக்கு வரலாம்” 

நடேசன். 

“நீங்கள் எங்கை இருக்கிறியள்?” 

“ஹேம்புஷ்சிலை. அன்னம் நீங்கள் எங்கை இருக்கிறியள்? “செவண்ஹிலஸினல. இதிலை ஏன் நிண்டு கதைப்பான்? எங்கையாவது ஒரு இடத்திலை…: 

“சென்னை ரெஸ்ரோரண்டுக்குப் போவமா?” 

“சீ அங்கை மனுசன் போவானே?. வாடா அந்த சைனீஸ் ரெஸ்ரோரண்டுக்குப் போவம்”. 

“சரி உன்ர ஆசையை ஏன் கெடுப்பான் வா அதுக்குப் போவம்”. 

இருவரும் சமீபத்திலுள்ள சைனீஸ் ரெஸ்ரோரண்டுக்குப் செல்கின்றனர். ஒதுக்குப்புறமாயுள்ள ஒரு இடத்தில் அமர்கின்றனர். 

“என்ன சாப்பிடுவம்” அன்னம். 

“வேறென்ன சோறுதான்” 

“நீ இஞ்சை வந்து இன்னம் திருந்தேல்லையே? உந்தச் சோத்திலை என்னடா கிடக்கு? வேறை ஏதாவது ஓடர் பண்ணுவம்”. 

“உனக்கென்ன வேணும் அன்னம்?”

“நுாடில்ஸ். உனக்கு?” 

“பிறைட் றைஸ்” 

“ஒரு நிமிஷம். என்ரை புஸ்பம் மத்தியானச் சாப்பாட்டுக்கு எனக்காகக் காத்திருப்பாள். நான் இண்டைக்கு மத்தியானச் சாப்பாட்டிற்கு வர முடியேல்லை எண்டு அவளுக்கு ஒருக்கால் சொல்லுவம்”. 

“என்ன நீ அவளுக்கு அவளவு பயமோ? 

“இல்லையில்லை அவள் சாப்பிடாமல் எனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள். எப்பவும் என்ர புஸ்பம், எங்கடை மகன், நாங்கள் மூண்டுபேரும் ஒண்டாய்த் தான் சாப்பிடுவது வழக்கம்”. 

“சரியடா நீ உன்ரை ஆசைப் புஸ்பத்துக்கு சூழ்நிலை காரணமாய் மத்தியான சாப்பாட்டிற்கு வரேல்லை எண்டு சொல்லு”. 

“புஸ்பமலர்?” கைபேசியில் மனைவியை அழைக்கிறான். 

“நீங்களா, என்ன சொல்லுங்கோ” 

“நான் அடிக்கடி சொல்லுவனே என்ர அயல்வீட்டுக்கார அன்னலட்சுமி எண்டு அவவை தற்செயலாய் ‘வூல்ஸ்வோத்’ சுப்பமார்க்கட்டிலை சந்திச்சன். நானும் அவளும் இங்கை ஒண்டாய் மத்தியானம் சாப்பிடப்போறம். நீயும் அதிசயனும் சாப்பிடுங்கோ”. 

“ஏன், அவவை எங்கட வீட்டுக்கு சாப்பாட்டுக்கு கூட்டி வந்திருக்கலாமே?’ “இல்லை இல்லை புஸ்பம். அவளும், புருஷனும் கூடிய கெதியிலை எங்கட வீட்டை வருவினை. சரி புஸ்பம் உனக்கும் அதிசயனுக்கும் இங்கையிருந்து என்ன வாங்கி வாறது?” 

“நீங்கள் எங்களுக்கு இண்டைக்கு ஒண்டுமே வாங்கிவரவேண்டாம். அரைகுறையாய் சாப்பிடாமல் நன்றாகச் சாப்பிட்டு வந்தால் அதுவே போதும்”. 

“நடேசா நான்தான் உன்னை சாப்பட்டுககுக் கூப்பிட்டனான். இண்டைக்கு நீ என்ரை விருந்தாளி. நான் ஓடர் பண்ணப்போறன்”. பிடிவாதமாய் அவள். 

“சரி சரி, அன்னம் சாப்பாடு வரும்வரை ஏதாவது குடிப்பம்” 

“என்ன குடிப்பம்?’ நடேசன். 

“உனக்கு பியர்?” 

“ஐயோ அன்னம் நான் அது ஒன்றும் பாவிக்கிறேல்லை”. 

“இஞ்சை வந்தபிறகும் நீ அது ஒன்றும் பாவிக்கிறேல்லையே?” 

“இன்னுமில்லை இனிமேலுமில்லை”. அவன் உறுதியாய் கூறுகிறான் 

“எனக்கு கூல் கொக்காகோலா உனக்கு?” அன்னம். 

“எனக்கு ‘லைம்யூஸ்”. 

“ஒரு போஷன் நுாடில்ஸ், ஒரு போஷன் ஃபிறைட் றைஸ், இரண்டு போஷன் சிக்கன், இரண்டு போஷன் பொட்டாட்டோ சிப்ஸ்”. அன்னம் ஓடர் பண்ணுகின்றாள். 

இருவரும் குளிர்பானத்தைக் குடிக்கின்றனர். 

“நீ கலியாணம் கட்டி எத்தினை வரியம்? எத்தினை பிள்ளையள் உங்களுக்கு?’ 

“ஐஞ்சு வரியத்துக்கு முந்தித்தான் புஸ்பத்தைக் கட்டினனான். எங்களுக்கு அதிசயன் என்றொரு மகன். மூண்டு வயது. அன்னம் உங்களுக்கு?” 

“எங்களுக்கு மூண்டு பெண்கள் ஒரு ஆண் கடைக்குட்டி அப்பப்பா போதும்”. சிரித்துக்கொண்டே கூறுகின்றாள் அன்னம். 

“அவ்வளவுதானா?“ கிண்டல் பண்ணுகின்றான் நடேசன்.

“கன பிள்ளையள் எண்டால் ‘லைபை என்ஜோய்’ பண்ணேலாது”. 

“புருஷன் என்ன செய்யிறார்?” 

“யோகன் ட்றக் வண்டி ஓட்டுகின்றார். கடும் உழைப்பாளி. மூண்டு வரியத்துக்கு முன்னம்தான் நாலு அறைகளைக் கொண்ட ‘வில்லா வீடு’ கைக்காசுக்கு வாங்கினம். ஒரு மில்லியன் டொலர்”. 

“சொந்த வீடு நான்கு, பிள்ளையள், இரண்டு வாகனங்கள் சாதனைதான்” 

சிரித்துக்கொண்டே கூறுகின்றான். 

“யோகன் வேலைக்குப்போக ஒரு சின்ன மோட்டார், பிள்ளைகளைப் பள்ளிக்குடம் கொண்டுபோய்வர எனக்கு ஒரு சொகுசு வான். நடேசா நீ என்ன செய்யிறாய்?”
 
“நான் ஹேம்புஷ்சிலை ‘சொப்பிங் சென்ரரிலை ஒரு ‘ஸ்ரோல்’ எடுத்து நடத்திறன். அதிலை காய்கறிகள் அரிசி பலசரக்கு சில்லறை வியாபாரம். அதோடை ‘கூரியர் சேவிஸ்’ செய்யிறன்”. 

“எப்பிடி நீ இந்தத் தொழிலிலை இறங்கினாய்?”. 

“என்ர புஸ்பமலரின்ர அண்ணன் தான் ஏழெட்டு வரியங்களாய் இந்த தொழிலை நடத்தி வந்தார். ஒரு வரியமாய் நான் இதிலை வேலை செய்தன். அவர் ‘செவிண்ஹில்ஸ்’லை ஒரு பெரிய ‘ஸ்ரோல்’ எடுத்து நடத்திறார். இதிலை மூண்டுபேர் வேலை செய்யினை, நல்ல வருமானம் இலாபம்”. 

“நடேசா என்னடா உன்ரை சாப்பாடு அப்பிடியே கிடக்கடா. சாப்பிட்டுக் கொண்டே கதைப்பமடா”. கரிசனையுடன் கூறுகின்றாள் அன்னம். 

“ஓ கதையிலை நான் சாப்பிட மறந்திட்டன்”. 

இருவரும் ஒருவர்மீது ஒருவர் கரிசனை காட்டியபடியே சாப்பிட்டு முடிக்கின்றனர். ஐஸ்கிறீமுக்கு ஓடர் பண்ணுகின்றாள். தனக்கு சொக்லட் ஐஸ்கிறீம். 

“உனக்கு என்ன?” 

“ஃபுருட் சலட்” என்கின்றான் நடேசன். 

“மாம்பழம் எண்டால் என்ர புஸ்பத்துக்கும் மகனுக்கும் கொள்ளை ஆசை. இண்டைக்கு நான் அவைக்கு ஒரு டசின் திறமான மாம்பழங்கள் வாங்கிக் கொண்டுபோகப்போறன்”. 

“நடேசா இப்ப ஒரு படத்துக்குப் போவமே?” 

“இண்டைக்கு எனக்கு நேரமில்லை அன்னம். மூண்டுமணிக்கு நான் பிஸ்னஸ் சம்பந்தமாய் ஒரு முக்கியஸ்தரைச் சந்திக்க வேணும்”. 

“நடேசா உன்னோடைஒரு படம் பாக்க ஆசையாய் கிடைக்கடா”. 

“இண்டைக்கு ஏலாது, நாளைக்கு?” 

“நாளைக்கு நீ கட்டாயம் வருவியா?” 

‘நான் நிச்சயமாய் வருவன் ஆனால்…” 

“என்னடா ஆனால்?” 

அன்னம் கேள்விக்குறியுடன் அவனைப் பார்கின்றாள் 

“நான் உன்னோடை படத்துக்குப் போறன் எண்டு என்ரை மனிசி புஸ்பத்துக்குச் சொல்லிப்போட்டு வருவன்”. 

“சரி நீ அவளுக்குச் சொல்லிப்போட்டு வா. அதுக்கு நான் ஆட்சேபனை இல்லை”. அன்னம் அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்க்கின்றாள். 

“இரண்டு கொண்டிஷன்கள்” 

“என்னென்ன கொண்டிஷன்கள்?” 

ஆவலுடன் அவனைப் பார்க்கின்றாள். 

“முதலாவது இந்த சாப்பாட்டு பில்லை நான் செற்றில் பண்ண விடவேணும்”

“எப்பிடி நான் விடேலும்? இண்டைய பில்லை நான்தான் செற்றில் பண்ணுவனெண்டு முதலிலே நான் சொன்னனான்தானே அதுக்கு நீங்கள் ஒத்துக்கொண்டனீங்கள்தானே?”. 

“நான் ஒப்புக்கொண்டனான்தான். ஆனால் படம் பாக்கிறதுபற்றி நீ ஒண்டும் சொல்லேல்லையே”. 

“சரி அரைவாசியை நீங்க குடுங்கோ” 

அரை மனசுடன் அவனுடைய நிபந்தனைக்கு உடன்படவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. 

“அடுத்த கொண்டிஷன் என்ன?” 

“அடுத்த கொண்டிஷன் நான் என்ரை மனிசி புனிதத்தோட படம் பார்க்க வாறன்” 

அன்னம் அவனை வியப்புடன் பார்க்கின்றாள். 

“நீ உன்ரை மனிசன் யோகனோடை வரவேணும். நாங்கள் எல்லாரும் ஒண்டாய் சந்தோஷமாய்ப் படம் பாப்பம்”.

– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *